புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 052

ஊன் விரும்பிய புலி!


ஊன் விரும்பிய புலி!

பாடியவர் :

  மருதன் இளநாகனார்; மருதிள நாகனார் என்பதும் பாடம்.

பாடப்பட்டோன் :

  பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன்வழுதி.

திணை :

  வாகை.

துறை :

  அரச வாகை.

சிறப்பு :

  


பாடல் பின்னணி:

நாயும் புலியும் என்னும் வல்லாடல் பற்றிய செய்தி.

அணங்கு உடை நெடுங்கோட்டு அளையகம் முனைஇ,
முணங்கு நிமிர் வயமான் முழுவலி ஒருத்தல்,
ஊன்நசை உள்ளம் துரப்ப, இசை குறித்துத்
தான் வேண்டு மருங்கின் வேட்டுஎழுந் தாங்கு,
வடபுல மன்னர் வாட, அடல் குறித்து, . . . . [05]

இன்னா வெம்போர் இயல்தேர் வழுதி!
இதுநீ கண்ணியது ஆயின், இரு நிலத்து
யார்கொல் அளியர் தாமே? ஊர்தொறும்
மீன்சுடு புகையின் புலவுநாறு நெடுங் கொடி
வயல்உழை மருதின் வாங்குசினை வலக்கும், . . . . [10]

பெருநல் யாணரின் ஒரீஇ, இனியே
கலி கெழு கடவுள் கந்தம் கைவிடப்
பலிகண் மாறிய பாழ்படு பொதியில்,
நரைமூ தாளர் நாயிடக் குழிந்த
வல்லின் நல்லகம் நிறையப், பல்பொறிக் . . . . [15]

கான வாரணம் ஈனும்
காடாகி விளியும் நாடுடை யோரே!

பொருளுரை:

வழுதி! நீ தேரில் இருக்கிறாயே! சிங்கம் வருத்தும் தன் மலைக்குகையில் இருத்தலை வெறுத்து தசை இரை பெறும் ஊக்கத்தால் தான் விரும்பும் திசையில் செல்வது போல வடநாட்டு மன்னர் வாட அழிக்கக் கருதி நீபோரிட நீ புறப்படக் கருதினால் எதிர் நின்று வருந்தப்போகும் மன்னர் யாரோ தெரியவில்லையே! வயலின் ஓரமாக மருதமரத்தில் ஏறியுள்ள கொடி உண்போர் வயலில் மேயும் மீனைச் சுடுவதால் வாடும் நிலை போய் நீ சுடுவதால் வாடும் நிலையினைப் பெறும். ஊர் மன்றத்தில் உள்ள கடவுள் சிலை ஊரைப் பாதுகாப்பதை விட்டுவிட்டுப் போய், அங்கு நரைத்தலை முதியவர் வல்லு விளையாடும் குழியில் காட்டுக்கோழி முட்டையிடும் காடாக மாறிவிடும்.