புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 047

புலவரைக் காத்த புலவர்!


புலவரைக் காத்த புலவர்!

பாடியவர் :

  கோவூர் கிழார்.

பாடப்பட்டோன் :

  காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி.

திணை :

  வஞ்சி.

துறை :

  துணை வஞ்சி.


பாடல் பின்னணி:

இளந்தத்தன் என்ற புலவர் உறையூருக்குச் சென்றார். அவரை ஒற்றன் என்று எண்ணிய நெடுங்கிள்ளி அவரைக் கொல்ல நினைத்தான். அதைக் கண்ட கோவூர்கிழார், இளந்தத்தன் ஒற்றன் இல்லை என்று நெடுங்கிள்ளிக்கு எடுத்துக் கூறி புலவரைக் காப்பாற்றினார்.

வள்ளியோர்ப் படர்ந்து, புள்ளின் போகி,
நெடிய என்னாது சுரம் பல கடந்து,
வடியா நாவின் வல்லாங்குப் பாடிப்,
பெற்றது மகிழ்ந்தும், சுற்றம் அருத்தி,
ஓம்பாது உண்டு, கூம்பாது வீசி, . . . . [05]

வரிசைக்கு வருந்தும் இப்பரிசில் வாழ்க்கை,
பிறர்க்குத் தீது அறிந்தன்றோ இன்றே, திறப்பட
நண்ணார் நாண, அண்ணாந்து ஏகி,
ஆங்கு இனிது ஒழுகின் அல்லது, ஓங்கு புகழ்
மண்ணாள் செல்வம் எய்திய . . . . [10]

நும்மோர் அன்ன, செம்மலும் உடைத்தே.

பொருளுரை:

வள்ளன்மையுடையவர்களை எண்ணி, பழமரத்தை நோக்கிச் செல்லும் பறவைகளைப் போலப் போய், வழி நீண்டது என்று எண்ணாது, அரிய வழிகள் பலவற்றைக் கடந்து, தங்களுடைய திருந்தாத நாவினால் தம் திறமையின்படி பாடி, பெற்ற பரிசால் மகிழ்ந்து, சுற்றத்தார்க்கு உண்ணக் கொடுத்து, தானும் இருப்பதைப் பாதுகாக்காது உண்டு, மகிழ்ச்சியுடன் பிறருக்கு வழங்கி, தம்மை ஆதரிப்பவர்கள் தமக்குச் செய்யும் சிறப்பிற்காக வருந்தும், இந்தப் பரிசிலரின் வாழ்க்கையானது, பிறர்க்குத் தீமைச் செய்யாதது. கல்வியினால் தம்மோடு மாறுபட்டவர்களைத் தம் புலமையால் நாணச் செய்து, தலைநிமிர்ந்து நடந்து, அங்கு இனிதாக ஒழுகுதல் மட்டுமல்லாமல், உயர்ந்த புகழுடைய நிலத்தை ஆளும் செல்வமுடைய உன்னைப் போன்றவர்களைப் போன்று, அவர்கள் தலைமையுடையவர்கள்.

சொற்பொருள்:

வள்ளியோர்ப் படர்ந்து - வள்ளன்மையுடையவர்களை எண்ணி, புள்ளின் போகி - பழமரத்தை நோக்கிச் செல்லும் பறவைகளைப் போலப் போய் (புள்ளின் - இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), நெடிய என்னாது - நீண்டது என்று எண்ணாது, சுரம் பல கடந்து - அரிய வழிகள் பலவற்றைக் கடந்து, வடியா நாவின் வல்லாங்குப் பாடி - திருந்தாத நாவினால் தன் திறமையின்படி பாடி, பெற்றது மகிழ்ந்தும் - பெற்ற பரிசால் மகிழ்ந்தும், சுற்றம் அருத்தி - சுற்றத்தார்க்கு உண்ணக் கொடுத்து, ஓம்பாது உண்டு - தானும் பாதுகாக்காது உண்டு, கூம்பாது வீசி - மகிழ்ச்சியுடன் வழங்கி, வரிசைக்கு வருந்தும் - தம்மை ஆதரிப்பார் தமக்குச் செய்யும் சிறப்பிற்காக வருந்தும், இப்பரிசில் வாழ்க்கை - இந்த பரிசிலரின் வாழ்க்கை, பிறர்க்குத் தீது அறிந்தன்றோ இன்றே - பிறர்க்குத் தீமை செய்ய மாட்டார்கள், திறப்பட நண்ணார் நாண - கல்வியினால் தம்மோடு மாறுபட்டவர்களைத் தம் புலமையால் நாண, அண்ணாந்து ஏகி - தலைநிமிர்ந்து நடந்து, ஆங்கு இனிது ஒழுகின் அல்லது - அங்கு இனிதாக ஒழுகுதல் அன்றி, ஓங்கு புகழ் - உயர்ந்த புகழ், மண்ணாள் - நிலத்தை ஆளும், செல்வம் எய்திய நும்மோர் அன்ன - செல்வம் அடைந்த உன்னைப் போன்றவர்களைப் போன்று, செம்மலும் உடைத்தே - தலைமையுடையவர்கள் (உடைத்தே - ஏகாரம் அசைநிலை)