புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 040

ஒரு பிடியும் எழு களிரும்!


ஒரு பிடியும் எழு களிரும்!

பாடியவர் :

  ஆவூர் மூலங்கிழார்.

பாடப்பட்டோன் :

  சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.

திணை :

  பாடாண்.

துறை :

  செவியறிவுறூஉ.

நீயே, பிறர் ஓம்புறு மறமன் னெயில்
ஓம்பாது கடந்தட்டு, அவர்
முடி புனைந்த பசும் பொன்னின்
அடி பொலியக் கழல் தைஇய
வல் லாளனை, வய வேந்தே! . . . . [05]

யாமே, நின், இகழ் பாடுவோர் எருத்தடங்கப்,
புகழ் பாடுவோர் பொலிவு தோன்ற,
இன்றுகண் டாங்குக் காண்குவம், என்றும்
இன்சொல் எண்பதத்தை ஆகுமதி; பெரும!
ஒருபிடி படியுஞ் சீறிடம் . . . . [10]

எழுகளிறு புரக்கும் நாடுகிழ வோயே!

பொருளுரை:

வெற்றி வேந்தே! நீயோ பிறர் கோட்டைகளை வென்று அதன் புனைந்திருக்கும் அரசுமுடியால் உன் காலுக்கு வீரக்கழல் செய்துகொண்டவன். நானோ உன்னை இகழ்வோர் கொற்றம்(கொட்டம்) அடங்கப் பாடுபவன். நீ இன்று போல் என்றும் காட்சிதர வேண்டும். என்றென்றும் எளிதில் காட்சி தந்து இன்சொல் வழங்கவேண்டும். ஒரு யானை படுக்கும் நிலப்பரப்பில் ஏழு யானைகளுக்கு உணவளிக்கும் வளம் மிக்க நாடு உன்னுடையது.