புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 012

அறம் இதுதானோ?


அறம் இதுதானோ?

பாடியவர் :

  நெட்டிமையார்.

பாடப்பட்டோன் :

  பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.

திணை :

  பாடாண்.

துறை :

  இயன்மொழி.


பாடல் பின்னணி:

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பழிப்பது போல் புகழ்ந்து இயற்றிய பாடல் இது.

பாணர் தாமரை மலையவும், புலவர்
பூ நுதல் யானையோடு புனை தேர் பண்ணவும்,
அறனோ மற்று இது விறல் மாண் குடுமி,
இன்னா ஆகப் பிறர் மண் கொண்டு
இனிய செய்தி நின் ஆர்வலர் முகத்தே? . . . . [05]

பொருளுரை:

முதுகுடுமிப் பெருவழுதியே! பாணர்க்குப் பொன்னால் செய்த தாமரை மாலை சூட்டியும், புலவர்க்கு அலங்கரிக்கப்பட்ட தேருடன் நெற்றியில் பொற்பட்டத்தால் அலங்கரிக்கப்பட்ட யானையையும் அளித்து, உன்னிடம் பரிசு பெறுவோர்க்கு நீ நல்லவை செய்து, மறுபுறம் உன் பகைவர்களுக்கு துன்பம் நேரும்படி அவர்களுடைய நாட்டை வெற்றி கொள்வது அறமான செயல்தானா?

குறிப்பு:

இது பழித்தது போல் புகழ்ந்தது.

சொற்பொருள்:

பாணர் - பாடல் இசைப்பவர்கள், தாமரை - பொற்றாமரை மலர்கள், மலையவும் - சூடவும், புலவர் - புலவர்கள், பூ - பொற்பட்டம் (யானைகளின் நெற்றியில் சூடும் அணிகலன்), நுதல் - நெற்றி, யானையோடு - யானையோடு, புனை - அலங்கரிக்கப்பட்ட, தேர் - தேர், பண்ணவும் - அமைக்கவும், அறனோ - அறம் தானோ, மற்று - அசைநிலை, இது - இவ்வாறு செய்தல், விறல் - வெற்றி, மாண் - மாட்சி, பெருமை, குடுமி - பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, இன்னா ஆக - துன்பம் ஆகுமாறு, பிறர் மண் கொண்டு - பிறர் நாட்டை வெற்றி கொண்டு, இனிய - இனியவற்றை, செய்தி - செய்வை (செய்தி - முன்னிலை வினைமுற்று), நின் - உன்னிடம், ஆர்வலர் - பரிசு பெறுவோர், முகத்தே - இடத்தில் (முகத்தே - ஏகாரம் அசைநிலை)