புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
புறநானூறு: 011
பெற்றனர்! பெற்றிலேன்!
பெற்றனர்! பெற்றிலேன்!
பாடியவர் :
பேய்மகள் இளவெயினியார்.
பாடப்பட்டோன் :
சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ.
திணை :
பாடாண்.
துறை :
பரிசில் கடாநிலை.
வால் இழை, மட மங்கையர்
வரி மணற் புனை பாவைக்குக்
குலவுச் சினைப் பூக் கொய்து
தண் பொருநைப் புனல் பாயும் . . . . [05]
விண் பொருபுகழ், விறல்வஞ்சிப்
பாடல் சான்ற விறல்வேந் தனும்மே
வெப் புடைய அரண் கடந்து,
துப்புறுவர் புறம்பெற் றிசினே:
புறம் பொற்ற வய வேந்தன் . . . . [10]
மறம் பாடிய பாடினி யும்மே,
ஏர் உடைய விழுக் கழஞ்சின்,
சீர் உடைய இழை பெற்றிசினே!
இழை பெற்ற பாடி னிக்குக்
குரல் புணர்சீர்க் கொளைவல்பாண் மகனும்மே . . . . [15]
என ஆங்கு,
ஒள்அழல் புரிந்த தாமரை
வெள்ளி நாரால் பூப்பெற் றிசினே.
பொருளுரை:
பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடலால் புகழ் பெற்ற வஞ்சி நகர வேந்தன். இந்த வஞ்சி தண்பொருநை ஆறு பாயும் நகரம். வானளாவிய புகழும் வெற்றியும் உடைய நகரம். இந்தப் பொருநை ஆற்று மணலில் பாவை செய்து பூப் பறித்துவந்து சூட்டி மகளிர் விளையாடுவர். இவர்கள் மென்மையான மயிர் கொண்ட தம் திரண்ட கைகளையும், வெண்ணிற இழையணியும் கொண்டவர்கள். பாவைக்குப் பூச்சூட்டிய பின்னர் பொருநை ஆற்றுப் புனல்நீரில் பாய்ந்து விளையாடுவர். இவன் விரும்பிய கோட்டைகளையெல்லாம் வென்றவன். வலிமை மிக்க பெரியவர்களைப் புறங்கண்டவன். இவ்வாறு இவன் புறங்கண்ட வீரச் செருக்கைப் பாடினாள் ஒரு பாடினி. அதற்காக இவன் கழஞ்சு நிறைக்கு மிகுதியாக ஏரழகும், சீர்சிறப்பும் உடைய அணிகலன்களைப் பாடினிக்குப் பரிசாக வழங்கினான். பாடிய பாடினிக்கு உடன் - குரல் கொளைப்பண் தந்த பாணனுக்கு வெள்ளி - நாரால் தொடுத்த தங்கத் தாமரைப் பூவைப் பரிசாக வழங்கினான்.