ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

ஐங்குறுநூறு: 38

பாலை - மக்கட் போக்கிய வழித் தாயிரங்கு பத்து (ஓதலாந்தையார்)


பாலை - மக்கட் போக்கிய வழித் தாயிரங்கு பத்து (ஓதலாந்தையார்)

தன் மகள் காதலனுடன் சென்றுவிட்டதை எண்ணிக் கலங்கும் செவிலியும், பெற்ற தாயும்.

பாடல் : 371
மள்ளர் கோட்டின் மஞ்ஞை யாலும்
உயர்நெடும் குன்றம் படுமழை தலைஇச்
சுரநனி இனிய வாகுக தில்ல
அறநெறி இதுவெனத் தெளிந்தஎன்
பிறைநுதற் குறுமகள் போகிய சுரனே. . . . .[371]

பொருளுரை:

மள்ளர்கள் முழவு முழக்கும் இசைக்கு ஏற்றாற்போல மயில் ஆடும் ஓங்கி உயர்ந்த குன்றத்தில் என் மகள் செல்லும் குன்றத்தில் மழை பொழிந்து வழி இனிமையாக அமையட்டும். பிறை போன்ற நெற்றியை உடையவள் என் மகள். “அறநெறி இதுதான்” என்னும் தெளிவு பெற்று அவள் தன் காதலனுடன் சென்றுவிட்டாள். அவள் செல்லும் வழி இனியாக அமையட்டும்.-- செவிலி சொல்கிறாள்.

பாடல் : 372
என்னும் உள்ளினள் கொல்லோ தன்னை
நெஞ்சுணத் தேற்றிய வஞ்சினக் காளையொடு
அழுங்கல் மூதூர் அலரெழச்
செழும்பல் குன்றம் இறந்தஎன் மகளே. . . . .[372]

பொருளுரை:

என்னை நினைத்தாளோ இல்லையோ என்மகளை நெஞ்சம் கொள்ளுமாறு அவன் உறுதிமொழி கூறித் தேற்றியிருக்குறான்ழ அந்தக் காளையோடு அவள் சென்றுவிட்டாள். ஆரவாரம் மிக்க இந்த ஊர் அலர் தூற்றுகிறது. என் மகளோ செழுமையான பல குன்றங்களைக் கடந்து சென்றுவிட்டாள்.-- செவிலி கலங்குகிறாள்.

பாடல் : 373
நினைத்தொறும் கலிலும் இடும்பை எய்துக
புலிக்கோட் பிழைட்த கவைக்கோட்டு முதுகலை
மான்பிணை அணைதர ஆண்குரல் விளிக்கும்
வெஞ்சுரம் என்மகள் உய்த்த
வம்பமை வல்வில்விடலை தாயே. . . . .[373]

பொருளுரை:

இரட்டைக் கொம்பு கொண்ட ஆண்மான். புலி தாக்குதலிலிருந்து பிழைத்துக்கொண்டது. பெண்மானை அணைக்க விரும்பி தன் ஆண் குரலை எழுப்பியது. அத்தகைய கொடுமையான காட்டில் என் மகளை அழைத்துக்கொண்டு சென்றான் அந்தக் காளை. அவன் தாய் தன் மகனை நினைக்கும்போதெல்லாம் நான் என் மகளை நினைத்து அழுவது போல அழட்டும். - செவிலி புலம்புகிறாள்.

பாடல் : 374
பல்லூல் நினைப்பினும் நல்லென் றூழ
மிளி முன்பின் காளை காப்ப
முடியகம் புகாக் கூந்தலள்
கடுவனும் அறியாக் காடுஇறந் தோளே. . . . .[374]

பொருளுரை:

பல முறை நினைத்தாலும் நல்ல ஊழ் அமையட்டும் என்று நினைப்பேனாக. என் மகளை அழைத்துச் சென்ற வீரம் மிக்க வல்லாளனாகிய அந்ததக் காளை என் மகளைக் காப்பாற்றட்டும். உள்ளுக்குள் சிக்கு முடிச்சு இல்லாத கூந்தலை உடையவள் என் மகள். ஆண் குரங்களும் அறியாத காட்டு வழிய்யில் சென்றுவிட்டாளே. - செவிலி வாழ்த்துகிறாள்.

பாடல் : 375
இதுவென் பாவை பாவை இதுஎன்
அலமரு நோக்கின் நலம்வரு சுடர்நுதல்
பைங்கிளி எடுத்த பைங்கிளி என்றிவை
காண்தொறும் காண்தொறும் கலங்க
நீங்கின ளோஎன் பூங்க ணோளே. . . . .[375]

பொருளுரை:

அவள் என் கண்ணணில் மலர்ந்துகொண்டிருக்கிறாள். என் கையிலிருக்கும் இந்தப் பொம்மை என் மகளாகிய பாவைக்கு விருப்பமான பொம்மை. இந்தப் பச்சைக்கிளி என் பச்சைக்கிளியாகிய மகள் எடுத்து விளையாடிய பச்சைக்கிளி. இந்த மைனாக் குருவி என் மகளுக்கு இனிய சொல் கூறும் மைனாக் குருவி. என்று சொல்லிக்கொண்டு என் மனம் சுழல்கின்றது. என் மகள் நலம் மிக்க சுடர் முகம் கொண்டவள். இவற்றைக் காணும்போதெல்லாம் கலங்ககுகிறேன். இப்படிக் கலங்கும்படி விட்டுவிட்டு என் மகள் நீங்கிவிட்டாளா?

பாடல் : 376
நாள்தொறும் கலிழும் என்னினும் இடைநின்று
காடுபடு தீயின் கனலியர் மாதோ
நல்வினை நெடுநகர் கல்லெனக் கலங்கப்
பூப்புரை உண்கண் மடவரல்
போக்கிய புணர்த்த அறனில் பாலே. . . . .[376]

பொருளுரை:

இப்படி நாள்தோறும் நான் புலம்புகிறேன். இப்படிக் கலங்கும்படி என் மகளை என்னிடமிருந்து பிரித்த விதி புலம்பித் தொலைக்கட்டும். நாற்புறமும் காடு பற்றி எரியும்போது இடையில் அகப்பட்டுக்கொண்டவர் கலங்குவது போல விதி கலங்கட்டும். நல்வினை மட்டுமே செய்தது இந்த மாளிகை. இந்த மாளிகையில் உள்ளவர்கள் கலங்குகின்றனர். நல்வினை செய்தவர் கலங்கும்படி மகளைப் போக்கிய விதி கலங்கட்டும். - செவிலியின் வருத்தம்.

பாடல் : 377
நீர்நசைக்கு ஊக்கிய உயவல் யானை
இயம்புணர் தூம்பின் உயிர்க்கும் அத்தம்
சென்றனள் மன்றஎன் மகளே
பந்தும் பாவையும் கழங்கும்எமக்கு ஒழித்தே. . . . .[377]

பொருளுரை:

தண்ணீர்த் தாகத்தால் வாடும் யானை இசைக்கருவி கொம்பு ஊதுவது போலப் பெருமூச்சு விடும். அப்படிப்பட்ட வழியில் என் மகள் சென்னுவிட்டாள். அவள் விளையாடும் பந்து, பாவை, கழங்கு ஆகியவற்றை என்னிடம் அவள் நினைவாக விட்டுவிட்டுச் சென்றுவிட்டாள். செவிலியின் புலம்பல்.

பாடல் : 378
செல்லிய முயலிப் பாஅய சிறகர்
வாவல் உகக்கும் மாலையாம் புலம்பப்
போகிய அவட்கோ நோவேன் தேமொழித்
துணையிலள் கலிழும் நெஞ்சின்
இணையேர் உண்கண் இவட்குநோ வதுமே. . . . .[378]

பொருளுரை:

மேகம் போல விரியும் சிறகினை உடைய வௌவால் மாலை நேரத்தில் பறந்து செல்ல விரும்பும். இந்த மாலை வேளையில் நான் புலம்புகிறேன். நான் புலம்பும்படி போய்விட்ட அவளுக்காக நான் நோவேனா? அல்லது அவள் இல்லாமல் அழுகிறாளே அவள் தோழி இவளுக்காக நான் நோவேனா?-- செவிலியின் கலக்கம்.

பாடல் : 379
தன்னமர் ஆயமொடு நன்மண நுகர்ச்சியின்
இனிதாங் கொல்லோ தனக்கே பனிவரை
இனக்களிறு வழங்கும் சோலை
வயக்குறு வெள்வேல் அவற்புணர்ந்து செலவே. . . . .[379]

பொருளுரை:

என் மகள் முன்பே சொல்லியிருந்தால் தான் விரும்பும் சுற்றத்தாருடன் நாமே திருமணம் செய்து தந்திருக்கலாம். இது இனியது அல்லவா? அவ்வாறன்றி அவள் தான் விரும்பும் காதலனுடன் சென்றுவிட்டாள். பனி மலையில் யானைக் கூட்டம் நடமாடும் சோலையில் வெற்றிவேல் முருகனைப் போன்றவனுடன் சேர்ந்து சென்றுவிட்டாளே.-- பெற்ற தாய் புலம்புகிறாள்.

பாடல் : 380
அத்தம் நீளிடை அவனொடு போகிய
முத்தேர் வெண்பல் முகிழ்நகை மடவரல்
தாயர் என்னும் பெயரே வல்லாறு
எடுத்தேன் மன்ற யானே
கொடுத்தோர் மன்றஅவள் ஆயத் தோரே. . . . .[380]

பொருளுரை:

என் மகள் காட்டு வழியில் அவனோடு போய்விட்டாள். முத்துப் போன்று அரும்பும் புன்முறுவலைக் காட்டிக்கொண்டு அவனோடு சென்றுவிட்டாள். நான் அவளுக்குத் தாய் என்னும் பெயரைத் தாங்கிக் கொண்டுள்ளேன். இது ஒன்றுதான் எனக்குக் கிடைத்த வலிமை. அவளை மணந்துகொண்டவரின் உற்றார் உறவினர்கள் கொடுத்துவைத்தவர்கள்.