ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

ஐங்குறுநூறு: 28

குறிஞ்சி - குரக்குப் பத்து (கபிலர்)


குறிஞ்சி - குரக்குப் பத்து (கபிலர்)

குரங்கு வாழும் மலையின் தலைவன் அவன். குரங்கு வாழ்வது போல் வாழ முயல்கிறான் என்று பேசும் பாடல்கள் பத்து இந்தப் பகுதியில் உள்ளன.

பாடல் : 271
அவரை அருந்த மந்தி பகர்வர்
பக்கின் தோன்றும் நாடன் வேண்டின்
பல்பசுப் பெண்டிரும் பெறுகுவன்
தொல்கேள் ஆகலின் நல்குமால் இவட்கே. . . . .[271]

பொருளுரை:

செவிலிக்குத் தோழி அறத்தொடு நிலை... மந்தி அவரைக் காய்களைப் பறித்துத் தின்னும். அதனை ஓட்டத் தோட்டக்காரன் கூச்சலிடுவான். இப்படிப்பட்ட நாட்டின் தலைவன் அவன். அவனுக்குப் பசுப் போன்ற மகளிர் திருமணம் செய்துகொள்ளக் கிடைப்பார்கள். பழமையான உறவுக்காரன் என்பதால் உன் மகளைப் பெண் கேட்டு வந்துள்ளான். மணம் முடித்துத் தந்துவிவிடுங்கள்.

பாடல் : 272
கருவிரல் மந்திக் கல்லா வன்பறழ்
அருவரைத் தீந்தேன் எடுப்பை அயலது
உருகெழு நெடுஞ்சினைப் பாயும் நாடன்
இரவின் வருதல் அறியான்
வரும் வரும் என்பள் தோழியாயே. . . . .[272]

பொருளுரை:

தலைவி தோழிடம் கூறுகிறாள்... கருமையான விரல்களை உடையது அந்த மந்திக் குரங்கு (பெண் குரங்கு) பழக்க வழக்கங்களைக் கற்காதது அதன் குட்டி. அந்தக் குட்டி வலிமை மிக்கது. அது பாறையில் தொங்கிய தேனை எடுத்துக்கொண்டு அருகில் இருக்கும் மரக்கிளையில் பாயும். இப்படிப்பட்ட நாட்டை உடையவன் என் காதலன். அவனுக்கு இரவில் நான் இருக்கும் இடத்துக்கு வரத் தெரியவில்லை. ஆனால் என்னைத் தேடி வந்திருக்கிறான். தாய் வந்தான் என்று சொல்கிறாள்.

பாடல் : 273
அத்தச் செயலைத் துப்புறழ் ஒள்தளிர்
புந்தலை மந்தி வன்பறழ் ஆரும்
நன்மலை நாட நீசெலின்
நின்நயத்து உறைவி என்னினும் கழில்மே. . . . .[273]

பொருளுரை:

தோழி தலைவனிடம் கூறுகிறாள்... காட்டில் தழைத்திருக்கும் செயலை மரத்தின் தளிர்கள் பவளம் போல் சிவப்பு நிறத்தில் இருக்கும். அந்தத் தளிர்களைப் பெண்குரங்கும், அதன் குட்டியும் உண்ணும். இப்படிப்பட்ட மலையின் தலைவனே, நீ இவளை விட்டுவிட்டுப் பொருள் தேடச் சென்றால் உன்னை விரும்பி வாழும் என் தலைவி நான் அழுவதைக் காட்டிலும் பெரிதும் அருவாள்.

பாடல் : 274
மந்திக் கணவன் கல்லாக் கொடுவன்
ஒன்கேழ் வயப்புலி குழுமலின் வைரைந்துடன்
குன்றுயர் அடுக்கம் கொள்ளும் நாடன்
சென்றனன் வாழி தோழியென்
மெல்தோள் கவினும் பாயலும் கொண்டே. . . . .[274]

பொருளுரை:

தலைவி தன் தோழியிடம் சொல்கிறாள்... மந்திக் குரங்கின் தலைவன் கடுவன். அந்த ஆண் - குரங்கு பண்பாட்டைக் கல்லாதது. புலி வந்தால் தன் மந்தியை விட்டுவிட்டு மலைப்பாறை உச்சிக்கு ஓடிவிடும். இப்படிப்பட்ட நாட்டை உடையவன் என் தலைவன். அவன் என்னை இங்கேயே விட்டுவிட்டுப் பொருள் தேடச் சென்றுவிட்டான். தோழி, என் அழகை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான். என்னைப் பாயாகப் பயன்படுத்தி உறங்கினானே அதையும் விட்டுவிட்டுச் சென்றுவிட்டான்.

பாடல் : 275
குரங்கின் தலிஅவன் குருமயிர்க் கடுவன்
சூரலஞ்ச் சிறுகோல் கொண்டு வியலறை
மாரி மொக்குள் புடைக்கும் நாட
யாம்நின் நயத்தனம் எனினும்எம்
ஆய்நலம் வாடுமோ அருளுதி எனினே. . . . .[275]

பொருளுரை:

தோழி தலைவனிடம் கூறுகிறாள்... அந்தப் பெண்குரங்கின் தலைவன் கடுவன். அது சிவந்த மயிர் கொண்டது. அது சிறிய மூங்கில் கோலைக் கையில் வைத்துக்கொண்டு பாறையில் படர்ந்திருக்கும் பூ மொட்டுகளை அடிக்கும். இப்படிப்பட்ட நாட்டின் தலைவனே. என் தலைவி உன்னை விரும்புகிறாள். நீ அவளுக்கு அருள் வழங்கினால், அவள் நலம் வாடுமோ? வாடாது.

பாடல் : 276
மந்திக் காதலன் முறிமேய் கடுவன்
தண்கமழ் நறைக்கொடி கொண்டு வியலறைப்
பொங்கல் இளமழை புடைக்கும் நாட
நயவாய் ஆயினும் வரைந்தனை சென்மோ
கன்முகை வேங்கை மலரும்
நன்மலை நாடன் பெண்டெனப் படுத்தே. . . . .[276]

பொருளுரை:

தோழி தலைவனிடம் கூறுகிறாள்... அந்த மந்திக் குரங்கின் காதலன் தளிர்களை மேயும் கடுவன். பாறையில் படர்ந்திருக்கும் மணம் மிக்க ‘நறை’ என்னும் கொடியை அறுத்து வைத்துக்கொண்டு பொங்கல் போல் தன்மேல் விழும் மழைத் துளிகளைத் தட்டிவிடும். இப்படிப்பட்ட நாட்டின் தலைவன் நீ. நீ இவளை விரும்பாவிட்டாலும் பரவாயில்லை. இவளைத் திருமணம் செய்துகொண்டு செல். கல்லுக் குகையில் வேங்கை பூக்கும் நாடனின் மனைவி இவள் என்று எல்லாரும் இவளைச் சொல்லட்டும்.

பாடல் : 277
குறவர் முன்றில் மாதீண்டு துறுகல்
கல்லா மந்தி கடுவனோடு உகளும்
குன்ற நாடநின் மொழிவல் என்றும்
பயப்ப நீத்தல் என்இவள்
கயத்துவளர் குவளையின் அமர்த்த கண்ணே. . . . .[277]

பொருளுரை:

தோழி தலைவனிடம் கூறுகிறாள்... குறவர் தம் வீட்டு முற்றத்தில் ஆடுமாடுகள் உரசிக்கொள்வதற்காக பெரிய கல்லை நட்டு வைத்திருப்பார்கள். அந்தக் கல்லில் ஏறி, பண்பாடு கல்லாத ஆண், பெண் குரங்குகள் துள்ளி விளையாடும். அப்படிப்பட்ட நாட்டின் தலைவன் நீ. உனக்கு ஒன்று நான் சொல்ல விரும்புகிறேன். நீ செல்லலாம். ஆனால் பயன் விளையும்படிச் செல்ல வேண்டும். குளத்தில் வளரும் குவளை மலர் போன்ற கண்ணை உடையவள் இவள். இவளது கண்கள் உன்னை விரும்பிப் பார்த்துக்கொண்டே இருக்கும் பயன் விளையும்படிச் செல்ல வேண்டும். திருமணம் செய்துகொண்டு செல்ல வேண்டும்.

பாடல் : 278
சிலம்பின் வெதிரத்துக் கண்விடு கழைக்கோல்
குரங்கின் வன்பரழ் பாய்ந்தன இலஞ்சி
மீனெறி தூண்டிலின் நிவக்கும் நாடன்
உற்றோர் மறவா நோய்தந்து
கண்டோர் தண்டா நலங்கொண் டனனே. . . . .[278]

பொருளுரை:

தலைவி தோழியிடம் சொல்கிறாள்... கணுக்கள் கொண்ட மூங்கில் காட்டில் வளர்ந்திருக்கும். அந்த மூங்கில் கோலில் குரங்குக் குட்டி பாழும். அப்போது அந்த மூங்கில் வளையும். பின்னர் அது தானே குரங்குக் குட்டியுடன் நிமிரும். மீன் மாட்டிக்கொண்டதும் தூண்டில் கட்டிய மூங்கில் கோல் வளைந்து நிமிர்வது போல நிமிரும். இப்படிப்பட்ட நாட்டை உடையவள் நீ. உன் உறவுக்காரி என் தோழி மறக்க முடியாத நோயைத் தந்துள்ளாய். அவளைக் கண்டவர் எல்லாரும் பார்த்துக்கொண்டே இருக்கும் அவள் அழகை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டாயே. திருப்பித் தந்துவிடு.

பாடல் : 279
கல் இவர் இற்றி புல்லுவன எறிக்
குளவி மேய்ந்த மந்தி துணையோடு
வரைமிசை உகளும் நாட நீவரின்
கல்லகத் ததுஎம் ஊரே
அம்பல் சேரி அலராம் கட்டே. . . . .[279]

பொருளுரை:

தோழி தலைவனிடம் கூறுகிறாள்... இற்றி மரம் கல்லில் வேர் விட்டு வளர்ந்திருக்கும். அதில் ஏறிக் குளவிக் கொடி படர்ந்திருக்கும். இற்றி வேரைப் பற்றிக்கொண்டு மந்திக் குரங்கு தன் ஆண்குரங்கு துணையுடன் ஏறி, குளவிக் கொடியை மேயும். பின் அங்குள்ள மலைப் பாறையில் துள்ளி விளையாடும். அப்படிப்பட்ட நாட்டை உடையவன் நீ. நீ இரவில் இவளைத் தேடி வந்தால், தெருவில் உள்ளவர்கள் எல்லாம் ‘குசுகுசு’ என்று அம்பலை பேசுவர். பின் ஊருக்கே தெரிந்துவிடும். இரவில் வராதே திருமணம் செய்துகொள்.

பாடல் : 280
கருவிரல் மந்திக் கல்லா வன்பார்ப்பு
இருவெதிர் ஈர்ங்கழை ஏறிச் சிறுகோல்
மதிபுடைப் பதுபோல தோன்றும் நாட
வரைந்தனை நீஎனக் கேட்டுயான்
உரைத்தனென் அல்லனோ அதென் யாய்க்கே. . . . .[280]

பொருளுரை:

தோழி தலைவனிடம் சொல்கிறாள்... கருமையான விரல்களை உடைய பெண்குரங்கான் குட்டி அது. முறைமை கற்காத குட்டி அது. வலிமை மிக்க குட்டி அது. வளர்ந்திருக்கும் மூங்கில் கொம்பின் ஏறியிருக்கும். அது நிலாவை அடிப்பது போலக் காணப்படும். இப்படிப்பட்ட நாட்டை உடையவன் நீ. நீ என் தலைவியை உன் ஊருக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்துகொண்ட செய்தியை இவள் தாய்க்குச் சொல்லிவிட்டேன்.