ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

ஐங்குறுநூறு: 34

பாலை - தலைவி இரங்கு பத்து (ஓதலாந்தையார்)


பாலை - தலைவி இரங்கு பத்து (ஓதலாந்தையார்)

தலைவி கலக்கத்துடன் தோழியிடம் சொல்கிறாள்.

பாடல் : 331
அம்ம வாழி தோழி அவிழிணர்க்
கருங்கால் மராஅத்து வைகிசினை வான்பூ
அருஞ்சுரம் செல்லுநர் ஒழிந்தோர் உள்ள
இனிய கம்ழும் வெற்பின்
இன்னா என்பஅவர் சென்ற ஆறே. . . . .[331]

பொருளுரை:

அம்ம தோழி! இதனைக் கேள்... கருமையான அடிமரம் கொண்டது மரா மரம். அதன் பூக்கள் வெண்மையானவை. அவை பாலை வழியில் செல்வோர் தங்கி இளைப்பாறும்படி இனிய மணம் வீசும் என்று சொல்கின்றனர். இந்த மணம் என்னை மறக்கச் செய்யும் கொடியது.

பாடல் : 332
அம்ம வாழி தோழி என்னதூஉம்
அறநில மன்ற தாமே விறன்மிசைக்
குன்றுகெழு கானத்ட பண்பின் மாக்கணம்
கொடிதே காதலிப் பிரிதல்
செல்லல் ஐய என்னா தவ்வே. . . . .[332]

பொருளுரை:

அம்ம தோழி! இதனைக் கேள்... அவர் குன்றுகள் நிறைந்த காட்டில் தன் வீறாப்பு மிகுதியால் சென்றுள்ளார். அக்காட்டில் விலங்கினங்கள் தம் காதலியைப் பிரியாமல் வாழ்கின்றன. காதலியைப் பிரிந்து வந்துள்ள என் காதலரைப் பிரிந்து செல்லாதே என்று சொல்லவில்லையே. அதனால் அவை கொடியவை. அறம் இல்லாதவை.

பாடல் : 333
அம்ம வாழி தோழி யாவதும்
வல்லா கொல்லோ தாமே அவண
கல்லுடை நன்னாட்டுப் புள்ளீனப் பெர்ந்தோடு
யாஅம் துணைபுணர்ந்து உறைதும்
யாங்குப் பிந்துறைதி என்னா தவ்வே. . . . .[333]

பொருளுரை:

அம்ம தோழி! இதனைக் கேள்... அங்கே கற்கள் நிறைந்த காட்டில் பறவைகள் வாழ்கின்றன. “யாம் துணையோடு சேர்ந்து வாழ்கின்றோம். நீ மட்டும் துணையைப் பிரிந்து எதற்காக வாழ்கின்றீர்” என்று சொல்லமுடியாமல் இருக்கின்றனவோ? செல்வதில் அவர் அத்துணை உறுதி பூண்டவராக இருக்கின்றாரோ?

பாடல் : 334
அம்ம வாழி தோழி சிறியிலை
நெல்லி நீடிய கல்வாய் கடத்திடைப்
பேதை நெஞ்சம் பின்செலச் சென்றோர்
கல்லினும் வலியர் மன்ற
ப்ல்லிதல் உண்கண் அழப்பிர்ந் தோரே. . . . .[334]

பொருளுரை:

அம்ம தோழி! இதனைக் கேள்... சிறிய இலைகளுடன் கூடிய நெல்லி மரங்கள் நிறைந்த பாலைநில வழியில் சென்றுள்ளார். பேதை என் நெஞ்சம் அவரைப் பின்தொடர்ந்து செல்கிறது. பூவிதழ் போன்ற என் கண் அழுகிறது. அதனைப் பொருட்படுத்தாமல் சென்ற அவர் நெஞ்சம் கல்லைக் காட்டிலும் இறுக்கமானது.

பாடல் : 335
அம்ம வாழி தோழி நம்வயின்
நெய்தோ ரன்ன வெவிய எருவை
கற்புடை மருங்கில் கடுமுடை யார்க்கும்
கடுநனி கடிய என்ப
நீடி இவன் வருநர் சென்ற ஆறே. . . . .[335]

பொருளுரை:

அம்ம தோழி! இதனைக் கேள்... கழுகு, இரத்தம் போல் சிவந்த காதுகளைக் கொண்டது. அது கற்களுக்கு இடையில் அழுகி நாற்றமடிக்கும் புலவைத் தேடிப் பார்க்கும் என்கின்றனர். இத்தகைய கொடுமையான காட்டு வழியில் நீண்ட நாள் செல்கிறாரே.

பாடல் : 336
அம்ம வாழி தோழி நம்வயின்
பிரியலர் போலப் புணர்ந்தோர் மன்ற
நின்றதில் பொருட்பிணி முற்றிய
என்றூழ் நீடிய சுரன்இறந் தோரே. . . . .[336]

பொருளுரை:

அம்ம தோழி! இதனைக் கேள்... பிரியாதவர் போல காட்டிக்கொண்டு என்னைப் புணர்ந்தார். பொருள் ஆசை அவரை விடவில்லை. பொருள் தேடிவரக் கோடை காலத்தில் பிரிந்து சென்றுவிட்டார்.

பாடல் : 337
அம்ம வாழி தோழி நம் வயின்
மெய்யுற விரும்பிய கைகவர் முயக்கினும்
இனிய மன்ற தாமே
பனியிரும் குன்றம் சென்றோர்க்குப் பொருளே. . . . .[337]

பொருளுரை:

அம்ம தோழி! இதனைக் கேள்... என் உடம்போடு உடம்பாக கையால் தழுவி இன்பம் பெறுவதைக் காட்டிலும், பனி பொழியும் குன்றைக் கடந்து சென்று ஈட்டும் பொருள் அவருக்கு இனிமையாக இருக்கிறதே!

பாடல் : 338
அம்ம வாழி தோழி சாரல்
இலையில வலர்ந்த ஓங்குநிலை இலவம்
மலையுறு தீயில் சுரமுதல் தோன்றும்
பிரிவருங் காலையும் பிரிதல்
அரிதுவல் லுநர்நம் காத லோரே. . . . .[338]

பொருளுரை:

அம்ம தோழி! இதனைக் கேள்... ஓங்கி உயர்ந்த இலவ மரம் இலை இல்லாமல் மலர்ந்து மலையில் பற்றி எரியும் தீப் போலத் தோன்றும். அப்படிப்பட்ட காடு வழியில் பிரிவதற்கு உரிய காலம் அல்லாத காலத்திலும் பிரிந்து செல்ல வல்லவர் என் காதலர்.

பாடல் : 339
அம்ம வாழி தொழி சிறியிலைக்
குறுஞ்சினை வேம்பின் நறும்பழம் உணீஇய
வாவல் உகக்கும் மாலையும்
இன்றுகொல் காதலவர் சென்ற நாடே. . . . .[339]

பொருளுரை:

அம்ம தோழி! இதனைக் கேள்... சிறிய கிளைகளில் வேப்பம்பழம் பழுத்திருக்கும். வௌவால் அதனை உண்ணுவதற்கு விரும்பும். மாலை வேளையில் அவை உண்ண வரும். அப்படி உண்ண வரும் மாலைக் காலம் அவர் சென்ற நாட்டில் இல்லை போலும். அவர் இல்லாத மாலைக் காலம் என்னை வருத்துகிறது.

பாடல் : 340
அம்ம வாழி தொழி காதலர்
உள்ளார் கொல்நாம் மருள்உற் றனம்கொல்
விட்டுச் சென்றனர் நம்மே
தட்டைத் சென்றனர் நம்மே
தட்டைத் தீயின் ஊரலர் எழவே. . . . .[340]

பொருளுரை:

அம்ம தோழி! இதனைக் கேள்... காதலர் நம்மை நினைக்க மாட்டாரோ? அவரை எண்ணும்போது எனக்கு ஒரே மயக்கமாக இருக்கிறது. அவர் என்னை விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். ஊர் அலர் தூற்றுகிறது. காய்ந்து கிடக்கும் சோளத்தட்டையில் தீ பற்றி எரிவது போல் அலர் பற்றி எரிகிறது. என்ன செய்வேன்.