ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

ஐங்குறுநூறு: 01

மருதம் - வேட்கைப் பத்து (ஓரம்போகியார்)


மருதம் - வேட்கைப் பத்து (ஓரம்போகியார்)

இதில் உள்ள 10 பாடல்களும் தாயும் மகளும் அவரவர் வேறுபட்ட விருப்பத்தைத் தெரிவிக்கும் பொருள் மேல் அடுக்கி வந்துள்ளன. எல்லாப் பாடல்களும் அரசன் ஆதன் என்பவனையும், இளவரசன் அவினி என்பவனையும் வாழ்த்தித் தொடங்குகின்றன.

பாடல் : 001
வாழி ஆதன் வாழி அவினி
நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க
எனவேட் டோளே யாயே யாமே
நனைய காஞ்சிச் சினைய சிறுமீன்
யாணர் ஊரன் வாழ்க
பாணனும் வாழ்க எனவேட் டேமே. . . . .[001]

பொருளுரை:

தாய் நெல்லின் விளைச்சல் பெருகி பொன்வளம் சிறக்கவேண்டும் வேண்டிக்கொள்கிறாள். மகளோ, தன் கணவனும் அவனைப் பாதுகாக்கும் பாணனும் நலமுடன் வாழவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறாள்.

பாடல் : 002
வாழி ஆதன் வாழி அவினி
விளைக வயலே வருக இரவலர்
எனவேட் டோளே யாயே யாமே
பல்லிதல் நீலமொடு நெய்தல் நிகர்க்கும்
தண்துறை யூரன் கேண்மை
வழிவ்ழிச் சிறக்க எனவேட் டேமே. . . . .[002]

பொருளுரை:

விளைச்சல் பெருகவேண்டும், நான் வழங்க இரவலர் மிகுதியாக வரவேண்டும் என வேண்டிக்கொள்கிறாள். மகளோ, கணவனுக்கும் எனக்கும் உள்ள நட்புறவு வழிவழியாகத் தொடரவேண்டும் என வேண்டிக்கொள்கிறாள்.

பாடல் : 003
வாழி ஆதன் வாழி அவினி
பால்பல ஊறுக பகடுபல சிறக்க
எனவேட் டோளே யாயே யாமே
வித்திய உழவர் நெல்லோடு பெயரும்
பூக்கஞு லூரன் தன்மனை
வாழ்க்கை பொலிக என்வேட் டேமே. . . . .[003]

பொருளுரை:

தாய் பசு பால் ஊறவேண்டும், உழும் எருதுகள் பெருகவேண்டும் என வேண்டிக்கொள்கிறாள். மகளோ, கணவன் வாழ்க்கை பொலிவுற வேண்டும் என வேண்டிக்கொள்கிறாள்.

பாடல் : 004
வாழி ஆதன் வாழி அவினி
பகைவர்புல் ஆர்க பார்ப்பார் ஓதுக
எனவேட் டோளே யாயே யாமே
பூத்த கரும்பிற்காய்த்த நெல்லிற்
கழனி யூரன் மார்பு
பழன் மாகற்க எனவேட் டேமே. . . . .[004]

பொருளுரை:

தாய் பகைவர் இறந்து பார்ப்பார் ஓதித் தரும் புல்லுணவை உண்ண வேண்டும் என வேண்டிக்கொள்கிறாள். மகளோ, தன் கணவன் மார்பு தனக்குப் பழயதாக மாறக்கூடாது என வேண்டிக்கொள்கிறாள்.

பாடல் : 005
வாழி ஆதன் வாழி அவினி
பசியில் ஆகுக பிணீகேன் நீங்குக
எனவேட் டோளே யாயே யாமே
முதலை போத்து முழுமீன் ஆரும்
தண்துறை யூரன் தேரேம்
முன்கடை நிற்க எனவேட் டேமே. . . . .[005]

பொருளுரை:

தாய் உலகில் எல்லாரும் பசி, பிணி இல்லாமல் இருக்கோண்டும் என வேண்டிக்கொள்கிறாள். மகளோ, தன் ஊரனின் தேர் ஊர்தி எப்போதும் தன் இல்லத்தின் முன்னர் நிற்கவேண்டும் என வேண்டிக்கொள்கிறாள்.

பாடல் : 006
வாழி ஆதன் வாழி அவினி
வேந்துபகை தணிக யாண்டுபல நந்துக
எனவேட் டோளே யாயே யாமே
மல்ர்ந்த பொய்கை முகைந்த தாமரைத்
தண்துறை யூரண் வரைக
எந்தையும் கொடுக்க எனவேட் டேமே. . . . .[006]

பொருளுரை:

வேந்தன் பகைமை உள்ளம் தணிந்து நெடிது வாழவேண்டும் என வேண்டிக்கொள்கிறாள். மகளோ, தன் ஊரன் தன்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும். தன் தந்தையும் தன்னைத் தன் ஊரனுக்குத் தரவேண்டும் என வேண்டிக்கொள்கிறாள்.

பாடல் : 007
வாழி ஆதன் வாழி அவினி
அறநனி சிறக்க அல்லது கெடுக
என வேட்டோளே யாயே யாமே
உளை மருதத்துக்கி கிளைக்குரு
தண்துறை யூரன் தன்னூர்க்
கொண்டனன் செல்க எனவேட் டேமே. . . . .[007]

பொருளுரை:

தாய், ஊரில் அறம் சிறக்க வேண்டும், அறமல்லாத மறம் இருக்கக்கூடாது என வேண்டிக்கொள்கிறாள். மகளோ, தன் ஊரன் அவன் ஊருக்குத் தன்னைக் கொண்டுசெல்ல வேண்டும் என வேண்டிக்கொள்கிறாள்.

பாடல் : 008
வாழி ஆதன் வாழி அவினி
அரசுமுறை செய்க களவில் லாகுக
எனவேட் டோளே யாயே யாமே
அலங்குசினை மாஅத்து அணிமயில் இருக்கும்
புக்கஞல் ஊரன் சுளீவண்
வாய்ப்ப தாக எனவேட்டோமே. . . . .[008]

பொருளுரை:

தாய், அரசன் நடுவுநிலை தவறாமல் தீர்ப்பு வழங்க வேண்டும், நாட்டில் திருட்டு இருக்கக்கூடாது என வேண்டிக்கொள்கிறாள். மகளோ, தன் ஊரன் தன்னைப் பிரியமாட்டேன் எனச் சூளுரைத்தானே அது பலிக்கவேண்டும் என வேண்டிக்கொள்கிறாள்.

பாடல் : 009
வாழி ஆதன்வாழி அவினி
நன்றுபெரிது சிறக்க தீதில் ஆகுக
என வேட் டோளே யாயே யாமே
கயலார் நாரை போர்வின் சேக்கும்
தண்துறை யூரன் கேண்மை
அம்பல் ஆகற்க எனவேட் டேமே. . . . .[009]

பொருளுரை:

தாய், நல்லதே நடக்க வேண்டும். தீது நடக்கக்கூடாது என வேண்டிக்கொள்கிறாள். மகளோ, ஊரனுக்கும் தனக்கும் உள்ள நட்பு ஊருக்குத் தெரியக்கூடாது என வேண்டிக்கொள்கிறாள்.

பாடல் : 010
வாழி ஆதன் வாழி அவினி
மாரி வாய்க்க வளநனி சிறக்க
எனவேட் டோளே யாயே யாமே
பூத்த மாஅத்துப் புலாலஞ் சிறுமீன்
தண்துறை யூரன் தன்னோடு
கொண்டனன் செல்க எனவேட் டேமே. . . . .[010]

பொருளுரை:

தாய், மழை பொழிந்து வளம் கொழிக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறாள். மகளோ, ஊரன் தன்னோடு தன்னையும் அழைத்துக்கொண்டு செல்லவேண்டும் என வேண்டிக்கொள்கிறாள்.