ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

ஐங்குறுநூறு: 22

குறிஞ்சி - அன்னாய்ப் பத்து (கபிலர்)


குறிஞ்சி - அன்னாய்ப் பத்து (கபிலர்)

இப்பாடல்களில் அன்னை என்னும் சொல் தாயையோ, தோழியையோ, தலைவியையோ விளிக்கும் சொல்லாக வருகிறது. தோழியர் இக்காலத்திலும் ‘அம்மா தாயே’ என்று விளிப்பர்.

பாடல் : 211
நெய்யொடு மயக்கிய உழுந்துநூற் றன்ன
வயலையஞ் சிலம்பின் தலையது
செயலையம் பகைத்தழி வாடும் அன்னாய். . . . .[211]

பொருளுரை:

தோழி தலைவியிடம்... நெய் கனிந்திருக்கும் உளுந்து வயலில் காய்த்திருப்பது போல அவர் உனக்காக வயலை, செயலைத் தழைகளால் கட்டிய தழையாடை வாடிக்கொண்டிருக்கிறது தாயே. ஏற்றுக்கொள்.

பாடல் : 212
சாந்த மரத்ட பூதிழ் எழுபுகை
கூட்டுவிரை கமழும் நாடன்
அறவற்கு எவனோ நாமக்ல்வு அன்னாய் . . . .[212]

பொருளுரை:

தோழி செவிலியிடம்... சந்தன மரத்திலிருந்து எழும் துகள்-புகையின் மணம் எங்கும் கூடி மணக்கும் நாடன் அவன். அவனுக்கு மணம் முடித்துத் தருவதிலிருந்து நாம் ஏன் அகலவேண்டும்?

பாடல் : 213
நறுவடி மாஅத்து மூக்கிறுபு உதிர்த்த
ஈர்ந்தண் பெருவடுப் பாலையிற் குறவர்
உறைவீழ் ஆலியல் தொகுக்கும் சாரல்
மீமிசை நன்னாட் டவர்வரின்
யானுயிர் வாழ்தல் கூடும் அன்னாய். . . . .[213]

பொருளுரை:

தலைவி தோழியிடம்... இனிக்கும் மாமரத்தின் வடுக்கள் காம்பு-மூக்கு அறுந்து பாலை நிலத்தில் பொழியும் மழையில் விழும் பனிக்கட்டி போல, விழும். அங்குள்ள நன்னாட்டுக் குறவர் மக்கள் அவற்றைத் தொகுத்து வைத்துக்கொள்வர். அவனுடைய அந்த நாட்டவர் அவனுக்கு என்னைப் பெண் கேட்டு வந்தால் நான் உயிர்வாழக் கூடும் தாயே.

பாடல் : 214
சாரல் பலவின் கொழுந்துணர் நறும்பழம்
இருங்கள் விடரளை வீழ்ந்தென வெற்பில்
பெருந்தேன் இறாஅல் கீறும் நாடன்
பேரமர் மழைக்கண் கழிலத்தன்
சீருடை நன்னாட்டுச் செல்லும் அன்னாய். . . . .[214]

பொருளுரை:

தலைவி தோழியிடம்... மலைச்சாரலில் கொழுத்த இலைத் தளிருடன் இருக்கும் பலாப்பழம் கல்லுக் குகையில் விழ, அங்குள்ள தேன் கூடு சிதறும் நாட்டை உடையவன் அவன். விரும்பி மழை பொழியும் என் கண்ணை அழ விட்டுவிட்டுத் தன் நாட்டுக்குச் செல்கிறான், தாயே.

பாடல் : 215
கட்டளை யன்ன மணிநிறத் தும்பி
இட்டிய குயின்ற துறைவயின் செலீஇயர்
தட்டைத் தண்ணுமைப் பின்னர் இயவர்
தீங்குழல் ஆம்பலின் இனிய இமிரும்
புதன்மலர் மாலையும் பிரிவோர்
இதனினும் கொடிய செய்குவர் அன்னாய். . . . .[215]

பொருளுரை:

தலைவி தோழியிடம்... பொன்னை மாற்றுப் பார்க்கும் கட்டளைக் கல் போன்ற நிறம் கொண்ட தும்பி வண்டுகள் மூங்கிலில் குடைந்த துளை வழியாக உள்ளே செல்லும்போது குழல் இசை போல் ஒலிக்கின்றன. தட்டை, தண்ணுமை இசைக்கருவிகளின் இசைப் பின்னணியில் ஒலிக்கின்றன. முல்லைப் பூக்கள் புதர்களில் பூத்துக் கிடக்கின்றன. இது மாலை வேளை. இந்த மாலை வேளையில் இவரும் பிரிந்து சென்று கொடுமைப் படுத்துகிறாரே, சரியா தாயே.

பாடல் : 216
குறுங்கை இரும்புலிக் கோள்வல் ஏற்ரை
நெடும்புதல் கானத்து மடப்பிடி ஈன்ற
நடுங்குநடைக் குழவி கொளீஇய பலவின்
பழந்தாங்கு கொழுநிழல் ஒளிக்கும் நாடற்குக்
கொய்திடு தளிரின் வாடிநின்
மெய்பிறி தாதல் எவன்கொல் அன்னாய். . . . .[216]

பொருளுரை:

தோழி தலைவியிடம்... இரையைப் பற்றுவதில் வல்லமை மிக்க குறுகிய கைகளை உடைய ஆண்புலியானது, நீண்ட புதருக்கு இடையில் பெண்யானை போட்டிருக்கும் யானைக் குட்டியைக் கவர்வதற்காக பலா மர நிழலில் பார்த்துக்கொண்டிருக்கும் நாட்டை உடையவன் அவன். அவனை நினைத்து உன் மேனியானது மாறுபட்டு, கொய்யப்பட்ட தழை வாடுவது போல வாடுகிறதே, தாயே.

பாடல் : 217
பெருவரை வேண்க்கைப் பொன்மருள் நறுவீ
மானினப் பெருங்கிளை மேயல் ஆரும்
கானக நாடன் வரவுமிவண்
மேனி பசப்பது எவன்கொல் அன்னாய். . . . .[217]

பொருளுரை:

தோழி தலைவியிடம்... பெருமலையில் வேங்கை மலர் பொன்னை மருட்டிக்கொண்டு பூத்திருக்கிறது. அந்தப் பூக்களை மான் சுற்றம் மேய்ந்து பசியாறுகிறது. இப்படிப்பட கானக நாட்டை உடையவன் அவன். அவன் வந்தும் இவளது மேனி பசலை பூத்துக் கிடக்கிறதே. சில நாட்களுக்கு வரமாட்டேன் என்று சொல்லியிருப்பானோ?.

பாடல் : 218
நுண்ணேர் புருவத்த கண்ணும் ஆடும்
மயிர்வார் முன்கை வளையும் சொறூஉம்
களிறுகோள் பிழைத்த கதஞ்சிறந்து எழுபுலி
எழுதரு மழையின் குழுமும்
பெருங்கள் நாடன் வருங்கொல் அன்னாய். . . . .[218]

பொருளுரை:

தோழி தலைவியிடம்... உன் கண்ணின் அழகிய புருவங்கள் ஆடுகின்றன. மயிர் செறிந்த உன் கைகளில் வளையல்கள் செறிவாக உள்ளன. யானையைப் பற்றி ஏமாந்து போன புலி சினத்தில் முழங்கும் ஒலி இடி போல் முழங்குகிறது. உன் தலைவன் பெருங்கல் நாடன் வருகிறான் போலத் தோன்றுகிறது, தாயே.

பாடல் : 219
கருங்கால் வேங்கை மாத்தகட்டு ஒள்வீ
இருங்கள் வியலறை வரிப்பத் தாஅம்
நன்மலை நாடன் பிரிந்தென
ஒண்ணுதல் பசப்பது எவன்கொல் அன்னாய். . . . .[219]

பொருளுரை:

தலைவி தோழியிடம்... கருநிறக் காம்பினை உடைய பொன்னிற வேங்ககைப் பூக்கள் பாறையின் மேல் உதிர்ந்து பாறைக்குப் பொன்தகடு வேய்ந்தது போல் போர்த்திக் கிடக்கும் நாட்டினை உடையவன் அவன். அவன் பிரிந்து சென்றுவிட்டான் என்று என் நெற்றி பசந்து கிடக்கிறதே, ஏன் தாயே?.

பாடல் : 220
அலங்குமழை பொழிந்த அகன்கண் அருவி
ஆடுகழை அடுக்கத்து இழிதரு நாடன்
பெருவரை யன்ன திருவிறல் வியன்மார்பு
முயங்காது கழிந்த நாள்இவள்
மயங்கிதழ் மழைக்கண் கலிழும் அன்னாய். . . . .[220]

பொருளுரை:

தோழி செவிலியிடம்... அடித்துப் பொழிந்த மழையால் அகன்ற இடம் கொண்ட அருவி மூங்கில் அடர்ந்த காட்டில் பாயும் நாட்டை உடையவன் அவன். மலை போன்றதும், அழகில் வீறாப்பு கொண்டதுமான அவனது அகன்ற மார்பினைத் தழுவாமல், உன் மகளாகிய இவளது கண்களில் நீர் கசிகிறது, தாயே.