ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

ஐங்குறுநூறு: 04

மருதம் - தோழிக்கு உரைத்த பத்து (ஓரம்போகியார்)


மருதம் - தோழிக்கு உரைத்த பத்து (ஓரம்போகியார்)

அம்ம வாழி தோழி என்று தோழியை விளித்துத், தலைவி தன் கணவன் பிற மகளிருடன் வாழ்வதைச் சொல்லி அங்கலாய்த்துக் கொள்ளும் பாடல்கள் இவை. அவன் மகிழ்நன் (மகிழ்ச்சியில் திளைப்பவன்) ஆகிவிட்டான். அவன் ஊரன் (ஊருக்கு உரியவன்) ஆகிவிட்டான்.

பாடல் : 031
அம்ம வாழி தோழி மகிழ்நன்
கடனன்று என்னும் கொல்லோ
நம்மூர் முடமுதிர் மருதத்துப் பெருந்துறை
உடனாடு ஆயமோடு உற்ற சூளே. . . . .[031]

பொருளுரை:

முன் ஒரு நாள் தன்னோடு புதுப்புனல் ஆடுழி, 'இனிப் புறத்தொழுக்கம் விரும்பேன்' என ஆயத்தாரோடு சூளுற்ற தலைமகன் பின்பும் பரத்தையரோடு புனலாடத் தொடங்குகின்றான் என்பது கேட்ட தலைமகள், அவன் உழையர் கேட்ப, தோழிக்குச் சொல்லியது. தோழி! கேள் (வாழ்க). நம் ஊரில் முடம் பட்டு முதிர்ந்திருக்கும் மருதமரத்து ஆற்றுநீர்த் துறையில் நம்மோடு நீராடும் மகளிர் கூட்டத்திற்கு நடுவே ‘உன்னைத் தவிர வேறொருத்தியை விரும்பமாட்டேன்’ என்று சூளுரை கூறினானே! அந்தச் சொல்லைக் காற்றாற்றுவது அவனுக்குக் கடமை இல்லை போலும்!

பாடல் : 032
அம்ம வாழி தோழி மகிழ்நன்
ஒருநாள் நம்மில் வந்ததற்கு எழுநாள்
அழுப என்பஅவன் பெண்டிர்
தீயுறு மெழுகின் ஞெகிழ்வனர் விரைந்தே. . . . .[032]

பொருளுரை:

வாயில் வேண்டிப் புகுந்தார் கேட்பத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 2 தோழி! கேள்! அவன் ஒரு நாள்தான் நம் இல்லம் வந்தான். மற்ற நாளெல்லாம் அவன் விரும்பிய பெண்களோடுதான் வாழ்கிறான். அப்படி இருந்தும் அவன் பெண்கள் (பரத்தையர்) தீயில் பட்ட மெழுகு போல ஏழு நாள் (பல நாள்) அழுகின்றனர் என்று பேசிக்கொள்கிறார்களே.

பாடல் : 033
அம்ம வாழி தோழி மகிழ்நன்
மருதுயர்ந்து ஓங்கிய விரிபூம் பெருந்துறைப்
பெண்டிரோடு ஆடும் என்பதன்
தண்தார் அகலம் தலைத்தலைக் கொளவே. . . . .[033]

பொருளுரை:

தோழி, வாழி! மருதமரம் ஓங்கியிருக்கும் ஆற்றுத் துறையில் மகளிர் பலரோடு அவன் நீராடுகிறான் என்கின்றனர். அவள் கொஞ்ச நேரம், இவள் கொஞ்ச நேரம் என்று மாலை அணிந்திருக்கும் அவன் மார்பைத் தழுவிக்கொள்கிறார்களாம்.

பாடல் : 034
அம்ம வாழி தோழி நம்மூர்ப்
பொய்கைப் பூத்த புழற்கால் ஆம்பல்
தாதுஏர் வண்ணம் கொண்டன
ஏதி லாளற்குப் பசந்தஎன் கண்ணே. . . . .[034]

பொருளுரை:

தோழி, வாழி! அவர் ஏதிலாளர் (உறவுக்காரர் அல்லாதவர்) ஆகிவிட்டார். அவரைப் பார்க்கவேண்டும் என்று என் கண் தேடுகிறது. பசபசக்கிறது. நம் ஊரில் பூத்திருக்கும் ஆம்பல் பூவில் உள்ள மகரந்தப் பொடிகளின் வண்ணம் கொண்டு சோர்ந்து கிடக்கின்றன. ஆம்பல் மலர் போல் அழகுடன் திகழ்திருந்த கண்கள் மஞ்சள் பூத்துக் கிடக்கின்றன.

பாடல் : 035
அம்ம வாழி தோழி நம்மூர்ப்
பொய்கை ஆம்பல் நார்உரி மென்கால்
நிறத்தினும் நிழற்றுதல் மன்னே
இனிப்பசந் தன்றுஎன் மாமைக் கவினே. . . . .[035]

பொருளுரை:

வாயிலாய்ப் புகுந்தார் தலைமகன் குணம் கூறிய வழி, 'அவனுக்கு இல்லாதனவே கூறுதலால், இப்பொழுது காண் என் மேனி பசந்தது' எனத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 5 தோழி வாழி, என் மேனி அவனை எண்ணிப் பசந்து கிடக்கிடக்கிறது. ஆம்பல் கொடியில் உரித்த நார் நிறத்தைக் காட்டிலும் மெல்லிதாகப் பசந்து கிடக்கிறது. (நிழத்தல் = உள்ளதன் நுணுக்கம் – உரிச்சொல் - தொல்காப்பியம் சொல்லதிகாரம், நூற்பா 330)

பாடல் : 036
அம்ம வாழி தோழி யூரன்
நம்மறந்து அமைகுவன் ஆயின் நாம்மறந்து
உள்ளாது அமைதலும் அமைகுவம் மன்னே
கயலெனக் கருதிய் உண்கண்
பசலைக்கு ஒல்கா ஆகுதல் பெறினே. . . . .[036]

பொருளுரை:

தான் வாயில் நேரும் குறிப்பினளானமை அறியாது, தோழி வாயில் மறுத்துழி, அவள் நேரும் வகையால் அவட்குத் தலைமகள் சொல்லியது. 6 ஊரன் நம்மை மறந்துவிட்டால், நாமும் அவனை மறந்துவிடலாம். என் கணகள் அவனைத் தேடிப் பசக்கின்றனவே!

பாடல் : 037
அம்ம வாழி தோழி மகிழ்நன்
நயந்தோர் உண்கண் பசந்துபனி மல்க
வல்லன் வல்லன் பொய்த்தல்
தேற்றான் உற்ற சூள்வாய்த் தல்லெ. . . . .[037]

பொருளுரை:

தலைமகளைச் சூளினால் தெளித்தான் என்பது கேட்ட காதல் பரத்தை தலைமகட்குப் பாங்காயினார் கேட்பத் தன் தோழிக்குச் சொல்லியது.

பாடல் : 038
அம்ம வாழி தோழி மகிநன்
தன்சொல் உணர்ந்தோர் அறியலன் என்றும்
தந்தளிர் வெளவும் மேனி
ஒள்தோடி முன்கை யாம்அழப் பிரிந்தே. . . . .[038]

பொருளுரை:

தலைமகன் மனைவயிற் போகக் கருதினான் என்பது சொல்லிய தன் தோழிக்குப் பரத்தை சொல்லியது.

தளிர் போன்ற என் மேனியும், கையில் உள்ள வளையல்களும் பிரிந்து அழுகின்றனவே! அவன் தான் அளித்த வாக்கை நினைத்துப் பார்க்கவில்லையே!

பாடல் : 039
அம்ம வாழி தோழி யூரன்
வெம்முலை யடைய முயங்கி நம்வயின்
திருந்திழைப் பணைத்தோள் ஞெகிழப்
பிரிந்தனன் ஆயினும் பிரியலன் மன்னே. . . . .[039]

பொருளுரை:

ஒரு ஞான்று தலைவன் தன் மனைக்கண் சென்றது கொண்டு, 'அவன் பெண்மை நலம் எல்லாம் துய்த்துக் காதல் நீங்கிப் பிரிந்தான்' என்பது தலைவி கூறினாள் எனக் கேட்ட பரத்தை, அவட்குப் பாங்காயினார் கேட்ப, தன் தோழிக்குச் சொல்லியது.

ஊரன் என் முலை இலையாகும்படி [அடைய] அழுத்தமாகத் தழுவிவிட்டு என் தோளில் அணிகலன் கழலும்படிப் பிரிந்து போய்விட்டான். என்றாலும் அவன் நினைவு என்னை இட்டுப் பிரியவில்லையே.

பாடல் : 040
அம்ம வாழி தோழி மகிநன்
ஒள்தொடி முன்கை யாம் அழப் பிரிந்துதன்
பெண்டிர் ஊர் இறை கொண்டனன் என்ப
கெண்டை பாய்தர அவிழ்ந்த
வண்டுபிணி ஆம்பல் நாடுகிழ வோனே. . . . .[040]

பொருளுரை:

உலகியல் பற்றித் தலைவன் தன் மனைக்கண் ஒரு ஞான்று போனதே கொண்டு, 'அவ்வழிப் பிரியாது உறைகின்றான்' என்று, அயற் பரத்தையர் பலரும் கூறினார் என்பது கேட்ட காதல்பரத்தை, அவர் பாங்காயினார் கேட்ப, தன் தோழிக்குச் சொல்லியது.

நழுவும் வளையல் கையுடன் நான் அழுகிறேன். அவன் ஊர்ப்பெண்டிருடன் தங்கியிருக்கிறான் [இறை கொண்டனன்] என்கின்றனர். கெண்டைமீன் பாய்ந்து ஆம்பல்பூ பூக்கும் நாட்டுக்கு உரியவன் ஆயிற்றே.