ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

ஐங்குறுநூறு: 13

நெய்தல் - கிழவற்கு உரைத்த பத்து (அம்மூவனார்)


நெய்தல் - கிழவற்கு உரைத்த பத்து (அம்மூவனார்)

நெய்தல் நிலத்தில் ஊடல் பொருளமைந்த பாடல்கள்.

பாடல் : 121
கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே
முண்டகக் கோதை நனையத்
தெண்டிரைப் பௌவம் பாய்ந்துநின் றோளே. . . . .[121]

பொருளுரை:

உன் உறவுக்காரி நீ அணிவித்த முண்டகப் பூ மாலை நனையும்படி உன்னோடு கடலலையில் பாய்ந்ததை நான் பார்த்தேன் அல்லவா?

பாடல் : 122
கண்டகும் அல்லமோ கொண்கநின் கேளே
ஒள்ளிழை உயர்மணல் வீழ்ந்தென
வெள்ளாங் குருகை வினைவு வோளே. . . . .[122]

பொருளுரை:

நீ அணிவித்த அணிகலன் உன்னோடு விளையாடும்போது மணல்மேட்டில் விழுந்துவிட்டது என்று அங்கு மேயும் வெள்ளாங்குருகை,’பார்த்தாயா’ என்று உன் உறவுக்காரி வினவுவதை நான் பார்த்தேன் அல்லவா?

பாடல் : 123
கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே
ஒண்ணுதல் ஆயம் ஆர்ப்பத்
தண்ணென் பெருங்கடல் திரைபாய் வோளே. . . . .[123]

பொருளுரை:

உன் உறவுக்காரி உன்னுடன் கடல் அலையில் பாய்வதைப் பார்த்து விளையாட்டுத் தோழிமார் ஆரவாரம் செய்வதை நான் பார்த்தேன் அல்லவா?

பாடல் : 124
கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே
வண்டற் பாவை வெளவலின்
நுண்பொடி அளைஇக் கடல்தூர்ப் போளே. . . . .[124]

பொருளுரை:

நீயும் அவளும் விளையாடிய வண்டல் பாவையைக் கடலலை பாய்ந்து கரைத்துவிட்டது என்று நுண்ணிய கடல் மண்ணை அள்ளி அலைமீது வீசி உன் உறவுக்காரி கடலைத் தூர்ப்பதை நான் பார்த்தேன் அல்லவா?

பாடல் : 125
கண்டிகும் அல்லமோ கொண்கநின்
தெண்டிரை பாவை வெளவ
ஊண்கண் சிவப்ப அழுதுநின் றோளே. . . . .[125]

பொருளுரை:

நீங்கள் விளையாடிய மணல் பாவையை அலை கொண்டு சென்றது என்று உன்னை அள்ளஅத் தின்ற கண் சிவக்கும்படி உன் உறவுக்காரி அழுவதை நான் பார்த்தேன் அல்லவா?

பாடல் : 126
கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே
யுண்கண் வண்டினம் மொய்ப்பத்
தெண்கடற் பெருந்திரை மூழ்கு வோளே. . . . .[126]

பொருளுரை:

மலர் என்று எண்ணி வண்டு மொய்க்கும் கண்களுடன் உன் உறவுக்காரி உன்னுடன் கடலலையில் மூழ்கி விளையாடுவதை நான் பார்த்தேன் அல்லவா?

பாடல் : 127
கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே
தும்பை மாலை இளமுலை
நுண்பூண் ஆகம் விலங்கு வோளே. . . . .[127]

பொருளுரை:

உன் உறவுக்காரி நீ அணிவித்த தும்பைப் பூ மாலையை விலக்குவதைப் நான் பார்த்தேன் அல்லவா?

பாடல் : 128
கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே
உறாஅ வறுமுலை மடாஅ
உண்ணாப் பாவையை ஊட்டு வோளே. . . . .[128]

பொருளுரை:

உன் உறவுக்காரி பால் ஊறித் துன்புறுத்தாத வெற்று முலைமேல் வைத்து தன் பொம்மைக்குப் பாலூட்டுவதை நான் பார்த்தேன் அல்லவா?

பாடல் : 129
பாடல் கிடைக்கவில்லை

பொருளுரை:

பாடல் கிடைக்கவில்லை

பாடல் : 130
பாடல் கிடைக்கவில்லை

பொருளுரை:

பாடல் கிடைக்கவில்லை