ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

ஐங்குறுநூறு: 18

நெய்தல் - தொண்டிப் பத்து (அம்மூவனார்)


நெய்தல் - தொண்டிப் பத்து (அம்மூவனார்)

துறைமுகம் தொண்டி பற்றி இதில் உள்ள 10 பாடல்களும் பேசுகின்றன.

பாடல் : 171
திரைஇமிழ் இன்னிசை அளைகி அயலது
முழவுஇமிழ் இன்னிசை மறுகுதொறு இசைக்கும்
தொண்டி அன்ன பணைத்தோள்
ஒள்தொடி அரிவைஎன் நெஞ்சுகொண் டோளே. . . . .[171]

பொருளுரை:

தொண்டி போல் இனிக்கும் தோளைக் கொண்டவள், என் நெஞ்சைக் கொண்டவள். கடலில் அலை இசையும், தெருவில் முழவின் இசையும் கேட்கும் ஊர் தொண்டி.

பாடல் : 172
ஒள்தொடி அரிவை கொண்டனள் நெஞ்சே
வண்டிமிர் பனித்துறைத் தொண்டி ஆங்கண்
உரவுக் கடல்ஒலித் திரையென
இரவி னானும் துயிலறி யேனே. . . . .[172]

பொருளுரை:

தொண்டடிப் பனித்துறையில் அரிவை என் நெஞ்சைப் கொண்டாள். கடலலை போல இரவும் பகலும் உறங்காமல் இருக்கிறேன்.

பாடல் : 173
இரவி னானும் இந்துயில் அறியாது
அரவுறு துயரம் எய்துப தொண்டித்
தண்நறு நெய்தல் நாறும்
பின்இருங் கூந்தல் அணங்குற் றோரே. . . . .[173]

பொருளுரை:

பின்னிய கூந்தலில் தொண்டியில் பூத்த நெய்தல் மலரைச் சூடிக்கொண்டிருக்கும் அவள் அழகில் மயங்கி வருந்துபவர் இரவிலும் கூடப் பாம்பு பாய வருவது போல் தூங்காமல் இருப்பர்.

பாடல் : 174
அணங்குடைப் பனித்துறைத் தொண்டி யன்ன
மணங்கமழ் பொழிற்குறி நல்கினள் நுணங்கு இழை
பொங்கரி பரந்த உண்கண்
அம்கலில் மேனி அசைஇய எமக்கே. . . . .[174]

பொருளுரை:

தெய்வம் வாழும் தொண்டி நகரப் பனித்துறைக்கு வருமாறு எனக்கு அவள் குறியிடம் தந்தாள். அவள் பொங்கும் அழகு பரந்துகிடக்கும் கண்ணை உடையவள்.

பாடல் : 175
எமக்குநயந் தருளினை யாயின் பணைத்தோள்
நல்நுதல் அரிவையொடு மென்மெல இயலி
வந்திசின் வாழியா மடந்தை
தொண்டி யன்னநின் பண்புல கொண்டே. . . . .[175]

பொருளுரை:

தோழிப் பெண்ணே, என்மீது உனக்கு அருள் இருந்தால், தொண்டி நகரம் போன்ற பண்பு நலம் கொண்ட உன் தோழி பணைத்தோள் மடந்தையை மெல்ல மெல்ல அழைத்துக்கொண்டு வருக.

பாடல் : 176
பண்பும் பாயலும் கொண்டனள் தொண்டித்
தண்கமழ் புதுமலர் நாறும் ஒண்டொடி
ஐதுஅமைந்து அகன்ற அல்குல்
கொய்தளிர் மேனி கூறுமதி தவறே. . . . .[176]

பொருளுரை:

பண்போடு படுக்க இடம் தந்தாள். அவள் புதுமணம் கமழும் தளிர் போன்ற மேனி உடையவள். மென்மையான அல்குல் உடையவள். அவள் எனக்குத் தந்ததில் என்ன தவறு இருக்கிறது?

பாடல் : 177
தவறிலர் ஆயினும் பனிப்ப மன்ற
இவறுதிரை திளைக்கும் இடுமணல் நெடுங்கோட்டு
முண்டக நறுமலர் கமழும்
தொண்டி அன்னோள் தோள்உற் றோரே. . . . .[177]

பொருளுரை:

கடல்லை மோதும் மணல்மேட்டில், மணக்கும் முண்டக மரத்தடியில் தொண்டி போன்ற அவள் தந்த தோளைத் தழுவியவர் தவறு இல்லாதவர் என்றாலும் நடுங்குவர் அன்றோ?

பாடல் : 178
தோளும் கூந்தலும் பலபா ராட்டி
வாழ்தல் ஒல்லுமோ மற்றே செங்கோல்
குட்டுவன் தொண்டி யன்ன
என்கண்டும் நயந்துநீ நல்காகக் காலே. . . . .[178]

பொருளுரை:

செங்கோல் ஆட்சி நடத்தும் அரசன் குட்டுவனின் தொண்டி போன்றவள் நான். அவர் என்னைக் காணுமாறு நீ கொடுக்காவிட்டால் அவர் என் தோளையும் கூந்தலையும் பாராட்டும்படி நான் வாழ முடியுமா?

பாடல் : 179
நல்குமதி வாழியோ நளிநீர்ச் சேர்ப்ப
அலவன் தாக்கத் துறையிறாப் பிறழும்
இன்னொலித் தொண்டி அற்றே
நின்னலது இல்லா இவள்சிறு நுதவே. . . . .[179]

பொருளுரை:

சேர்ப்பு நிலத் தலைவனே! நீ இவளுக்கு உன்னைத் தா. நண்டு தாக்கியதால் இறா மீன் பிறழும் தொண்டியில் இவளுக்கு உன்னைத் தவிர யாரும் உறவுக்காரர் இல்லை.

பாடல் : 180
சிறுநனை வரைந்தனை கொண்மோ பெருநீர்
வலைவர் தந்த கொழுமீன் வல்சிப்
பறைதபு முதுகுருகு இருக்கும்
துரைகெழு தொண்டி அன்னஇவள் நலனே. . . . .[180]

பொருளுரை:

கடலில் வலை போட்டுப் பிடித்துக்கொண்டு வந்த மீனைச் சிறகு கெட்டுப்போன நாரை இரையாக்கிக்கொள்ளும் தொண்டி போன்றது இவள் பெண்மை நலம். இவளைத் திருமணம் செய்து அழைத்துச் செல்க.