ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

ஐங்குறுநூறு: 26

குறிஞ்சி - குன்றக் குறவன் பத்து (கபிலர்)


குறிஞ்சி - குன்றக் குறவன் பத்து (கபிலர்)

குன்றக் குறவன் – எனத் தொடங்கும் 10 பாடல்கள் இதில் உள்ளன.

பாடல் : 251
குன்றக் குறவன் ஆர்ப்பின் எழிலி
நுன்பல் அழிதுளி பொழியும் நாட
நெடுவரைப் படப்பை நும்மூர்க்
கடுவரல் அருவி காணினும் அழுமே. . . . .[251]

பொருளுரை:

தோழி தலைவனுக்குக் கூறியது... குன்றக் குறவன் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்வது போல நுண்ணிய பல மழைத்துளிகள் பொழியும் நாட்டின் தலைவன் நீ. உன் உயர்ந்த மலையையும், அதில் தோன்றும் வயல் படப்பையையும் இங்கிருந்து கண்ணால் காணும்போதெல்லாம் உன் நினைத்துக்கொண்டு என் தோழி உன்னை நினைத்துக்கொண்டு அழுகிறாள்.

பாடல் : 252
குன்றக் குறவன் புல்வேய்க் குரம்பை
மன்றாடு இளமழை மறைக்கும் நாடன்
புரையோன் வாழி தோழி விரைபெயல்
அரும்பனி அளைஇய கூதிர்ப்
பெருந்தண் வாடையின் முந்துவந் தனனே. . . . .[252]

பொருளுரை:

தோழி தலைவிக்குக் கூறியது... குன்றக் குறவன் வாழும் புல்லால் வேயப்பட்ட குடிசையை மன்றத்தில் நகரும் மூடுபனி மறைக்கும். இப்படி மூடுபனி மறைக்கும் நாட்டின் தலைவன் உன் காதலன். அவன் மிகவும் உயர்ந்த பண்புள்ளவன். மணத்துடன் கூடிய பனி மூட்டம் கலந்து குளிர் மிகும் கூதிர் காலம் வருவதற்கு முன்பே திருமணம் செய்துகொள்ள உன்னைத் தேடி வந்துவிட்டான்.

பாடல் : 253
குன்றக் குறவன் சார்ந்த நறும்புகை
தேஙகமழ் சிலம்பின் வரையகம் கமழும்
கானக நாடன் வரையின்
மன்றலும் உடையள்கொல் தோழி யாயே. . . . .[253]

பொருளுரை:

தோழி சொல்லியதைக் கேட்ட தலைவி சொல்லியது... குன்றக் குறவன் புகைக்கும் சந்தனக் கட்டையின் புகை மலையிலுள்ள சோலை முழுவதும் கமழும். அத்தகைய கானக நாட்டின் தலைவன் என் காதலன். அவன் திருமணம் செய்துகொள்ள வந்தால் என் தாயும் ஒப்பி மணம் முடித்துத் தருவாளா?

பாடல் : 254
குன்றக் குறவன் ஆரம் அறுத்தென
நறும்புகை சூழ்ந்து காந்தள் நாறும்
வண்ட்மிர் சுடர்நுதல் குறுமகள்
கொண்டனர் செல்வர்தம் குன்றுகெழு நாட்டே. . . . .[254]

பொருளுரை:

தோழி தலைவிக்கு உடன்போக்கு பற்றிக் கூறுகிறாள்... குன்றக் குறவன் சந்தன மரத்தை வாளால் அறுப்பான். அப்போது அதில் தோன்றும் துகள்-புகை காந்தள் மலரில் கொட்டி இரண்டும் சேர்ந்து மணக்கும். அத்தகைய மலைநாட்டின் தலைவி நீ. நீ வண்டு மொய்க்கும் மணம் மிக்க நெற்றியை உடைய குறுமகள். உன் காதலன் உன்னைத் தன் ஊருக்குக் கூட்டிச் சொல்வதற்காக வந்துள்ளான்.

பாடல் : 255
குன்றக் குறவன் காதல் மடமகள்
வரையர மகளிர்ப் புரையுஞ் சாயலள்
ஐயள் அரும்பிய முலையள்
செய்ய வாயினள் மார்பினள் சுணங்கே. . . . .[255]

பொருளுரை:

தலைவன் தன் காதலியைப் பற்றித் தன் தோழனுக்குத் தெரிவிக்கிறான்... குன்றக் குறவன் அன்பில் வளரும் மடப்பக் குணம் கொண்டவள் அவள். மலையில் வாழும் தெய்வ மகளிர் போல மேனித் தோற்றம் கொண்டவள். மென்மையானவள். அரும்பும் முலை கொண்டவள். சிவந்த வாயினை உடையவள். மார்பில் சுணங்கு பூத்த அழகினை உடையவள்.

பாடல் : 256
குன்றக் குறவன் காதல் மடமகள்
வண்படு கூந்தல் தந்தழைக் கொடிச்சி
வளையள் முளைவாள் எயிற்றள்
இளையள் ஆயினும் ஆரணங் கினனே. . . . .[256]

பொருளுரை:

தோழனுக்குத் தலைவன் மேலும் கூறுதல்... குன்றக் குறவன் அன்பில் வளரும் அவள் வண்டு மொய்க்கும் கூந்தலை உடையவள். குளுமையான தழையாடை அணிந்திருக்கும் கொடிச்சி. (மலைமகள்) கையில் வளையல் அணிந்தவள். பயிர் முளை போன்ற பற்களூடன் கூடிய வாயினை உடையவள். இளையவள்-தான் என்றாலும் என்னை வருத்துகிறாள்.

பாடல் : 257
குன்றக் குறவன் கடவுட் பேணி
இரந்தனன் பெற்ற வெள்வளைக் குறுமகள்
ஆயரி நெடுங்கள் கலிழச்
சேயதால் தெய்யநீ பிரியும் நாடே. . . . .[257]

பொருளுரை:

தோழி தலைவனிம் சொலுகிறாள்... குன்றக் குறவன் கடவுளைப் பேணித் தவம் செய்து, கடவுளிடம் வேண்டி இவளைப் பெற்றான். இவள் ஒளி வீசும் வளையல் அணிந்த இளம்பெண். இவள் ஆய்ந்த செவ்வரி பரந்த கண்ணை உடையவள். இவள் கண் கசியும்படி விட்டுவிட்டுத் தொலைநாட்டுக்குச் செல்லலாமா?

பாடல் : 258
குன்றக் குறுவன் காதல் மடமகள்
அணிமயில் அன்ன அசைநடைக் கொடிச்சியைப்
பெருவரை நாடன் வரையும் ஆயின்
கொடுத்தனெம் ஆயினோம் நன்றே
இன்னும் ஆனாது நன்னுதல் துயிரே. . . . .[258]

பொருளுரை:

செவிலி அறத்தொடு நிலை இவள் குன்றக் குறவனின் அன்பு மகள். மடப்பத் தன்மை உடையவள் அழகிய மயில் போலவும் அன்னம் போலவும் நடப்பவள். கொடி போன்ற மலைக் குறத்தி வெருவரை நாடன் திருமணம் செய்துகொள்ள வந்தால் நாம் அவனுக்கு மணம் முடித்துத் தருவது நன்று. இல்லாவிட்டால், இவள் இன்னும் துன்புறுவாள்.

பாடல் : 259
குன்றக் குறவன் காதல் மடமகள்
மன்ற வேங்கை மலர்சில கொண்டு
மலையுறை கடவுள் குலமுதல் வழுத்தித்
தேம்பலிச் செய்த ஈர்நறுங் கையள்
மலர்ந்த காந்தள் நாறிக்
கவிழ்ந்த கண்ணள்எம் அணங்கி யோளே. . . . .[259]

பொருளுரை:

தலைவன் தலைவியைப் பற்றி நினைக்கிறான்... இவள் குன்றக் குறவனின் அன்பு மகள். மன்றத்தில் பூத்த வேங்கை மலர்கள் சிலவற்றைக் கொண்டு மலையில் வாழும் தன் குலமுதலான தெய்வம் முருகனுக்குப் பூசனை செய்து முருகனை வாழ்த்துகிறாள். தேனோடு கூடிய மலரைப் போட்டாள் அவளது ஈரமான கையில் காந்தள் மலரும் மணக்கிறது. அவள்தான் என்னை வருத்துகிறாள்.

பாடல் : 260
குன்றக் குறவன் காதல் மடமகள்
மெந்தோள் கொடிச்சியைப் பெறற்கரிது தில்ல
பைம்புறப் பைங்கிளி ஒப்பலர்
புன்புல மயக்கத்து விளைந்தன தினையே. . . . .[260]

பொருளுரை:

தலைவன் நினைக்கிறான்... இவள் குன்றக் குறவனின் அன்பு மகள். மென்மையான தோளை உடைய கொடிச்சி. இனி இவளை நான் அடைய முடியாது போல் இருக்கிறதே. தினை விளைந்து விளைந்துவிட்டது. கொய்துவிடுவர். நிவள் தினைப்புனம் காக்க வரமாட்டாளே!