ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

ஐங்குறுநூறு: 12

நெய்தல் - தோழிக்கு உரைத்த பத்து (அம்மூவனார்)


நெய்தல் - தோழிக்கு உரைத்த பத்து (அம்மூவனார்)

தலைவன் வரவுக்காக மனம் இரங்குதலைக் கூறுவது நெய்தல் திணை. நெய்தல் நிலத் தலைவி இப்படி மனம் இரங்கித் தன் தோழியிடம் கூறும் செய்திகள் இதில் உள்ளன. அம்ம வாழி தோழி – என்று எல்லாப் படல்களும் தோழியை விளித்துக் கூறுகிறது.

பாடல் : 111
அம்ம வாழி தோழி பாணன்
சூழ்கழி மருங்கின் நாண்இரை கொளீஇச்
சினைக்கயல் மாய்க்கும் துறைவன் கேண்மை
பிரிந்தும் வாழ்துமோ நாமே
அருந்தவம் முயறல் ஆற்றா தேமே. . . . .[111]

பொருளுரை:

கழியில் வாழும் சினை கொண்ட கயல்மீன் தூண்டில் கயிற்றில் தொங்கும் இரையை விழுங்கிவிட்டுத் தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் துறையை உடையவனின் நட்பினைக் கொண்ட நான் அவனைப் பிரிந்து வாழமுடியுமா? அவனோடு சேர்ந்து வாழத் தவம் செய்து ஊழ்வலிமையைப் பெற்றிருக்கவில்லையே. (அவன் உறவால் அவள் கருவுற்றிருத்தல் சினைக்கயல் என்னும் இறைச்சிப் பொருளால் உணர்த்தப்பட்டுள்ளது.)

பாடல் : 112
அம்ம வாழி தோழி பாசிலைச்
செருந்தி தாய இருங்கழிச் சேர்ப்பன்
தான்வரக் காண்குவம் நாமே
மற்ந்தோம் மன்ற நாணுடை நெஞ்சே. . . . .[112]

பொருளுரை:

பசுமையான இலை கொண்ட செருந்தி உப்பங்கழிப் பரப்பில் பூத்துக் கிடக்கும் சேர்மிக்க சேர்ப்புநிலத் தலைவன் அவன். அவன் வருவதை முன்பெல்லாம் கண்டு இன்புற்ற நாம் இப்போது அவனை நெஞ்சம் மறக்கும் நிலை ஆயிற்றே. இதனை வெளியில் சொல்லவும் நெஞ்சம் நாணுகிறதே.

பாடல் : 113
அம்ம வாழி தோழி நென்னல்
ஓங்குதிரை வெண்மணல் உடைக்கும் துறைவற்கு
ஊரார் பெண்டென மொழிய என்னை
அதுகேட் டன்னாய் என்றனள் அன்னை
பைபய வெம்மை என்றனென் யானே. . . . .[113]

பொருளுரை:

கடலலை மணலை உடைக்கும் துறைவன் அவன். ஊரார் என்னை அவன் பெண்டு (பெண்டாட்டி) என்றனர். அதனைக் கேட்ட தாய் என்னை உண்மையா எனக் கேட்பாள் போல ‘அன்னாய்’ என விளித்தாள். நானும் அதனை ஒப்புக்கொள்பவள் போல மெதுவாக ‘எம்மை’ (என் தாய் அல்லவா) என்று வாய் விரித்தேன்.

பாடல் : 114
அம்ம வாழி தோழி கொண்கன்
நேரேம் ஆயினும் செல்குவம் கொல்லோ
கடலின் நாரை இரற்றும்
மடலம் பெண்ணை அவனுடை நாட்டே. . . . .[114]

பொருளுரை:

அவன் நாட்டுப் பனைமரத்தில் இருந்துகொண்டு நாரை ஒலி எழுப்பிக்கொண்டே இருக்கும். அவன் நாட்டுக்கு நாம் செல்லலாமா. அவனுக்கு நம்மை தராவிட்டாலும் சும்மா அவனைப் பார்க்கலாமே.

பாடல் : 115
அம்ம வாழி தோழி பன்மாண்
நுண்மணல் அடைகரை நம்மோடு ஆடிய
தண்ணந் துறைவன் மறைஇ
அன்னை அருங்கடி வந்துநின் றோனே. . . . .[115]

பொருளுரை:

தண்ணம் துறைவன் (குளுமையானவன்) கள்ளத்தனமாக கடலோர நுண்மணல் கரைக்கு வந்து பலமுறை நம்மோடு விளையாடினான். இப்போது அன்னை நம்மைக் காப்பிட்டுச் சிறை வைத்திருக்கும் இடத்திற்கே வந்துவிட்டானே.

பாடல் : 116
அம்ம வாழி தோழி நாம் அழ
நீல இருங்கழி நீலம் கூம்பு
மாலைவந் தன்று மன்ற
காலை யன்ன காலைமுந் துறுத்தே. . . . .[116]

பொருளுரை:

நாம் அழுவதைப் பார்த்து நீலநிற உப்பங்கழியில் மலர்ந்திருந்த நீலம்-பூ குவிகிறது. அம் அழும், நீலமலர் குவியும் மாலை நேரம் வந்துவிட்டதே. காலைநேரம் போன்ற காலம் முந்தி இருந்ததே! (இப்போது அழும் காலம் ஆகிவிட்டதே.

பாடல் : 117
அம்ம வாழி தோழி நலனே
இன்ன தாகுதல் கொடிதே புன்னை
யணிமலர் துறைதொறும் வரிக்கும்
மணிநீர்ச் சேர்ப்பனை மறவா தோர்க்கே. . . . .[117]

பொருளுரை:

துறையெல்லாம் புன்னைமலர் கொட்டிக்கிடக்கும் நீலக்கடல் (மணிநீர்) சேர்ப்பன் அவன். அவனை நான் மறக்கவில்லையே. அப்படி இருந்தும் என் அழகுநலம் இப்படி ஆகிக் கெட்டொழுந்துவிட்டதே.

பாடல் : 118
அம்ம வாழி தோழி யான் இன்று
அறன்இ லாளன் கண்ட பொழுதில்
சினவுவென் தகைக்குறவன் சென்றனென்
பின்நினைந்து இரங்கிப் பெயர்தந் தேனே. . . . .[118]

பொருளுரை:

எனக்கு அளி செய்யாத அறன் இல்லாத ஆளனை இன்று கண்டேன். அப்போது மிகுந்த சினம் கொண்டவள் போலச் சென்றேன். பின்னர் நினைத்துப் பார்த்துவிட்டு இரக்கத்தோடு திரும்பிவிட்டேன்.

பாடல் : 119
அம்ம வாழி தோழி நன்றும்
எய்யா மையின் ஏதில பற்றி
அன்பிலன் மன்ற பெரிதே
மென்புலக் கொண்கன் வாரா தோனே. . . . .[119]

பொருளுரை:

அவன் நன்றாக இருக்கிறான். எய்யாமல் (இளைக்காமல்) இருக்கிறான். ஏதோ மனத்தில் பற்றுக்கோடாக வைத்துக்கொண்டு இருக்கிறான். அதனால் அன்பு இல்லாதவனாக இருக்கிறான். மென்புல (சேர் மிக்க சேற்றுநில)க் கொண்கன் ஆயிற்றே. அப்படித்தான் இருப்பான். (கொண்கன் = கொண்டவன், கணவன்).

பாடல் : 120
அம்ம வாழி தோழி நலமிக
நல்ல ஆயின அளியமெல் தோளே
மல்லல் இருங்கழி நீரறல்விரியும்
மெல்லம் புலம்பன் வந்த மாறே. . . . .[120]

பொருளுரை:

அவன் மெல்லம் புலம்பன். (சேர் மிக்க நிலத்தவன்) அவன் வந்துவிட்டான். இப்போது என் உடல்நலம் நன்றாக இருக்கிறது. தோளும் அவனது அளியைப் பெறும். (தழுவுவான்).