ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

ஐங்குறுநூறு: 02

மருதம் - வேழப்பத்து (ஓரம்போகியார்)


மருதம் - வேழப்பத்து (ஓரம்போகியார்)

கணவன் கட்டழகியரை நாடும் மருதத் திணைப் பாடல்கள் இவை. வேழம் - வேழம் என்பது பேக்கரும்பு ஆற்றோரங்களில் வளர்ந்துகிடக்கும். அக்காலத்தில் வீட்டு மனைகளிலும் வேலிக்காக இதனை வளர்த்தனர். காதலர் மறைமுகமாகப் புணர்ந்து மகிழ இந்த வேழப் புதர் பயன்படும். இதனைப்பற்றிப் பாடும் பாடல்கள் இவை.

பாடல் : 011
மனைநடு வயலை வேழஞ் சுற்றும்
துறைகேழ் ஊரன் கொடுமை நாணி
நல்லன் என்றும் யாமே
அல்லன் என்னுமென் தடமென் தோளே. . . . .[011]

பொருளுரை:

வீட்டில் நடப்பட்ட வயலைக்கொடி (பசலைக்கொடி) வேழக்கரும்பைச் சுற்றிக்கொண்டிருக்கும் ஆற்றுத்துறையை உடையவன் ஊரன். அவன் வாராத கொடுமையை மறைக்க நாணங்கொண்டு நான் நல்லவன் என்கிறேன். என் தோள்களோ வாட்டமுற்று நல்லவன் அல்லன் என்று காட்டிக்கொடுத்து விடுகின்றன.

பாடல் : 012
கரைசேர் வேழம் கரும்பிற் பூக்கும்
துறைகேழ் ஊரன் கொடுமை நன்றும்
ஆற்றுக தில்ல யாமே
தோற்கதில்லஎன் தடமென் தோளே. . . . .[012]

பொருளுரை:

கரையில் இருக்கும் வேழம் கரும்பைப்போல் பூத்து ஏமாற்றும் துறையை உடையவன் ஊரன். அவன் என்னிடம் வாராதிருக்கும் பொடுமையை நான் ஆற்றிக்கொள்கிறேன். அவனை நினைத்து வாடும் என் தோள் தோற்றுப்போகிறது.

பாடல் : 013
பரியுடை நன்மான் பொங்குளை யன்ன
வடகரை வேழம் வெண்பூப் பகரும்
தண்துறை யூரண் பெண்டிர்
துஞ்சூர் யாமத்துந் துயலறி யலரே. . . . .[013]

பொருளுரை:

பாய்ந்தோடும் குதிரையின் பிடரிமயிர் போன்று பூப் பூக்கும் துறையை உடையவன் ஊரன். அவன் காமப்பெண்டிர் நள்ளிரவில் தூங்காமல் கிடப்பார்களே! – அவன் மனைவி சொல்கிறாள், அவனுக்காகத் தூது வந்தவர்களிடம்.

பாடல் : 014
கொடிப்பூ வேழம் தீண்டி அயல
வடுக்கொண் மாஅத்து வண்தளிர் நுடங்கும்
மணித்துறை வீரன் மார்பே
பனித்துயில் செய்யும் இன்சா யற்றே. . . . .[014]

பொருளுரை:

கொடியில் பூக்கும் பூக்கள் படர்வதற்காக வேழத்தைத் தொடும். பின்னர் அங்கிருந்து வடிவழகு கொண்ட மாந்தளிரைப் பற்றி அதனை வளைக்கும். இப்படிப்பட்ட துறையை உடையவன் ஊரன். அவன் மார்பு பனிக்காலத்தில் இன்பமாகச் சாய்ந்து உறங்க ஏந்தாக இருக்கும்.

பாடல் : 015
மண்லாடு மலிர்நிறை விரும்பிய ஒண்தழைப்
புனலாடு மகளிர்க்குப் புணர்துணை உதவும்
வேழ மூதூர் ஊரன்
ஊரன் ஆயினும் ஊரனல் லன்னே. . . . .[015]

பொருளுரை:

ஊரனின் ஊர் வேழம் மிகுதியாக உடையது. அங்குள்ள மணலை விரும்பிப் படர்ந்து பூத்துக்கிடக்கும் கொடியிலுள்ள தழையானது நீராடிய மகளிர் உடுத்திக்கொள்ளும் தழையாடையாக உதவும். ஊரனோ ஊரில் இருந்தும் (தேரில்) ஊர்ந்து வருபவன் அல்லன் ஆகிவிட்டான்.

பாடல் : 016
ஓங்குபூ வேழத்துத் தூம்புடைத் திரள்கால்
சிறுதொழு மகளிர் அஞ்சனம் பெய்யும்
பூக்கஞல் ஊரனை யுள்ளிப்
பூப்போல் உண்கண் பொன்போர்த் தனவே. . . . .[016]

பொருளுரை:

அஞ்சனம் என்பது மகளிர் தலையில் செருகிக்கொள்ளும் பூ. உள்ளே துளை கொண்ட வேழத்துப் பூ அவ்வாறு செருகிக்கொள்ள உதவும். இந்த வேழப் பூ மண்டிக்கிடக்கும் துறையை உடையவன் ஊரன். வாராத அவனை எண்ணி எண்ணிப் பூப்போல் இருந்த என் கண் பசலை பூத்துப் பொன்னிறம் (மஞ்சள்)நிறம் பெற்றுக் கிடக்கின்றன.

பாடல் : 017
புதன்மிசை நுடங்கும் வேழ வெண்பூ
விசும்பாடு குருகின் தன்றும் ஊரன்
புதுவோர் மேவலன் ஆகலின்
வறிதா கின்றுஎன் மடங்கெழு நெஞ்சே. . . . .[017]

பொருளுரை:

புதரில் ஆடிக்கொண்டிருக்கும் வேழத் தட்டையின் வெள்ளைநிறப் பூ வானத்தில் குருகுப் பறவை பறப்பது போல் தோன்றும் ஊரன் அவன். அவன் புதிய பெண்ணை விரும்பிச் சென்றதால் என் மடத்தனமான நெஞ்சு வெறிச்சோடிக் கிடக்கிறது.

பாடல் : 018
இருஞ்சா யன்ன செருந்தியொடு வேழம்
கரும்பின் அலம்ரும் கழனி ஊரன்
பொருந்து மல ரன்னஎன் கண்ணழப்
பிரிந்தனன் அல்லனோ பிரியலென் என்றே. . . . .[018]

பொருளுரை:

பருத்திருக்கும் நாணல் புல் போல வளர்ந்திருக்கும் செருந்தியோடு ஒப்பிட்டு நோக்கும்படி அந்தச் செருந்தியோடு சேர்ந்து வேழமானது கரும்போடு ஒப்பிட்டு நோக்கும்படிப் பருத்து வளர்ந்திருக்கும் ஊரன் அவன். உன்னை விட்டுவிட்டு என்றும் பிரியமாட்டேன் என்று சொல்லிய அவன் மலர் போன்ற என் கண் அழும்படி விட்டுவிட்டுப் பிரிந்து வாழ்கிறானே!

பாடல் : 019
எக்கர் மாஅத்துப் புதுப்பூம் பெருஞ்சினை
புணர்ந்தோர் மெய்ம்மணங்க் கமழும் தண்பொழில்
வேழவெண்பூ வெள்ளுகை சீக்கும்
ஊரன் ஆகலின் கலங்கி
மாரி மலரின் கண்பனி யுகுமே. . . . .[019]

பொருளுரை:

உடலுறவு கொண்டவரின் மேனி போல் மாம்பூ மணம் கமழும் பொழில் சூழ்ந்த ஊரன் அவன். இப்போது வேழம் விளைந்திருக்கும் வெள்ளைப் பூக்களை வேறொருத்தியோடு (கோழி மண்ணைச் சீய்ப்பது போல்) சீய்த்துத் தேன் உண்டவண்ணம் இருக்கிறானே!

பாடல் : 020
அறுசில் கால அஞ்சிறைத் தும்பி
நூற்றிதழ்த் தாமரைப் பூச்சினை சீக்கும்
காம்புகண் டன்ன தூம்புடை வேழத்துத்
துறைநணி யூரனை உள்ளியென்
இறையேர் எல்வளை நெகிழ்புஓ டும்மே. . . . .[020]

பொருளுரை:

ஆறு கால்களையும் அழகிய சிறகுகளையும் உடைய தும்பி நூற்றுக்கணக்கான இதழ்களை உடைய தாமரை மொட்டை உள்ளே நுழையச் சீய்க்கும். அந்தத் தாமரையின் தண்டு போல் உள்ளே துளை கொண்டதாய் இருக்கும் வேழம் விளைந்திருக்கும் துறையை உடைய ஊரன் அவன். அவனை நினைத்துக்கொண்டு என் கணுக்கை வளையல்கள் கழன்று அவனிடம் ஓடுகின்றனவே!