ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

ஐங்குறுநூறு: 50

முல்லை - வரவுச் சிரப்புரைத்த பத்து (பேயனார்)


முல்லை - வரவுச் சிரப்புரைத்த பத்து (பேயனார்)

போர் முற்றுப்பெற்று இல்லம் மீண்ட தலைவன் தான் வந்ததன் சிறப்பினை எடுத்துக் கூறியது.

பாடல் : 491
காரெதிர் காலையாம் ஓவின்று நலிய
நொந்துநொந்து உயவும் உள்ளமொடு
வம்தனெம் மடந்தைநின் ஏர்தர விரைந்தே. . . . .[491]

பொருளுரை:

கார்மேகம் இடி முழங்கிய வேளையில் நான் இடைவிடாமல் உன்னை நினைத்து வருந்தினேன். நொந்து நொந்து ஊசலாடும் உள்ளத்தோடு மடந்தாய் நான் வந்தேன். உன் அழகை மீட்டுத் தருவதற்காக வந்தேன்.

பாடல் : 492
நின்னே போலும் மஞ்ஞை ஆலநின்
நன்னுதல் நாறும் முல்லை மலர
நின்னே போல மாமருண்டு நோக்க
நின்னே உள்ளி வந்தனென்
ந்ன்னுதல் அரிவை காரினும் விரைந்தே. . . . .[492]

பொருளுரை:

அங்கே மயில் உன்னைப் போல அடுவதைப் பார்த்தேன். முல்லை உன் நெற்றியைப் போல மணப்பதை உணர்ந்தேன். மான் உன்னைப் போல மருண்டு நோக்குவதைப் பார்த்தேன். உன் நினைவு வந்தது. வந்துவிட்டேன். நல்ல நெற்றி கொண்ட அரிவைப் பருவத்தவளே கார் மேகத்தைக் காட்டிலும் விரைவாக வந்துவிட்டேன்.

பாடல் : 493
ஏறுமுதண் சிறப்ப ஏறெதிர் இரங்க
மாதர் மான்பிணை மறியொடு மறுகக்
கார்தொடங் கின்றே காலை
நேரிறை முன்கைநின் உள்ளியாம் வரவே. . . . .[493]

பொருளுரை:

எதிர்த்துப் போரிடும் யானைகள் முழங்கின. அதற்கு எதிர் முழக்கமாக இடியும் முழங்கிற்று. அன்பு உள்ளத்துடன் ஆண்மானும், பெண்மானும், குட்டியும் இணக்கமாக வந்தன. கார் காலம் தொடங்குவதைப் பார்த்தேன். வளைந்த உன் தோளும் கைகளும் என் நினைவுக்கு வந்தன. வந்துவிட்டேன்.

பாடல் : 494
வண்டுதாது ஊதத் தேரை தெவிட்டத்
தண்கமழ் புறவின் முல்லிஅ மலர
இன்புறுத் தன்று பொழுதே
நின்குறை வாய்த்தனம் திர்கினிப் படரே. . . . .[494]

பொருளுரை:

வண்டுகள் தேனை உண்டு ஊதின. தவளைகள் தெவிட்டும் ஒலி கேட்டது. புறவு நிலத்தில் முல்லை பூத்துக் கிடந்தது. இவை எனக்கு இன்பத்தை மூட்டின. உன் குறிப்பு வழி வந்துவிட்டேன். இனி, என்னை நினைத்து ஏங்கவேண்டியதில்லை.

பாடல் : 495
செந்ந்நில மருங்கின் பல்மலர் தாஅய்ப்
புலம்தீர்ந்து இனிய வாயின புறவே
பின்னிருங் கூந்தல் நன்னலம் புனைய
உள்ளுதொறும் கவிழும் நெஞ்சமொடு
முளெயிற்று அரிவையாம் வந்த ஆறே. . . . .[495]

பொருளுரை:

செம்மண் கொண்ட முல்லை நிலத்தில் பல்வகைப் பூக்கள் பூத்துக் கிடக்கின்றன. தனிமை உணர்வு நீங்கும்படி இனிமையாகத் தோன்றுகின்றன. பின்னிய உன் கருங்கூந்தலில் பூ முடித்து நலம் புனைய வந்துவிட்டேன். என்னை நினைக்கும்போதெல்லாம் அழுத உன் நெஞ்சம் எனக்குத் தெரிந்தது. முள் போன்று அழகிய பற்களை உடையவளே நான் வந்துவிட்டேன்.

பாடல் : 496
மாபுதல் சேர வரகு இணர் சிறப்ப
மாமலி புலம்பக் கார்கலித்து அலைப்பப்
பேரமர்க்கண்ணி நின்பிரிந்து உறைநர்
தோள்துணை யாக வந்தனர்
போதுஅவிழ் கூந்தலும் பூவிரும் புகவே. . . . .[496]

பொருளுரை:

மான்கள் புதரின் மறைவை நாடுகின்றன. வரகு விளைந்துவிட்டது. மலையே எதிரொலிக்கும்படி கார்மேகம் முழங்குகிறது. பெரிதும் ஆசையோடு பார்க்கும் கண்ணை உடையவளே, உன்னைப் பிரிந்து வாழ்ந்தவர் உன் தோளுக்குத் துணையாக இருக்க வந்துவிட்டார். பூ மொட்டுப் போல விரியும் உன் கூந்தலில் பூக்களை விரும்பிச் சூடிக்கொள்ளலாம்.

பாடல் : 497
குறும்பல் கோதை கொன்றை மலர
நெடுஞ்செம் புற்றம் ஈயல் பகர
மாபசி மறுப்பக் கார்தொடங் கின்றே
பேரியல் அரிவைநின் உள்ளிப்
போர்வெம் குருசில் வந்த மாறே. . . . .[497]

பொருளுரை:

குறுகிய கூந்தலைப் போலக் கொன்றை கொத்தாக மலர்ந்ததுள்ளன. உயர்ந்த செம்மண் புற்றுகளிலிருந்து ஈசல்கள் பறக்கின்றன. விலங்குகள் பசி மறக்கும் அளவுக்கு உண்கின்றன. இப்படிப்பட்ட வளத்தை உண்டாக்கிக்கொண்டு கார் காலம் தொடங்கிவிட்டது. பெரிதும் நல்லியல்பை உடைய அரிவை நீ. போரையே விரும்பும் உன் குருசில் உன்னை விரும்பி வந்துவிட்டார்.

பாடல் : 498
தோள்கவின் எய்தின தொடிநிலை நின்றன
நீள்வரி நெடுங்கண் வாள்வனப்பு உற்றன
வேந்துகோட்டு யானை வேந்துதொழில் விட்டென
விரைசெலல் நெடுந்தேர் கடைஇ
வரையக நாடன் வந்த மாறே. . . . .[498]

பொருளுரை:

உன் தோள் அழகு பெற்றுத் திகழ்கிறது. வளையல்கள் கழலாமல் நிற்கின்றன. நீண்ட வரிக்கோடுகளை உடைய உன் ஒளி மிக்க கண்கள் அழகு பெற்றுத் திகழ்கின்றன. யானைப் படையுடன் சென்ற வேந்தன் தன் போர்த் தொழிலை முடித்துக்கொண்டான். உன்கணவன் வரையக நாடன். போருக்குச் சென்ற அவன் தன் உயர்ந்த தேரில் திரும்பி வந்துவிட்டான்.

பாடல் : 499
பிடவம் மலரத் தளவம் நனையக்
கார்கவின் கொண்ட கானம் காணின்
வருந்துவள் பெரிதென அரும்தொழிற்கு அகலாது
வந்தனர் ஆல்நம் காதலர்
அம்தீம் கிளவிநின் ஆய்நலம் கொண்டே. . . . .[499]

பொருளுரை:

பிடவம் பூ பூத்து, தளவம் பூ மொட்டு விட்டுக் கார்காலம் தோன்றுவதைப் பார்த்தால் அவள் பெரிதும் வருந்துவாள் என்று நினைத்து போர்த்தொழிலுக்குச் சென்ற அவர், உன் காதலர், செல்லாமல் திரும்பி வந்துவிட்டார். உன் கொஞ்சு மொழியைக் கேட்க வேளண்டுமாம். உன் அழகைப் பருகிக்கொண்டே இருக்க வேண்டுமாம்.

பாடல் : 500
கொன்றைப் பூவின் பசந்த உண்கண்
குன்றக நெடுஞ்சுனைக் குவளை போலத்
தொல்கவின் பெற்றன இவட்கே வெல்போர்
வியன்நெடும் பாசறை நீடிய
வயமான் தோன்றல்நீ வந்த மாறே. . . . .[500]

பொருளுரை:

கொன்றைப் பூ நிறத்தில் உன் கண் பசந்துபோய் இருந்தது. அது குன்றில் இருக்கும் சுனையில் பூத்திருக்கும் குவளை மலர் போல இப்போது பழைய அழகினைப் பெற்றுத் திகழ்கிறது. வெற்றி கண்ட போர்ப் பாசறையில் நீடித்திருந்த நீ, வெற்றி கண்ட யானைமீது தோன்றும் நீ, வந்ததனால் அழகினைப் பெற்றுத் திகழ்கிறது.