ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
ஐங்குறுநூறு: 48
முல்லை - பாணன் பத்து (பேயனார்)
முல்லை - பாணன் பத்து (பேயனார்)
தலைவியைப் பிரிந்து தனித்துத் தொலைநாட்டில் வாழும் தலைவனிடம் பாணன் எடுத்துரைக்கிறான். தலைவி இந்தப் பாணனை வேண்டுகிறாள்.
பல்லிதல் ஊண்கண் பனி அலைக் கலங்கத்
துறந்தோன் மன்ற மறங்கெழு குருசில்
அதுமற்று உண்ர்ந்தனை போலாய்
இன்னும் வருதி என்அவர் தகவே. . . . .[471]
பொருளுரை:
ஒளி மிக்க என் வளையல்கள் கழல்கின்றன. என் மேனி வாடுகிறது. கண்ணில் பனி முத்துக்கள் கொட்டுகின்றன. இந்த நிலைக்கு ஆளாக்கிவிட்டு அவர் இவள் என் தலைவியை விட்டுவிட்டுப் போய்விட்டார். பாண அவர் தகைமையை இன்னும் பேசிக்கொண்டு வருகிறாய். இது சரியா? தோழி வினவுகிறாள்.
செய்த பருவம் வந்துநின் றதுவே
எம்மின் உணரா ராயினும் தம்வயின்
பொய்படு கிளவி நாணலும்
எய்யார் ஆகுதல் நோகோ யானே. . . . .[472]
பொருளுரை:
சீறியாழ் மீட்டுவதில் வல்ல பாண, உன் தலைவன் குறிப்பிஇட்டுச் சென்ற பருவம் இப்போது வந்து நிற்கிறது. அவர் என் நிலைமையை நினைக்காவிட்டால் போகட்டும். தான் சொன்ன சொல்லைக் காப்பாற்றவில்லையே என்றாகிலும் அவர் நாணவேண்டாமா? அவருக்காக நான்தான் நொந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
செலவுநீ நய்னதனை யாயின் மன்ற
இன்னா அரும்படர் எம்வயின் செய்த
பொய்வ லாளர் போலக்
கைவல் பாணஎம் மறாவா தீமே. . . . .[473]
பொருளுரை:
பலரும் புகழும் சிறப்பினை உடையவர் உன் குருசில். அவரை நினைத்து அவர் இருக்குமிடத்துக்கு நீ சென்றால் கொடுமையான நினைவுத் துன்பத்தை எனக்கு உண்டாக்கிய அவரது பொய் வல்லமை பற்றி எடுத்துக் கூறு. மறந்துவிடாதே.
செய்யரண் சிதைத்த செருமிகு தானையொடு
கதம்பரி நெடுட்ந்தேர் அதர்படக் கடைஇச்
சென்றவர்த் தருகுவல் என்னும்
நன்றால் அம்ம பாணனது அறிவே. . . . .[474]
பொருளுரை:
அன்று என் நெற்றி மாசு மறுவற்றுச் சுடரும் நெற்றியாக விளங்கியது. அவர் தன் பெரும் படையுடன் சென்றார். தன்மீது சினம் கொண்டோர் கோட்டையை அழித்த செம்மாப்போடு சென்றார். சினம் கொண்ட குதிரை பூட்டிய தேரில் சென்றார். வழியெங்கும் தூள் பறக்கச் சென்றார். அப்படிச் சென்றவரை அழைத்துக்கொண்டு வருவேன் என்கிறான் பாணன். பாணனின் இந்த அறிவு மிகவும் நன்று. தலைவி சொல்கிறாள்.
வடிநலன் இழந்தஎன் கண்ணும் நோக்கிப்
பெரிதுபுலம் பிணனே சீறியாழ்ப் பாணன்
எம்வெம் காதலொடு பிரிந்தோர்
தம்மோன் போலான் பேரன் பினனே. . . . .[475]
பொருளுரை:
என் வளையல்கள் கலங்குகின்றன. தோள் வாடுகிறது. கண் தன் வடிவழகை இழந்துவிட்டது. இவற்றைப் பார்த்த சீறியாழ்ப் பாணன் பெரிதும் புலம்புகிறான். ஆர்வம் கொண்ட என் காதலோடு பிரிந்து செஎன்றவர் போலப் பாணன் இல்லை. என்மீது அன்பு காட்டுபவனாக இருக்கிறான்.
பருவம் செய்தன பைங்கொடி முல்லை
பல்லான் கோவலர் படலைக் கூட்டும்
அன்புஇல் மாலையும் உடைத்தோ
வன்புறை பாண அவர்சென்ற நாடே. . . . .[476]
பொருளுரை:
தொகுதியாகத் திரியும் மேகம் பொழிந்து கார்காலம் எனக் காட்டுகிறது. இது கார் காலந்தான் எனபதைக் காட்டிக்கொண்டு முல்லைப் பூவும் பூத்துக் குலுங்குக்கின்றன. பல வகையான ஆனிரைகளை மேய்க்கும் கோவலர் அந்த முல்லைப் பூக்களைப் ‘படலை’ மாலையாகக் கட்டுகின்றனர். இது என்மீது அன்பு இல்லாத மாலைக் காலம். அன்பு இல்லாத பாணனே இப்படிப்பட்ட மாலைக்காலம் அவர் சென்ற நாட்டிலும் இஇருக்குமா?
துனிமலர் துயரமொடு அரும்படர் உழப்போள்
கையறு நெஞ்சிற்கு உயவுத்துணை யாகச்
சிறுவரைத் தங்குவை யாயின்
காண்குவை மன்ஆல் பாணஎம் தேரே. . . . .[477]
பொருளுரை:
பனியில் நனையும் மலர் போன்ற கண்டில் பசலை நோய் பாயந்துள்ளத்து. வெறுப்பை உண்டாக்கும் துயரத்ததோடு அவரை நினைத்துக் கொண்டு வருந்துகிறாள். அவள் நெஞ்சுக்கு உய்தி தரும் துணையாக அவர் இருக்கும் சிறுமலையில் தங்குவாய் ஆயின் பாண எம்முடையவர் தேரைக் காணலாம். அவ,ருக்கு எடுத்துரைக்கலாம்.
வாடிய நுதல ளாகிப் பிறிதுநினைந்து
யாம்வெம் காதலி நோய்மிகச் சாஅய்ச்
சொல்லியது உரைமதி நீயே
முல்லை நல்யாழ்ப் பாணமற்று எமக்கே. . . . .[478]
பொருளுரை:
நான் இங்குக் காலம் கடத்துகிறேன் என்ற என் கொடுமையை அவள் தூற்றுகிறாள். வாடிய முகத்துடன் இருக்கிறாள். வேறோன்றை நினைத்துக்கொண்டிருக்கிறாள். அவள் என் விருப்பம் மிக்க காதலி. பிரிவு நோயால் மெலிந்துபோயிருக்கிறாள். பாண இதனைத் தானே நீ சொல்கிறாய். நானே அறிவேன். தலைவன் சொல்க்கிறான்.
நாடிடை விலங்கிய எம்வயின் நாள்தொறும்
அரும்பனி கலந்த அருளில் வாடை
தனிமை எள்ளும் பொழுதில்
பனிமலர்க் கண்ணி கூறியது எமக்கே. . . . .[479]
பொருளுரை:
பாண மேலும் சொல். நீ சொல்லச் சொல்ல என் காதுகளுக்கு இனிமையாக உள்ளது. பல நாடுகள் இடைப்பட்ட தொலைவில் இருக்கிறேன். அப்படிப்பட்ட என்னிடம் நாள்தோறும் சொல். வாடைக் காற்று பனித்துளி கலந்து வீசுகிறது. தனிமையை எண்ணி நொந்துகொண்டிருக்கிறேன். இந்த வேளையில் என் பனிமலர் நெடுங்கண்ணாள் கூறிய செய்திகளை எனக்குச் சொல்.
நீயும் குருசிலை யல்லை மாதோ
நின்வெம் காதலி தனிமனைப் புலம்பி
ஈரிதழ் உண்கண் உகுத்த
பூசல் கேட்டு மருளா தோயே. . . . .[480]
பொருளுரை:
உனக்கு நான் பாணன் இல்லை. நீ எனக்குக் குரிசிலும் அல்லை. உன் காதலி தன் மனையில் புலம்பிக்கொண்டிருக்கிறாள். ஈர மலரிதழ் போன்ற அவள் கண்கள் உகுத்த கண்ணீர் கேட்டும் அவளுக்கு அருள் புரியாமல் இருக்ககிறாயே.