ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

ஐங்குறுநூறு: 46

முல்லை - பருவங்கண்டு கிழத்தி யுரைத்த பத்து (பேயனார்)


முல்லை - பருவங்கண்டு கிழத்தி யுரைத்த பத்து (பேயனார்)

கார் காலம் வரும்போது திரும்பிவிடுவேன் – என்று கூறிச் சென்ற கணவன் வராமை கண்டு மனைவி கூறும் செய்தி இங்குக் கூறப்படுகிறது.

பாடல் : 451
கார்செய் காலையொடு கையற்ப் பிரிந்தோர்
தேர்தரு விருந்தில் தவிர்குதல் யாவது
மாற்றருந் தானை நோக்கி
ஆற்றவும் இருத்தல் வேந்தனது தொழிலே. . . . .[451]

பொருளுரை:

மேகம் பொழியும் காலத்தில் திரும்புவேன் என்று சொல்லி என்னைத் துன்புறும்படி விட்டு பிரிந்து சென்றவர் தேரில் வந்து விருந்து அளிக்கத் தவிர்த்துக்கொண்டிருத்தல் ஏன்? மாற்றமுடியாத படையுடன் எதிராளியைப் பார்த்துக்கொண்டிருத்தல் வேந்தன் தொழிலாயிற்றே.

பாடல் : 452
வற்ந்த ஞாலம் தளிர்ப்ப வீசிக்
கற்ங்குரல் எழிலி கார்செய் தன்றே
பகைவெங் காதலர் திறைதரு முயற்சி
மெல்தோள் ஆய்கவின் மறையப்
பொன்புனை பீரத்து அலர்செய் தன்றே. . . . .[452]

பொருளுரை:

வறண்டு கிடக்கும் நிலம் செழிக்கும்படியாக வீசிச் சுழலும் மேகம் கார்மழை பொழிகிறது. பகையை விரும்பும் போராளியாக என் காதலர் திறை வாங்க முயல்கிறார். என் தோள் பலரும் ஆராயும் அழகு மறைய பொன்னிறத்தில் பீர்க்கம் பூ போலப் பசலை நிறம் பாய்ந்து பலர் அறியத் தூற்றுகிறதே.

பாடல் : 453
அவல்தொறும் தேரை தெவிட்ட மிசைதொறும்
வெங்குரல் புள்ளினம் ஒலிப்ப உதுக்காண்
கார்தொடங் கின்றால் காலை அதனால்
நீர்தொடங் கினவால் நெடுங்கணவர்
தேர்தொடங் கின்றால் நம்வயி நானே. . . . .[453]

பொருளுரை:

பள்ளத்து நீர்நிலைகள் இருக்குமிடங்களிலெல்லாம் தவளை ஒலி. மேட்டு நிலங்களிலெல்லாம் பறவை ஒலி. இப்படி அங்குமிங்கும் கண் கண்ட எல்லா இடங்களிலும் கார்காலம் தொடங்கியிருக்கும் காலம். அவர் தேர் மட்டும் என்னை நோக்கித் திரும்பத் தொடங்கவில்லையே.

பாடல் : 454
தளவின் பைங்கொடி தழீஇப் பையென
நிலவின் அன்ன நேரும்பு பேணிக்
கார்நய்ந்து எய்தும் முல்லை அவர்
தேர்நயந்து உறையும் என் மாமைக் கவினே. . . . .[454]

பொருளுரை:

பசுமை நிறத் தளவம் பூக்கொடி முழுவதும் நிலா நிறத்தில் அரும்புகள். இப்படிக் காட்டிக்கொண்டு முல்லை நிலத்தில் கார்காலம் வருகிறது. என் மேனியில் இருக்கும் என் மாமை நிற அழகு அவர் வரும் தேரை விரும்பிக்கொண்டு காத்திருக்கிறது.

பாடல் : 455
அரசுபகை தணிய முரசுபடச் சினை இ
ஆர்குரல் எழிலி கார்தொடங் கின்றே
அளியவோ அளிய தாமேஎ ஒளிபசந்து
மின்னிழை ஞெகிழச் சாஅய்த்
தொன்னலம் இழந்த என் தடமெல் தோளே. . . . .[455]

பொருளுரை:

அரசனே, நீ உன் பகையைத் தணித்துக்கொள் – என்று முரசு முழக்கிச் சொல்வது போல கார்மேகம் இடிக்கத் தொடங்கிவிட்டது. அந்தோ! என் அகன்று விரிந்த மார்பகத்தோள் இரங்கத் தக்கது. ஒளி பசந்து, மின்னும் அணிகலன்கள் கழன்று, பழமையான நலமெல்லாம் இழந்து வாடுகிறது.

பாடல் : 456
உள்ளார் கொல்லோ தோழி வெள்ளிதழ்ப்
பகல்மதி உருவைல் பகன்றை மாமலர்
வெண்கொடி ஈங்கை பைம்புதல் அணியும்
அரும்பனி அளை இய கூதிர்
ஒருங்கிவண் உறைதல் தெளிந்தகன் றோரே. . . . .[456]

பொருளுரை:

தோழி, அவர் என்னை நினைக்கமாட்டாரோ.. பகலில் தோன்றும் நிலாவைப் போல பகன்றைப் பூக்கள் பூத்துக் கிடக்கின்றன. வெண்ணிற ஈங்கை மலரின் கொடி புதரில் படர்ந்து கிடக்கிறது. பனி பொழியும் குளிர் காலம் இது. இத்தகைய காலத்தில் உன்னோடு சேர்ந்திருப்பேன் என்று என்னை தெளிய வைத்துவிட்டுச் சென்றவர் நினைக்கமாட்டாரோ?

பாடல் : 457
பெய்பன் நலிய உய்தல்செல் லாது
குருகினம் நரலும் பிரிவருங் காலைத்
த்றந்தமை கல்லார் காதலர்
மறந்தமை கல்லாது என் மடங்கெழு நெஞ்சே. . . . .[457]

பொருளுரை:

பெய்யும் பனி வருத்துவதால் வாழ்வதற்கே குருகுப் பறவை கத்தும் கடுமையான காலம் இது. என் காதலர் என்னைத் துறந்து அமைதியாக இருக்கிறார். என் நெஞ்சு மட்டும் அவரை மறந்திருக்க மாட்டாமல் மடமைப் பட்டுக் கிடக்கிறது.

பாடல் : 458
துணர்க்காய்க் கொன்றைக் குழற்பழம் ஊழ்த்தன்
அதிர்பெர்ய்ர்க்கு எதிரிய சிதர்கொள் தண்மலர்
பாணர் பெருமகன் பிரிந்தென
மாண்நலம் இழந்தஎன் கண்போன் றனவே. . . . .[458]

பொருளுரை:

கொத்துக் கொத்தாகக் கொன்றை நெற்றுகள் தொங்குகின்றன. பாணன் அதில் குழல் செய்து ஊதவேண்டும் என்பது அவற்றின் ஆசை. பாணன் குழல் செய்துகொள்ளாமல் பிரிந்துவிட்டான். கொன்றைப் பழ நெற்றுகள் என்ன செய்யும்? என் கண்ணும் அது போல நலம் இழந்து துன்புறுகிறது.

பாடல் : 459
மெலிறைப் பணைத்தோள் பசலை தீரப்
புல்லவும் இயைவது கொல்லோ புல்லார்
அரண்க டந்த சீர்கெழு தானை
வெல்போர் வேந்தனொடு சென்றா
நல்வய லூரன் நறுந்தண் மார்பே. . . . .[459]

பொருளுரை:

என் மென்மையான தோள்.. இறைவானம் போல வளைந்திருக்கும் தோள்.. மூங்கில் போன்ற தோள்.. பசலை நிறம் மாறி அவரைத் தழுவவும் முடியுமா? பகைவரின் கோட்டைகள் பலவற்றைக் கடந்த சிறப்பு மிக்க படையில் வெற்றிப்போர் வேந்தனோடு சென்ற நல்வயல் ஊரன் என் கணவர். அவரது மார்பை நான் தழுவ முடியுமா?

பாடல் : 460
பெரு ஞ்சின வென்ந்தனும் பாசறை முனியான்
இருங்கலி வெற்பன் தூதும் தோன்றா
ததை இலை வாழை முழுமுதல் அசைய
இன்னா வாடையும் அலைக்கும்
என்ஆகு வன்கொல் அளியென் யானே. . . . .[460]

பொருளுரை:

பெருஞ்சினம் கொண்ட வேந்தனும் பாசறையில் இருப்பதற்குத் தயங்கவில்லை. என் கணவன் வெற்பன் – மலைநாடன். அது இருண்ட ஓசை கொண்ட மலை. வெற்பனிடமிருந்து எனக்குத் தூதும் வரவில்லை. வாழை மரம் அடியோடு அசையும்படி வாடைக் காற்று வீசுகிறது. வாழை – தலைவி – உள்ளுறை நான் என்ன செய்வேன்?