ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

ஐங்குறுநூறு: 43

முல்லை - விரவுப் பத்து (பேயனார்)


முல்லை - விரவுப் பத்து (பேயனார்)

பல்வேறு துறைச் செய்திகள் விரவிக் கூப்பபட்டுள்ள 10 பாடல்கள் கொண்ட பகுதி.

பாடல் : 421
மாலை வெண்காழ் காவலர் வீச
நறும்பூம் புறவின் ஒடுங்குமுயல் இரியும்
புன்புல நாடன் மடமகள்
நலங்கினர் பணைத்தோள் விலங்கின செலவே. . . . .[421]

பொருளுரை:

வெண்ணிற வயிர மாலையைக் காவலர் கழற்றி வீசும்போது பூத்துக் கிடக்கும் முல்லை நிலத்தில் மேயும் முயல் பயந்து ஓடும் நாட்டின் தலைவன் மகள் அவள். அவளது மூங்கில் போன்ற தோள் தந்த இன்பம் அவளது காதலனைப் பிரிந்து செல்லாவண்ணம் தடுத்தது.

பாடல் : 422
கடும்பரி நெடுந்தேர்க் கால்வல் புரவி
நெடுங்கொடி முல்லையொடு தளவமதிர் உதிர
விரையுபு கடை இநாம் செல்லின்
நிரைவளை முன்கை வருந்தலோ இலளே. . . . .[422]

பொருளுரை:

விரைந்து பாயும் குதிரை பூட்டிய தேரில், வலிமை மிக்க சக்கரம் கொண்ட தேரில், நீண்ட கொடியில் பூத்திருக்கும் முல்லையும் தளவமும் உதிரும்படி விரைந்து செலுத்திக்கொண்டு நாம் சென்றால் முன்னங்கையில் நிறைந்த வளையல்களை உடைய அவள் வருந்தமாட்டாள்.

பாடல் : 423
மாமலை இடியூஉத் தளீசொரிந் தன்றே
வாள்நுதல் பசப்பச் செலவயர்ந் தனையே
யாமே நிந்துறந்து அமையலம்
ஆய்மலர் உண்கணும் நீர்நிறைந் தனவே. . . . .[423]

பொருளுரை:

கரு மேகங்கள் இடியுடன் மழை பொழிகின்றன. என் தலைவி நெற்றியில் பசப்பு ஊரும்படி விட்டுவிட்டு நீ பிரிந்து செல்கிறாய். நானும் என் தலைவியும் உன்னை விட்டுவிட்டு இருக்க மாட்டோம். அவள் கண்ணில் நீர் நிறைந்திருப்பதைப் பார்.

பாடல் : 424
புறவணி நாடன் காதல் மடமகள்
ஒண்ணுதல் பசப்ப நீசெலின் தெண்ணீர்ப்
போதவிழ் தாமரை அன்னநின்
காதலன் புதல்வன் அழும்இனி முலைக்கே . . . .[424]

பொருளுரை:

இவள் முல்லை நிலத் தலைவனின் அன்பு மகள். இவளது நெற்றி பசக்கும்படி விட்டுவிட்டு நீ இவளைப் பிரிந்து சென்றால் நீரில் பூத்திருக்கும் தாமரை போன்ற கண்ணினை உடைய உன் அன்பு மகன் முலைப்பால் வேண்டும் என்று அழுவான். உன் மனைவி இறந்துவிடுவாள்.

பாடல் : 425
புன்புறப் பேடை சேவல் இன்புற
மன்னர் இயவரின் இரங்கும் கானம்
வல்லை நெடுந்தேர் கடவின்
அல்லல் அருநோய் ஒழித்தல் எமக் கெளிதே. . . . .[425]

பொருளுரை:

புறாவின் பெட்டையும் சேவலும் இன்பம் எய்துமாறு நீ தேர் ஓட்டிச் சென்றால் மன்னரும், போர் வீரர்களும் வருந்திக்கொண்டிருக்கும் காட்டில் நீ தேரோட்டிச் சென்றால் என்னவளை அடையும் ஆவலில் வருந்தும் என் துன்பம் எளிதில் நீங்கும்.

பாடல் : 426
வென்வேல் வேந்தன் அருந்தொழில் துறந்தினி
நன்னுதல் யானே செலஒழிந் தனனே
முரசுபாடு அதிர ஏவி
அரசுபடக் கடக்கும் அருஞ்சமத் தானே. . . . .[426]

பொருளுரை:

வெற்றி வேல் கொண்ட மன்னவன் போர்த்தொழிலை முடித்துக்கொண்டான். நல்ல நெற்றி கொண்டவளே! நானும் இனிப் உன்னைப் பிரிந்து செல்லமாட்டேன். முரசு முழங்க ஏவிப் பகையரசர்களை வெல்லும் போர் இனி இல்லை.

பாடல் : 427
பேரமர் மலர்க்கண் மடந்தை நீயே
காரெதிர் ஒழுதென விடல்ஒல் லாயே
போருடை வேந்தன் பாசறை
வாரான் அவனெனச் செலவழுங் கினனே. . . . .[427]

பொருளுரை:

நீயோ மிகப் பெரிய ஆவலுடன் மலரும் கண்ணை உடைய மடந்தை. இது கால்காலம் வரும் பொழுது என்று என்னை விட முடியாதவளாக இருக்கிறாய். போர்த்தொழில் புரியும் வேந்தன் பாசறையில் இருக்கிறான். பகைவன் தாக்க வரமாட்டான் என்று போருக்குச் செல்வதைத் தவிர்த்துவிட்டடான்.

பாடல் : 428
தேர்செல அழுங்கத் திருவில் கோலி
ஆர்கலி எழிலி சோர்தொடங் கின்றே
வேந்துவிடு விழுத்தொழில் ஒழிய
யாந்தொடங் கின்னால் நின்புரந் தரலே. . . . .[428]

பொருளுரை:

தேர்ப்படை செல்வது நின்றுவிட்டது.. வானவில் தோன்றுகிறது. மேகம் பொழியத் தொடங்கியுள்ளது. வேந்தனின் போர்த்தொழில் நின்றுவிட்டது. நான் உன்னைப் பாதுகாப்பதிலேயே கண்ணும் கருத்துமாக உள்ளேன்.

பாடல் : 429
பல்லிருங் கூந்தல் பசப்பு நீவிடின்
செல்வேம் தில்ல யாமே செற்றார்
வெல்கொடி அரணம் முருக்கிய
கல்லா யானை வெந்துபகை வெலற்கே. . . . .[429]

பொருளுரை:

இருண்ட பல கூந்தலை உடையவள் நீ. உன் மேனி பசப்பு கொள்ளாமல் இருந்தால், நான் போருக்குச் செல்வேன். பகைவரின் வெற்றிக் கோட்டையை அழிப்பேன். போர்த்தொழிலைக் கல்லாத யானைகளை உடைய பகைவரின் பகையை வென்று திரும்புவேன்.

பாடல் : 430
நெடும்பொறை மிசைய குறுங்கால் கொன்றை
அடர்பொன் என்னச் சுடரிதழ் பகரும்
கான்கெழு நாடன் மகளோ
அழுதல் ஆன்றிசின் அழுங்குவல் செலவே. . . . .[430]

பொருளுரை:

உயர்ந்த மலையின் மேல் குறுகிய அடிமரம் கொண்ட கொன்றை அடர் பொன் நிறத்தில் மலர்களைக் கொண்டிருக்கும் காட்டுத் தலைவனின் மகளே! அழுவதை நிறுத்துக. போருக்குச் செல்லமாட்டேன்.