ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

ஐங்குறுநூறு: 41

முல்லை - செவிலி கூற்றுப் பத்து (பேயனார்)


முல்லை - செவிலி கூற்றுப் பத்து (பேயனார்)

செவிலி கண்டு மகிழ்ந்து கூறும் செய்திகள்.

பாடல் : 401
மறியிடைப் படுத்த மான்பிணை போலப்
புதல்வன் நடுவண னாக நன்றும்
இனிது மன்றஅவர் கிடக்கை முனிவின்றி
நீல்நிற வியலகம் கவைஇய
ஈனும் உம்பரும் பெறலரும் குரைத்தே. . . . .[401]

பொருளுரை:

குட்டி மானை இடையிலே கொண்ட ஆண், பெண் மான்களைப் போல பெற்ற மகனை நடுவில் கிடத்தி அவனும் அவளும் உறங்ஙகுவது இனிய காட்சியாகும். சினமே இல்லாமல் நீல நிற வானத்தில் வாழும் தேவரும் இவர்களைப் போல இன்பம் பெற முடியாது.

பாடல் : 402
புதல்வற் கவைஇய தாய்புற முயங்கி
நசையினன் வதிந்த கிடக்கை பாணர்
நரம்புளர் முரற்கை போல
இனிதால் அம்ம பண்புமா ருடைத்தே. . . . .[402]

பொருளுரை:

அவள் மகனைத் தழுவிக்கொண்டு படுத்திருக்கிறாள். அவன் அவள் முதுகைத் தழுவிக்கொண்டு படுத்திருக்கிறான். பாணர் கையில் யாழைத் தழுவியிருப்பது போல இது இனிமையாக உள்ளது. இதில் நல்லதொரு பண்பாடும் இருக்கிறது.

பாடல் : 403
புணர்ந்தகா தலியின் புதல்வன் தலையும்
அமர்ந்த உள்ளம் பெரிதா இன்றே
அகன்பெருஞ் சிறப்பின் தந்தை பெயரன்
முறுவலில் இன்னகை பயிற்றிச்
சிறுதேர் உருட்டும் தளர்நடை கண்டே. . . . .[403]

பொருளுரை:

காதலில் புணர்ந்தபோது கண்ட இன்பத்தைப் காட்டிலும் மகனைக் காணும் வேட்கை பெரிதாக இருக்கிறது. அகன்ற பெருஞ் சிறப்பினை உடைத்தாகத் தந்தையின் பெயரைத் தாங்குவதற்காக மகன் பிறந்துள்ளான். அவன் சிரித்துக்கொண்டே சிறுதேர் உருட்டித் தள்ளாடுவதை இருவரும் காணும் இன்பம் பெரிதும் இனிது.

பாடல் : 404
வாழ்நுதல் அரிவை மகன்முலை யூட்டத்
தானவன் சிறுபுறம் கவையினன் நன்று
நறும்பூம் தண்புற அணிந்த
குறும்பல் பொறைய நாடுகிழ வோனே. . . . .[404]

பொருளுரை:

ஒளி வீசும் முகம் கொண்ட அந்த அரிவை மகனுக்கு முலைப்பால் ஊட்டுகிறாள். கணவன் மனைவியின் முதுகைத் தழுவிக்கொண்டிருக்கிறான். பூத்து மணக்கும் முல்லை நிலம் கொண்ட பல குன்றுகள் நிறைந்த பொறை நாட்டுக்கு உரியவன் அவன்.

பாடல் : 405
ஒண்சுடர்ப் பாண்டில் செஞ்சுடர் போல
மனைக்குவிளக் காயினள் மன்ற கனைப்பெயல்
பூப்பல அணிந்த வைப்பின்
புறவணி நாடன் புதல்வன் தாயே. . . . .[405]

பொருளுரை:

ஒளி வீசும் வண்டிச் சக்கரமாகிய சூரியன் போல மகனைப் பெற்ற தாய் மனைக்கு விளக்கு ஆயிஇனாள். பெருமழை பொழிந்து பூத்துக் குலுங்கும் முல்லை நில நாடன் புதல்வனின் தாய்.

பாடல் : 406
மாதர் உண்கண் மகன்விளை யாடக்
காதலித் தழீஇ இனிதிருந் தனனே
தாதார் பிரசம் ஊதும்
போதார் புறவின் நாடுகிழ வோனே. . . . .[406]

பொருளுரை:

ஆசை கொள்ளும் கண்ணைக் காட்டி மகன் விளையாடுகிறான். அதனைக் பார்த்துகொண்டே காதலியைத் தழுவியவண்ணம் அவன் இனிதாக இருக்கிறான். பூந்தாத்துவில் அமர்ந்துகொண்டு பிரசம் என்னும் வண்டு பாடிக்கொண்டு ஊதும் முல்லைநில நாட்டுத் தலைவன் அவன்.

பாடல் : 407
நய்ந்த காதலித் தழீஇப் பாணர்
நய்ம்படு முரற்கையின் யாத்த பயன்தெரிந்து
இன்புறு புணர்ச்சி நுகரும்
மென்புல வைப்பின் நாடுகிழ வோனே. . . . .[407]

பொருளுரை:

வெளியில் பாணர் யாழ் இசைக்கின்றனர். அந்த இசையைக் கேட்டுப் பயன் துய்த்துக்கொண்டே அவன் காதலியைத் தழுவி இன்பம் துய்க்கிற்றான். அவன் மென்புலமாகிய முல்லை நிலத்தின் தலைவன்.

பாடல் : 408
பாணர் முல்லை பாடச் சுடரிழை
வணுதல் அரிவை முல்லை மலைய
இனிதிருந் தனனே நெடுந்தகை
துனிதீர கொள்கைத்தன் புதல்வனொடு பொலிந்தே. . . . .[408]

பொருளுரை:

பாணர் முல்லைப் பண் பாடுகின்றனர். மனைவி தன் ஒளிமுகம் காட்டி முல்லைப் பூ சூடிக்கொண்டிருக்கிறாள். அவன் நெடுந்தகை. பிணக்கு ஏதுமில்லாத கொள்கையோடு அவன் தன் புதல்வனோடு இனிமையாகக் காட்சியளிக்கின்றான்.

பாடல் : 409
புதல்வன் கவைஇயினன் தந்தை மென்மொழிப்
புதல்வன் தாயோ இருவரும் கவையினள்
இனிது மன்றஅவர் கிடக்கை
நனியிரும் பரப்பின்இவ் உலகுடன் உறுமே. . . . .[409]

பொருளுரை:

புதல்வனின் தந்தை மகனைத் தழுவிக்கொண்டிருக்கிறான். புதல்வனின் தாய் இருவரையும் தழுவிக்கொண்டிருக்கிறாள். இவர்களின் இருப்பு மிக இனிதாக உள்ளது. மிகப் பெரிய பரப்பினை உடைய இந்த உலகமே இந்தக் காட்சிக்கு விலையாக மதிக்கத் தக்கது.

பாடல் : 410
மாலை முன்றில குறுங்கால் கட்டில்
மனையோள் துணைவி யாகப் புதல்வன்
மார்பின் ஊரும் மகிழ்நகை இன்பப்
பொழுதிற்கு ஒத்தன்று மன்னே
மென்பிணித் தம்ம பாணனது யாழே. . . . .[410]

பொருளுரை:

மாலை வேளை முற்றத்தில் குற்றுகிய காலை உடைய கட்டில். மனைவி பக்கத்தில் இருக்கிறாள். மகன் மார்பின் மேல் தவழ்கிறான். எல்லாக்கும் மகிழ்ச்சி. சிரிப்பு. இந்த மகிழ்ச்சிப் பொழுதுக்கு பாணன் இசைக்கும் யாழிசை கூட மெலிந்து தோற்கும்.