ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
ஐங்குறுநூறு: 35
பாலை - இளவேனிற் பத்து (ஓதலாந்தையார்)
பாலை - இளவேனிற் பத்து (ஓதலாந்தையார்)
இளவேனில் காலத்தில் திரும்பிவிடுவேன் என்று உறுதி கூறிவிட்டுத் தலைவன் பொருளீட்டச் செல்கிறான். இளவேனில் பருவம் வந்தும் தலைவன் திரும்பவில்லை. எனவே தலைவி தன் தோழியிடம் சொல்லித் தலைவி கலங்குகிறாள்.
குயிற்பெடை இன்குரல் அகவ
அயிர்க்கேழ் நுண்ணறல் நுடங்கும் பொழுதே. . . . .[341]
பொருளுரை:
பெண் குயில் தன் இனிய குரலில் பாடுகிறது. ஆற்றில் வரும் தெளிந்த நீரில் நுண்ணிய மணல் படிகிறது. அவர் வரவில்லை. இளவேனில் வந்துவிட்டது.
சுரும்புகளித்து ஆலும் இருஞ்சினைக்
கருங்கால் நுணவம் கமழும் பொழுதே. . . . .[342]
பொருளுரை:
வண்டுகள் களிப்புடன் தேன் உண்டு பாடுகின்றன. வலிமை மிக்க கிளைகளில் நுணாப் பூ பூத்திக் கமழ்கிறது. அவர் வரவில்லை. இளவேனில் வந்துவிட்டது.
திணிநிலைக் கோங்கம் பயந்த
அணிமிகு கொழுமுகை உடையும் பொழுதே. . . . .[343]
பொருளுரை:
திணித்துக்கொண்டு கோங்கம் பூ மொட்டு விரிகிறது. அவர் வரவில்லை. இளவேனில் வந்துவிட்டது.
எழில்தகை இஅள்முலை பொலியப்
பொரிப்பூம் புன்கின் முறிதிமிர் பொழுதே. . . . .[344]
பொருளுரை:
மணம் மிக்க குரவம் பூப் பாவைகள் கொய்யும் காலம் வந்துவிட்டது. அவர் வரவில்லை. இளவேனில் வந்துவிட்டது.
வலஞ்சுரி மராஅம் வேய்ந்துநம்
மணங்கமழ் தண்பொழில் மலரும் பொழுதே. . . . .[345]
பொருளுரை:
அதிரல் பூக்கள் புதிது புதிதாகப் பூத்து ஆற்றின் கன்னங்களாகிய நுண்மணல் படிவில் கொட்டிக் கிடக்ககின்றன. அவர் வரவில்லை. இளவேனில் வந்துவிட்டது.
அஞ்சினைப் பாதிரி அலர்ந்தெனச்
செங்கண இருங்குயில் அறையும் பொழுதே. . . . .[346]
பொருளுரை:
அழகிய கிளைகளில் பாதிரிப் பூக்கள் பூத்துக் கிடக்கிறது என்று குயில்கள் பாடுகின்றன. அவர் வரவில்லை. இளவேனில் வந்துவிட்டது.
எழில்தகை இளமுலை பொலியப்
பொரிப்பூம் புன்கின் முறிதிமிர் பொழுதே. . . . .[347]
பொருளுரை:
பொறிப் பொறியாகப் புன்கம் பூக்கள் பூத்துக் கிடக்கின்றன. நம் முலைகளில் புன்கம் பூக்களை அணிந்துகொள்ளும் பொழுது இது. புன்கம் பூக்கள் குளுமை தரும். அவர் வரவில்லை. இளவேனில் வந்துவிட்டது.
வலஞ்சுரி மராஅம் வேய்ந்துநம்
மண்ங்கமழ் தண்பொழில் மலரும் பொழுதே. . . . .[348]
பொருளுரை:
மராம் பூக்கள் வலப்புறமாகச் சுழன்று பூத்து மணக்கின்றன. அவர் வரவில்லை. இளவேனில் வந்துவிட்டது.
பொரிகால் மாஞ்சினை புதைய
எரிகால் இளந்தளிர் ஈனும் பொழுதே. . . . .[349]
பொருளுரை:
பொறிந்த கொம்புகளை உடையது மாங்கிளை. அதில் தீ எரிவது போல மாவிலைகள் தளிர் விட்டிருக்கின்றன. அவர் வரவில்லை. இளவேனில் வந்துவிட்டது.
வேம்பின் ஒண்பூ உறப்பத்
தேம்படு கிளவியவர்த் தெளீக்கும் போதே. . . . .[350]
பொருளுரை:
வேப்பம் பூ பூத்ததுக் கிடக்கிறது. அவர் வருவேன் என்று சொன்ன காலம் இதுதான். அவர் வரவில்லை. இளவேனில் வந்துவிட்டது.