ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

ஐங்குறுநூறு: 27

குறிஞ்சி - கேழற் பத்து (கபிலர்)


குறிஞ்சி - கேழற் பத்து (கபிலர்)

காட்டுப் பன்றியைக் கேழல் என்றும், பன்றி என்றும் குறிப்பிட்டு தலைவன் செயல் அந்தப் பன்றி போல உள்ளதாக உள்ளுறைப் பொருள் வைத்து, அது வாழும் நாட்டை உடையவன் எனக் கூறும் 10 பாடல்கள் இப்பகுதியில் உள்ளன.

பாடல் : 261
மெந்தினை மேய்ந்த தறுகண் பன்றி
வன்கல் அடுக்கத்துத் துஞ்சும் நாடன்
எந்தை அறிதல் அஞ்சிக் கொல்
அதுவே மன்ற வாரா மையே. . . . .[261]

பொருளுரை:

தோழி தலைவியிடம் கூறுகிறாள்... மென்மையான புல் தடையில் விளையும் தினையை மேய்ந்த பன்றி மலையின் கல் அடுக்கத்தில் உறங்கும் நாடன் அவன். உன் தந்தைக்குத் தெரிந்துவிடும் என அஞ்சி வராமல் இருக்கிறான் போலும்.

பாடல் : 262
சிறுதினை மேய்ந்த தறுகண் பன்றி
துறுகல் அடுக்கத்துத் துணையொடு வதியும்
இலங்குமலை நாடன் வரூஉம்
மருந்தும் அறியும்கொல் தோழிஅவன் விருப்பே . . . .[262]

பொருளுரை:

தோழி தல்லைவியிடம் சொல்கிறாள்... தினையை மேய்ந்த அஞ்சாத பன்றி பெரிய பாறாங்கல் அடுக்கியிருக்கும் பகுதியில் தன் துணைப் பன்றியோடு வாழும். அந்தப் பகுதிக்குத் தலைவன் உன் காதலன். அவன் விருப்பத்துக்கு மருந்து என்ன என்று அவன் அறிவானோ?.. மருந்து – திருமணம்.

பாடல் : 263
நன்பொன் அன்ன புனிறுதீர் ஏனல்
கட்டளை அன்ன கேழல் மாந்தும்
குன்றுகெழு நாடன் தானும்
வந்தனன் வந்தன்று தோழிஎன் நலனே. . . . .[263]

பொருளுரை:

தலைவி தோழியிடம் கூறுதல்... பொன் நிறத்தில் தினை விளைந்திருக்கும். அதனை மேயும் பன்றி பொன்னை மாற்றுப் பார்க்க உறைக்கும் கட்டளைக் கல் போலத் தோன்றும். அந்தப் பன்றி வாழும் மலை நாட்டை உடையவன் என் காதலன். அவன் இன்று வந்திருக்கிறான். அதனால் என் மேனி பொலிவுடன் திகழ்கிறது.

பாடல் : 264
இளம்பிறை யன்ன கோட்ட கேழல்
களங்கனி யன்ன பெண்பாற் புணரும்
அயந்திகழ் சில்மப கண்டிரும்
பயந்தன மாதோநீ நய்ந்தோள் கண்ணே. . . . .[264]

பொருளுரை:

தோழி தலைவனிடம் சொல்கிறாள்... நிலாவின் இளம்பிறை போன்ற கொம்புகளை உடையது பன்றி. களாப் பழம் போன்ற நிறம் கொண்டது அதன் பெண் பன்றி. அந்த ஆண்பன்றி பெண்பன்றியைப் புணரும். இவை புணரும் நீர்க் கசிவுள்ள மலைக் காட்டின் தலைவன் நீ. உன்னை விரும்பும் இவள் கண்ணைப் பார். தீ இல்லாமல் பசந்துபோய் இருக்கிறது.

பாடல் : 265
புலிகொல் பெண்பால் புவரிக் குருளை
வளைவெண் மருப்பின் கேழல் புரக்கும்
குன்றுகெழு நாடன் மறந்தனன்
பொன்போல் புதல்வனோடு என்நீத் தோனே . . . .[265]

பொருளுரை:

பரத்தை வீட்டிலிருந்து தலைவன் அனுப்பிய தூதுவனிடம் தலைவி கூறுகிறாள்... புலியைக் கொன்ற ஆண் பன்றி சங்கு போன்ற வெண்ணிறக் கொம்புகளை உடைய தன் குட்டிகளைப் பாதுகாக்கும் குன்ற நாட்டின் தலைவன் நீ. பொன் தோன்ற புதல்வனைப் பெற்றுள்ள என்னைத் தன் புதல்வனோடு விட்டுவிட்டுச் சென்றுவிட்டான்.

பாடல் : 266
சிறுகண் பன்றிப் பெருஞ்சின ஒருத்தலொடு
குறுங்கை இரும்புலி பொரூஉம் நாடன்
நனிநாண் உடைமையம் மன்ற
பனிப்பயந் தனநீ நய்ந்தோள் கண்ணே. . . . .[266]

பொருளுரை:

பிறர் திருமணமத்துக்குப் பெண் கேட்டு வந்தபோது தலைவி கண் கலங்கியதைத் தோழி தலைவனுக்குத் தெரிவிக்கிறாள்... சிறிய கண்ணை உடையது பன்றி. குறுகிய கையை உடையது புலி. புலியும் பன்றியும் போரிடும் நாட்டை உடையவன் நீ. நீ பெரிதும் நாணம் உடையவன். அஞ்சாமல் வந்து பெண் கேட்கவில்லை. அதனால் நீ விரும்பியவள் கண்ணீர் விட்டுக் கலங்குகிறாள்.

பாடல் : 267
சிறுகண் பறிப் பெருஞ்சின ஒருத்தல்
துறுகல் அடுக்கத்து வில்லோர் மாற்றி
ஐவனம் கவரும் குன்ற நாடன்
வண்டுபடு கூந்தலைப் பேணிப்
பண்பில சொல்லும் தேறுதல் செத்தே. . . . .[267]

பொருளுரை:

தலைவனைப் பற்றித் தோழி தலைவியிடம் கூறுகிறாள்... பெரிதும் சினம் கொண்டது சிறிய கண்ணினை உடைய ஆண்பன்றி. அது வில்லேந்திய கானவரை ஏமாற்றிவிட்டு அவர்கள் விதைந்நிருக்கும் ஐவன நெல்லை மேயும். இப்படிப்பட்ட குன்ற நாட்டை உடையவன் உன் காதலன். அவன் உன்னை ஏமாற்றுவதற்காக ‘திருமணம் செய்துகொள்வேன்’ என்று பசப்புகிறான்.

பாடல் : 268
தாஅய் இழந்த தழுவரிக் குருளையொடு
வளமலைச் சிறுதினை ய்ணீஇய கானவர்
வரையோங்கு உயர்சிமைக் கேழல் உறங்கும்
நன்மலை நாடன் பிரிதல்
என்பயக்கும் மோநம் விட்டுத் துறந்தே. . . . .[268]

பொருளுரை:

தோழி தலைவியிடம் கூறுகிறாள்... தாயை இழந்த பன்றிக் குட்டி. வரிக் கோடுகளை உடைய பன்றிக்குட்டி மலையில் வளமாக விளைந்திருக்கும் சிறுதினைக் கதிர்களை உண்ணும். கானவர் வாழும் மலை முகடுகளில் உறங்கும். இப்படிப்பட்ட மலை நாட்டின் தலைவன் உன் காதலன். உன்னைப் பிரிந்து வாழ்வதில் அவனுக்கு என்னதான் பயன் என்று தெரியவில்லை.

பாடல் : 269
கேழல் உழுதெனக் கிளர்ந்த எருவை
விஅளைந்த செறுவில் தோன்றும் நாடன்
வாராது அவண்உறை நீடின் நேர்வளை
இணை ஈர் ஓதி நீயழத்
துணைநனி இழக்குவென் மடமை யானே. . . . .[269]

பொருளுரை:

தோழி தலைவியிடம் கூறுகிறாள்... பன்றி மண்ணை உழுத நிலம். அந்தப் புழுதியில் எருவை (கழுகு) அமர்ந்து புழுப் பூச்சுகளை மேயும். இப்படிப்பட்ட நாட்டை உடையவன் உன் காதலன். அவன் வராமல் அவன் நாட்டிலேயே வாழ்வானாயின், நீ அழுவாய். நெருக்கமான கூந்தலை விரித்துக்கொண்டு அழுவாய். நானோ என் துணைத் தோழியை இழந்துவிடுவேன். மறைவிலிருந்து கேட்கும் தலைவன் மணந்துகொள்ள வேண்டும் என்பது கருத்து.

பாடல் : 270
கிழங்ககழ் கேழல் உழுத சிலம்பில்
தலைவிளை கானவர் கொய்தனர் பொய்ரும்
புல்லென் குன்றத்துப் புலம்புகொள் நெடுவரை
காணினும் கலிழுநோய் செத்துத்
தாம்வந் தனர்நம் காத லோரே. . . . .[270]

பொருளுரை:

தோழி தலைவியிடம் சொல்கிறாள்... பொருள் தேடிச் சென்ற தலைவன் திரும்பி வந்து தொலைவில் கேட்டுக்கொண்டிருக்கிறான். கிழங்கைத் தேடி பன்றி உழுத புழுதி. அந்தப் புழுதியில் விளைந்த தினை விளைச்சலைக் கானவர் கொய்துகொண்டு சென்றுவிட்டனர். அந்தக் குன்றத்துக்கு உன் காதலன் வந்திருக்கிறான். அங்கே யாரும் இருக்க மாட்டார்கள். அது கண்டு காம நோயில் துன்புற்று அழுவான். நாம் என்ன செய்யலாம்.