ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

ஐங்குறுநூறு: 25

குறிஞ்சி - வெறிப்பத்து (கபிலர்)


குறிஞ்சி - வெறிப்பத்து (கபிலர்)

காதலனை எண்ணிக் காதலி ஏங்குகிறாள். அவள் மேனி வாடுகிறது. அவள் நடத்தையில் மாற்றம் தெரிகிறது. தாய் இதனைக் கவனிக்கிறாள். தன் மகளின் மாற்றத்துக்குக் காரணம் என்ன என்று தாய் குறி சொல்லும் வேலனை அழைத்து வினவுகிறாள். வேலன் “முருகன் குறை” என்கிறான். “வெறியாட்டு நிகழவேண்டும்” என்கிறான். தாய் வெறியாட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்கிறாள். இந்த வெறியாட்டு பற்றி இந்தப் பாடல்கள் கூறுகின்றன. வெறி பிடித்துவிட்டது என்று சொல்லி இக்காலத்தில் பெண்களை இக்காலத்தில் ஆட்டுவது போன்ற அக்கால விழா இது.

பாடல் : 241
நம்முறு துயரம் நோக்கி அன்னை
வேலன் தந்தா ளாயின்அவ் வேலன்
வெறிகமழ் நாடன் கேண்மை
அறியுமோ தில்ல செறியெயிற் றோயே. . . . .[241]

பொருளுரை:

செவிலிக்குக் கேட்கும்படி தோழி தலைவியிடம் சொல்கிறாள்... நாம் படும் துன்பத்தைப் பார்த்து நம் அன்னை வேலனை வீட்டுக்குக் கொண்டுவந்துள்ளாள். நமக்கும் மணம் கமழும் நாடனுக்கும் உள்ள தொடர்கு அந்த வேலனுக்குத் தெரியுமோ? நெருங்கிய பல்லழகியே, சொல்.

பாடல் : 242
அறியா மையின் வெறியென மயங்கி
அன்னையும் அருந்துயர் உழந்தனள் அதனால்
எய்யாது விடுதலோ கொடிதே நிரையிதழ்
ஆய்மலர் உண்கண் பசப்பச்
சேய்மலை நாடன் செய்த நோயே. . . . .[242]

பொருளுரை:

செவிலிக்குக் கேட்கும்படி தோழி தலைவியிடம் சொல்கிறாள்... தாய் தன் அறியாமையால் என் நோயை வெறி என எண்ணி மயங்குகிறாள். பெரிதும் துன்புறுகிறாள். அதனால், இனி, உண்மையைச் சொல்லாமல் இருப்பது கொடியது. நிறைந்த இதழ்களைக் கொண்ட குவளை மலர் போன்ற கண்கள் பசக்கக் காரணம் சேய்மலை நாடன் நட்பு எனச் சொல்லியாகவேண்டும்.

பாடல் : 243
கறிவளர் சிலம்பின் கடவுள் பேணி
அறியா வேலன் வெறியெனக் கூறும்
அதுமனம் கொள்குவை அனையிவள்
புதுமலர் மழைக்கண் புலம்பிய நோய்க்கே. . . . .[243]

பொருளுரை:

செவிலியிடம் தோழி கூறுதல்... மிளகுக்கொடி வளர்ந்திலருக்கும் மலையின் தெய்வமாகிய முருகனை வாழ்த்திய பின்னர் வேலன் “வெறி” என்று கூறுகிறான். அதன் உண்மைத் தன்மையை மனத்தில் எண்ணிப் பார். புதிய மலர் போன்ற கண்ணை உடைய இவளுக்கு வந்திருக்கும் நோய் அது அன்று.

பாடல் : 244
அம்ம வாழி தோழி பன்மலர்
நறுந்தண் சோலை நாடுகெழ நெடுந்தகை
குன்றம் பாடான் ஆயின்
என்பயஞ் செய்யுமோ வேலற்குஅவ் வெறியே. . . . .[244]

பொருளுரை:

தலைவியிடம் தோழி கூறுதல்... அம்ம தோழி வாழ்க பல மலர்கள் செறிந்த நாட்டை உடையவன் உன் காதலன் நெடுந்தகை. வேலன் அவன் குன்றத்தைப் பாடான் ஆயின் வெறியாட்டத்தால் என்ன பயன் விளையப் போகிறது?

பாடல் : 245
பொய்யா மரபின் ஊர்முகு வேலன்
கலங்குமெய்ப் படுத்துக் கன்னந் தூக்கி
முருகென மொழியும் ஆயின்
கெழுதகை கொல் இவள் அணங்கி யோற்கே. . . . .[245]

பொருளுரை:

தலைவன் மறைந்திருக்கும்போது தோழி சொல்கிறாள்... வேலன் பொய் சொல்லமாட்டான். அவனுக்கு உண்மை தெரியவில்லை. கழற்சிக் காய்களை உருட்டினான். கன்னக் கோலைத் தூக்கி நிறுத்தினான். முருகன் குறை – என்கிறான். இவளை வருத்தியது முருகனா?

பாடல் : 246
வெறிசெறித் தனனே வேலன் கறிய
கன்முகை வயப்புலி கலங்குமெய்ப் படூஉ
புன்பலம் வித்திய புனவர் புணர்த்த
மெய்ம்மை யன்ன பெண்பாற் புணர்ந்து
மன்றில் பையுள் தீரும்
குன்ற நாடன் உறீஇய நோயே. . . . .[246]

பொருளுரை:

தலைவன் மறைந்திருக்கும்போது தோழி சொல்கிறாள்... வெறி என்று சொல்லி வேலன் என்னை அடைத்து வைத்திருக்கிறான். கல்லுக் குகையில் இருக்கும் புலியைக் கழங்குக் காய்களை உருட்டி மந்திரத்தால் கட்டி வைக்க முடியுமா? குன்ற நாடன் பெண்ணைப் புணர்ந்தான். அவனால் ஏக்கத்தால் வந்த நோய் மன்றத்தில் பலர் முன்னிலையில் திருமணம் செய்து வைத்தால் அன்றோ தீரும்.

பாடல் : 247
அன்னை தந்தது ஆகுவது அறிவன்
பொன்னகர் வரைப்பின் கன்னம் தூக்கி
முருகென மொழியும் ஆயின்
அருவரை நாடன் பெயர்கொலோ அதுவே. . . . .[247]

பொருளுரை:

செவிலி கேட்குமாறு தோழி தலைவியிடம் கூறுகிறாள்... அன்னை வேலனை வீட்டுக்கு அழைத்துவந்தது அறிவேன். அவன் கன்னக் கோலைத் தூக்குகிறான். முருகன் குறை – என்கிறான். அந்த முருகன் என் தலைவன் ஆவானா?

பாடல் : 248
பெய்ம் மணல் முற்றம் கவின்பெற இயற்றி
மலைவான் கொண்ட சினைஇயf வேலன்
கழங்கினால் அறிகுவது என்றால்
நன்றால் அம்ம நின்றஇவள் நலனே. . . . .[248]

பொருளுரை:

தோழி செவிலியிடம் கூறுகிறாள்... புது மணலை முற்றத்தில் பரப்பி இல்லத்தை அழகுபடுத்தி வைத்துள்ளனர். மலையில் இருக்கும் இலைகளை அதன் கிளைகளுடன் நாட்டி வைத்திருக்கின்றனர். வேலன் கழங்கினால் இவள் நோயை அறிந்துகொள்ளலாம் என்கின்றனர். அப்படி அறிந்துகொள்ளலாம் என்றால் அது வேடிக்கையாக இல்லையா?

பாடல் : 249
பெய்ம்மணல் வரைப்பின் கழங்குபடுத்து அன்னைக்கு
முருகென மொழியும் வேலன் மற்றவன்
வாழிய விலங்கு மருவிச்
சூர்மலை நாடனை அறியா தோனே. . . . .[249]

பொருளுரை:

தோழி செவிலியிடம் கூறுகிறாள்... வேலன் மணல் பரப்பில் கழங்கை உருட்டுகிறான். முருகன் குறை – என்று அன்னையிடம் சொல்கிறான். உன் மகளின் காதலன் அருவி பாயும் அச்சம் தரும் மலைநாட்டின் தலைவன் என்பது அவனுக்குத் தெரியாது.

பாடல் : 250
பொய்படு அறியாக் கழங்கே மெய்யே
மணிவரைக் கட்சி மடமயில் ஆலும்நம்
மலர்ந்த வள்ளியம் கானம் கிழவோன்
ஆண்டகை விறல்வேள் அல்லன்இவள்
பூண்தாங்கு இளமுலை அணங்கியோனே. . . . .[250]

பொருளுரை:

தோழி கழங்கிடம் கூறுவது போல அறத்தொடு நிற்றல் பொய் சொல்லத் தெரியாத கழங்கே மணி நிற மலைக் கட்டுக்குள் மயில் ஆடும். வள்ளிக் கிழங்குக் காட்டில் ஆடும் அந்தக் காட்டின் தெய்வம் முருகன் அல்லன், இவளது பூண் தாங்கிய இள முலையை அணைத்தவன்.