ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

ஐங்குறுநூறு: 19

நெய்தல் - நெய்தற் பத்து (அம்மூவனார்)


நெய்தல் - நெய்தற் பத்து (அம்மூவனார்)

இது ஒருவகைப் ’பொய்தல்’ விளையாட்டு. சிறுமியர் மணல்வீடு கட்டி, தூதை என்னும் விளையாட்டுப் பாத்திரங்களை வைத்து விளையாடுதலும் ‘பொய்தல்’ விளையாட்டு ஆகும். நெய்தல் திணை நிகழ்வுகள்.

பாடல் : 181
நெய்தல் உண்கண் ஏர் இறைப் பணைந்தோள்
பொய்தல் ஆடிய பொய்யா மகளிர்
குப்பை வெண்மணல் குரவை நிறூஉந்
துறைகெழு கொண்கன் நல்கி
உறைவுஇனிது அம்மஇவ் அழுங்கள் ஊரே. . . . .[181]

பொருளுரை:

நெய்தல் மலர் போன்ற கண்களையும், நேராக வளைந்து பருத்திருக்கும் தோள்களையும் கொண்ட மகளிர் பொய்தல் விளையாடிய பின்னர் குவிந்து கிடக்கும் வெண்மணலில் குரவை ஆடும் துறையை உடையவன் கொண்கன். அவன் என்னைத் திருமணம் செய்துகொண்டு வாழ்வானாயின் எனக்கும் அலர் தூற்றும் ஊருக்கும் நல்லது. – தலைவி கூற்று.

பாடல் : 182
நெய்தல் நறுமலர் செருந்தியொடு விரைஇக்
கைபுனை நறுந்தார் கமழும் மார்பன்
அருந்திறல் கடவுள் அல்லன்
பெருந்துறைக் கண்டுஇவள் அணங்கி யோனே. . . . .[182]

பொருளுரை:

நெய்தல், செருந்தி ஆகிய பூக்கள் விரவிவர நாரால் மாலை கட்டி அணிந்துகொண்டிருக்கும் மாலையை உடைய அவன் என்னை வருத்தும் தெய்வ முருகன் அல்லன். – தோழி கூற்று

பாடல் : 183
கணங்கொள் அருவிக் கான்கெழு நாடன்
குறும்பொறை நாடன் நல்வய லூரன்
தண்கடற் சேர்ப்பன் பிரிந்தெனப் பண்டையிற்
கடும்பகல் வருதி கையறு மாலை
கொடுங்கழி நெய்தலும் கூம்பக்
காலை வரினும் களைஞரோ இலரே. . . . .[183]

பொருளுரை:

அருவி கொட்டும் கானநாடன், பாறை நிறைந்த குறும்பொறை நாடன், நன்செய் வயல் நிறைந்த ஊரன், கடல் சார் நிலச் சேர்ப்பன் என்றெல்லாம் சொல்லக்கூடிய அவன் பிரிந்திருக்கிறான் என்று ஏ! மாலைக்காலமே, நீ நண்பகலே வந்துவிடுகிறாய். கழியில் பூத்துக் குவியும்படி காலை நேரத்திலேயே நீ வந்தாலும் உன்னைத் தடுப்பவர் யார்? – தலைவி கூற்று.

பாடல் : 184
நெய்தல் இருங்கழி நெய்தல் நீக்கி
மீனுநுண் குருகுஇளங் கானல் அல்கும்
கடல்அணிந் தன்றுஅவர் ஊரே
கடலினும் பெரிதுஎமக்கு அவருடை நட்பே. . . . .[184]

பொருளுரை:

கழியில் பூத்திருக்கும் நெய்தல் மலரை விலக்கிவிட்டு மீனை மேயும் குருகினம் கானல் நிலத்தில் தங்கும் கடல் அவருடைய ஊருக்கு அண்மையில் இல்லை. என்றாலும் அவர் நட்பு எனக்குக் கடலைக் காட்டிலும் பெரிது. – தலைவி கூற்று.

பாடல் : 185
அலங்கிதழ் நெய்தல் கொற்கை முன்துறை
இலங்குமுத்து உறைக்கும் எயிறுகெழு துவர்வாய்
அரம்போழ் அவ்வளைக் குறுமகள்
நரம்புஆர்த் தன்ன தீங்கிள வியனே. . . . .[185]

பொருளுரை:

நெய்தல் பூத்திருக்கும் கொற்கைத் துறையில் தோன்றும் முத்துப் போல் பற்களைக் கொண்ட சிவந்த வாயையும், அரத்தால் அறுத்துச் செய்த வளையல்களையும் உடைய அந்தக் குறுமகள் யாழ் நரம்பில் எழும் இசைபோல இனிமையாகப் பேசுவாள். – தலைவன் கூற்று.

பாடல் : 186
நாரை நல்லினம் கடுப்ப மகளிர்
நீர்வார் கூந்தல் உளரும் துறைவ
பொங்குழி நெய்தல் உறைப்ப இத்துறை
பல்கால் வரூஉம் தேரெனச்
செல்வா தீமோ என்றனள் யாயே. . . . .[186]

பொருளுரை:

நனைந்த சிறகை நாரை உலர்த்துவது போல, நீராடிய கூந்தலை மகளிர் உலர்த்தும் துறைவன், பொங்கும் கழியில் பூத்துக்கிடக்கும் நெய்தல் மலர்கள் அறுபடும்படி பலமுறை தேரில் வருவான் என்று சொல்கின்றனர். எனவே நீ அங்குச் செல்ல வேண்டாம் என்று தாய் கூறுகிறாள். – தலைவி நிலைமையைத் தோழி தலைவனுக்குக் கூறுகிறாள்.

பாடல் : 187
நொதும லாளர் கொள்ளார் இவையே
எம்மொடு வந்து கடலாடு மகளிரும்
நெய்தலம் பகைத்தழைப் பாவை புனையார்
உடலகம் கொள்வோர் இன்மையின்
தொடலைக் குற்ற சிலபூ வினரே. . . . .[187]

பொருளுரை:

நீ கொடுக்கும் தழையாடையை உனக்கு அயலாராக இருப்பவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தொடலை ஆடை செய்துகொள்வதற்கு அவர்களிடம் சில நெய்தல் பூக்கள் உள்ளன. உன் தழையாடையில் நெய்தல் பூ இல்லை. எனவே அது ‘நெய்தலம்பகைத்தழை’ அதனை உடலில் உடுத்திக்கொள்ள மாட்டார்கள். – தோழி தலைவன் தந்த தழையாடையை வாங்க மறுத்துக் கூறுகிறாள்.

பாடல் : 188
இருங்கழிச் சேயிறா இனப்புன் ஆரும்
கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை
வைகறை மலரும்நெய்தல் போலத்
தகைபெரி துடை காதலி கண்ணே. . . . .[188]

பொருளுரை:

கழியில் மேயும் இறா மீன்களைப் பறவைகள் வயிறார உண்ணும் துறை கொற்கைத்துறை. அது கொற்கைக் கோமான் பாண்டியனுக்கு உரியது. அந்தத் துறையில் வைகறைப் பொழுதில் மலரும் நெய்தல் போன்று தகைமையில் சிறந்து விளங்குவது காதலியின் கண்.

பாடல் : 189
புன்னை நுன்தாது உறைத்தரு நெய்தல்
பொன்படு மணியில் பொற்பத் தோன்றும்
மெல்லம் புலம்பன் வந்தென
நல்லன வாயின தோழியென் கண்ணே. . . . .[189]

பொருளுரை:

புன்னைப் பூவில் உள்ள பொன் நிறத் துகள்கள் நீல நிற நெய்தலில் கொட்டி, பொன்னில் பொதித்துள்ள மணிக்கல் போலத் தோன்றும் புலம்பு நிலத்தவன் புலம்பன். அவன் வந்துவிட்டான் என்று கண் அழுவதை விட்டுவிட்டு நல்லன ஆயின. – தலைவி தோழிக்குச் சொல்கிறாள்.

பாடல் : 190
தண்ணறு நெய்தல் தளையவிழ் வான்பூ
வெண்ணெல் அரிநர் மாற்றினர் அறுக்கும்
மெல்லம் புலம்பன் மன்றஎம்
பல்லிதழ் உண்கண் பனிசெய் தோனே. . . . .[190]

பொருளுரை:

நெல் அறுப்பவர்கள் வயலில் பூத்திருக்கும் நெய்தலை ஒதுக்கிவிட்டு நெல்லை மட்டும் அறுக்கும் வயல் நிலத்தை உடையவன் புலம்பன். அவன் இல்லாததால் என் கண்கள் பனியைக் கொட்டுகின்றன. – தலைவி சொல்கிறாள்.