ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

ஐங்குறுநூறு: 16

நெய்தல் - வெள்ளங் குருகுப் பத்து (அம்மூவனார்)


நெய்தல் - வெள்ளங் குருகுப் பத்து (அம்மூவனார்)

வெள்ளாங்குருகின் பிள்ளை போல் தோன்றுகிறதே என்று எண்ணிக்கொண்டு (செத்துவிட்டது என்று எண்ணிக்கொண்டு, எனக் கொள்ளலும் ஆம்) பார்ப்பதற்காக அருகில் சென்ற நாரை என்ன செய்தது என்று நிலத்தின் தன்மையைத் தமிழரின் பண்பாட்டோடும், நாகரிகத்தோடும் இணைத்துக் கூறும் பாடல்கள் 10 இந்தப் பத்தில் உள்ளன.

பாடல் : 151
வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
மிதிப்ப நக்க கண்போல் நெய்தல்
கள்கமழ்ந்து ஆனாத் துறைவற்கு
நெக்க நெஞ்சம் நேர்கல் லேனே. . . . .[151]

பொருளுரை:

நெய்தல் மலரைக் குருகுப்பிள்ளை என்று எண்ணி நாரை மிதிக்கும் துறைவன். இந்தத் துறைவனுக்கு என் நெஞ்சத்தைக் கொடுத்துவிட்டேன். நேர் - நேர்கு(நேர்+கு) நேர்கல்(நேர்கு+அல்) நேர்கல்லேன்(நேர்கல்+ஏன்) = நேரலானேன்.

பாடல் : 152
வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
கையறுபு இரற்றும் கானலம் புலம்பம்
துரைவன் வரையும் என்ப
அறவன் போலும் அருளுமார் அதுவே. . . . .[152]

பொருளுரை:

தன் காலாகிய கைகளால் தன் நெஞ்சில் இறுக்கிக்கொண்டு புலம்பும் துறையின் தலைவன் அவன். அவன் அறநெறி பிறழாதவன். அவன் அருளும் அப்படிப்பட்டது.

பாடல் : 153
வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
உளர ஒழிந்த தூவி குலவுமணல்
போர்வின் பெறூஉம் துறைவன் கேண்மை
நன்னெடுங் கூந்தல் நாடுமோ மற்றே. . . . .[153]

பொருளுரை:

நாரை தன் சிறகுகளை உதறியது. உதிர்ந்த தூவிகள் குவிந்திருக்கும் மணலில் கிடந்தன. அவற்றைப் போர்வையில் திணித்துப் போர்த்திக்கொள்ளும் துறைவன் அவன். அந்த நாரைத்தூவிப் போர்வையை விட்டுவிட்டு, என் கூந்தல் போர்வையை விரும்புகிறானே!

பாடல் : 154
வெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
கானற் சேக்கும் துறைவனோடு
யானெவன் செய்கோ பொய்க்கும் இவ்வூரே. . . . .[154]

பொருளுரை:

காணச் சென்ற நாரை அந்தக் கடற்கரைக் கானல் நிலத்திலேயே தங்கிவிட்டது. அந்தக் கானல்நிலத் துறைவன் அவன். அந்த நாரை போல் அவன் ஊரிலேயே அவன் தங்கிவிட்டான். அதற்காக நான் என்ன செய்வேன்? இந்த ஊர் என்னைப் பொய் பேசுகிறதே.

பாடல் : 155
வெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
பதைப்பத் ததைந்த நெய்தல் கழிய
ஓதமொடுபெயரும் துறைவதற்குப்
பைஞ்சாய்ப் பாவை ஈன்றனென் யானே. . . . .[155]

பொருளுரை:

காணச் சென்ற நாரை பதைபதைத்தது. குருகுப் பிள்ளை போல் இருந்த நெய்தல் மலரைக் கசக்கி மிதித்தது. அந்தப் பூ வந்து பெயரும் கடல் அலையில் சென்றுவிட்டது. அப்படிப்பட்ட துறையை உடையவன் அவன். அவனுடன் கூடியிருந்து நான் ஒரு பிள்ளை பெற்றிருக்கிறேன். அது கோரைக் கிழங்குப் பாவை. இதுதான் எனக்கு மிச்சம்.

பாடல் : 156
வெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
பதைப்ப ஒழிந்த செம்மறுத் தூவி
தெள்கழிப் பரக்கும் துரைவன்
எனக்கோ காதலன் அனைக்கோ வேறே. . . . .[156]

பொருளுரை:

பதைபதைத்த நாரை தன் சிறகை அடித்துக்கொண்டது. அப்போது உதிர்ந்த அதன் தூவி கழிநீர்ப் பரப்பெல்லாம் மிதக்கிறது. அப்படிப்பட்ட துறையின் தலைவன் அவன். அவன் எனக்கோ காதலன். அன்னைக்கோ வேறொருவனாகத் தென்படுகிறான்.

பாடல் : 157
வெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
காலை யிருந்து மாலைச் சேக்கும்
தெண்கடல் சேர்ப்பனொடு வாரான்
தான்வந் தனன்எம் காத லோனே. . . . .[157]

பொருளுரை:

காணச்சென்ற நாரை காலையிலிருந்து மாலை வரையில் அங்கேயே தங்கிவிட்டது. அப்படிப்பட்ட சேர்ப்புநிலத் தலைவன் அவன். அவன் வராதவனாக இருந்தவன் வந்துவிட்டான். அவன் என் காதலன் ஆயிற்றே.

பாடல் : 158
வெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
கானலம் பெருந்துறைத் துணையொடு கொட்கும்
தண்ணந் துறைவன் கண்டிக்கும்
அம்மா மேனிஎம் தோழியது துயரே. . . . .[158]

பொருளுரை:

காணச் சென்ற நாரை துணை சேர்த்துக்கொண்டு விளையாடிக்கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட துறைக்கு அவன் தலைவன். அவனை நினைத்துக்கொண்டு என் தோழி (தலைவி) தன் அழகிய மாமைநிறம் கொண்ட மேனி வாடித் துயர் பட்டுக்கொண்டிருக்கிறாளே. – தோழி இப்படிச் சொல்லிக் கவலைப்படுகிறாள்.

பாடல் : 159
வெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
பசிதின அல்கும் பனிநீர்ச் சேர்ப்ப
நின்ஒன்று இரக்குவன் அல்லேன்
தந்தனை சென்மோ கொண்டஇவள் நலனே. . . . .[159]

பொருளுரை:

காணச் சென்ற நாரையானது, குருகுப்பிள்ளை இறந்துவிட்டது என்று பசியோடு வருந்திக்கொண்டிருக்கும். அப்படிப்பட்ட சேர்ப்புநிலத் தலைவன் அவன். சேர்ப்பனே! இவள் இழந்த அழகைத் தந்துவிட்டுச் செல் என்று உன்னை ஒன்று கெஞ்சிக் கேட்டுக்கொள்ளமாட்டேன். உன் விருப்பம். – தோழி தலைவனிடம் சொல்கிறாள்.

பாடல் : 160
வெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
நொந்ததன் தலையும் நோய்மிகும் துறைவ
பண்டையின் மிகப்பெரிது இனைஇ
முயங்குமதி பெரும மய்ங்கினள் பெரிதே. . . . .[160]

பொருளுரை:

காணச் சென்ற நாரை உடல் நொந்துபோனது மட்டுமன்றி உள்ளமும் பெரிதும் வருந்திகொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட துறையின் தலைவன் நீ. இவள் இப்போது முன்பை விடப் பெரிதும் மயங்கி நொந்துகொண்டிருக்கிறாள். மயக்கம் தீர இவளைத் தழுவிக்கொள். – தோழி தலைவனிடம் கூறுகிறாள்.