ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

ஐங்குறுநூறு: 14

நெய்தல் - பாணற்கு உரைத்த பத்து (அம்மூவனார்)


நெய்தல் - பாணற்கு உரைத்த பத்து (அம்மூவனார்)

கள்ளக் காதலியிடமிருந்து இல்லம் மீளும் இல்லத் தலைவனை ஏற்றுக்கொள்ளுமாறு இல்லத் தலைவியைப் பாணன் வேண்டுகிறான். இல்லத்தலைவி ஏற்க மறுத்து அவனுக்குச் சொல்லும் சொற்கள் இவை.

பாடல் : 131
நண்றே பாண கொண்கனது நட்பே
தில்லை வேலி இவ்வூர்க்
கல்லென் கௌவை எழாஅக் காலே. . . . .[131]

பொருளுரை:

பாண! தில்லை மரங்கள் அடர்ந்த வேலி நிலத்தில் கொண்கன் வேறொருத்தியோடு உறவுகொண்டு இருந்ததை ஊர்மக்கள் ஆங்காங்கு பேசிக்கொள்ளாமல் இருந்தபோது அவனோடு எனக்கிருந்த உறவு நன்று.

பாடல் : 132
அம்ம வாழி பாண புன்னை
அரும்புமலி கானல் இவ்வூர்
அலரா கின்றுஅவர் அருளு மாறே. . . . .[132]

பொருளுரை:

பாண! புன்னைமரக் கானல்நிலத்தில் அவர் கொண்டிருந்த கள்ளக்காதலி உறவை ஊர் பேசிக்கொள்கிறது. அவர் அருள் இப்படித்தான் இருக்கிறது.

பாடல் : 133
யானெவன் செய்கோ பாண ஆனாது
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்
புல்லென் றனஎன் புரிவளைத் தோளே. . . . .[133]

பொருளுரை:

பாண! நான் என்ன செய்வேன். புலம்பன் பிரிந்துவிட்டான் என்று தோள் புல் போல் இளைத்துவிட்டதே.

பாடல் : 134
காண்மதி பாண இருங்கழிப் பாய்பரி
நெடுந்தேர்க் கொண்க னோடு
தான்வந் தன்றுஎன் மாமைக் கவினே. . . . .[134]

பொருளுரை:

பாண! கொண்கன் குதிரை பூட்டிய தேரில் ஏறி அவளிடம் சென்றுவிட்டான் என்று என் மேனியில் இருள் அழகு(?) வந்துவிட்டதைப் பார்.

பாடல் : 135
பைதலம் அல்லேம் பாண பணைத்தோள்
ஐதுஅமைந்து அகன்ற அல்குல்
நெய்தலம் கண்ணியை நேர்தல்நாம் பெறினே. . . . .[135]

பொருளுரை:

பாண! மென்மையான அல்குலும், நெய்தல் மலர் போன்ற கண்ணும் உடைய அவளை நான் பார்ந்து அவளை என் உறவுக்காரியாக ஆக்கிக்கொண்டிருந்தால் என் தோளில் பசலை தோன்றியிருக்காது.

பாடல் : 136
நாணிலை மன்ற பாண நீயே
கோண்ஏர் இலங்குவளை நெகிழ்த்த
கானலம் துறைவற்குச் சொல்உகுப் போயே. . . . .[136]

பொருளுரை:

பாண! உனக்கு வெட்கமே இல்லையா? என் வளையலைக் கழலும்படிச் செய்தவனுக்காகப் பரிந்து பேசுகிறாயே.

பாடல் : 137
நின்னொன்று வினவுவல் பாண நும்மூர்த்
திண்தேர்க் கொண்கனை நய்ந்தோர்
பண்டைத் தந்நலம் பெறுபவோ. . . . .[137]

பொருளுரை:

பாண! உன்னை ஒன்று கேட்பேன். தேரில் சென்ற என் கொண்கனை விரும்பி வாழ்கிறாளே அவள் அவனைப் பிரிந்தால், என்னைப் போல அழகிழந்து வாடுவாளா?

பாடல் : 138
பண்பிலை மன்ற பாண இவ்வூர்
அன்பில கடிய கழறி
மென்புலக் கொண்கனைத் தாரா தோயே. . . . .[138]

பொருளுரை:

பாண! நீ பண்பே இல்லாதவன். இந்த ஊர் அவனைக் கடிந்து பேசுவது போல நீயும் அவனைக் கடிந்து பேசி என்னிடம் கொண்டுவராதவன் ஆயிற்றே.

பாடல் : 139
அம்ம வாழி கொண்க எம்வயின்
மாண்நலம் மருட்டும் நின்னினும்
பாணன் நல்லோர் நலம்சிதைக் கும்மே. . . . .[139]

பொருளுரை:

கொண்கனே! உன் கள்ள உறவு என்னை அஞ்சும்படி மருட்டுகிறது. உனக்கு உதவிய பாணன் செயலோ என் அழகையெல்லாம் சிதைத்துவிட்டது.

பாடல் : 140
காண்மதி பாணநீ யுரைத்தற் குரிகை
துறைகெழு கொண்கன் பிரிந்தென
விறைகேழ் எல்வளை நீங்கிய நிலையே. . . . .[140]

பொருளுரை:

இதோ பார் பாண! நீ இங்கிருந்து போய்விடு. என் கொண்கன் என்னைப் பிரிந்துவிட்டான் என்று என் வளையல்களும் என்னை விட்டுப் பிரிகின்றன. நீயும் பிரிந்து சென்றுவிடு.