ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

ஐங்குறுநூறு: 03

மருதம் - கள்வன் பத்து (ஓரம்போகியார்)


மருதம் - கள்வன் பத்து (ஓரம்போகியார்)

களவன் என்பது நண்டு. நண்டு விளையாடுவதையும், நண்டை விளையாடும்படிச் செய்தும் வேடிக்கை பார்ப்பது இளமைப் பருவத்து வழக்கம். தலைவன் ஊர் நண்டு இப்படியெல்லாம் விளையாடும் என்று இந்தப் பத்துப் பாடல்களும் தெரிவிக்கின்றன. நண்டின் செயல் தலைவன் செய்யும் செயல் போல் உள்ளது எனக் கண்டுகொள்வது இறைச்சிப் பொருள். தலைவியின் தாயை ‘அன்னாய்’ என விளித்துத் தோழி கேட்பதாகப் பாடல்கள் அமைந்துள்ளன.

பாடல் : 021
முள்ளி நீடிய முதுநீர் அடைகரைப்
புள்ளிக் கள்வன் ஆம்பல் அறுக்கும்
தண்டுறை ய்ய்ரன் தளிப்பவும்
உண்கண் பசப்பது எவன்கொல் அன்னாய். . . . .[021]

பொருளுரை:

முள்ளி என்னும் தாமரை பூத்திருக்கும் ஊரன் ஆற்றுத் துறையில் வாழும் நண்டு ஆம்பல் பூக்களை அறுத்தெரிகிறது. ஊரன் திருமணம் செய்துகொள்வேன் என்று தெளிவுபடுத்திவிட்டான். அப்படி இருக்கும்போது அவனை நினைத்து அவனைப் பார்க்கவேண்டும் என்று பசபசக்கிறதே, ஏன்?

பாடல் : 022
அள்ளல் ஆடிய புள்ளிக் கள்வன்
முள்ளி வேரளைச் செல்லும் ஊரன்
நல்லசொல்லி மணந்துஇனி
நீயேன் என்றது எவன்கொல் அன்னாய். . . . .[022]

பொருளுரை:

ஊரனின் சேற்று வளையில் விளையாடும் நண்டு அங்கிருக்கும் தாமரைக் கொடிகளை அறுத்தெரிகிறதே! நல்ல சொல் பேசிய அவன் இப்பாது ‘நீ எதற்கு’ என்று இருக்கிறானே!

பாடல் : 023
முள்ளி வேரளைக் கள்வன் ஆட்டிப்
பூக்குற்று எய்திய புனல் அணி யூரன்
தேற்றஞ் செய்துநப் புணர்ந்தினித்
தாக்கணங்கு ஆவ தெவன்கொல் அன்னாய். . . . .[023]

பொருளுரை:

தாமரை வேரில் இருக்கும் நண்டை நம்மோடு சேர்ந்து விளையாடச் செய்தும், பூக்களைப் பரித்துத் தந்தும் என்னைத் தழுவிக் கூடினான். இப்போது என் நெஞ்சை வருத்தும் தெய்வமாகி இருப்பது ஏன்?

பாடல் : 024
தாய்சாப் பிறக்கும் புள்ளிக் கள்வனொடு
பிள்லை தன்னும் முதலைத்து அவனூர்
எய்தினன் அகின்று கொல்லோ மகிழ்நன்
பொலந்தொடி தெளிர்ப்ப முயங்கியவர்
நலங்கொண்டு துறப்பது எவன்கொல் அன்னாய். . . . .[024]

பொருளுரை:

தாயைச் சாகடித்து விட்டு குட்டி நண்டுகள் பிறக்கும். முதலை தான் பெற்ற பிள்ளையைத் தானே தின்னும். மகிழ்நன் ஊர் அப்படிப்பட்டது. என் கைகள் வளையல் குலுங்க அவனைத் தழுவின. அதன் இன்ப நலத்தை நினைத்துக்கொண்டு அவன் இல்லாதபோது கழல்கின்றன. ஏன்?

பாடல் : 025
அயல்புறந் தந்த புனிற்றுவளர் பைங்காய்
வயலைச் செங்கொடி கள்வன் அறுக்கும்
கழனி யூரன் மார்புபலர்க்கு
இழைநெகிழ் செல்லல் ஆகும் அன்னாய். . . . .[025]

பொருளுரை:

மழை பொழிந்து காய் காய்க்கும் செந்நிற வயலைக் கொடியை வயல் நண்டு அறுத்து விடும். இப்படிப்பட்ட வயலை உடையவன் ஊரன். அவன் மார்பு பல மகளிரின் அணிகலன்களைக் கழன்று விழச் செய்து அவர்களைத் துன்பத்தில் ஆழ்த்தும்.

பாடல் : 026
கரந்தைஅம் செறுவில் துணைதுறந்து கள்வன்
வள்ளை மென்கால் அறுக்கும் ஊரன்
எம்மும் பிறரும் அறியான்
இன்னன் ஆவது எவன்கொல் அன்னாய். . . . .[026]

பொருளுரை:

வயலிலே கரந்தை வளர்ந்திருக்கும். அந்த வயலில் இருக்கும் வள்ளைக் கொடியின் மெல்லிய கால்களை நண்டு அறுத்து விடும். இப்படிப்பட்ட வயலை [சேறு] உடையவன் ஊரன். அவன் என்னையும் நினைப்பதில்லை. பிறரையும் தெரிந்துகொள்வதில்லை. இப்படி இருக்கிறானே, ஏன்?

பாடல் : 027
செந்நெலம் செறுவில் கதிகொண்டு கள்வன்
தண்அக மண் அளைச் செல்லும் ஊரற்கு
எவ்வளை நெகிழ சாஅய்
அல்லல் உழப்பது எவன்கொல் அன்னாய். . . . .[027]

பொருளுரை:

வயலில் விளைந்திருக்கும் நெற்கதிர்களை நண்டு கொண்டு சென்று தன் மண்வளையில் பதுக்கிக்கொள்ளும். இப்படிப்பட்ட வயலை உடையவன் ஊரன். அவனுக்காக என் வளையல்கள் கழன்று துன்புறுகின்றனவே, ஏன்?

பாடல் : 028
உண்துறை அணங்கிவள் உறைநோய் ஆயின்
தண்சேறு கள்வன் வரிக்கும் ஊரற்கு
ஒண்டொடி நெகிழச் சாஅய்
மெந்தோள் பசப்பது எவன்கொல் அன்னாய். . . . .[028]

பொருளுரை:

நண்டு சேற்றில் கோடு போடும் நீர் உண்ணும் துறையில் இவளுக்கு வருத்த நோய் என்றால், இவளது தோள்வளையல் கழன்று இவளது தோளில் பசபசக்கும் ஊறல் ஏன்?

பாடல் : 029
மாரி கடிகொளக் காவலர் கடுக
வித்திய வென்முளை கள்வன் அறுக்கும்
கழனி ஊரன் மார்புற மரீஇத்
திதலை அல்குல் நின்மகள்
பசலை கொள்வது எவன்கொல் அன்னாய். . . . .[029]

பொருளுரை:

மழை பொழிந்து காப்பாற்றுகிறது. வயல் காவலர்கள் நடமாட்டும் இருக்கிறது. இருந்தும் வயலில் விதைத்த நெல்முளையை நண்டு அறுத்துக்கொண்டு செல்கிறது. இப்படிப்பட்ட வயல் கொண்ட ஊரன் அவன். அவன் மார்பை உன் மகள் தழுவினாள். அதற்காக கோடுகள் இருக்கும் அல்குல் கொண்ட உன் மகள் பசப்பு ஊர வேண்டுமா?

பாடல் : 030
வேப்புநனை யன்ன நெடுங்கள் கள்வன்
தண்அக மண்அளை நிறைய நெல்லின்
இரும்பூ உறைக்கும் ஊரற்குஇவள்
பெருங்கவின் இழப்பது எவன்கொல் அன்னாய். . . . .[030]

பொருளுரை:

நண்டுக்கு வேப்பம்பூ போன்ற கண். அதன் வையில் இருப்பதோ நெற்கதிர்ப் பூக்கள். அப்படிப்பட்ட வயலை உடையவன் ஊரன். அவனுக்காக இவள் அழகை இழப்பது ஏன்?