பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை


நெல் அரிந்து கடா விடுதல்

பாடல் வரிகள்:- 228 - 242

நீங்கா யாணர் வாங்கு கதிர் கழனி
கடுப்பு உடை பறவை சாதி அன்ன
பைது அற விளைந்த பெரும் செந்நெல்லின் . . . .[230]

தூம்பு உடை திரள் தாள் துமித்த வினைஞர்
பாம்பு உறை மருதின் ஓங்கு சினை நீழல்
பலி பெறு வியன் களம் மலிய ஏற்றி

பொருளுரை:

வளம் குன்றாத வயல்களில் நெல் விளைந்திருக்கும். பறவைச் சாதி தன் சுற்றத்துடன் நீண்டு வளைந்த வரிசையில் வானில் பறப்பது போல் நெல்லின் கதிர்மணிகள் விளைந்திருக்கும். நெல்லந்தாள் உள்ளே துளையை உடையது. நெல்லைத் தாளோடு உழவர்கள் அறுப்பார்கள். (கட்டுகளாகக் கட்டி) அவற்றைக் களத்திற்குக் கொண்டு செல்வர். களத்தின் ஓரத்தில் மருதமரம் இருக்கும். அதன் நிழலில் பாம்பு இருக்கும். (நாகச்சிலை போலும்) அதற்குப் பலியூட்டிய பின்னர்தான் நெற்கட்டுக்களைக் களத்தில் அடுக்குவர்.

கணம் கொள் சுற்றமொடு கை புணர்ந்து ஆடும்
துணங்கை அம் பூதம் துகில் உடுத்தவை போல் . . . .[235]

சிலம்பி வால் நூல் வலந்த மருங்கின்
குழுமு நிலை போரின் முழு முதல் தொலைச்சி
பகடு ஊர்பு இழிந்த பின்றை துகள் தப
வையும் துரும்பும் நீக்கி பைது அற
குட காற்று எறிந்த குப்பை வட பால் . . . .[240]

செம்பொன்மலையின் சிறப்ப தோன்றும்
தண் பணை தழீஇய தளரா இருக்கை . . . .[228 - 242]

பொருளுரை:

களத்தில் சேர்த்துள்ள நெற்கட்டுகளில் சிலந்திப் பூச்சிகள் கூடு கட்டியிருக்கும். (அந்த அளவுக்கு நெல்மணிகளை அரிந்த தாளிலேயே முதிர விடுவார்கள்). அரிகளைப் பிரித்து நெல் அடிப்பார்கள். மாடுகளைப் பூட்டி அடித்த தாள்மீது போரடிப்பார்கள். அது பூதம் தன் உறவுக் கூட்டத்தோடு கை கோத்துக்கொண்டு துணங்கை நடனம் ஆடுவது போல இருக்கும். பின் வைக்கோல், துரும்பு ஆகியவற்றை நீக்கி நெல்லைத் தனியே பிரித்து எடுப்பார்கள். அந்த நெல்லிலும் முதிராத பச்சை நெல் (கருக்காய்) போகும் வண்ணம் மேலைக் காற்றிலே தூற்றுவார்கள். நல்ல நெல்லை களத்தின் வடக்குப் பக்கத்தில் குவித்து வைப்பார்கள். அது செம்பொன் குவித்த மலைபோல் தோன்றும். இதுதான் தண்பணை தழீஇய தளரா இருக்கை. அதாவது ஈர வயல்கள் நிரம்பிய, செல்வ வளத்தில் தளர்ச்சியே காணாத குடியிருப்புப் பகுதிகள்.