நாலடியார்

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

நான்மணிக்கடிகை

நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும்

இனியவை நாற்பது

பூதஞ்சேந்தனார் இயற்றியது இனியவை நாற்பது. 40 வெண்பாக்களைக் கொண்டது. நான்கு பாடல்களில் இன்பம் தருவன

இன்னா நாற்பது

இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துக்களைக் கொண்டு

திரிகடுகம்

திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரிகடுகம் என்பது

ஆசாரக் கோவை

மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை. பண்டைக்காலத்

சிறுபஞ்சமூலம்

சிறுபஞ்சமூலம் என்பது ஐந்து சிறிய வேர்கள் என்று பொருள்படும். அவையாவன சிறுவழுதுணை வேர், நெருஞ்சி வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர்

முதுமொழிக்காஞ்சி

முதுமொழி என்பது பழமொழி என்னும் சொற்பொருளோடு தொடர்புடையது. காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும் ஒருவகை அணிகலக் கோவையையும்

பழமொழி நானூறு

பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள்

ஏலாதி

'ஏலாதி' என மருத்துவ நூல்களில் கூறப்படுவது ஏலம் ஆதியான ஆறு பொருள்கள் சேர்ந்த ஒரு வகைச் சூர்ணம். ஏலம் ஒரு பங்கு, இலவங்கப்பட்டை இரண்டு பங்கு,

திருக்குறள்

திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு விளங்குகின்றது. அறம், பொருள், இன்பம்

கார் நாற்பது

கார் நாற்பது அகப்பொருள் பற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது. கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையாலும்,

ஐந்திணை ஐம்பது

'ஐந்திணை ஐம்பது' முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்திணைக்கும் பத்துப் பாடல்களைப் பெற்றுள்ளமையால் 'ஐந்திணை ஐம்பது' எனப் பெயர் பெற்றது.

திணைமொழி ஐம்பது

திணைமொழி ஐம்பது குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்திணைகளுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் உள்ளன. அதனால் இந்நூல்

ஐந்திணை எழுபது

ஐந்திணை எழுபது ஐந்திணைகளில் ஒவ்வொன்றிற்கும் பதினான்கு பாடல்களைக் கொண்டு, எழுபது பாடல்களில் இந்நூல் அமைந்துள்ளது. இந் நூலின் முதலில் விநாயகரைக்

திணைமாலை நூற்றைம்பது

திணைமாலை நூற்றைம்பது பண்டைத் தமிழ் நூற் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கில் அடங்கியது. 153 பாடல்களைக் கொண்ட இது ஒரு அகப்பொருள் சார்ந்த நூல்.

கைந்நிலை

'கை' என்பது ஒழுக்கம் என்றும் பொருள்படும். ஐந்திணை ஒழுக்கம் பற்றியதே இந்நூலாகும். ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடலாக அறுபது பாடல்கள் இந் நூலில் உள்ளன.

களவழி நாற்பது

களவழி நாற்பது போர்க்களம் பற்றிய பாடல்களின் தொகுதியாகும். இந் நூலில் உள்ள பாடல்கள் எல்லாம் களத்து என்ற சொல்லை இறுதியில் கொண்டு முடிதல் கவனிக்கத் தக்கது.

பழமொழி நானூறு
பதினெண் கீழ்க்கணக்கு

பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்டது.

பழமொழி நானூறு


33. ஈகை

பாடல் : 372
சிறிய பொருள் கொடுத்துச் செய்த வினையால்,
பெரிய பொருள் கருது வாரே; - விரி பூ
விராஅம் புனல் ஊர! - வேண்டு அயிரை இட்டு,
வராஅஅல் வாங்குபவர். . . . .[372]

பொருளுரை:

விரிந்த பல பூக்களும் கலந்திருக்கின்ற நீர் நாடனே! இம்மையில் தம்மாலியன்ற சிறிய பொருளை உள்ளன்போடு வறியோர்க் கீந்து வந்த நல்வினையால் மறுமையின்கண் மிக்க செல்வத்தைப்பெற நினைப்பவர்கள் விரும்பப்படும் அயிரை யென்னும் சிறு மீனைத் தூண்டிலிற் கோத்துவிட்டு பெரியவரால் மீனை இழுப்பவரோடொப்பர்.

கருத்து:

அறிவுடையோர் இம்மையில் இயன்ற அறத்தைச் செய்து மறுமையில் மிக்கபேற்றைப் பெறுவர்.

பாடல் : 373
கரப்புடையார் வைத்த, கடையும் உதவா,
துரப்புடைய மன்னர்க்கே துப்புரவு; அது அல்லால்,
நிரப்பு இடும்பை மிக்கார்க்கு உதவ ஒன்று ஈதல்
சுரத்திடைப் பெய்த பெயல். . . . .[373]

பொருளுரை:

வறியோர்க் கீயாது மறைத்து வைப்பவர்கள் அரிதின் முயன்று பகைவரைக் கடிதலுடைய அரசர்க்கே பயன்படுவதல்லாமல் அவன்வழி வந்தவர்க்கும் உதவுவதில்லை. (அங்ஙனமின்றி) வறுமையால் துன்பம் மிகுந்தவர்களுக்கு பயன்படுமாறு ஒரு பொருளை ஈதல் பாலை நிலத்தின்கண் சொரியப்பட்ட மழைநீரை ஒக்கும்.

கருத்து:

புதைத்து வைத்தலின்றிப் பொருளை வறியோர்க்கு ஈவாயாக.

பாடல் : 374
பல் ஆண்டும் ஈண்டிப் பழுதாய்க் கிடந்தது
வல்லான் தெரிந்து வழங்குங்கால், வல்லே
வளம் நெடிது கொண்து அறாஅது; - அறுமோ,
குளம் நெடிது கொண்டது நீர்?. . . . .[374]

பொருளுரை:

மிகுந்த நீரைக் கொண்டதாகிய குளம் இறைத்தால் நீர் வற்றுதல் உண்டோ? (இல்லை.) (அதுபோல்) பல ஆண்டுகளாக ஒன்றுசேர்ந்து குற்றமுடைய தாய்க் கிடந்த பொருளை கொடைவல்லா னொருவன் செய்யும் நெறியறிந்து அதனை வறியோர்க்கு விரைந்து வழங்குமிடத்து செல்வத்தை மிகுதியாகக் கொண்ட அது கெடுதல் இல்லை.

கருத்து:

ஈதலாற் செல்வம் குறைபடுதல் இல்லை.

பாடல் : 375
'நினைத்தது இது' என்று, அந் நீர்மையை நோக்கி,
மனத்தது அறிந்து ஈவார் மாண்டார்; - புனத்த
குடிஞை இரட்டும் குளிர் வரை நாட!
கடிஞையில் கல் இடுவார் இல். . . . .[375]

பொருளுரை:

புனத்தின்கண் கோட்டான்கள் கூப்பாடு செய்கின்ற குளிர்ந்த மலையை உடைய நாடனே! இரக்கும் பாத்திரத்தில் அன்னமிடுவதன்றிக் கற்களை இடுவார் இல்லையாதலால் வருகின்ற தன்மையைப் பார்த்து இவன் கருதி வந்த பொருள் இதுவென்று முகத்தான் அறிந்து மனத்தின் அளவை அறிந்து கொடுக்கின்றவர்களே அறத்தான் மாட்சிமை உடையவராவர்.

கருத்து:

வறியோர் வேண்டும் பொருளைக் குறிப்பறிந்து கொடுப்பாயாக.

பாடல் : 376
கூஉய்க் கொடுப்பது ஒன்று இல் எனினும், சார்ந்தார்க்குத்
தூஉய்ப் பயின்றாரே துன்பம் துடைக்கிற்பார்;
வாய்ப்பத் தான் வாடியக் கண்ணும், பெருங் குதிரை,
யாப்புள், வேறு ஆகிவிடும். . . . .[376]

பொருளுரை:

சிறந்த குதிரை பொருந்தத் தான் வாடிய காலத்தும் போருக்குரியவற்றை வைத்துக் கட்டவே வேறு குதிரை போன்று ஆண்மை கொண்டு நிற்கும். (அது போல) வறியோரை அழைத்துக் கொடுப்பதற்கு ஒரு பொருளும் இல்லை யாயினும் தம்மையடைந்து ஒரு பொருளை வேண்டினார்க்கு ஒரு பொருளைக் கொடுத்து அச் செயலில் அடிப்பட்டு வந்தவர்களே பிறருடைய துன்பத்தை நீக்க வல்லார்.

கருத்து:

வறுமை யுற்றவிடத்தும் ஈகையின் நீங்காதே.

பாடல் : 377
அடுத்து ஒன்று இரந்தாற்கு ஒன்று ஈந்தாரை, கொண்டார்,
படுத்து, 'ஏழையாம்!' என்று போகினும் போக!
அடுத்து ஏறு அல் ஐம்பாலாய்! - யாவர்க்கேயானும்
கொடுத்து, ஏழை ஆயினார் இல். . . . .[377]

பொருளுரை:

நெருங்கி வளர்ந்திருக்கின்ற இருள் போன்ற ஐந்து பகுதியாகிய கூந்தலையுடையாய் தம்மை யடைந்து ஒரு பொருளை வேண்டினவர்களுக்கு ஒரு பொருளைக் கொடுத்தவர்களை இரவலர் தாழ்வுபடுத்தி ஏழை யென்று சொல்லப் போகினும் போக எத்தகுதியை உடையவரே யாயினும் பிறர்க்குக் கொடுத்து வறுமையுற்றார் ஒருவருமிலர்.

கருத்து:

ஏழைகளுக்குக் கொடுப்பதனால் பொருள்குறைந்து வறுமையுடையராதல் இல்லை.

பாடல் : 378
'இரப்பவர்க்கு ஈயக் குறைபடும்' என்று எண்ணி,
கரப்பவர் கண்டறியார்கொல்லோ? - பரப்பில்
துறைத் தோணி நின்று உலாம் தூங்கு நீர்ச் சேர்ப்ப!
இறைத்தோறும் ஊறும் கிணறு. . . . .[378]

பொருளுரை:

கடலிடத்தில் துறையின்கண் தோணிகள் நின்று அசைந்து கொண்டிருக்கும் அசைகின்ற நீரையுடைய கடல் நாடனே! தன்னை யடைந்து ஒரு பொருளை வேண்டுவார்க்கு கொடுப்பதால் தமது செல்வம் குறையும் என்று நினைத்து இல்லை யென்று சொல்லித் தமது பொருளை மறைப்பவர்கள் இறைக்குந்தோறும் நீர் ஊறுங்கிணற்றை பார்த்தறியாராயினார் போலும்.

கருத்து:

கொடுக்கக் கொடுக்கப் பொருள் வளரும்.

பாடல் : 379
'இரவலர் தம் வரிசை' என்பார், மடவார்
கரவலராய்க் கை வண்மை பூண்ட புரவலர்
சீர வரைய ஆகுமாம், செய்கை சிறந்து அனைத்தும்;
நீர் வரையவாம் நீர் மலர். . . . .[379]

பொருளுரை:

இரப்போர் நிலைக்குத் தக்க அளவினதாகக் கொடுப்பதே கொடை என்று சொல்லுகின்றவர்கள் மூடர்களே யாவார்கள் நீர்ப்பூ நீரின் அளவினதாயிருக்கும் கையிலுள்ளதை மறையாதவர்களாகிக் கைவண்மையையுடைய அரசர்கள் செய்யும் கொடைச் செயலும் மற்றும் சிறந்த எல்லாச் சிறப்புக்களும் தம் சீரினளவினதாயிருக்கும் ஆதலான்.

கருத்து:

கொடுப்போன் தன்னிலை நோக்கி ஈக என்றது இது.

பாடல் : 380
தொடுத்த பெரும் புலவன், சொற் குறை தீர,
'அடுத்தர' என்றாற்கு, 'வாழியரோ!' என்றான்;
தொடுத்து, 'இன்னர்' என்னலோ வேண்டா; - கொடுப்பவர்
தாம் அறிவார், தம் சீர் அளவு. . . . .[380]

பொருளுரை:

செல்கெழு குட்டுவனுடைய புகழைச் செய்யுளாகப் பாடிய பெரிய புலவனாகிய கௌதமன் துறக்கத்தை யானும் என் சுற்றமும் அடையுமாறு செய்வாயாக என்று சொல்ல அங்ஙனம் சொல்லிய அப் புலவற்கு அவர் சொல்லியகுறை தீரும் பொருட்டு வேள்வி செய்து துறக்கத்தின்கண் நீடு வாழ்வாயாக வென்று கூறினான்.(ஆகையால்) ஒரு பொருளை வேண்டுவார் முறையாக இத் தன்மையை உடையார் என்று புகழ்ந்து கூறுதல் வேண்டாவாம் கொடுக்கின்றவர்கள் தம் நிலையின் அளவையறிந்து செய்வார்கள்.

கருத்து:

கொடையாளிகள் தொடுத்துக் கூறுதலை எதிர் நோக்காது தம் நிலைமைக்கேற்பக் கொடுப்பர்.

பாடல் : 381
மாரி ஒன்று இன்றி வறந்திருந்த காலத்தும்,
பாரி மட மகள், பாண் மகற்கு, நீர் உலையுள்
பொன், திறந்து, கொண்டு, புகாவாக நல்கினாள்;
ஒன்று உறா முன்றிலோ இல். . . . .[381]

பொருளுரை:

மாரி ஒன்று இன்றி வறந்து இருந்த காலத்தும், மழையென்பதே ஒன்று இல்லாமல் வற்றியிருந்த காலத்திலும், பாரியினுடைய இளமை பொருந்திய மகள் வந்து இரந்த பாணனுக்கு நீரையுடைய உலையுள் பொன்னைப் பெய்து அதனைக் கொண்டுவந்து உணவாகக் கொடுத்தாள். (ஆதலால்) ஒரு பொருளும் இல்லாத வீடோ இல்லை.

கருத்து:

ஒவ்வொருவரும் தம்மா லியன்றதொரு பொருளைக் கொடுக்க.

பாடல் : 382
ஏற்றார்கட்கு எல்லாம் இசை நிற்ப, தாம் உடைய
மாற்றார் கொடுத்திருப்ப, வள்ளன்மை; மாற்றாரை
மண்ணகற்றிக் கொள்கிற்கும் ஆற்றலார்க்கு என் அரிதாம்?
பெண் பெற்றான் அஞ்சான், இழவு. . . . .[382]

பொருளுரை:

இரந்தவர்கள் எல்லோருக்கும் புகழ் இவ்வுலகில் நிலைத்து நிற்குமாறு தம்மிடத்துள்ள பொருளை இல்லையென்று கூறாராகித் தம் அளவிற்கு ஏற்பக் கொடுப்பது கொடையாம் பகைவரை வென்று நாட்டை அவரினின்றும் நீக்கித் தன்னதாகக் கொள்ளும் வலிமை உடைய அரசர்களுக்குச் செய்தற்கரியது யாது? ஒரு பெண்ணைப் பெறத்தகும் காலத்தைப் பெற்றவன் இழக்கப்படும் பொருளுக்கு அஞ்சுவானல்லன் ஆதலால்

கருத்து:

கொடைக் குரியவர்கள் அரசர்களே யாவர்.

பாடல் : 383
பயன் நோக்காது, ஆற்றவும் பார்த்து அறிவு ஒன்று இன்றி,
இசை நோக்கி, ஈகின்றார் ஈகை, - வயமாப்போல்
ஆலித்துப் பாயும் அலை கடல் தண் சேர்ப்ப!
கூலிக்குச் செய்து உண்ணும் ஆறு. . . . .[383]

பொருளுரை:

வெற்றியையுடைய குதிரையைப்போல் ஒலித்துத் தாவிச் செல்லும் அலைகடலையுடைய குளிர்ந்த நீர் நாடனே! மறுமையில் வரும் பயனை நோக்குதலின்றி மிகவும் பகுத்தறியும் அறிவு என்பது ஒன்று இல்லாதவராகி புகழொன்றனையே நோக்கி கொடுக்கின்றவர்களது ஈகை கூலிக்குத் தொழில் செய்து உண்ணு நெறியோ டொக்கும்.

கருத்து:

புகழொன்றனையே நோக்கிக் கொள்வோர் நிலையறியாது கொடுக்கும் கொடை சிறந்ததன்றாம்.

பாடல் : 384
மறாஅ தவனும், பலர் ஒன்று இரந்தால்,
பெறாஅஅன் பேதுறுதல் எண்ணி, பொறாஅன்,
கரந்து உள்ளதூஉம் மறைக்கும்; அதனால்,
இரந்து ஊட்குப் பன்மையோ தீது. . . . .[384]

பொருளுரை:

மறுக்கும் இயல்பில்லாதவனும் இரவலர் பலரும் ஒரு பொருளை விரும்பினால் (எல்லோர்க்கும் கொடுக்க முடியாமையால்) அதனைப் பெறாதவன் மயக்கமுறுதலை நினைத்து மனம் பொறாதவனாகித் தன்னிடத்துள்ள பொருளையும் கரந்து மறைப்பான் ஆகையால் யாசித்து உண்ணும் உணவிற்கு ஒருவனிடத்திலே பலரும் சென்றிரத்தல் தீமையைத் தருவதாம்.

கருத்து:

ஒருவனிடத்தில் : யாசிப்பதற்குப் பலரும் ஒன்று சேர்ந்து செல்லுதல் ஆகாது.

பாடல் : 385
தோற்றம் பெரிய நசையினார், அந் நசை
ஆற்றாதவரை அடைந்து ஒழுகல், - ஆற்றுள்
கயல் புரை உண்கண் கனங்குழாய்! - அஃதால்,
உயவுநெய்யுள் குளிக்குமாறு. . . . .[385]

பொருளுரை:

ஆற்றின்கண் உள்ள மீனையொத்த மை யுண்ட கண்களையும் பொற் குழையினையு முடையாய் தோன்றுதல் மிகுந்த ஆசையினை உடையவர்கள் அவ் வாசையைத் தீர்க்கமாட்டாதவர்களை தீர்ப்பாரெனக் கருதி அடைந்து அவர்வழி நிற்றலாகிய அதுவே வண்டிக்கிடும் மசையினுள் குளிக்கு மாற்றை யொக்கும்.

கருத்து:

குறைதீர விரும்புவார் அதனைத் தீர்க்கவல்லாரைச் சார்ந்தொழுகுக.

பாடல் : 386
காப்பு இகந்து ஓடி, கழி பெருஞ் செல்வத்தைக்
கோப் பரியான் கொள்ளக், கொடுத்து இராது என் செய்வர்?
நீத்த பெரியார்க்கே ஆயினும், மிக்கவை
மேவின், பரிகாரம் இல். . . . .[386]

பொருளுரை:

இருவகைப் பற்றினையும் முற்ற அறுத்த துறவிகளோயினும் தம்மால் தானமாகக் கொடுக்கப்பட்ட மிக்க பொருளைத் தாமே சென்று மேவுவராயின் அதனை இடை நின்று தடுத்தற்குரிய வழி இல்லை. (அதுபோல) காப்பு இகந்து ஓடி - காவல் நெறியைக் கடந்து சென்று குடிகளது மிக்க பெருஞ் செல்வத்தை அரசனாகிய பெரியவன் வலிந்து சென்று கொள்வானாயின்.

கருத்து:

அரசனே குடிமக்களது செல்வத்தைப் பறிக்க முற்படுவானாயின், அதனை நீக்க வல்லவர் யாரும் இலர்.