நாலடியார்

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

நான்மணிக்கடிகை

நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும்

இனியவை நாற்பது

பூதஞ்சேந்தனார் இயற்றியது இனியவை நாற்பது. 40 வெண்பாக்களைக் கொண்டது. நான்கு பாடல்களில் இன்பம் தருவன

இன்னா நாற்பது

இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துக்களைக் கொண்டு

திரிகடுகம்

திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரிகடுகம் என்பது

ஆசாரக் கோவை

மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை. பண்டைக்காலத்

சிறுபஞ்சமூலம்

சிறுபஞ்சமூலம் என்பது ஐந்து சிறிய வேர்கள் என்று பொருள்படும். அவையாவன சிறுவழுதுணை வேர், நெருஞ்சி வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர்

முதுமொழிக்காஞ்சி

முதுமொழி என்பது பழமொழி என்னும் சொற்பொருளோடு தொடர்புடையது. காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும் ஒருவகை அணிகலக் கோவையையும்

பழமொழி நானூறு

பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள்

ஏலாதி

'ஏலாதி' என மருத்துவ நூல்களில் கூறப்படுவது ஏலம் ஆதியான ஆறு பொருள்கள் சேர்ந்த ஒரு வகைச் சூர்ணம். ஏலம் ஒரு பங்கு, இலவங்கப்பட்டை இரண்டு பங்கு,

திருக்குறள்

திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு விளங்குகின்றது. அறம், பொருள், இன்பம்

கார் நாற்பது

கார் நாற்பது அகப்பொருள் பற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது. கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையாலும்,

ஐந்திணை ஐம்பது

'ஐந்திணை ஐம்பது' முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்திணைக்கும் பத்துப் பாடல்களைப் பெற்றுள்ளமையால் 'ஐந்திணை ஐம்பது' எனப் பெயர் பெற்றது.

திணைமொழி ஐம்பது

திணைமொழி ஐம்பது குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்திணைகளுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் உள்ளன. அதனால் இந்நூல்

ஐந்திணை எழுபது

ஐந்திணை எழுபது ஐந்திணைகளில் ஒவ்வொன்றிற்கும் பதினான்கு பாடல்களைக் கொண்டு, எழுபது பாடல்களில் இந்நூல் அமைந்துள்ளது. இந் நூலின் முதலில் விநாயகரைக்

திணைமாலை நூற்றைம்பது

திணைமாலை நூற்றைம்பது பண்டைத் தமிழ் நூற் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கில் அடங்கியது. 153 பாடல்களைக் கொண்ட இது ஒரு அகப்பொருள் சார்ந்த நூல்.

கைந்நிலை

'கை' என்பது ஒழுக்கம் என்றும் பொருள்படும். ஐந்திணை ஒழுக்கம் பற்றியதே இந்நூலாகும். ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடலாக அறுபது பாடல்கள் இந் நூலில் உள்ளன.

களவழி நாற்பது

களவழி நாற்பது போர்க்களம் பற்றிய பாடல்களின் தொகுதியாகும். இந் நூலில் உள்ள பாடல்கள் எல்லாம் களத்து என்ற சொல்லை இறுதியில் கொண்டு முடிதல் கவனிக்கத் தக்கது.

பழமொழி நானூறு
பதினெண் கீழ்க்கணக்கு

பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்டது.

பழமொழி நானூறு


05. ஒழுக்கம்

பாடல் : 034
விழுத் தொடையர் ஆகி விளங்கி, தொல் வந்தார்
ஒழுக்கு உடையர் ஆகி ஒழுகல், - பழத் தெங்கு
செய்த்தலை வீழும் புனல் ஊர்! - அஃதன்றோ
நெய்த்தலைப் பால் உக்கு விடல். . . . .[034]

பொருளுரை:

தெங்கம்பழம் வயலின்கண் விழுகின்ற நீர் நிறைந்த மருதநிலத்தலைவனே! சிறந்த தொடர்ச்சியைஉடையாரை உடையது ஆகிப் புகழால்விளக்கம் உற்றுத்தொன்றுதொட்டு வந்த குடியின்கட் பிறந்தார் தத்தமக்குரிய ஒழுக்கத்தினை உடையராகிக் குடிக்கேற்ப ஒழுகுதல் ஆவின் நெய்யிடத்து ஆவின்பாலை ஊற்றிவிடல் போல்அஃது இனிமையைத்தரும் அல்லவா?

கருத்து:

தங்குடிக்கேற்ப நல்லொழுக்கினனாய் ஒழுகுதல் இனிமையைப் பயப்பதாகும்.

பாடல் : 035
கள்ளி அகிலும், கருங் காக்கைச் சொல்லும்போல்,
எள்ளற்க, யார் வாயும் நல் உரையை! - தெள்ளிதின்
ஆர்க்கும் அருவி மலை நாட! நாய் கொண்டால்,
பார்ப்பாரும் தின்பர் உடும்பு. . . . .[035]

பொருளுரை:

தெளிவாக ஒலிக்கும் அருவியை உடைய மலை நாடனே! நாய் கதுவியதாயினும் உடும்பின் தசையை உயர்வு கருதி உண்பர் கள்ளியினிடம் பிறக்கும் அகிலையும் கரிய காக்கையது சொல்லையும் பிறந்த இடம்நோக்கி இகழாது உயர்வாகக் கொள்ளுமாறுபோல கீழாயினார் வாயிற் பிறந்ததேயாயினும் நல்லுரையாயின் இகழாது ஒழிக. (போற்றுதல்செய்க.)

கருத்து:

சிறந்த பொருள்களைஇழிந்தார் கூறினராயினும் இகழாது போற்றுதல் வேண்டும்.

பாடல் : 036
தம் நடை நோக்கார், தமர் வந்தவாறு அறியார்,
செந் நடை சேராச் சிறியார்போல் ஆகாது,
நின் நடையானே நடஅத்தா! நின் நடை
நின் இன்று அறிகிற்பார் இல். . . . .[036]

பொருளுரை:

அத்தனே! நினது ஒழுக்கத்தை உன்னிடத்தினின்றும் அறிதலுடையார் இல்லை (நீயே அறிவாய் ஆகையால்) தமது ஒழுக்கத்தை ஆராய்தலிலராய்த் தம் சுற்றத்தார் ஒழுகிவந்த வரலாற்றையும் அறிதலிலராய் செவ்விய நடையைச் சேராத அறிவிற் சிறியார் போல் ஒழுகாது நினக்கு விதிக்கப்பட்ட நின்குடிக்கேற்ற ஒழுக்கத்தின்படியே ஒழுகக் கடவாயாக.

கருத்து:

ஒவ்வொருவரும் தத்தம் குடிக்கேற்ப ஒழுகுதல் வேண்டும்.

பாடல் : 037
நீர்த்து அன்று ஒருவர் நெறி அன்றிக் கொண்டக்கால்,
பேர்த்துத் தெருட்டல் பெரியார்க்கும் ஆகாதே
கூர்த்த நுண் கேள்வி அறிவுடையார்க்கு ஆயினும்,
ஓர்த்தது இசைக்கும் பறை. . . . .[037]

பொருளுரை:

உடுக்கை நாம் நினைத்த ஓசையையே ஒலியாநிற்கும் (அதுபோல) கூரிய நுட்பமான நூற்பொருளைக் கேட்டுணர்ந்த இயற்கையறிவு உடையவர்களுக்கேயானாலும் நீர்மையுடையது அன்று (என்று) அவருள் ஒருவர் முறைபிறழ்ந்து கருதிய இடத்து மீண்டும் அவரைத் தெளிவித்தல் தவத்தால் பெரியவர்களுக்கும் முடியாது. (அவர் கொண்ட கொள்கையின் கண்ணேயே நிற்பர்.)

கருத்து:

பிறர் ஐயுறாவண்ணம் ஒழுகுதல் வேண்டும்.

பாடல் : 038
தம் குற்றம் நீக்கலர் ஆகி, பிறர் குற்றம்
எங்கெங்கும் தீர்த்ததற்கு இடை புகுதல் - எங்கும்
வியன் உலகில் வெள்ளாடு தன் வளி தீராது,
அயல் வளி தீர்த்து விடல். . . . .[038]

பொருளுரை:

(அறிவிலார்) தாம் செய்த குற்றத்தைப் போக்காதவர்களாகி பிறருடைய குற்றங்களைத் தீர்க்கும் பொருட்டு எங்கெங்கும் சென்று புகுதல் அகன்ற உலகின்கண் எவ்விடத்தும் வெள்ளாடு தனது வளியான் உண்டாய நோயைத் தீர்க்காது பிற உயிர்களுக்கு வாதத்தான் வரும் நோயைத்தீர்த்து விடுதலோ டொக்கும்.

கருத்து:

ஒவ்வொருவரும் தத்தம் குற்றங்களைப் போக்கிய பின்னரே பிறர் குற்றங் களையமுற்படுதல் வேண்டும்.

பாடல் : 039
கெடுவல் எனப்பட்டக் கண்ணும், தனக்கு ஓர்
வடு அல்ல செய்தலே வேண்டும்; - நெடு வரை
முற்று நீர் ஆழி வரையகத்து ஈண்டிய
கல் தேயும்; தேயாது, சொல். . . . .[039]

பொருளுரை:

பெரிய சக்கரவாளமாகிய மலைகளால் சூழப்பட்ட நீரை உடைய கடலால் வரையறுக்கப்பட்ட பூமியின்கண் தொக்க மலைகள் தேய்வடையும் பழிச்சொல் மாறுதலில்லை. (ஆகையால்) (இவர்க்கு இத்தீங்கு செய்து பழியை எய்தாதொழியின்) யான் கெடுவேன் என்று கருதப்பட்ட இடத்தும் தனக்கு ஒருசிறிதும் பழியைப் பயவாத செயல்களைச் செய்தலையே ஒவ்வொருவனும் விரும்புதல் வேண்டும்.

கருத்து:

தான் அழிய வரினும்பழியொடு பட்டவைகளைச் செய்யவேண்டா.

பாடல் : 040
பொருந்தாப் பழி என்னும் பொல்லாப் பிணிக்கு
மருந்து ஆகி நிற்பதாம் மாட்சி - மருந்தின்
தணியாது விட்டக்கால், தண் கடல் சேர்ப்ப!
பிணி ஈடு அழித்து விடும். . . . .[040]

பொருளுரை:

குளிர்ந்த கடல் நாடனே! (ஒருவர் கொண்ட நோயை) மருந்துகொண்டு நீக்காவிட்டால் அந்நோய் அவரது வலியைப் போக்கிவிடும். (ஆதலால்) பொருத்தமில்லாத பழி எனப்படும் தீய நோய்க்கு அந் நோயைத் தீர்க்கும் பொருளாக நிற்பது ஒழுக்கமேயாம்; (அதுகொண்டு நீக்குதல் வேண்டும்.)

கருத்து:

ஒருவன் தான் கொண்டபழியை ஒழுக்கத்தாலன்றி நீக்கமுடியாது.

பாடல் : 041
உரிஞ்சி நடப்பாரை, உள் அடி நோவா,
நெருஞ்சியும் செய்வது ஒன்று இல்லை; - செருந்தி
இருங் கழித் தாழும் எறி கடல் தண் சேர்ப்ப!
பெரும் பழியும் பேணாதார்க்கு இல். . . . .[041]

பொருளுரை:

செருந்திமரங்கள் பெரிய உப்பங்கழியின்கண் தாழ்ந்துவிளங்கும் அலைகளை வீசுகின்ற குளிர்ந்த கடல் நாடனே! அஞ்சாது உராய்ந்து நடப்பவர்களை அவர் உள்ளங் கால்கள் வருந்தும்படி நெருஞ்சிமுள்ளும் ஊறு செய்வதில்லை மிக்கபழியும் தன்னை அஞ்சிப் பாதுகாவாதவர்களுக்கு மனவருத்தம் செய்தல் இல்லை.

கருத்து:

நல்லோர் பழிக்கு அஞ்சுவர், தீயோர் அஞ்சார்.

பாடல் : 042
ஆவிற்கு அரும் பனி தாங்கிய மாலையும்,
'கோவிற்குக் கோவலன்' என்று, உலகம் கூறுமால்
தேவர்க்கு, மக்கட்கு, என வேண்டா தீங்கு உரைக்கும்
நாவிற்கு நல்குரவு இல். . . . .[042]

பொருளுரை:

பசுக்கூட்டங்கட்கு வந்த அரிய துன்பத்தை நீக்கிய திருமாலையும் ஆநிரைகளுக்குத் தக்க இடையன் என்று உலகம் சொல்லா நிற்கும். (ஆகையால்) தேவர்க்கு மக்கட்கு எனல் வேண்டா - தேவர்க்கு உரைப்பது இது மக்கட்கு உரைப்பது இது வெனல் வேண்டப்படுவதன்று தீமையை எடுத்துக்கூறும் நாவினுக்கு வறுமை இல்லையாகலான்.

கருத்து:

பழித்துரைக்கப் புகுவார்க்கு உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்பதில்லை.