நாலடியார்

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

நான்மணிக்கடிகை

நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும்

இனியவை நாற்பது

பூதஞ்சேந்தனார் இயற்றியது இனியவை நாற்பது. 40 வெண்பாக்களைக் கொண்டது. நான்கு பாடல்களில் இன்பம் தருவன

இன்னா நாற்பது

இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துக்களைக் கொண்டு

திரிகடுகம்

திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரிகடுகம் என்பது

ஆசாரக் கோவை

மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை. பண்டைக்காலத்

சிறுபஞ்சமூலம்

சிறுபஞ்சமூலம் என்பது ஐந்து சிறிய வேர்கள் என்று பொருள்படும். அவையாவன சிறுவழுதுணை வேர், நெருஞ்சி வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர்

முதுமொழிக்காஞ்சி

முதுமொழி என்பது பழமொழி என்னும் சொற்பொருளோடு தொடர்புடையது. காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும் ஒருவகை அணிகலக் கோவையையும்

பழமொழி நானூறு

பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள்

ஏலாதி

'ஏலாதி' என மருத்துவ நூல்களில் கூறப்படுவது ஏலம் ஆதியான ஆறு பொருள்கள் சேர்ந்த ஒரு வகைச் சூர்ணம். ஏலம் ஒரு பங்கு, இலவங்கப்பட்டை இரண்டு பங்கு,

திருக்குறள்

திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு விளங்குகின்றது. அறம், பொருள், இன்பம்

கார் நாற்பது

கார் நாற்பது அகப்பொருள் பற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது. கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையாலும்,

ஐந்திணை ஐம்பது

'ஐந்திணை ஐம்பது' முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்திணைக்கும் பத்துப் பாடல்களைப் பெற்றுள்ளமையால் 'ஐந்திணை ஐம்பது' எனப் பெயர் பெற்றது.

திணைமொழி ஐம்பது

திணைமொழி ஐம்பது குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்திணைகளுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் உள்ளன. அதனால் இந்நூல்

ஐந்திணை எழுபது

ஐந்திணை எழுபது ஐந்திணைகளில் ஒவ்வொன்றிற்கும் பதினான்கு பாடல்களைக் கொண்டு, எழுபது பாடல்களில் இந்நூல் அமைந்துள்ளது. இந் நூலின் முதலில் விநாயகரைக்

திணைமாலை நூற்றைம்பது

திணைமாலை நூற்றைம்பது பண்டைத் தமிழ் நூற் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கில் அடங்கியது. 153 பாடல்களைக் கொண்ட இது ஒரு அகப்பொருள் சார்ந்த நூல்.

கைந்நிலை

'கை' என்பது ஒழுக்கம் என்றும் பொருள்படும். ஐந்திணை ஒழுக்கம் பற்றியதே இந்நூலாகும். ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடலாக அறுபது பாடல்கள் இந் நூலில் உள்ளன.

களவழி நாற்பது

களவழி நாற்பது போர்க்களம் பற்றிய பாடல்களின் தொகுதியாகும். இந் நூலில் உள்ள பாடல்கள் எல்லாம் களத்து என்ற சொல்லை இறுதியில் கொண்டு முடிதல் கவனிக்கத் தக்கது.

பழமொழி நானூறு
பதினெண் கீழ்க்கணக்கு

பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்டது.

பழமொழி நானூறு


26. அமைச்சர்

பாடல் : 258
கல்வி அகலமும், கட்டுரை வாய்பாடும்,
கொல் சின வேந்தன் அவை காட்டும்; - மல்கி,
தலைப்பாய் இழிதரூஉம் தண் புனல் நீத்தம்
மலைப் பெயல் காட்டும் துணை. . . . .[258]

பொருளுரை:

தலை மல்கி பாய் இழிதரு தண்புனல் நீத்தம் மலையிடம் நிறைந்து பரந்து இழிகின்ற குளிர்ந்த புனலின் பெருக்கம் மலையிடத்துப் பெய்த மழையது அளவை அறிவிக்கு மாறுபோல பகைவரைக் கொல்லுகின்ற சினத்தையுடைய அரசனது கல்வியது பெருக்கத்தையும் நீதி கூறும் முறையையும் அவனது அவையே அறிவித்து நிற்கும்.

கருத்து:

அரசனது கல்விப் பெருக்கத்தையும், நீதிகூறும் முறையையும் அவனது அவை காட்டி நிற்கும்.

பாடல் : 259
செயிர் அறு செங்கோல் சின வேந்தன் தீமை
பயிர் அறு பக்கத்தார் கொள்வர்; - துகிர் புரையும்
செவ்வாய் முறுவல் நற்சின்மொழியாய்! - செய்தானை
ஒவ்வாத பாவையோ இல். . . . .[259]

பொருளுரை:

பவளத்தை ஒக்கும் சிவந்த வாயினையும் புன்முறுவலையும் இனிய சிலவாகிய மொழியினையும் உடையாய்! குற்றமற்ற செங்கோலையும் சினத்தையும் உடைய அரசனது தீமையை. பயிர் அறு பக்கத்தார் கொள்வர் - குற்றமற்ற பக்கத்திலுள்ள அமைச்சர்களே முன்நின்று ஏற்றுக்கொள்ளக் கடவர் செய்தவனை ஒத்திராத சித்திரமோ உளவாதல் இன்மையான்.

கருத்து:

அரசன் செய்யும் தீமை அமைச்சர்களைச் சாரும் என்பதாயிற்று.

பாடல் : 260
கற்றார் பலரைத்தன் கண்ணாக இல்லாதான்
உற்று இடர்ப் பட்ட பொழுதின்கண் தேற்றம்
மரையா துணைபயிரும் மாமலை நாட
சுரையாழ் நரம்பறுத் தற்று. . . . .[260]

பொருளுரை:

பெண் மான்கள் தந்துணைகளை அழைக்கும் சிறந்த மலைநாடனே! நீதிநூல்களைக் கற்ற அமைச்சர்களைத் தனக்குக் கண்ணாகப் பெற்றிராத அரசன் யாதாயினும் ஒரு துன்பம் வந்துற்று அத்துன்பத்தில் தான் அகப்பட்டு நின்றபொழுது தானே ஒருவகையாகத் துணிதல் ஒரு நரம்பினையுடைய சுரைபொருந்திய யாழின் அந்த ஒரு நரம்பையும் அறுத்தாற் போலும்.

கருத்து:

அமைச்சர்களின்றித் தானே ஒரு காரியத்தை அரசன் துணிந்தால், அத்துணிவால் பயனுண்டாதல் இல்லை.

பாடல் : 261
நல்லவும் தீயவும் நாடி, பிறர் உரைக்கும்
நல்ல பிறவும் உணர்வாரை, கட்டுரையின்
வல்லிதின் நாடி, வலிப்பதே - புல்லத்தைப்
புல்லம் புறம் புல்லுமாறு. . . . .[261]

பொருளுரை:

நல்லனவற்றையும் தீயனவற்றையும் நூல்களால் ஆராய்ந்து அறிந்து மாறு கொண்ட இருவர் கூறும் கட்டுரை யொன்றானே நீதி அநீதி என்பனவற்றை அறியும் அமைச்சர்களை ஆழ்ந்து ஆராய்ந்து தம்மோடு கொண்டு அரசன் வாழ்தலே ஆனேறு ஆனேற்றோடு இணைந்து அன்பு பூண்டு ஒழுகுமாறு போலும்.

கருத்து:

அரசன், அறிவான்மிக்க அமைச்சர்களோடுகூடியொழுகின் அரச காரியங்கள் இனிது நடைபெறும் என்பதாம்.

பாடல் : 262
மனத்தினும், வாயினும், மெய்யினும், செய்கை
அனைத்தினும், ஆன்று அவிந்தார் ஆகி, நினைத்திருந்து,
ஒன்றும் பரியலராய், ஓம்புவார் இல் எனில்,
சென்று படுமாம், உயிர். . . . .[262]

பொருளுரை:

செய்கின்ற செய்கையின்கண் மனத்தினும் எல்லாம் மனத்தானும் வாயானும் மெய்யானும் மிகவும் அடங்கியவர்களாகி ஆராய்ந்து ஒன்றையும் விரும்பாதவராய் உலகத்தைக் காவல் செய்கின்ற அமைச்சர்கள் இலராயின் உயிர்கள் இறந்தொழிதல் திண்ணம்.

கருத்து:

நல்ல அமைச்சர்களே உயிர்கள் வாழ்ந்திருத்தற்குக் காரணமாவர்.

பாடல் : 263
செயல் வேண்டா நல்லன செய்விக்கும்; தீய
செயல் வேண்டி நிற்பின், விலக்கும்; இகல் வேந்தன்
தன்னை நலிந்து தனக்கு உறுதி கூறலால்,
முன் இன்னா, மூத்தார் வாய்ச் சொல். . . . .[263]

பொருளுரை:

செய்யமுடியாத நல்லனவற்றைச் செய்விக்கும்; தீய செயல் வேண்டி நிற்பின் - அரசன் தீய செயல்களைச் செய்ய முனைந்து நிற்பின் இடைநின்று தடுத்தலைச் செய்யும் மாறுபாடுடைய அரசனை வலியுறுத்தி அவன்றனக்கு உறுதியாயினவற்றைக் கூறுதலால். முன்னே துன்பந்தருவதாக இருக்கும் (பின்னே மிக்க இன்பத்தை அளிக்கும்.)

கருத்து:

அமைச்சர் கூறும் சொற்கள் நல்லன செய்விக்கும் தீயன விலக்கும் என்பதாம்.

பாடல் : 264
செறிவுடைத் தார் வேந்தன் செவ்வியல பெற்றால்
அறிவு உடையார் அவ்வியமும் செய்வர்; - வறிது உரைத்து,
பிள்ளைகளை மருட்டும் தாயர்போல் அம்புலிமேல்,
ஒள்ளிய காட்டாளர்க்கு அரிது. . . . .[264]

பொருளுரை:

நெருங்கிய மாலையை உடைய அரசன் தான் உறுதி கூறவும் கேளாது நல்லதல்லாவற்றைச் செய்யப்பெறுவனாயின் அறிவுடைய அமைச்சர்கள் சந்திரனிடத்து வறிது உரைத்து சிலவற்றையிட்டுக்கூறி குழந்தைகளை மிரட்டி உண்பிக்கின்ற தாய்மார்போல சூழ்ச்சி முதலியன செய்தலோடு பொய் உரைத்து வஞ்சித்தாயினும் அவனை அச்செயலினின்றும் மீட்பர் உண்மையாய ஒள்ளிய எடுத்துக்காட்டுக்களை வற்புறுத்திக் கூறித் திருத்துதல் அவனால் ஆளப்படுவார்க்கு அரிதாகலான்.

கருத்து:

அமைச்சர்கள் பொய் உரைத்தாயினும் அரசனை நல்வழிப்படுத்துவர்.

பாடல் : 265
தீயன அல்ல செயினும், திறல் வேந்தன்
காய்வன செய்து ஒழுகார், கற்று அறிந்தார்; - பாயும்
புலி முன்னம் புல்வாய்க்குப் போக்கு இல்; அதுவே,
வலி முன்னர் வைப் பாரம் இல். . . . .[265]

பொருளுரை:

பாய்ந்து வருகின்ற புலியின் முன்னுள்ள மானுக்குத் தப்பிச் சென்று புகும் புகலிடம் வேறு இல்லை அதுபோலவே சூறாவளிக் காற்றின் முன்னர் வைக்கோற் பாரம் நிலைத்து நிற்குமாறில்லை (ஆகையால்) வெற்றியையுடைய அரசன் தீமை தருவனவாகிய நல்லது அல்லாத செயல்களைச் செய்வானாயினும் நீதி நூல்களைக் கற்று உலக இயலையும் அறிந்த அமைச்சர்கள் அரசன் சினத்தற் குரியனவற்றை மனத்தினும் நினைத்தலிலர்.

கருத்து:

அரசன் தீய செயல்களைச் செயினும் அமைச்சர்கள் சினத்தலிலர்.