நாலடியார்

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

நான்மணிக்கடிகை

நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும்

இனியவை நாற்பது

பூதஞ்சேந்தனார் இயற்றியது இனியவை நாற்பது. 40 வெண்பாக்களைக் கொண்டது. நான்கு பாடல்களில் இன்பம் தருவன

இன்னா நாற்பது

இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துக்களைக் கொண்டு

திரிகடுகம்

திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரிகடுகம் என்பது

ஆசாரக் கோவை

மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை. பண்டைக்காலத்

சிறுபஞ்சமூலம்

சிறுபஞ்சமூலம் என்பது ஐந்து சிறிய வேர்கள் என்று பொருள்படும். அவையாவன சிறுவழுதுணை வேர், நெருஞ்சி வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர்

முதுமொழிக்காஞ்சி

முதுமொழி என்பது பழமொழி என்னும் சொற்பொருளோடு தொடர்புடையது. காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும் ஒருவகை அணிகலக் கோவையையும்

பழமொழி நானூறு

பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள்

ஏலாதி

'ஏலாதி' என மருத்துவ நூல்களில் கூறப்படுவது ஏலம் ஆதியான ஆறு பொருள்கள் சேர்ந்த ஒரு வகைச் சூர்ணம். ஏலம் ஒரு பங்கு, இலவங்கப்பட்டை இரண்டு பங்கு,

திருக்குறள்

திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு விளங்குகின்றது. அறம், பொருள், இன்பம்

கார் நாற்பது

கார் நாற்பது அகப்பொருள் பற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது. கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையாலும்,

ஐந்திணை ஐம்பது

'ஐந்திணை ஐம்பது' முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்திணைக்கும் பத்துப் பாடல்களைப் பெற்றுள்ளமையால் 'ஐந்திணை ஐம்பது' எனப் பெயர் பெற்றது.

திணைமொழி ஐம்பது

திணைமொழி ஐம்பது குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்திணைகளுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் உள்ளன. அதனால் இந்நூல்

ஐந்திணை எழுபது

ஐந்திணை எழுபது ஐந்திணைகளில் ஒவ்வொன்றிற்கும் பதினான்கு பாடல்களைக் கொண்டு, எழுபது பாடல்களில் இந்நூல் அமைந்துள்ளது. இந் நூலின் முதலில் விநாயகரைக்

திணைமாலை நூற்றைம்பது

திணைமாலை நூற்றைம்பது பண்டைத் தமிழ் நூற் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கில் அடங்கியது. 153 பாடல்களைக் கொண்ட இது ஒரு அகப்பொருள் சார்ந்த நூல்.

கைந்நிலை

'கை' என்பது ஒழுக்கம் என்றும் பொருள்படும். ஐந்திணை ஒழுக்கம் பற்றியதே இந்நூலாகும். ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடலாக அறுபது பாடல்கள் இந் நூலில் உள்ளன.

களவழி நாற்பது

களவழி நாற்பது போர்க்களம் பற்றிய பாடல்களின் தொகுதியாகும். இந் நூலில் உள்ள பாடல்கள் எல்லாம் களத்து என்ற சொல்லை இறுதியில் கொண்டு முடிதல் கவனிக்கத் தக்கது.

பழமொழி நானூறு
பதினெண் கீழ்க்கணக்கு

பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்டது.

பழமொழி நானூறு


03. அவையறிதல்

பாடல் : 017
கேட்பாரை நாடி, கிளக்கப்படும் பொருட்கண்
வேட்கை அறிந்து, உரைப்பார், வித்தகர்; - வேட்கையால்
வண்டு வழிபடரும் வாள் கண்ணாய்! தோற்பன
கொண்டு புகாஅர், அவை. . . . .[017]

பொருளுரை:

(காம) விருப்பினால் (கண்களைப்பெடை வண்டுகள் எனக் கருதி) ஆண் வண்டுகள் பின் செல்லாநின்ற வாள்போலுங் கண்களையுடைய பெண்ணே! அறிஞர் தாம் கூறும் பொருள்களைக் கேட்கத்தக்காரைத் தேடி தம்மால் கூறப்படும் பொருளிடத்து அவர்களுக்கு விருப்பம் இருப்பதை அறிந்து சொல்லுவார்கள் அவையின்கண் தோல்வியடைதற் குரியனவற்றைக் கொண்டு போகார்.

கருத்து:

கற்றார் அவையறிந்து ஆராய்ந்து சொல்லுவர்.

பாடல் : 018
ஒருவர் உரைப்ப உரைத்தால், அது கொண்டு
இருவர் ஆவாரும் எதிர் மொழியற் பாலா
பெரு வரை நாட! சிறிதேனும் இன்னாது,
இருவர் உடன் ஆடல் நாய். . . . .[018]

பொருளுரை:

பெரிய மலைநாட்டை உடையவனே! (ஒரே காலத்தில்) இருவரும் ஒரு நாயைக்கொண்டு வேட்டை ஆடுதல் சிறிது காலமாயினும் இனியது ஆகாது. (அதுபோல) (மாறுபடுவோர் இருவருள்) ஒருவர் இப்பொருள் இத் தன்மைத்தென்று கூற மற்றொருவரும் இத் தன்மைத்தென்று கூறினால் அப்பொருளைக் கொண்டு மாறுபடுவோர் இருவரும் (ஒரே காலத்தில்) வாதஞ்செய்தால் தகுதியுடையதாகுமா? ஆகாது.

கருத்து:

வாதம் செய்வோர் ஒருவர்பின் ஒருவராகப் பேசுதல் வேண்டும்.

பாடல் : 019
துன்னி இருவர் தொடங்கிய மாற்றத்தில்
பின்னை உரைக்கப் படற்பாலான் - முன்னி
மொழிந்தால் மொழி அறியான் கூறல், முழந்தாள்
கிழிந்தானை மூக்குப் பொதிவு. . . . .[019]

பொருளுரை:

வினவுவானும் விடைகொடுப்பானுமாகிய இருவரும் கூடிச் சொல்லத் தொடங்கிய வார்த்தையின்கண் பின்னாக விடைகூறத் தக்கவன் வினாவறியாது முற்பட்டு ஒன்றனைக் கூறினால் விடை கூறுதலறியாதவனாய் முடியும் வினாவிற்கு முன்னர் விடைகூறுதல் முந்தாள் கிழிந்துபுண் பட்டவனை அஃது அறியாது மூக்கை இழைகொண்டு கட்டுவதோடுஒக்கும்.

கருத்து:

வினாவறிந்து விடைகூறுதல் வேண்டும்.

பாடல் : 020
கல்லாதும், கேளாதும், கற்றார் அவை நடுவண்
சொல்லாடு வாரையும் அஞ்சற்பாற்று - எல் அருவி
பாய் வரை நாட! பரிசு அழிந்தாரோடு
தேவரும் ஆற்றல் இலர். . . . .[020]

பொருளுரை:

விளங்கிய அருவிகள் பாயும் மலை நாடனே! பண்பு இல்லாதவர்களோடு தேவர்களும் ஒருசொல் கூறுதற்குக்கூட வலிமை யில்லாதவர்களாய் முடிவர். ஆகையால் கல்லாதும் கேளாதும் கற்றார் அவை நடுவண் சொல் ஆடுவாரையும் - நூல்களைக் கற்றாரிடம் கல்லாதும் கேளாதும் அறிஞர்களது அவையிடைச் சிலசொல் சொல்லுத லுடையாரையும் (இவரோடு வாதாடின் நாம் தோற்போம் என்றெண்ணி) அஞ்சும் தகுதியைஉடையது.

கருத்து:

கற்றார்கல்லாரோடு வாதாடுதல் கூடாது.

பாடல் : 021
அகலம் உடைய அறிவுடையார் நாப்பண்,
புகல் அறியார் புக்கு, அவர் தாமே - இகலினால்
வீண் சேர்ந்த புன் சொல் விளம்பல் அது அன்றோ,
பாண் சேரிப் பல் கிளக்கும் ஆறு. . . . .[021]

பொருளுரை:

கல்வி கேள்விகளில் விரிவு உடைய இயற்கை அறிவினார் இடையில் நுழைதற்குத் தகுதியற்ற கயவர்கள் புகுந்து (தம் சொற்களை யாரும் விரும்பாமல் இருக்கவும்) தாமே மாறுபாட்டினால் வீணான பயனற்றவற்றைக் கூறுதல் பாணர்கள் தெருவில் ஒருவன் வாய்திறந்து பாடுவதைப்போல அஃது ஆகும் அல்லவா!

கருத்து:

கற்றாரிடைக் கல்லார் வீண் வார்த்தைகளைப் பேசாதொழிதல் வேண்டும்.

பாடல் : 022
மானமும் நாணும் அறியார், மதி மயங்கி,
ஞானம் அறிவார் இடைப்புக்கு, தாம் இருந்து,
ஞானம் வினாஅய் உரைக்கின், நகை ஆகும்
யானைப் பல் காண்பான் புகல். . . . .[022]

பொருளுரை:

கல்லார் தம் மானமும் நாணும் அழிதலை அறியாராய் புத்தி மயக்கத்தை யடைந்து பல நூல்களையும் அறிவார் நடுவிற் புகுந்து அவர்களை ஒப்பத் தாமும் இருந்து நூல்களை வினாவி உரைக்கப்புகுதல் யானையைப் பல்பிடித்துப் பார்க்கப் புகுதல் போல் யாவர்க்கும் நகைதருஞ் செயலாகும்.

கருத்து:

கற்றார் அறிவின் திறனைக் கல்லார் அறிய முயலுதல் நகைப்பிற்கிடனாம்.

பாடல் : 023
அல்லவையுள் தோன்றி, அலவலைத்து, வாழ்பவர்
நல் அவையுள் புக்கு இருந்து, நா அடங்க, - கல்வி
அளவு இறந்து மிக்கார் அறிவு எள்ளிக் கூறல்
மிளகு உளு உண்பான் புகல். . . . .[023]

பொருளுரை:

கல்வியறிவு இல்லாதார் அவையுள் முற்பட்டு (நல்லன) அல்லவற்றைக் கூறி (புல்லரை) வென்று வாழ்பவர் கல்வியறிவு உடையார் அவையுள் தானே புகுந்து பிறர் நாவடங்கும்படி கல்வியில் எல்லையின்றி அறிந்த அறிவுடையோர் அறிவினை இகழ்ந்து கூறுதல் (சிறந்த உணவுகள் இருக்க) மிளகின் உளுவை (உண்ணப் புகுவதனோடு ஒக்கும்).

கருத்து:

கல்லார் கற்றாரை இகழ்ந்து கூறின் தீமையை அடைவர்.

பாடல் : 024
நல் அவை கண்டக்கால் நாச் சுருட்டி, நன்று உணராப்
புல் அவையுள் தம்மைப் புகழ்ந்து உரைத்தல், - புல்லார்
புடைத் தறுகண் அஞ்சுவான், இல்லுள், வில் ஏற்றி,
இடைக் கலத்து எய்துவிடல். . . . .[024]

பொருளுரை:

கல்லார் கல்வி அறிவுடையோர் அவையைக் கண்ணுறுவராயின் தமது நாவினை மடக்கி நன்மை தீமை இன்ன தென்றறியாத புல்லர்கள் வாழும் அவையின்கண் தம்மைத் தாமே இல்லன கூறிப் புகழ்ந்துரைத்தல் பகைவரிடத்துள்ள அஞ்சாமையைக் கண்டு பின்வாங்குகின்றவன் வீட்டின் உள்ளே வில்லின்கண் அம்பை ஏற்றி கருங்கலங்களிடையே எய்வதனோடு ஒக்கும்.

கருத்து:

கல்லார் தம்மினத் தாரிடையே தம்மைப் புகழ்ந்து கொள்வர்.

பாடல் : 025
நடலை இலர் ஆகி நன்று உணராராய
முடலை முழுமக்கள் மொய் கொள் அவையுள்,
உடலா ஒருவற்கு உறுதி உரைத்தல்
கடலுளால் மாவடித் தற்று. . . . .[025]

பொருளுரை:

மனத்தின்கண் கவலை யிலராய் நன்மை தீமை அறியாதவராகிய மனவலியுள்ள கயவர்கள் நெருங்கியுள்ள அவையில் அலைத்து வாழ்கின்ற கயவன் ஒருவனுக்கு உயிர்க்குப் பயன்தரத் தக்கனவற்றைக் கூறுதல் கடலுள்ளே மாங்கனியை வடித்தாற் போலும்.

கருத்து:

கயவற்குஉறுதிப்பொருள்களைக் கூறுதலாகாது.