நாலடியார்

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

நான்மணிக்கடிகை

நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும்

இனியவை நாற்பது

பூதஞ்சேந்தனார் இயற்றியது இனியவை நாற்பது. 40 வெண்பாக்களைக் கொண்டது. நான்கு பாடல்களில் இன்பம் தருவன

இன்னா நாற்பது

இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துக்களைக் கொண்டு

திரிகடுகம்

திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரிகடுகம் என்பது

ஆசாரக் கோவை

மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை. பண்டைக்காலத்

சிறுபஞ்சமூலம்

சிறுபஞ்சமூலம் என்பது ஐந்து சிறிய வேர்கள் என்று பொருள்படும். அவையாவன சிறுவழுதுணை வேர், நெருஞ்சி வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர்

முதுமொழிக்காஞ்சி

முதுமொழி என்பது பழமொழி என்னும் சொற்பொருளோடு தொடர்புடையது. காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும் ஒருவகை அணிகலக் கோவையையும்

பழமொழி நானூறு

பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள்

ஏலாதி

'ஏலாதி' என மருத்துவ நூல்களில் கூறப்படுவது ஏலம் ஆதியான ஆறு பொருள்கள் சேர்ந்த ஒரு வகைச் சூர்ணம். ஏலம் ஒரு பங்கு, இலவங்கப்பட்டை இரண்டு பங்கு,

திருக்குறள்

திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு விளங்குகின்றது. அறம், பொருள், இன்பம்

கார் நாற்பது

கார் நாற்பது அகப்பொருள் பற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது. கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையாலும்,

ஐந்திணை ஐம்பது

'ஐந்திணை ஐம்பது' முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்திணைக்கும் பத்துப் பாடல்களைப் பெற்றுள்ளமையால் 'ஐந்திணை ஐம்பது' எனப் பெயர் பெற்றது.

திணைமொழி ஐம்பது

திணைமொழி ஐம்பது குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்திணைகளுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் உள்ளன. அதனால் இந்நூல்

ஐந்திணை எழுபது

ஐந்திணை எழுபது ஐந்திணைகளில் ஒவ்வொன்றிற்கும் பதினான்கு பாடல்களைக் கொண்டு, எழுபது பாடல்களில் இந்நூல் அமைந்துள்ளது. இந் நூலின் முதலில் விநாயகரைக்

திணைமாலை நூற்றைம்பது

திணைமாலை நூற்றைம்பது பண்டைத் தமிழ் நூற் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கில் அடங்கியது. 153 பாடல்களைக் கொண்ட இது ஒரு அகப்பொருள் சார்ந்த நூல்.

கைந்நிலை

'கை' என்பது ஒழுக்கம் என்றும் பொருள்படும். ஐந்திணை ஒழுக்கம் பற்றியதே இந்நூலாகும். ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடலாக அறுபது பாடல்கள் இந் நூலில் உள்ளன.

களவழி நாற்பது

களவழி நாற்பது போர்க்களம் பற்றிய பாடல்களின் தொகுதியாகும். இந் நூலில் உள்ள பாடல்கள் எல்லாம் களத்து என்ற சொல்லை இறுதியில் கொண்டு முடிதல் கவனிக்கத் தக்கது.

பழமொழி நானூறு
பதினெண் கீழ்க்கணக்கு

பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்டது.

பழமொழி நானூறு


29. படைவீரர்

பாடல் : 311
தூக்கி அவர் வெலினும், தாம் வெலினும், வெஞ் சமத்துத்
தாக்கி எதிர்ப்படுவர், தக்கவர்; அஃது அன்றி,
காப்பின் அகத்து இருந்து காய்வார் மிக உரைத்தல்
யாப்பினுள் அட்டிய நீர். . . . .[311]

பொருளுரை:

வீரத்திற்குத் தகுதியுடையவர்கள் எனப்படுவார் கொடிய போர்க்களத்துள் அவர் வென்றாலும் தாம் வென்றாலும் அடர்த்துத்தள்ளி வெற்றியைக் காண்பவரேயாவர்; அஃது அன்றி - அது செய்தலின்றி அரணகத்தேயிருந்து வெகுள்வாராய் மிகவும் வீரங் கூறுதல் செய்யினுள் விட்ட நீரைஒக்கும்.

கருத்து:

வீரர் எனப்படுவார் மனத்திண்மையையும் பிறவற்றையும் பெற்று வெற்றியை எதிர்நோக்குபவரே யாவர்.

பாடல் : 312
உற்றால், இறைவற்கு உடம்பு கொடுக்கிற்பான்,
மற்றவற்கு ஒன்னாரோடு ஒன்றுமோ? - தெற்ற
முரண் கொண்டு மாறு ஆய உண்ணுமோ? உண்ணா,
இரண்டு ஏறு ஒரு துறையில் நீர். . . . .[312]

பொருளுரை:

தெளிவாக நிறைந்த வலிமையைப் பெற்று மாறுபாடு கொண்டுளவாகிய இரண்டு காளைகள். ஒரு துறையுள் நீர் உண்ணுமோ? - ஒரு நீர்த்துறையில் தண்ணீர் உண்ணுமோ? தம்முள் பொருந்தி நீர் பருகுதல் இல. (அதுபோல) ஓர் இடையூறு தம்மரசனுக்கு வந்துற்றால் உடம்பினை அவன்பொருட்டு அளிக்கவல்லவன் அவனுக்குப் பகையாயினாரோடு கீழறுக்கப்பட்டுச் சேர்தலுண்டோ? (இல்லை.)

கருத்து:

பகைவராற் கீழறுக்கப் படாததா யிருப்பதே படையினியல்பாம்.

பாடல் : 313
ஆற்ற வினை செய்தார் நிற்ப, பல உரைத்து,
ஆற்றாதார் வேந்தனை நோவது - சேற்றுள்
வழாஅமைக் காத்து ஓம்பி வாங்கும் எருத்தும்
எழாஅமைச் சாக்காடு எழல். . . . .[313]

பொருளுரை:

மிகவும் போர்த்தொழிலைச் செய்து வெற்றியை உண்டாக்கினார் வாளாயிருப்ப போரிற் சென்று ஒருவினையும் செய்யாதார் தமக்குச் சிறப்புச் செய்திலனென்று பலவாறுரைத்து அரசனை நொந்துகொள்வது சேற்றுள் வழுவி அகப்பட்டு வருந்தாது காத்து இழுக்கவல்ல எருது அங்கே எழுந்து செல்லாதிருக்கவும் அவ்வாற்றலில்லாத சகடம் எழுந்து செல்லுதலை யொக்கும்.

கருத்து:

வினைமாட்சி யில்லார்சிறப்புப் பெறுதல் இலர்.

பாடல் : 314
தார் ஏற்ற நீள் மார்பின் தம் இறைவன் நோக்கியக்கால்,
'போர் ஏற்றும்' என்பார், பொது ஆக்கல் வேண்டுமோ?
யார் மேற்றாக் கொள்ளினும் கொண்டீக! காணுங்கால்,
ஊர் மேற்று, அமணர்க்கும் ஓடு. . . . .[314]

பொருளுரை:

சமணர்களுக்கு (அவர்கள் இரந்துண்ணும்) ஓட்டில் இடும் அறச்செயல் ஊரின் கண்ண தாம் (அதுபோல) போரினை விரும்பி ஏற்றுக் கொள்வேமென்னும் வீரர்கள் மாலை பொருந்திய நீண்ட மார்பினையுடைய தம்முடைய அரசன் போருக்குச் செல்க என்ற குறிப்புடன் நோக்கியவிடத்து அந்நோக்கினைப் பொதுவாக நோக்கினான் என்று கொள்ளல் வேண்டுமோ அரசன் யார்மாட்டு அந் நோக்கினைக் கொண்டானாயினும் தன்னை நோக்கினானாகக் கொள்க.

கருத்து:

அரசன் குறிப்பினை அறிந்து ஆராய்தலின்றி போரிற்புகுதல் வீரர்களுடைய கடமையாம்.

பாடல் : 315
செம்மாந்து செல்லும் செறுநரை அட்டவர்,
தம்மேல் புகழ் பிறர் பாராட்ட, தம்மேல் தாம்
வீரம் சொல்லாமையே வீழ்க! - களிப்பினும்
சோரப் பொதியாத வாறு. . . . .[315]

பொருளுரை:

தருக்குற்று ஒழுகும் பகைவரை வென்றவர்கள் தம்மீது புகழ்ந்து பிறர் சிறப்பிக்கும் பொருட்டு களிப்புற்ற இடத்தும் தம்மிடத்து உளவாம் வீரஞ் சொல்லாதிருத்தலையே விரும்புக (அது) தன்னிடத்துள்ள குற்றங்களைத் தானே ஒன்று சேர்த்து மிகுத்துக் கூறாதவாறு ஆகும்.

கருத்து:

வீரர்கள் பிறர் பாராட்டும் பொருட்டுத் தம்மைத் தாம் புகழ்தல், தம்முடைய குற்றங்களைத் தாமே கூறுதல் போலாம்.

பாடல் : 316
உரைத்தாரை மீதூரா மீக் கூற்றம், - பல்லி
நெரித்த சினை போலும் நீள் இரும் புன்னைப்
பொரிப்பூ இதழ் உறைக்கும் பொங்கு நீர்ச் சேர்ப்ப!
நரிக் கூக் கடற்கு எய்தாவாறு. . . . .[316]

பொருளுரை:

பல்லியது நெரிக்கப்பட்ட முட்டையைப்போல மலர்ந்திருக்கின்ற நீண்ட பெரிய புன்னை பொரியைப் போன்ற பூக்களினது இதழ்களைப் பரப்பும் நீர் மிகுந்த கடல் நாடனே! தம்மை நலிய உரைத்தவர்களை செயலால் மிக் கொழுகாது சொற்களால் தாமும் மிக்கொழுகல் நரியின் கூவிளியால் கடல் ஒலியைத் தாழ்விக்க மாட்டாதவாறு போலும்.

கருத்து:

வீரர்கள் தம்மைநலிய உரைத்தார்களைச் செயலால் அடுதல் வேண்டும்.

பாடல் : 317
அமர் நின்ற போழ்தின்கண் ஆற்றுவாரேனும்,
நிகர் அன்றிமேல் விடுதல் ஏதம்; - நிகர் இன்றி
வில்லொடு நேர் ஒத்த புருவத்தாய்! - அஃது அன்றோ,
கல்லொடு கை எறியுமாறு. . . . .[317]

பொருளுரை:

வில்லினொடு நேராக ஒத்த புருவங்களை யுடையாய்! போர் நடவாநின்ற போழ்தத்து ஒப்புமையின்றிப் போராற்ற வல்லரேனும் ஒப்புமை கருதலின்றி (வலியார்) மேற்படை விடுதல் துன்பந் தருவதாம்; கல்லொடு கை யெறியுமாறு அஃது அன்றோ - கல்லொடு மாறுகொண்டு கையால் எதிர்த்துத் தாக்குதலை அஃது ஒக்குமன்றோ?

கருத்து:

வீரர்கள் தம்மின் வலியார்மேற் சேறல் துன்பம் பயப்ப தொன்றாம்.

பாடல் : 318
'வரை புரை வேழத்த, வன் பகை' என்று அஞ்சா
உரையுடை மன்னருள் புக்கு, ஆங்கு அவையுள்,
நிரை உரைத்துப் போகாது, ஒன்று ஆற்றத் துணிக!
திரை அவித்து, ஆடார் கடல். . . . .[318]

பொருளுரை:

அலைகளை நீக்கிப் பின்னர்க் கடலில் ஆடுதலிலர் (அதுபோல) புகழுடைய அரசர்கள் அவை நடுவே புகுந்து அவ்விடத்திருந்த அவை நடுவே கூறும் முறையால் தனது வீரத்தை மிகுத்துரைத்து மலைபோலும் யானைப் படையை உடையதாயிருந்தது வலிய பகை என்று அஞ்சி இது சமயம் வெல்ல முடியாததென் றொழியாது கூறிய தொன்றனைச் செய்யத் துணிந்து நிற்க.

கருத்து:

வீரர் பகைவருடைய வலி குறைந்த ஞான்று அவரை வெல்வோமென்று நினையா தொழிபவராக.

பாடல் : 319
காத்து, ஆற்றுகிற்பாரைக் கண்டால், எதிர் உரையார்,
பார்த்து ஆற்றாதாரைப் பரியாது மீதூர்தல்
யாத்த தேசு இல்லார் படை ஆண்மை - நாவிதன் வாள்
சேப்பிலைக்குக் கூர்த்து விடல். . . . .[319]

பொருளுரை:

தம்மைக் காத்துப் பகைவரோடு எதிராக நின்று உடற்றவல்லாரைக் கண்ட அளவில் மாறு கூறுதலும் இலராகி பார்த்த அளவில் ஆற்றாராகிப் புறங்கொடுத் தோடுவாரை இரங்குதலின்றி மேற்செல்லலான் தனக்குளதாம் புகழினைப் பெறாதவர்கள் செய்யும் படையாண்மை அம்பட்டன் கத்தி சேப்பிலையை அறுக்கக் கூர்மை உடையதாயினவாறு போலும்.

கருத்து:

புறங்கொடுத்து ஓடுவார்மீது படை விடலாகாது என்றது இது.

பாடல் : 320
இஞ்சி அடைத்துவைத்து, ஏமாந்து இருப்பினும்,
அஞ்சி அகப்படுவார், ஆற்றாதார்; - அஞ்சி
இருள் புக்கு இருப்பினும், மெய்யே வெரூஉம், புள்
இருளின் இருந்தும் வெளி. . . . .[320]

பொருளுரை:

மதில்வாயிலை அடைத்துவைத்துப் பாதுகாவல் பெற்றுள்ளே யிருப்பினும் போருக்காற்றாது அஞ்சி உட்புகுந்தார் அச்சத்தான் பகைவர் கையுட்படுவர் பயந்து இருளின்கண் புகுந்திருந்ததாயினும் பறவையானது உண்மையாகவே இருளினை உடைய இரவாக இருந்தும் வெளிச்சமுடைய பகலாக நினைத்து அஞ்சும்.

கருத்து:

அஞ்சுவார்க்கு அரணாற் பயனுண்டாத லில்லை.

பாடல் : 321
உருத்து எழு ஞாட்பினுள், ஒன்னார் தொலைய,
செருக்கினால் செய்கல்லார் செய்வாரே போல,
தருக்கினால் தம் இறைவன் கூழ் உண்பவரே
கருக்கினால் கூறை கொள்வார். . . . .[321]

பொருளுரை:

சினந்து எழுந்த போரிடத்து பகைவர் அழியுமாறு வீரத்தாற் போர் செய்ய ஆற்றாராகி செய்யும் ஆற்றலுடையாரைப் போல தருக்கித் தம்மை மிகுத்துக் கூறுதலினால் தம் மரசனிடத்து உணவுபெற்று வாழ்கின்றவர்கள் மேனியழகால் ஆடையைப் பெறுகின்ற (ஆடல் வன்மை பெறாத)நாடகக் கணிகையரை ஒப்பர்.

கருத்து:

ஆற்றலொரு சிறிதுமின்றி மிகுத்துக் கூறுதலானே உணவுபெறும்வீரர்கள் மேனியழகா லாடையைப் பெறும் கணிகையரை ஒப்பர்.

பாடல் : 322
'அமர் விலங்கி, ஆற்ற அறியவும்பட்டார்
எமர், மேலை இன்னரால்; யார்க்கு உரைத்தும்' என்று,
தமர் மறையால் கூழ் உண்டு சேறல் அதுவே
மகன் மறையாத் தாய் வாழுமாறு. . . . .[322]

பொருளுரை:

போரிடை நின்று பகைவரைப் போர் செய்து நீக்கி மிகவும் எல்லோரானும் அறிந்துகொள்ளவும் பட்டார்கள் முற்காலத்தில் எம் முன்னோர் இத்தன்மையரா யிருந்தனர் இவற்றை யாரிடத் துரைப்பேம் என்று கூறாமற்கூறி தம் முன்னோருடைய புகழ் மறைவினால் மறைந்து நின்று உணவு உண்டு செல்லுதலாகிய அது தான் பெற்ற மகனால் தனது அமையா ஒழுக்கத்தை மறைத்துக் கற்பமையா தாள் கணவனோடு வாழுமாற்றை ஒக்கும்.

கருத்து:

ஆற்றலில்லாத வீரர்கள் பழைமை பேசி உணவு பெறுதல் இகழத்தக்கதாம்.

பாடல் : 323
உறுகண் பலவும் உணராமை கந்தா,
தறுகண்மை ஆகாதாம் பேதை, 'தறுகண்
பொறிப் பட்ட ஆறு அல்லால், பூணாது' என்று எண்ணி,
அறிவு அச்சம் ஆற்றப் பெரிது. . . . .[323]

பொருளுரை:

அறிவு இல்லாதவன் வெற்றி புண்ணியம் உண்டாய வழியல்லாது உண்டாகாது என்று நினைத்து அறிவான் வரும் அச்சம் மிகுதியும் உடையவனாதலால் தனக்கு வந்துறும் துன்பங்களை உணரத்தக்க அறிவின்மையை பற்றுக்கோடாகக் கொண்டுவரும் அஞ்சாமை செய்தொழுகலின் தறுகண்மை உடையவனாக ஆக மாட்டான்.

கருத்து:

வீரர்க்கு அறிவாற்றலும் இன்றியமையாத தொன்றென்பது இது.

பாடல் : 324
தன்னின் வலியானைத் தான் உடையன் அல்லாதான்,
என்ன குறையன், இளையரால்? - மன்னும்
புலியின் பெருந் திறல ஆயினும், பூசை,
எலி இல்வழிப் பெறா, பால். . . . .[324]

பொருளுரை:

பூனை கொலைத் தொழில் நிலைபெற்றிருக்கும் புலிபோல மிக்க வலிய வாயினும் எலி இல்லாத இடத்தில் கொன்றுண்ணும் உணவு பெறுதல் இல்லை. (ஆதலின்) தன்னைவிட மிக்க வலிமை உடையவனைத் தான் பகைவனாகப் பெறாதவன் போர்வீரர்களால் என்ன குறைமுடித்தலை உடையவனாவான்?

கருத்து:

படைவீரர்கள் பகைவர்களை உடைய அரசனை அடைதல் வேண்டும்.

பாடல் : 325
கொடையும், ஒழுக்கமும், கோள் உள் உணர்வும்,
உடையர் எனப்பட்டு ஒழுகி, பகைவர்
உடைய, மேற்செல்கிற்கும் ஊற்றம் இலாதார்
படையின், படைத் தகைமை நன்று. . . . .[325]

பொருளுரை:

கொடைத் தொழிலும், செங்கோன்மையும், படைகுடி முதலியவற்றின் கருத்தை அறியும் நுண்ணறிவும், உடையவ ரிவரென்று படை, குடி முதலியவற்றால் சொல்லப்பட்டு அந்நெறியின் கண்ணேயே ஒழுகி, மாற்றலர் புறமுதுகிட்டு ஓட, மேற்சென்று அவரை அழிக்கத்தக்க வலிமை இல்லாதவர்கள், படைகளை உண்டாக்குவார்களாயின் அப்படைகளின் பண்புகள் சிறப்புற இருக்கும்.

கருத்து:

படை உடையானுக்குக் கொடை, செங்கோன்மை, கோளுணர்வு முதலியன வேண்டும்.

பாடல் : 326
இரு கயல் உண் கண் இளையவளை, வேந்தன்,
'தருக!' என்றால் தன்னையரும் நேரார்; செரு அறைந்து,
பாழித் தோள் வட்டித்தார்; காண்பாம்; இனிது அல்லால்,
வாழைக்காய் உப்பு உறைத்தல் இல். . . . .[326]

பொருளுரை:

இரண்டு கயல்கள் போன்ற மையுண்ட கண்களையுடைய இளமைப் பருவமுடையாளை அரசன் கொடுப்பாயாக என்று தூது விட்டால் இவள் தமையன்மாரும் கொடுத்தற்கு உடம்படாராகி போர்ப்பறை அறைவித்து வலிமையுடைய தோள்களைப் பிசைந்து நின்றார்கள் உறுதியாக வெற்றியைக் காணுதலுறுவோம் இனிமையாக இருப்பதல்லாமல் எக்காலத்தும் வாழைக்காய் இயல்பாய் உவர்ப்போடு கூடி நிற்றல் இல்லையாதலான்.

கருத்து:

அரசன் மகள் வேண்டினானாக, அவள் தமையன்மார் சினந்து போருக்கு எழுந்தனர்.