நாலடியார்

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

நான்மணிக்கடிகை

நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும்

இனியவை நாற்பது

பூதஞ்சேந்தனார் இயற்றியது இனியவை நாற்பது. 40 வெண்பாக்களைக் கொண்டது. நான்கு பாடல்களில் இன்பம் தருவன

இன்னா நாற்பது

இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துக்களைக் கொண்டு

திரிகடுகம்

திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரிகடுகம் என்பது

ஆசாரக் கோவை

மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை. பண்டைக்காலத்

சிறுபஞ்சமூலம்

சிறுபஞ்சமூலம் என்பது ஐந்து சிறிய வேர்கள் என்று பொருள்படும். அவையாவன சிறுவழுதுணை வேர், நெருஞ்சி வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர்

முதுமொழிக்காஞ்சி

முதுமொழி என்பது பழமொழி என்னும் சொற்பொருளோடு தொடர்புடையது. காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும் ஒருவகை அணிகலக் கோவையையும்

பழமொழி நானூறு

பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள்

ஏலாதி

'ஏலாதி' என மருத்துவ நூல்களில் கூறப்படுவது ஏலம் ஆதியான ஆறு பொருள்கள் சேர்ந்த ஒரு வகைச் சூர்ணம். ஏலம் ஒரு பங்கு, இலவங்கப்பட்டை இரண்டு பங்கு,

திருக்குறள்

திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு விளங்குகின்றது. அறம், பொருள், இன்பம்

கார் நாற்பது

கார் நாற்பது அகப்பொருள் பற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது. கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையாலும்,

ஐந்திணை ஐம்பது

'ஐந்திணை ஐம்பது' முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்திணைக்கும் பத்துப் பாடல்களைப் பெற்றுள்ளமையால் 'ஐந்திணை ஐம்பது' எனப் பெயர் பெற்றது.

திணைமொழி ஐம்பது

திணைமொழி ஐம்பது குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்திணைகளுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் உள்ளன. அதனால் இந்நூல்

ஐந்திணை எழுபது

ஐந்திணை எழுபது ஐந்திணைகளில் ஒவ்வொன்றிற்கும் பதினான்கு பாடல்களைக் கொண்டு, எழுபது பாடல்களில் இந்நூல் அமைந்துள்ளது. இந் நூலின் முதலில் விநாயகரைக்

திணைமாலை நூற்றைம்பது

திணைமாலை நூற்றைம்பது பண்டைத் தமிழ் நூற் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கில் அடங்கியது. 153 பாடல்களைக் கொண்ட இது ஒரு அகப்பொருள் சார்ந்த நூல்.

கைந்நிலை

'கை' என்பது ஒழுக்கம் என்றும் பொருள்படும். ஐந்திணை ஒழுக்கம் பற்றியதே இந்நூலாகும். ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடலாக அறுபது பாடல்கள் இந் நூலில் உள்ளன.

களவழி நாற்பது

களவழி நாற்பது போர்க்களம் பற்றிய பாடல்களின் தொகுதியாகும். இந் நூலில் உள்ள பாடல்கள் எல்லாம் களத்து என்ற சொல்லை இறுதியில் கொண்டு முடிதல் கவனிக்கத் தக்கது.

பழமொழி நானூறு
பதினெண் கீழ்க்கணக்கு

பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்டது.

பழமொழி நானூறு


08. பெரியாரைப் பிழையாமை

பாடல் : 060
அறிவு அன்று; அழகு அன்று; அறிவதூஉம் அன்று;
சிறியர் எனப்பாடும் செய்யும்; - எறி திரை
சென்று உலாம் சேர்ப்ப! குழுவத்தார் மேயிருந்த,
என்று ஊடு அறுப்பினும், மன்று. . . . .[060]

பொருளுரை:

காற்றால் எறியப்படும் அலைகள் கரைமேல் சென்று உலாவுகின்ற கடல் நாடனே! என்று ஊடு அறுப்பினும் குழுவத்தார் மேயிருந்தமன்று - சூரியனை ஊடறுத்துச் செல்லினும் அறிஞர்கள் பொருந்தியிருந்த அவையை ஊடறுத்துப் போகலாகாது அறிவுடைமை யாகாது பிறந்த குடிக்கு அழகினைத் தாராது அறிவதாகிய அறநெறியும் ஆகாது கீழ்மக்கள் என்று சொல்லப்படுதலையும் செய்யும்.

கருத்து:

அவையை ஊடறுத்துச் செல்லலாகாது.

பாடல் : 061
ஆமாலோ என்று பெரியாரை முன் நின்ற
தாமாச் சிறியார் தறுகண்மை செய்து ஒழுகல்,
போம் ஆறு அறியா, புலன் மயங்கி, ஊர் புக்கு,
சாமா கண் காணாத வாறு. . . . .[061]

பொருளுரை:

பெரியோர்களை இவர்க்கு (எம்மோடு மாறுபடல்) ஆகுமோ என்று நினைத்து அறிவிற் சிறியார் தாமாக முன்னின்று மாறுபட்டு வன்மை செய்து நிற்றல் சாதற்குரிய விலங்குகள் செல்லும் வழியினை அறியாதவாறு அறிவு மயங்கலால் ஊரினுள் புகுந்துகண்களை இழந்து வருந்தியதை ஒக்கும்.

கருத்து:

பெரியாரோடு மாறுபடுவார் இறுதியை எய்துவர்.

பாடல் : 062
எல்லாத் திறத்தும், இறப்பப் பெரியாரைக்,
கல்லாத் துணையார் கயப்பித்தல் சொல்லின்,
நிறைந்து ஆர் வளையினாய்! - அஃதால், எருக்கு
மறைந்து, யானை பாய்ச்சிவிடல். . . . .[062]

பொருளுரை:

அழகு நிறைந்து பொருந்தியிருக்கின்ற வளையையுடையாய்! எல்லாத் திறத்தும் இறப்பப் பெரியாரை - எல்லா வகையானும் உயர்ந்த அறிஞர்களை கல்லா துணையார் - கல்லாமையைத் துணையாக உடைய அறிவிலார் தாம் அதனுள் மறைந்து நின்று வெறுக்கப் பண்ணுதலைச் சொல்லின் எருக்கம்புதரின்கண் மறைந்து ஒருவன் யானையின்மேல் அம்பு எய்தலோ டொக்கும்.

கருத்து:

அறிவுடையாரைக் கல்லார் துன்புறுத்துவாராயின், அவர் கெட்டொழிதல் உறுதி என்றறிதல் வேண்டும்.

பாடல் : 063
முன்னும் ஒரு கால் பிழைப்பானை ஆற்றவும்,
பின்னும் பிழைப்பப் பொறுப்பவோ? - இன் இசை
யாழின் வண்டு ஆர்க்கும் புனல் ஊர! - ஈனுமோ,
வாழை இரு கால் குலை?. . . . .[063]

பொருளுரை:

இனிய ஓசையையுடைய யாழைப்போல வண்டுகள் ஒலிக்கும் புனல் நிறைந்த மருதநிலத் தலைவனே! வாழை இருகால் குலை ஈனுமோ - வாழை இருமுறை குலைகளை ஈனுமோ (ஈனாது.) (அதுபோல்) முன்னும் ஒருகால் பிழைப்பானை ஆற்றவும் - முன்பு ஒருமுறை பிழை செய்தவனைப் பொறுத்தவர்களா யிருக்கவும் பின்னரும் குற்றம் செய்தால் பொறுப்பார்களோ? (பொறுக்கமாட்டார்கள்.)

கருத்து:

சான்றோர் அறிவிலார் செய்த குற்றத்தை ஒருமுறையன்றிப் பொறுக்கமாட்டார்கள்.

பாடல் : 064
நெடுங் காலம் வந்தார் நெறி இன்மை கண்டு,
நடுங்கிப் பெரிதும் நலிவார், பெரியர்;
அடும்பு ஆர் அணி கானல் சேர்ப்ப! - கெடுமே,
கொடும்பாடு உடையான் குடி. . . . .[064]

பொருளுரை:

அடும்பின் மென்கொடிகள் நிறைந்து அழகு செய்கின்ற சோலைகள் சூழ்ந்த கடல் நாடனே! நீண்ட காலமாகத் தீச்செயல் கைவந்தார் செய்த தீங்கினைக் கண்டு அறிஞர் (இவர் இத்துணைக் காலமாகச் செய்த தீங்கினால் உலகு என்னாயிற்றோ) என்று மனம் நடுக்கமுற்றுப் பெரிதும் வருந்துவார்கள் கொடியதன்மையை உடையானது குடி கெட்டுப் போகும்.

கருத்து:

அறிவுடையார் அஃதிலார் செய்த இன்னல்களை நினைத்து வருந்துவாராயின், நினைத்த அளவிலே அவர் குடிகெட்டொழியு மென்பதாம்.