நாலடியார்

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

நான்மணிக்கடிகை

நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும்

இனியவை நாற்பது

பூதஞ்சேந்தனார் இயற்றியது இனியவை நாற்பது. 40 வெண்பாக்களைக் கொண்டது. நான்கு பாடல்களில் இன்பம் தருவன

இன்னா நாற்பது

இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துக்களைக் கொண்டு

திரிகடுகம்

திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரிகடுகம் என்பது

ஆசாரக் கோவை

மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை. பண்டைக்காலத்

சிறுபஞ்சமூலம்

சிறுபஞ்சமூலம் என்பது ஐந்து சிறிய வேர்கள் என்று பொருள்படும். அவையாவன சிறுவழுதுணை வேர், நெருஞ்சி வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர்

முதுமொழிக்காஞ்சி

முதுமொழி என்பது பழமொழி என்னும் சொற்பொருளோடு தொடர்புடையது. காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும் ஒருவகை அணிகலக் கோவையையும்

பழமொழி நானூறு

பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள்

ஏலாதி

'ஏலாதி' என மருத்துவ நூல்களில் கூறப்படுவது ஏலம் ஆதியான ஆறு பொருள்கள் சேர்ந்த ஒரு வகைச் சூர்ணம். ஏலம் ஒரு பங்கு, இலவங்கப்பட்டை இரண்டு பங்கு,

திருக்குறள்

திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு விளங்குகின்றது. அறம், பொருள், இன்பம்

கார் நாற்பது

கார் நாற்பது அகப்பொருள் பற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது. கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையாலும்,

ஐந்திணை ஐம்பது

'ஐந்திணை ஐம்பது' முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்திணைக்கும் பத்துப் பாடல்களைப் பெற்றுள்ளமையால் 'ஐந்திணை ஐம்பது' எனப் பெயர் பெற்றது.

திணைமொழி ஐம்பது

திணைமொழி ஐம்பது குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்திணைகளுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் உள்ளன. அதனால் இந்நூல்

ஐந்திணை எழுபது

ஐந்திணை எழுபது ஐந்திணைகளில் ஒவ்வொன்றிற்கும் பதினான்கு பாடல்களைக் கொண்டு, எழுபது பாடல்களில் இந்நூல் அமைந்துள்ளது. இந் நூலின் முதலில் விநாயகரைக்

திணைமாலை நூற்றைம்பது

திணைமாலை நூற்றைம்பது பண்டைத் தமிழ் நூற் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கில் அடங்கியது. 153 பாடல்களைக் கொண்ட இது ஒரு அகப்பொருள் சார்ந்த நூல்.

கைந்நிலை

'கை' என்பது ஒழுக்கம் என்றும் பொருள்படும். ஐந்திணை ஒழுக்கம் பற்றியதே இந்நூலாகும். ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடலாக அறுபது பாடல்கள் இந் நூலில் உள்ளன.

களவழி நாற்பது

களவழி நாற்பது போர்க்களம் பற்றிய பாடல்களின் தொகுதியாகும். இந் நூலில் உள்ள பாடல்கள் எல்லாம் களத்து என்ற சொல்லை இறுதியில் கொண்டு முடிதல் கவனிக்கத் தக்கது.

பழமொழி நானூறு
பதினெண் கீழ்க்கணக்கு

பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்டது.

பழமொழி நானூறு


02. கல்லாதார்

பாடல் : 011
கற்றானும், கற்றார் வாய்க் கேட்டானும், இல்லாதார்
தெற்ற உணரார், பொருள்களை - எற்றேல்,
அறிவு இலான் மெய்த் தலைப்பாடு? பிறிது இல்லை
நாவல்கீழ்ப் பெற்ற கனி. . . . .[011]

பொருளுரை:

நூல்களைத் தாமே கற்றாயினும் கற்றவர்களிடம் கேட்டாயினும் கல்வி கேள்வி இல்லாதவர்கள் பொருள்களை - பொருள்களின் உண்மையைத் தெளிவாக அறியார்கள் கல்வி கேள்விகளின் அறிவு இல்லாதான் உண்மைப் பொருள்களை ஒருகால் அறிதல் எத்தன்மைத் தெனில் நாவல் மரத்தின் அடியில் தானே விழுந்த கனியைப் போல்வதன்றி கல்வி கேள்விகளுள் எதுவும் காரணமாக இல்லை.

கருத்து:

கல்வி கேள்வி இல்லாதவர்கள் உண்மைப் பொருள்களை அறியமாட்டார்கள்.

பாடல் : 012
கல்லாதான் கண்ட கழி நுட்பம் கற்றார்முன்
சொல்லுங்கால், சோர்வு படுதலால் - நல்லாய்
வினா முந்துறாத உரை இல்லை; இல்லை,
கனா முந்துறாத வினை. . . . .[012]

பொருளுரை:

நற்குணம் உடைய பெண்ணே! நூல்களைக் கல்லாதவன் அறிந்த மிக்க நுண்பொருள் நூல்களைக் கற்றார் முன்பு சொல்லும்பொழுது அப்பொருள் வலியிழத்தலால் வினாவானது முற்பட்டுத் தோன்றாத விடையில்லை; கனா முந்துறாதவினை இல்லை - கனாவானது முற்பட்டு நடவாத செயலும் இல்லை. (கல்வியின்றி விளங்கும் நுண்பொருளும் இல்லை.)

கருத்து:

கல்லாதான் கண்ட நுண்பொருள் விளங்குதல் இல்லை.

பாடல் : 013
கல்லாதான் கண்ட கழி நுட்பம் காட்டு அரிதால்
'நல்லேம் யாம்' என்று ஒருவன் நன்கு மதித்தல் என்?
சொல்லால் வணக்கி, வெகுண்டு, அடுகிற்பார்க்கும்,
சொல்லாக்கால் சொல்லுவது இல். . . . .[013]

பொருளுரை:

நூல்களைக் கல்லாதவன் தான் நுண்மையுற அறிந்ததாக நினைக்கும் மிக்க நுண்பொருளை பிறருக்கு விளங்கும்படி எடுத்துக்காட்டுதல் இயலாது. (ஆனபின்) கல்வியும் சொல்வன்மையும் இல்லாத ஒருவன் நல்ல பொருள் விளக்கம் உடையேம் என்று தன்னைத் தானே மிகப் பாராட்டுதல் எக்காரணம் பற்றி? தமது சொற்களால் தவத்திற்குப் பகையாயினாரைப் பணியச்செய்து, பணியாராயின் சினந்து கொல்லுகின்ற முனிவர்களுக்கும் தாங் கருதியதை எடுத்துச்சொல்ல முடியாத விடத்து தவத்திற்குச் சொல்லப்பட்ட ஆற்றல்கள் இலவாம்.

கருத்து:

கற்றார்க்குச் சொல்வன்மை இன்றியமையாது வேண்டப்படும் பொருள்.

பாடல் : 014
கல்வியான் ஆய கழி நுட்பம், கல்லார் முன்
சொல்லிய நல்லவும், தீய ஆம், - எல்லாம்
இவர் வரை நாட! - தமரை இல்லார்க்கு
நகரமும் காடு போன்றாங்கு. . . . .[014]

பொருளுரை:

எல்லாப் பொருள்களாலும் விரும்பப்படும் மலைநாட்டை உடையவனே! (முன்னர்ப் பெற்றிருந்து பின்னர்) உறவினரை இல்லார்க்கு நகரமும் காட்டை ஒத்துத் துன்பம் பயத்தல்போல நூல்களைக் கற்றதனாலாய மிக்க நுண்பொருள்களுள் நூல்களைக் கல்லார் முன்பு கூறிய நல்லனவும் பொருளற்றனவாகத் தீயவாய் முடியும்.

கருத்து:

கற்றார், கல்லார் அவையின்கண் சிறந்த பொருள்களைக் கூறாதிருக்கக்கடவர்.

பாடல் : 015
கல்லாதவரிடைக் கட்டுரையின் மிக்கது ஓர்
பொல்லாதது இல்லை; ஒருவற்கு - நல்லாய்!
இழுக்கத்தின் மிக்க இழிவு இல்லை; இல்லை,
ஒழுக்கத்தின் மிக்க உயர்வு. . . . .[015]

பொருளுரை:

நற்குணமுடைய பெண்ணே! தத்தம் நிலைக்கு ஓதப்பட்ட ஒழுக்கத்தினின்றும் வழுவுதலின் மிக்க தாழ்வு ஒருவற்கு இல்லை தத்தம் நிலைக்கு ஓதப்பட்ட ஒழுக்கத்தினை உடையராதலின் மிக்க உயர்வு ஒருவற்கு இல்லை, (ஆகையால்) கல்வியறிவு உடைய ஒருவனுக்கு நூல்களைக் கல்லாதவரிடத்து விரித்துக்கூறும்; கட்டுரையின் மிக்கதோர் பொல்லாதது இல்லை - கட்டுரையைப் பார்க்கிலும் தீமைதருஞ் செயல் பிறிதொன்றில்லை.

கருத்து:

கற்றார் கட்டுரை, கல்லாதாரிடைப் பொல்லாதாகவே முடியும்.

பாடல் : 016
கற்று ஆற்றுவாரைக் கறுப்பித்து, கல்லாதார்
சொல் தாற்றுக் கொண்டு சுனைத்து எழுதல் - எற்று எனின்
தானும் நடவான் முடவன், பிடிப்பூணி,
யானையோடு ஆடல் உறவு. . . . .[016]

பொருளுரை:

அறியாதவர்கள் நூல்களைக் கற்று (அவைகளிற் கூறியபடி) செயலிற் செய்வாரைக் கோபமூட்டி சொற்களைக் கொழித்துக்கொண்டு (மன எழுச்சியால் அவரோடு மாறுகொண்டு) மிக்கு எழுதல் எத்தன்மைத்தெனின் தானும் நடக்கமுடியாதவனாகிய காறகூழையன் ஊன்றுகோலை ஊன்றி யானையோடு விளையாடல் உறுதலோடு ஒக்கும்.

கருத்து:

கல்லார் கற்றாரோடு வாதஞ் செய்யின் அவமானம் அடைவர்.