நாலடியார்

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

நான்மணிக்கடிகை

நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும்

இனியவை நாற்பது

பூதஞ்சேந்தனார் இயற்றியது இனியவை நாற்பது. 40 வெண்பாக்களைக் கொண்டது. நான்கு பாடல்களில் இன்பம் தருவன

இன்னா நாற்பது

இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துக்களைக் கொண்டு

திரிகடுகம்

திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரிகடுகம் என்பது

ஆசாரக் கோவை

மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை. பண்டைக்காலத்

சிறுபஞ்சமூலம்

சிறுபஞ்சமூலம் என்பது ஐந்து சிறிய வேர்கள் என்று பொருள்படும். அவையாவன சிறுவழுதுணை வேர், நெருஞ்சி வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர்

முதுமொழிக்காஞ்சி

முதுமொழி என்பது பழமொழி என்னும் சொற்பொருளோடு தொடர்புடையது. காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும் ஒருவகை அணிகலக் கோவையையும்

பழமொழி நானூறு

பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள்

ஏலாதி

'ஏலாதி' என மருத்துவ நூல்களில் கூறப்படுவது ஏலம் ஆதியான ஆறு பொருள்கள் சேர்ந்த ஒரு வகைச் சூர்ணம். ஏலம் ஒரு பங்கு, இலவங்கப்பட்டை இரண்டு பங்கு,

திருக்குறள்

திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு விளங்குகின்றது. அறம், பொருள், இன்பம்

கார் நாற்பது

கார் நாற்பது அகப்பொருள் பற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது. கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையாலும்,

ஐந்திணை ஐம்பது

'ஐந்திணை ஐம்பது' முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்திணைக்கும் பத்துப் பாடல்களைப் பெற்றுள்ளமையால் 'ஐந்திணை ஐம்பது' எனப் பெயர் பெற்றது.

திணைமொழி ஐம்பது

திணைமொழி ஐம்பது குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்திணைகளுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் உள்ளன. அதனால் இந்நூல்

ஐந்திணை எழுபது

ஐந்திணை எழுபது ஐந்திணைகளில் ஒவ்வொன்றிற்கும் பதினான்கு பாடல்களைக் கொண்டு, எழுபது பாடல்களில் இந்நூல் அமைந்துள்ளது. இந் நூலின் முதலில் விநாயகரைக்

திணைமாலை நூற்றைம்பது

திணைமாலை நூற்றைம்பது பண்டைத் தமிழ் நூற் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கில் அடங்கியது. 153 பாடல்களைக் கொண்ட இது ஒரு அகப்பொருள் சார்ந்த நூல்.

கைந்நிலை

'கை' என்பது ஒழுக்கம் என்றும் பொருள்படும். ஐந்திணை ஒழுக்கம் பற்றியதே இந்நூலாகும். ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடலாக அறுபது பாடல்கள் இந் நூலில் உள்ளன.

களவழி நாற்பது

களவழி நாற்பது போர்க்களம் பற்றிய பாடல்களின் தொகுதியாகும். இந் நூலில் உள்ள பாடல்கள் எல்லாம் களத்து என்ற சொல்லை இறுதியில் கொண்டு முடிதல் கவனிக்கத் தக்கது.

பழமொழி நானூறு
பதினெண் கீழ்க்கணக்கு

பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்டது.

பழமொழி நானூறு


07. வெகுளாமை

பாடல் : 051
இறப்பச் சிறயவர் இன்னா செயினும்,
பிறப்பினால் மாண்டார் வெகுளார்; - திறத்து உள்ளி
நல்ல விறகின் அடினும், நனி வெந்நீர்
இல்லம் சுடுகலா வாறு. . . . .[051]

பொருளுரை:

குடிப்பிறப்பினால் மிகவும் இழிந்தவர்கள் துன்பந்தருஞ் செயல்களைச் செய்தாராயினும் குடிப்பிறப்பினால் மாட்சிமைப் பட்டவர்கள் சினத்தலிலர் கூறுபாடாக ஆராய்ந்து நல்விறகினைக்கொண்டு காய்ச்சினும் மிகவும் வெப்பமாகிய நீர் வீட்டினை எரிக்க முடியாதவாறுபோலும்.

கருத்து:

கீழ்மக்கள் செய்யும் துன்பத்தால் மேன்மக்கள் சினங் கொள்ளுதல் இல்லை.

பாடல் : 052
'ஆறாச் சினத்தன் அறிவு இலன்; மற்று அவனை
மாறி ஒழுகல் தலை' என்ப; - ஏறி
வளியால் திரை உலாம் வாங்கு நீர்ச் சேர்ப்ப!
தெளியானைத் தேறல் அரிது.. . . . .[052]

பொருளுரை:

காற்றால் கரைமீது ஏறித் திரைகள் வீசுகின்ற வளைந்த கடல் நாடனே! மனத்தின்கண் தெளிதல் இல்லாதவனை நம்புதல் முடியாது. (அதுபோல) ஆறாச்சினத்தன் அறிவிலன் - மாறாத வெகுளியை உடையான் (ஆனால்) அறிவு இல்லாதவன் (அவனோடு சேர்ந்திருத்தல் முடியாது ஆதலால்) அவனை நீங்கி ஒழுகுதல் சிறந்ததென்று சொல்லுவர்நல்லோர்.

கருத்து:

மிக்கசினம் உடையாரோடு சேர்ந்திருத்தல் இயலாது.

பாடல் : 053
உற்றதற்கு எல்லாம் உரம் செய்ய வேண்டுமோ?
கற்று அறிந்தார்தம்மை வெகுளாமைக் காப்பு அமையும்;
நெல்செய்யப் புல் தேய்ந்தாற்போல, நெடும் பகை,
தற் செய்ய, தானே கெடும். . . . .[053]

பொருளுரை:

நெற்பயிரைச் செய்தலினால் வயலிலுள்ள புல் தானே அழிந்தாற் போல் தீராப்பகை ஒருவன் தன்னை வலிமையுறச் செய்தலால் அப்பகை தானே அழிந்து விடும் கற்றறிந்தவர்கள் நேரிட்ட இடையூற்றிற்கெல்லாம் தனித்தனியே தம்மை வலிசெய்ய வேண்டுமோ? (வேண்டுவது இல்லை) தம்மைச் சினத்தினின்றும் காத்தலே அமையும்.

கருத்து:

கற்றறிந்தார் வெகுளாதொழியவே எல்லாத் தீமைகளும் தாமே அழிந்தொழிதல் உறுதியாம்.

பாடல் : 054
எய்தா நகைச் சொல் எடுத்து உரைக்கப்பட்டவர்
வைதாராக் கொண்டு விடுமர்மன்; அஃதால்
புனல் பொய்கை ஊர விளக்கு எலி கொண்டு
தனக்கு நோய் செய்துவிடல். . . . .[054]

பொருளுரை:

நீர் நிறைந்த பொய்கை சூழ்ந்த மருதநிலத் தலைவனே! பொருந்தாத இகழ்தற்குரிய சொற்களைப் பிறரால் எடுத்து உரைக்கப்பட்டவர் அவர் தம்மை இகழ்ந்ததாகக் கொள்வர் அறிவிலார் அங்ஙனம் இகழ்ந்ததாகக் கொள்ளுதல் விளக்கினை எலி இழுத்துச் சென்று (தம்மைப் பிறருக்கு விளக்கிக் காட்டுதலால்) தனக்குத் துன்பத்தினைச் செய்துகொள்ளுதலை ஒக்கும்.

கருத்து:

அறிவிலார் துன்பத்தைத் தாமே தேடிக் கொள்வர்.

பாடல் : 055
தெரியாதவர் தம் திறன் இல் சொல் கேட்டால்,
பரியாதார் போல இருக்க - பரிவு இல்லா
வம்பலர் வாயை அவிப்பான் புகுவரே
அம்பலம் தாழ்க் கூட்டுவார். . . . .[055]

பொருளுரை:

அறிவில்லாருடைய (அவர் தம்மை இகழ்ந்து கூறும்) திறமையில்லாச் சொற்களைக் கேட்டால் துன்புறாதவர்களைப்போல் பொறுத்திருக்க (அங்ஙனமன்றி) அன்பில்லாத அயலார் வாயை அடக்கப் புகுவார்களோ? இல்லை பொது இடத்தைத் தாழ்இடுவாரோடு ஒப்பார்.

கருத்து:

அறிவில்லாருடைய வாயை அடக்குதல் முடியாது.

பாடல் : 056
கை ஆர உண்டமையால், காய்வார் பொருட்டாக,
பொய்யாகத் தம்மைப் பொருள் அல்லார் கூறுபவேல்,
மை ஆர உண்ட கண் மாண் இழாய்! - என் பரிப,
செய்யாத எய்தா எனில். . . . .[056]

பொருளுரை:

மையினை மிகுதியும் உண்ட கண்களையும் மாட்சிமைப்பட்ட கலன்களையும் உடையாய்! (தம் பகைவர் கொடுத்த பொருளை) கைநிறைய வாரி வாரி உண்டமையால் (அவர் கூறியதைச் செய்யாதவழி) சினப்பர் என்பது காரணமாக மனிதனாகவன்றி ஒரு பொருளாகவும் கருதப்படாத அற்பர்கள் தம்மீது உண்மை இல்லாத சில பழிச் சொற்களைக் கூறினரேல் தாம் செய்யாத பழிச் சொற்கள் தம்மை வந்து அடையாவாகலான் எது கருதி வருந்துவது? (வருந்துதல்வேண்டா).

கருத்து:

தம் பகைவர் முயற்சியால் அறிவிலார் பழி கூறினரேல் அதற்காக வருந்தவேண்டுவதில்லை.

பாடல் : 057
ஆய்ந்த அறிவினர் அல்லாதார் புல்லுரைக்குக்
காய்ந்து, எதிர் சொல்லுபவோ, கற்று அறிந்தார்? - தீம் தேன்
முசுக் குத்தி நக்கும் மலை நாட! - தம்மைப்
பசுக் குத்தின், குத்துவார் இல். . . . .[057]

பொருளுரை:

இனிய தேன் கூட்டை ஆண்குரங்கு கிழித்து (ஒழுகும் தேனை) நக்குகின்ற மலைநாடனே! பசு தம்மை முட்டினால் (சினந்து தாமும்) முட்டுவார் இல்லை ஆராய்ந்த அறிவினை உடையரல்லாதவர்கள் சொல்லும் பொருளற்ற சொற்களுக்கு நூல்களைக் கற்று ஆராய்ந்து அறிந்தவர்கள் சினந்து எதிராகப் பொருளற்ற சொற்களைக் கூறுவரோ? கூறார்.

கருத்து:

ஆராய்ச்சியில்லாதவர்கள் கூறும் அற்பச் சொற்களைப் பொருளாகக்கொண்டு கற்றறிந்தார் சினவார்.

பாடல் : 058
நோவ உரைத்தாரைத் தாம் பொறுக்க லாகாதார்,
நாவின் ஒருவரை வைதால், வயவு உரை,
பூவின் பொலிந்து அகன்ற கண்ணாய்! - அது அன்றோ,
தீ இல்லை ஊட்டும் திறம். . . . .[058]

பொருளுரை:

பூப்போல விளங்குகின்ற விசாலமான கண்ணையுடையாய்! மனம் வருந்துமாறு அடாத சொற்களைச் சொல்லியவர்களை அவர் கூறிய சொற்களைப் பொறுக்கும் ஆற்றல் இல்லாதவர்கள் தமது நாவினைக் கொண்டு தம்மை வைதாரைத் தாம் இகழ்ந்து கூறினால் தீயினால் வீட்டினைக் கொளுத்தும் திறம்போல் அது ஆகும்அல்லவா?

கருத்து:

தம்மை இகழ்ந்தாரைத் தாமும் இகழ்தல் தமக்குத் துன்பத்தை விளைவித்துக் கொள்வதாக முடியும்.

பாடல் : 059
கறுத்து ஆற்றித் தம்மைக் கடிய செய்தாரைப்
பொறுத்து, ஆற்றிச் சேறல் புகழால்; - ஒறுத்து ஆற்றின்,
வான் ஓங்கு உயர் வரை வெற்ப! பயம் இன்றே
தான் நோன்றிட வரும், சால்பு. . . . .[059]

பொருளுரை:

வானளவு உயர்ந்த பெரிய மலைகளை உடைய வெற்பனே! ஒருவன் பொறுக்கும் பொறையினால் வருவது அவனது குணம் சினத்தின்கண் மிக்குத் தமக்குத் தீய செயல்களைச் செய்தாரை அவர் தீச் செயல்களைப் பொறுத்து அவர்க்கு நன்மை செய்து ஒழுகுதல் புகழாகும் கோபித்துத் தாமும் தீயசெய்கைகளைச் செய்தால் அதனால் புகழ்உண்டாதல் இல்லை.

கருத்து:

தீங்கு செய்தார்க்கு நன்மை செய்தல் வேண்டும்.