நாலடியார்

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

நான்மணிக்கடிகை

நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும்

இனியவை நாற்பது

பூதஞ்சேந்தனார் இயற்றியது இனியவை நாற்பது. 40 வெண்பாக்களைக் கொண்டது. நான்கு பாடல்களில் இன்பம் தருவன

இன்னா நாற்பது

இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துக்களைக் கொண்டு

திரிகடுகம்

திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரிகடுகம் என்பது

ஆசாரக் கோவை

மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை. பண்டைக்காலத்

சிறுபஞ்சமூலம்

சிறுபஞ்சமூலம் என்பது ஐந்து சிறிய வேர்கள் என்று பொருள்படும். அவையாவன சிறுவழுதுணை வேர், நெருஞ்சி வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர்

முதுமொழிக்காஞ்சி

முதுமொழி என்பது பழமொழி என்னும் சொற்பொருளோடு தொடர்புடையது. காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும் ஒருவகை அணிகலக் கோவையையும்

பழமொழி நானூறு

பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள்

ஏலாதி

'ஏலாதி' என மருத்துவ நூல்களில் கூறப்படுவது ஏலம் ஆதியான ஆறு பொருள்கள் சேர்ந்த ஒரு வகைச் சூர்ணம். ஏலம் ஒரு பங்கு, இலவங்கப்பட்டை இரண்டு பங்கு,

திருக்குறள்

திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு விளங்குகின்றது. அறம், பொருள், இன்பம்

கார் நாற்பது

கார் நாற்பது அகப்பொருள் பற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது. கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையாலும்,

ஐந்திணை ஐம்பது

'ஐந்திணை ஐம்பது' முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்திணைக்கும் பத்துப் பாடல்களைப் பெற்றுள்ளமையால் 'ஐந்திணை ஐம்பது' எனப் பெயர் பெற்றது.

திணைமொழி ஐம்பது

திணைமொழி ஐம்பது குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்திணைகளுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் உள்ளன. அதனால் இந்நூல்

ஐந்திணை எழுபது

ஐந்திணை எழுபது ஐந்திணைகளில் ஒவ்வொன்றிற்கும் பதினான்கு பாடல்களைக் கொண்டு, எழுபது பாடல்களில் இந்நூல் அமைந்துள்ளது. இந் நூலின் முதலில் விநாயகரைக்

திணைமாலை நூற்றைம்பது

திணைமாலை நூற்றைம்பது பண்டைத் தமிழ் நூற் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கில் அடங்கியது. 153 பாடல்களைக் கொண்ட இது ஒரு அகப்பொருள் சார்ந்த நூல்.

கைந்நிலை

'கை' என்பது ஒழுக்கம் என்றும் பொருள்படும். ஐந்திணை ஒழுக்கம் பற்றியதே இந்நூலாகும். ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடலாக அறுபது பாடல்கள் இந் நூலில் உள்ளன.

களவழி நாற்பது

களவழி நாற்பது போர்க்களம் பற்றிய பாடல்களின் தொகுதியாகும். இந் நூலில் உள்ள பாடல்கள் எல்லாம் களத்து என்ற சொல்லை இறுதியில் கொண்டு முடிதல் கவனிக்கத் தக்கது.

பழமொழி நானூறு
பதினெண் கீழ்க்கணக்கு

பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்டது.

பழமொழி நானூறு


30. இல்வாழ்க்கை

பாடல் : 327
நாண் இன்றி ஆகாது, பெண்மை; நயவிய
ஊண் இன்றி ஆகாது, உயிர் வாழ்க்கை; பேணுங்கால்,
கைத்து இன்றி ஆகா, கருமங்கள்; - காரிகையாய்!
வித்து இன்றிச் சம்பிரதம் இல். . . . .[327]

பொருளுரை:

அழகுடையாய்! பெண்மைக்குணம் நாணின்றி உண்டாகாது; பேணுங்கால் - காப்பாற்றுமிடத்து நலம் மிகுந்த உணவு இல்லாது உயிர் வாழ்ந்திருத்தல் முடியாது; கருமங்கள் கைத்து இன்றி ஆகா - செயல்கள் கைப்பொருள் இல்லாது முடிதல் இல்லை; வித்து இன்றி சம்பிரதம் இல் - விதையின்றி விளைவும் இல்லை.

கருத்து:

பெண்களுக்கு நாண் வேண்டும் என்றது இது.

பாடல் : 328
உரிமைதனில் தம்மோடு உழந்தமை கண்டு,
பிரிவு இன்றிப் போற்றப் படுவார்; திரிவு இன்றித்
தாம் பெற்றதனால், உவவார்; பெரிது அகழின்,
பாம்பு காண்பாரும் உடைத்து. . . . .[328]

பொருளுரை:

வேறுபாடின்றிக் காப்பாற்றப்படுபவர்கள் நட்புரிமையால் தம்மோடு வருந்தினமையைப் பார்த்து மன வேறுபாடின்றி தாம் பெற்ற பொருளால் மனமகிழ்தலிலராய்ப் பின்னும் விரும்பாநிற்பர் புற்றினை மிகவும் கீழே தோண்டிச் சென்றால் (அதனால்) பாம்பைக் காண்கின்றவர்களையும் மிகுதியாக உடைத்தாயிரா நின்றது இவ்வுலகம்

கருத்து:

செய்தது கொண்டு உவத்தலே நட்பிற் கழகாம்.

பாடல் : 329
அகத்தால் அழிவு பெரிது ஆயக்கண்ணும்,
புறத்தால் பொலிவுறல் வேண்டும்; - எனைத்தும்
படுக்கை இலராயக்கண்ணும், உடுத்தாரை
உண்டி வினவுவார் இல். . . . .[329]

பொருளுரை:

படுத்தற்கு ஒரு சிறிய இடம் இலராயவிடத்தும் சிறப்புற ஆடை உடுத்தாரை வறியராகக் கருதி உண்டிவேண்டுமோ என்று கேட்பார் ஒருவருமிலர். (ஆதலால்) மனையின்கண் வறுமை மிக்க இடத்தும் எப்படியாயினும் புறத்தோற்றத்தால் பொலிவுற்று விளங்குதல் வேண்டும்.

கருத்து:

புறத்தோற்றப் பொலிவும் வேண்டப்படுவதொன்றாகும்.

பாடல் : 330
சொல்லாமை நோக்கிக் குறிப்பு அறியும் பண்பின் தம்
இல்லாளே வந்த விருந்து ஓம்பி, செல்வத்து
இடர் இன்றி ஏமாந்திருந்தாரே, நாளும்
கடலுள் துலாம் பண்ணினார். . . . .[330]

பொருளுரை:

தான் கூறுவதற்கு முன்னரே முகம் நோக்கி மனக் குறிப்பினை அறியும் பண்பினை உடைய தன் மனைவியே வந்த விருந்தினர்களுக்கு வேண்டுவன செய்து ஓம்ப அதனால் செல்வத்தின்கண் துன்பமின்றி இன்பமுற்று வாழ்ந்தவர்களே நாடோறும் கடலிலுள்ள நீரைத் துலா இட்டு இறைப்பவரோ டொப்பர்.

கருத்து:

குறிப்பறிதலும், விருந்தோம்பலுமுடைய இல்லாளோடு செல்வத்துடன வாழ்பவர்களே நீங்காத இன்பமுடையார்.

பாடல் : 331
எந் நெறியானும் இறைவன் தன் மக்களைச்
செந் நெறிமேல் நிற்பச் செயல் வேண்டும்; அந் நெறி
மான் சேர்ந்த நோக்கினாய்! - ஆங்க; அணங்கு ஆகும்,
தான் செய்த பாவை தனக்கு. . . . .[331]

பொருளுரை:

மானை யொத்த பார்வையை உடையாய்! தந்தை தன் குழந்தைகளை எல்லாவற்றானும் செம்மையாகிய நல்ல வழியில் நிற்குமாறு அறிவு கொளுத்துதல் வேண்டும்; தன்னால் நிலை நிறுத்தப்பட்ட படிவம் தனக்கே தெய்வமாகும் செந்நெறியில் நிற்பச்செய்தல் தெய்வமாந் தகுதியைப் போலாம் ஆதலான்.

கருத்து:

மக்களுக்கு அறிவு ஊட்டுதல் தந்தை கடனாம்.

பாடல் : 332
ஒக்கும் வகையால் உடன் பொரும் சூதின்கண்
பக்கத்து ஒருவன், ஒருவன்பால் பட்டிருக்கும்;
மிக்க சிறப்பினர் ஆயினும், தாயர்க்கு
மக்களுள் பக்கமோ வேறு. . . . .[332]

பொருளுரை:

ஒக்கும்படி சிலருடன் கூடி விளையாடும் சூதாட்டிடத்து பக்கத்திலே இருந்து ஒருவன் ஒருவனைச் சார்ந்து வேண்டியன கூறிக்கொடுப்பான்; (அதுபோல) மக்கள் எல்லோரும் மிகுந்த சிறப்புடையவராகக் கருதப்படுவாரே யாயினும் தாய்மார்களுக்கு மக்களுள்ளும் கல்வி யறிவான் மிக்காரிடத்து அன்பு தனிச் சிறப்புடையதாக இருக்கும்.

கருத்து:

கல்வி யறிவான் மிக்க மக்களைத் தாயர் பெரிதும் விரும்புவர்.

பாடல் : 333
தொடித் தோள் மடவார் மருமந்தன் ஆகம்
மடுத்து, அவர் மார்பில் மகிழ்நன் மடுப்ப,
நெறி அல்ல சொல்லல் நீ, பாண! - அறி துயில்
ஆர்க்கும் எடுப்பல் அரிது. . . . .[333]

பொருளுரை:

தொடியணிந்த தோள்களையுடைய பரத்தையர் மார்பினை தன் மார்பில் சேர்த்து அப்பரத்தையர் மார்பில் தலைவன் சேர பாணனே! நீ இங்ஙனம் ஒழுகுதல் நெறியன்றென்று தலைவனிடத்துச் சொல்லுதலை ஒழிவாயாக; பொய்த்துயிலினின்றும் ஒருவரை நீக்குதல் யாரானும் முடியாதாம்.

கருத்து:

பாணனுக்குத் தலைமகள் வாயில்மறுத்துக் கூறியது.

பாடல் : 334
விழும் இழை நல்லார் வெருள் பிணைபோல் நோக்கம்
கெழுமிய நாணை மறைக்கும்; தொழுதையுள்,
மாலையும் மாலை மறுக்குறுத்தாள்; - அஃதால்,
சால்பினைச் சால்பு அறுக்குமாறு. . . . .[334]

பொருளுரை:

எல்லோரானும் விரும்பப்படும் பொற்கல னணிந்த பெண்களுடைய வெருண்ட மான்போன்ற நோக்கங்கள் (ஆடவருடைய) செறிந்த நாணினைத் தோன்றாமல் மறைக்க வல்லதாம்! யமுனையின் கண்ணே திருமாலையும் பின்னை யென்பாள் தன்னழகினால் மயங்கச் செய்தாள்; அது மிகுதியினை மிக்க தொன்றனால் அறுக்கு மாற்றைஒக்கும்.

கருத்து:

அறிவான் மிக்கார்மகளிரைச் சார்ந்தொழுகல் கூடாது.

பாடல் : 335
தூய்மை மனத்தவர், தோழர் மனையகத்தும்,
தாமே தமியர் புகல் வேண்டா; தீமையான்
ஊர் மிகின், இல்லை, கரியோ; - ஒலித்து உடன்
நீர் மிகின், இல்லை, சிறை. . . . .[335]

பொருளுரை:

தூய்மையான மனத்தை உடையவர்கள் நண்புடையார் இல்லின் கண்ணும் தாமாகத் தனித்துச் செல்லுதல் வேண்டா இவன் தீயசெயல் செய்தான் என்று ஊரிலுள்ளார் மிகுத்துக் கூறுவாராயின் செய்யவில்லை என்று சான்று கூறுவார் ஒருவரும் இலர் ஓசையுடனே நீர் மிகுமாயின் அதனைத் தடுத்து நிற்கும் அணை இல்லையாதல்போல.

கருத்து:

நல்லோர் தோழர் மனையிடத்தும் தனியாகப் புகுதல் கூடாது என்றது இது.

பாடல் : 336
நிறையான் மிகுகல்லா நேரிழை யாரைச்
சிறையான் அகப்படுத்தல் ஆகா; அறையோ
வருந்த வலிதினின் யாப்பினும், நாய் வால்
திருந்துதல் என்றுமோ இல். . . . .[336]

பொருளுரை:

வருந்துமாறு வலிபெறக் கட்டினாலும் நாயின் வால் வளைவினின்றும் நீங்கித்திருந்துதல் என்றும் இல்லை; அதுபோல நிறையான் மிகுகல்லா நேரிழையாரை - மனத்தை அடக்கும் வலிமை மிக்கிராத அழகினை உடைய கலனணிந்திருக்கும் மகளிரை காவலால் தீய செயலினின்றும் நீக்கி அகப்படுத்தல் முடியாது முடியுமென்பா ருளராயின் அவரை அறைகூவி அழைக்கின்றேன்.

கருத்து:

மகளிர்க்குச் சிறை காப்பினும் நிறைகாப்பே சிறந்ததாம்.

பாடல் : 337
நல்கூர்ந்தவர்க்கு, நனி பெரியர் ஆயினார்,
செல் விருந்து ஆகிச் செலல் வேண்டா, ஒல்வது
இறந்து அவர் செய்யும் வருத்தம் - குருவி
குறங்கு அறுப்பச் சோரும் குடர். . . . .[337]

பொருளுரை:

செல்வத்தால் மிகவும் பெரியவர் ஆயினார் வறுமையுடையார்க்கு அவரிடத்துச் செல்கின்ற விருந்தாகச் செல்லவேண்டா; ஒல்வது இறந்து அவர் செய்யும் வருத்தம் - தம்மா லியலுமாற்றைக் கடந்து விருந்து செய்தலான் வரும் வருத்தம் குருவி தொடையை அறுத்த அளவில் குடர்சோர்ந்து விழுந்துன்பத்தை யொக்கும்.

கருத்து:

செல்வமுடையார் வறியோரிடத்து விருந்தாகச் செல்லவேண்டா என்றது இது.

பாடல் : 338
உடுக்கை, மருந்து, உறையுள், உண்டியோடு, இன்ன
கொடுத்து, குறை தீர்த்தல் ஆற்றி விடுத்து, இன்சொல்
ஈயாமை என்ப - எருமை எறிந்து, ஒருவர்
காயக்கு உலோபிக்குமாறு. . . . .[338]

பொருளுரை:

உடையும் மருந்தும் உறையுளும்உணவோடு இவற்றை யளித்து அவர் குறையை நீக்குதலைச்செய்து இனிய சொற்களைக் கூறாமை ஒருவர் உணவின் பொருட்டு எருமையைக் கொன்று அதனைச் சமைத்தற்குரிய காயம் வாங்குதற்கு லோபிக்குமாற்றை யொக்கும் என்று சொல்லுவார்கள்.

கருத்து:

கொடைக்கு இன்சொல் இன்றியமையாது வேண்டப்படுவ தொன்றாம்.

பாடல் : 339
தத்தமக்குக் கொண்ட குறியே தவம் அல்ல;
செத்துக! சாந்து படுக்க! மனம் ஒத்துச்
சமத்தனாய் நின்று ஒழுகும் சால்பு தவமே
நுகத்துப் பகல் ஆணி போன்று. . . . .[339]

பொருளுரை:

தத்தமக்குத் தோன்றியவாறே கொண்ட வேடங்கள் தவமாகா; வாளாற் செத்துக அன்றிக் குளிர்ந்த சந்தனத்தைப் பூசுக மனம் பொருந்தி நுகத்தின்கண் நடுவு நிற்கும் பகலாணியை ஒப்ப ஒன்று பட்டவனாகி நடுவு நிலையினின்று ஒழுகும் அமைதியே தவமாம்.

கருத்து:

காய்த லுவத்த லின்றிஒழுகும் அமைதியே தவமாம்.

பாடல் : 340
உள்ளது ஒருவர் ஒருவர் கை வைத்தக்கால்,
கொள்ளும் பொழுதே கொடுக்க, தாம் கொள்ளார்;
'நிலைப் பொருள்' என்று அதனை நீட்டித்தல் வேண்டா;
புலைப் பொருள் தங்கா, வெளி. . . . .[340]

பொருளுரை:

தன்னிடத்துள்ளதொரு பொருளை ஒருவர் ஒருவரிடத்துக் காவல் செய்து தருமாறு கொடுத்தால் அவர் வேண்டியபொழுது. தாம் அகப்படுத்திக் கொள்ளாமல் கொடுக்கக் கடவர் நிலைமையான பொருள் என்று கருதிக் கொடாது காலம் நீட்டித்தல் வேண்டா; புலால் நாறும் பொருள் எங்ஙனம் மறைப்பினும் மறைபடாது வெளிப்பட்டுவிடும் ஆதலான்.

கருத்து:

அடைக்கலப் பொருளைக் கொள்ளாது வேண்டிய பொழுது கொடுத்துவிடுக.

பாடல் : 341
நன்றே, ஒருவர்த் துணையுடைமை; பாப்பு இடுக்கண்
நண்டேயும் பார்ப்பான்கண் தீர்த்தலான், - விண் தோயும்
குன்றகல் நல் நாட! - கூறுங்கால், இல்லையே,
ஒன்றுக்கு உதவாத ஒன்று. . . . .[341]

பொருளுரை:

ஆகாயத்திற் பொருந்தும் குன்றுகள் அகன்ற நல்ல நாடனே! ஒருவர் ஒருவரைத் துணையாகக் கொள்ளுதல் நல்ல தொன்றே; பாம்பான் வரக்கடவதொரு துன்பத்தை பார்ப்பானிடத்துத் துணையாக வந்திருந்தது சிறிய நண்டேயாயினும் (அதனை) நீக்குதலால் சொல்லுமிடத்து ஒன்றிற்கும் உதவாத ஒரு சிறு பொருளும் இல்லை.

கருத்து:

துணைபெற்று வழிச்செல்லுதல் நல்லது.

பாடல் : 342
விடல் அரிய துப்புடைய வேட்கையை நீக்கி,
படர்வு அரிய நல் நெறிக்கண் நின்றார், இடர் உடைத்தாய்ப்
பெற்ற விடக்கு நுகர்தல், - கடல் நீந்தி,
கற்று அடியுள் ஆழ்ந்துவிடல். . . . .[342]

பொருளுரை:

விடுதற்கரிய வலிமை உடைய பற்றினை முற்ற அறுத்து ஒழுகுதற்கரிய நல்ல துறவற நெறியின்கண் நின்றவர்கள் பசி நோய் வந்துற்றதாக அதன் பொருட்டுத் தானே வந்துற்ற புலாலை உண்ணுதல் கடலினை நீந்திக் கன்றினது குளம்படி நீரினுள் அமிழ்ந்து விடுவதை யொக்கும்.

கருத்து:

துறவற நெறியில் நின்றார் எக்காலத்தும் புலால் உண்ணல் ஆகாதாம்.

பாடல் : 343
செறலின் கொலை புரிந்து, சேண் உவப்பர் ஆகி,
அறிவின் அருள் புரிந்து செல்லார், பிறிதின்
உயிர் செகுத்து, ஊன் துய்த்து, ஒழுகுதல் - ஓம்பார்,
தயிர் சிதைத்து, மற்றொன்று அடல். . . . .[343]

பொருளுரை:

பிற உயிர்களுக்கு அறிவினால் அருள்செய்து மறுமை இன்பத்தையடையாராகி அறிவின் மயக்கத்தால் உயிர்களைக் கொலை செய்து மறுமை இன்பத்தை அடையப்போவதாக மன முவப்புடையராகி (ஊன் கொண்டு வேட்டால் மறுமை யடைதல் உறுதியென்று) அதன் பொருட்டுப் பிறிதொன்றனது இனிய உயிரை நீக்கி புலாலை மனம் பொருந்தி உண்டு ஒழுகுதல் உடலைப் பாதுகாவாதார் சுவை கருதித் தயிரினை அழித்து மற்றோருணவாக மாற்றிச் சமைத்தலோ டொக்கும்.

கருத்து:

வேள்விக்கண்ணும் கொலைபுரிதல் தீதாம்.

பாடல் : 344
நன்கு ஒன்று அறிபவர், நாழி கொடுப்பவர்க்கு
என்றும் உறுதியே சூழ்க! - எறி திரை
சென்று உலாம் சேர்ப்ப! - அது போல, நீர் போயும்,
ஒன்று இரண்டாம் வாணிகம் இல். . . . .[344]

பொருளுரை:

வீசுகின்ற அலைகள் மிக்குச்சென்று கரைமேல் உலாவுகின்ற கடல் நாடனே! நன்றாக ஒரு பொருளின் கூறுபாட்டை அறிகின்றவர்கள் நாழி அரிசியே யாயினும் அதனைக் கொடுக்கின்றவர்களுக்கு எக்காலத்தும் அவர்க் குறுதி தரத்தக் கனவற்றையே நினைக்கக் கடவாராக கடல் கடந்து சென்று ஒன்று கொண்டு இரண்டாகப் பெருக்கும் வாணிகமும் அதைப்போல ஆவதில்லை.

கருத்து:

நீ, நன்மை செய்தார்க்கு எக்காலத்தும் நன்மை செய்யும் விருப்புடையவனாக இரு. அதனால் மிகுந்த நன்மை உண்டாம்.

பாடல் : 345
'தமன்' என்று இரு நாழி ஈத்தவன் அல்லால்,
'நமன்' என்று, காயினும், தான் காயான், மன்னே,
'அவன் இவன்' என்று உரைத்து எள்ளி; - மற்று யாரே,
நம நெய்யை நக்குபவர்?. . . . .[345]

பொருளுரை:

தம்முடைய சுற்றத்தானென்று கருதி இருநாழி அரிசியைக் கொடுத்தவன் வெகுளினும் வெகுள்வதன்றி சுற்றத்தான் என்பது கருதி அவன் என்றும் இவன் என்றும் இகழ்ந்து கூறி நகையாடி நன்றியறிதலுடையான் மனவெறுப்புக் கொள்ளான் மந்திரங் கூறிக் குண்டத்திலிட வைத்த ஆனெய்யை நக்கிச் சுவை பார்ப்பார் யாவர்? (ஒருவருமிலர்.)

கருத்து:

ஒருவன் தனக்கு உதவி செய்தவன் காய்வானாயினும் தான் காய்தலை யொழிக என்றது இது.

பாடல் : 346
நாடி, 'நமர்' என்று நன்கு புரந்தாரைக்
கேடு பிறரோடு சூழ்தல், - கிளர் மணி
நீடு அகல் வெற்ப! - நினைப்பு இன்றி, தாம் இருந்த
கோடு குறைத்து விடல். . . . .[346]

பொருளுரை:

விளங்குகின்ற மணிகள் பொருந்திய நீண்ட கற்பாறைகளையுடைய மலை நாடனே! ஆராய்ந்து நம்மவர் என்று கருதி வேண்டியன உதவி நன்றாகக் காப்பாற்றியவர்களை காப்பாற்றப்பட்டவர்கள் அவர்க்குச் செய்யத்தக்க தீமையை அவர் பகைவரோடு சேர்ந்து எண்ணுதல் ஒருவன் உணர்வின்றித் தான் தங்கியிருந்த கோட்டின் அடியை வெட்டி வீழ்த்தி உயிர்விடுதலை யொக்கும்.

கருத்து:

செய்த உதவியை மறந்து தீமை செய்பவன் பற்றுக்கோடின்றி அழிவது விதி.

பாடல் : 347
'பண்டு இன்னார்' என்று தமரையும், தம்மையும்,
கொண்ட வகையால் குறை தீர நோக்கியக்கால்,
விண்டவரோடு ஒன்றிப் புறன் உரைப்பின், - அஃது அன்றோ,
உண்ட இல் தீ இடுமாறு. . . . .[347]

பொருளுரை:

முன்பு இத்தன்மையுடையார் என்று தஞ் சுற்றத்தாரையும் தன்னையும் ஏற்றுக்கொண்ட சிறப்பு வகையாலேயே குறை தீருமாறு நோக்கியவிடத்து நோக்கப்பட்டார் வேர் பகைவரோடு சேர்ந்து புறங்கூறுதலுறின் இனிய உணவு ஏற்ற அவ்வீட்டிலேயே நெருப்பு இடுமாற்றை ஒப்பது அதுவேயாம்.

கருத்து:

செய்ந் நன்றி கோறல் பழிக்குக் காரணமாம்.