நாலடியார்

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

நான்மணிக்கடிகை

நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும்

இனியவை நாற்பது

பூதஞ்சேந்தனார் இயற்றியது இனியவை நாற்பது. 40 வெண்பாக்களைக் கொண்டது. நான்கு பாடல்களில் இன்பம் தருவன

இன்னா நாற்பது

இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துக்களைக் கொண்டு

திரிகடுகம்

திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரிகடுகம் என்பது

ஆசாரக் கோவை

மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை. பண்டைக்காலத்

சிறுபஞ்சமூலம்

சிறுபஞ்சமூலம் என்பது ஐந்து சிறிய வேர்கள் என்று பொருள்படும். அவையாவன சிறுவழுதுணை வேர், நெருஞ்சி வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர்

முதுமொழிக்காஞ்சி

முதுமொழி என்பது பழமொழி என்னும் சொற்பொருளோடு தொடர்புடையது. காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும் ஒருவகை அணிகலக் கோவையையும்

பழமொழி நானூறு

பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள்

ஏலாதி

'ஏலாதி' என மருத்துவ நூல்களில் கூறப்படுவது ஏலம் ஆதியான ஆறு பொருள்கள் சேர்ந்த ஒரு வகைச் சூர்ணம். ஏலம் ஒரு பங்கு, இலவங்கப்பட்டை இரண்டு பங்கு,

திருக்குறள்

திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு விளங்குகின்றது. அறம், பொருள், இன்பம்

கார் நாற்பது

கார் நாற்பது அகப்பொருள் பற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது. கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையாலும்,

ஐந்திணை ஐம்பது

'ஐந்திணை ஐம்பது' முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்திணைக்கும் பத்துப் பாடல்களைப் பெற்றுள்ளமையால் 'ஐந்திணை ஐம்பது' எனப் பெயர் பெற்றது.

திணைமொழி ஐம்பது

திணைமொழி ஐம்பது குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்திணைகளுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் உள்ளன. அதனால் இந்நூல்

ஐந்திணை எழுபது

ஐந்திணை எழுபது ஐந்திணைகளில் ஒவ்வொன்றிற்கும் பதினான்கு பாடல்களைக் கொண்டு, எழுபது பாடல்களில் இந்நூல் அமைந்துள்ளது. இந் நூலின் முதலில் விநாயகரைக்

திணைமாலை நூற்றைம்பது

திணைமாலை நூற்றைம்பது பண்டைத் தமிழ் நூற் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கில் அடங்கியது. 153 பாடல்களைக் கொண்ட இது ஒரு அகப்பொருள் சார்ந்த நூல்.

கைந்நிலை

'கை' என்பது ஒழுக்கம் என்றும் பொருள்படும். ஐந்திணை ஒழுக்கம் பற்றியதே இந்நூலாகும். ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடலாக அறுபது பாடல்கள் இந் நூலில் உள்ளன.

களவழி நாற்பது

களவழி நாற்பது போர்க்களம் பற்றிய பாடல்களின் தொகுதியாகும். இந் நூலில் உள்ள பாடல்கள் எல்லாம் களத்து என்ற சொல்லை இறுதியில் கொண்டு முடிதல் கவனிக்கத் தக்கது.

பழமொழி நானூறு
பதினெண் கீழ்க்கணக்கு

பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்டது.

பழமொழி நானூறு


28. பகைத்திறம் தெரிதல்

பாடல் : 285
வன் சார்பு உடையர் எனினும், வலி பெய்து,
தம் சார்பு இலாதாரைத் தேசு ஊன்றல் ஆகுமோ?
மஞ்சு சூழ் சோலை மலை நாட! - யார்க்கானும்
அஞ்சுவார்க்கு இல்லை, அரண். . . . .[285]

பொருளுரை:

மேகங்கள் சூழ்ந்து நிற்கும் சோலைகளை உடைய மலை நாடனே! வலிமை உடையராயினாரைச் சார்பாகப் பெற்றிருப்பினும் தம்முடைய வலிமையாகிய சார்பைப் பெற்றிராதவரை. வலிபெய்து- வலிமை உண்டாக்குவித்து புகழிற்குக் காரணமாகிய செயல்களில் அவரை நிலைநாட்ட இயலுமோ யாவர்க்காயினும் மனம் அஞ்சுவார்க்கு அரண்களாற் பயனில்லை யாதலால்.

கருத்து:

அரசன் எத்துணைச்சார்பு பெற்றிருப்பினும் அவன் சார்பு அவனுக்கு இன்றியமையாத தொன்றாம்.

பாடல் : 286
எதிர்த்த பகையை இளைது ஆய போழ்தே
கதித்துக் களையின் முதிராது எதிர்த்து,
நனி நயப்பச் செய்தவர் நண்பு எலாம் தீரத்
தனி மரம் காடு ஆவது இல். . . . .[286]

பொருளுரை:

தம்பொருட்டு நின்ற பகைவர்களை பகைமை தோன்றிய காலத்தேயே அவர்களுடைய நண்பர்கள் எல்லோரையும் (அவர்களிடம் கொண்ட நட்பினை) முற்ற அறுத்துத் தன்னை மிகவும் விரும்புமாறு செய்துகொண்டு விரைந்து வலியறச் செய்யின் அப்பகைமை முதிர்வதில்லை; தனிமரம் காடு ஆதல் இல் - தனியே ஒருமரம் நின்று காடாதல் இல்லையாதலின்.

கருத்து:

அரசன் பகைமை தோன்றிய பொழுதே விரைந்து அதனைக் கொல்லக்கடவன் என்றது இது.

பாடல் : 287
'முன் நலிந்து, ஆற்ற முரண் கொண்டு எழுந்தோரைப்
பின் நலிதும்' என்று இருத்தல் பேதைமையே; பின் சென்று,
காம்பு அன்ன தோளி! - கடிதிற் கடித்து ஓடும்
பாம்பின் பல் கொள்வாரோ இல். . . . .[287]

பொருளுரை:

மூங்கிலையொத்த தோள்களையுடையாய் மிகவும் மாறுபாடு கொண்டு முற்பட்டுத் தம்மை நலிய எழுந்தவர்களை பின்னர் ஒருகாலத்து அவரை வருத்த மாட்டுவேம் என்று சோம்பி இருத்தல் அறியாமையேயாம் விரைந்து கடித்து ஓடுகின்ற பாம்பினது நச்சுப்பல்லை அதன் பின் சென்று கொள்வார் ஒருவருமிலராதலின்.

கருத்து:

பகைவரை அவர் மாறுபட்டு எழுவதற்கு முன்னரே அறிந்து களைக என்றது இது.

பாடல் : 288
நிரம்ப நிரையத்தைக் கண்டதும் நிரையும்
வரம்பு இல் பெரியானும் புக்கான்; இரங்கார்,
கொடி ஆர மார்ப! - குடி கெட வந்தால்,
அடி கெட மன்றி விடல். . . . .[288]

பொருளுரை:

தனிவடமாகிய முத்து மாலையை உடையவனே! பொய் கூறினால் உளவாகுந் துன்பத்தை நூல்களால் மிகுதியாக அறிந்தும் அந்நரக உலகத்தின்கண். எல்லையற்ற குணங்களாற் பெரிய தருமனும் அரசாட்சி பெற்றுத் தங் குடியை நிலைநாட்டும் பொருட்டுப் பொய் கூறிப் புகுந்தான் (ஆதலால்) தங்குடி கெடுமாறு தோன்றுவதொன் றுண்டானால் அவர் தீமையுறுதலுக்கு அஞ்சாராகி தங்குடிநோக்கி வேரறத் தண்டஞ் செய்துவிடுக.

கருத்து:

தங்குடி கெடுமாறு பகைவர் சூழ்ந்து நிற்பாராயின் அரசர் அவர்தங் குடியை வேரறுக்க என்றது இது.

பாடல் : 289
தமர் அல்லவரைத் தலையளித்தக் கண்ணும்
அமராக் குறிப்பு அவர்க்கு ஆகாதே தோன்றும்
சுவர் நிலம் செய்து அமைத்துக் கூட்டியக் கண்ணும்
உவர் நிலம் உட்கொதிக்குமாறு. . . . .[289]

பொருளுரை:

சுவராகுமாறு மண்ணினைப் பிசைந்து பொருந்துமாறு சேர்த்த விடத்தும் உவர்மண் உள்ளே கொதிப்புண்டு உதிர்ந்து விடும் (அதுபோல) தமக்கு உறவல்லாத பகைவரை தலையளி செய்தவிடத்தும் அவர்க்கு அது நன்மையாகத் தோன்றாது விரும்பாத குறிப்பாகவே தோன்றும்.

கருத்து:

பகைவரை நட்பாகக் கோடலரிது என்றது இது.

பாடல் : 290
முகம் புறத்துக் கண்டால் பொறுக்கலா தாரை,
'அகம் புகுதும்!' என்று இரக்கும் ஆசை - இருங் கடத்துத்
தக்க நெறியிடைப் பின்னும் செலப் பெறார்
ஒக்கலை வேண்டி அழல். . . . .[290]

பொருளுரை:

தம் முகத்தைப் புறத்தே கண்டாலும் மனம் பொறாதவர்களை அவர் மனத்தின்கண்புகுவோம் என்று தாழ்மையாக நினைக்கும் விருப்பம் நல்ல வழியின் கண்ணேயே தொடர்ந்து செல்லப்பெறாத குழந்தைகள் பெரிய சுரத்தின்கண் பெற்றோர் தம் புறம் பற்றிச்செல்ல விரும்பி அழுதலை ஒக்கும்.

கருத்து:

பகைவரது மனத்தை வேறுபாடின்றி யொழியுமாறு திருத்தல் இயலாத தொன்றாம்.

பாடல் : 291
ஆற்றப் பெரியார் பகை வேண்டிக் கொள்ளற்க!
போற்றாது கொண்டு அரக்கன் போருள் அகப்பட்டான்
நோற்ற பெருமை உடையாரும், கூற்றம்
புறம் கொம்மை கொட்டினார் இல். . . . .[291]

பொருளுரை:

தவம் ஆற்றியதா லுண்டாகும் பெருமையினை உடையவர்களும் கூற்றத்தை அதன் பின்னே நின்று கைகளைக் குவித்துக் கொட்டி வலிய அழைத்தாரிலர் இராவணன் ஆராய்தலின்றி இராமனோடு பகை கொண்டு போரிடைப்பட்டு இறந்தொழிந்தான் (ஆதலால்) மிகவும் பெரியவர்களுடைய பகையினை விரும்பி மேற்கொள்ளா தொழிக.

கருத்து:

அரசன் தன்னின் வலியாரிடத்துப் போர்செய்தல் ஒழிக என்பதாம்.

பாடல் : 292
பெரியாரைச் சார்ந்தார்மேல், பேதைமை கந்தா,
சிறியார் முரண் கொண்டு ஒழுகல், வெறி ஒலிக்கு
ஓநாய் இனம் வெரூஉம் வெற்ப! - புலம் புகின்,
தீ நாய் எடுப்புமாம் எண்கு. . . . .[292]

பொருளுரை:

வெறியாட்டெடுக்கும் ஒலியைக் கேட்டு ஓநாய்க் கூட்டங்கள் அஞ்சாநின்ற மலைநாட்டை யுடையவனே! வலியிற் சிறியவர்கள் வலியாற் பெரியோர்களைச் சார்ந்து நிற்பவர்களிடத்து அறியாமையையே பற்றுக்கோடாகக் கொண்டு மாறுபாடு கொண்டு ஒழுகற்க; (அது) தீய நாய் நாட்டின்கண் புகுந்தால் உறங்காநின்ற கரடியை எழுப்புகின்றதை ஒக்கும்.

கருத்து:

வலியாற் பெரியார்மீது மாறுபட்டு நிற்றலை ஒழிதலே யன்றி அவரைச் சார்ந்தார்மீதும் அங்ஙனமே யாகுக என்றது இது.

பாடல் : 293
இகலின் வலியாரை எள்ளி, எளியார்,
இகலின் எதிர் நிற்றல் ஏதம்; - அகலப் போய்,
என் செய்தே ஆயினும் உய்ந் தீக! - சாவாதான்
முன்கை வளையும் தொடும். . . . .[293]

பொருளுரை:

போர் செய்தலில் வல்லமை உடையவர்களை இகழ்ந்து வலிமைகுன்றி நின்றோர் போரில் எதிர்த்து நிற்றல் அவருயிர்க்கு இன்னல் தருவதாம் (ஆதலின்) நெடுந்தொலைவிற் சென்று எத்தகைய சூழ்ச்சியைச் செய்தேயாயினும் உயிர் பிழைக்க; தப்பி உயிர்பிழைத் திருப்பவன் ஒருகால்அவர்களை வென்று தனது முன்கையில் கடகத்தையும் அணிந்துகொள்ளுவானாதலால்.

கருத்து:

வலியாரோடு போர்செய்யத் துணிந்து நிற்றல் உயிருக்கு இறுதிபயப்ப தொன்றாம்.

பாடல் : 294
வென்று அடுகிற்பாரை வெப்பித்து, அவர் காய்வது
ஒன்றொடு நின்று சிறியார் பல செய்தல்
குன்றொடு தேன் கலாம் வெற்ப! - அது பெரிதும்
நன்றொடு வந்தது ஒன்று அன்று. . . . .[294]

பொருளுரை:

குவடுகளோடு தேனொழுக்குகள் மாறுபட்டுக் கலாம் விளைக்கும் மலை நாட்டை உடையவனே! தம்மைக்கொல்ல வல்லவர்களை கொதிப்பிக்கச் செய்து அவர் காய்வதாகிய ஒரு செயலின் கண்ணே நின்று வலிமையாலும் அறிவாலும் சிறியவர்கள் அவர்க்கு மாறுபட்ட பலவற்றைச் செய்தல் அச் செயல் மிகவும் நல்லகாலத்திற்குத் தனக்கு வந்ததொரு செயலன்று.

கருத்து:

வலியார்க்கு மாறுபட்டு நின்று அறிவிலார் செய்வன அவர்க்கே தீங்கினை விளைவிக்கும்.

பாடல் : 295
'உரைத்தவர் நாவோ பருந்து எறியாது' என்று,
சிலைத்து எழுந்து, செம்மாப்பவரே - மலைத்தால்,
இழைத்தது இகவாதவரைக் கனற்றி,
பலிப் புறத்து உண்பர் உணா. . . . .[295]

பொருளுரை:

உரைக்கத் தகாதனவற்றை உரைத்தவர் நாவினைப் பருந்து எறிந்துண்ணா தென்று கருதி மிகுதி கொண்டு இறுமாந்திருப்பவர்கள் ஒருவர் தம்மோடு மாறுபட்டு நின்றால் அவர் தம்மைத்தாம் செய்ய நினைத்ததைத் தவறாது முடிக்க வல்லாரை வெகுளச்செய்து பலிபீடத்தின் மேலிட்ட உணவினை உண்பவராவர்.

கருத்து:

அரசர்க்கு யாவரையும் இகழ்ந்து பேசிச் செருக்குறுதல் ஆகாததொன்றாம்.

பாடல் : 296
தழங்குரல் வானத்துத் தண் பெயல் பெற்றால்,
கிழங்குடைய எல்லாம் முளைக்கும், ஓர் ஆற்றால்
விழைந்தவரை வேர்சுற்றக் கொண்டு ஒழுகல் வேண்டா;
பழம் பகை நட்பு ஆதல் இல். . . . .[296]

பொருளுரை:

முழங்கும் முழக்கத்தையுடைய மேகத்தின்கண் உள்ள குளிர்ந்த நீரைப் பெற்றால் கிழங்குடைய புல் முதலியவெல்லாம் முளையாநிற்கும்; ஓராற்றால் விழைந்து சமயம் வாய்த்தபொழுது முரண்கொண்டு நிமிர்ந்து நிற்கும்வரை பகைவருக்குத் துணையாய் நிற்றலை ஒழியும் பொருட்டு விரும்பி அவர்களை அடியோடு நெருங்கிய நட்புடையவர்களாகக் கொண்டொழுதல் வேண்டா; பழைமையாகப் பகையாயினார் நட்பாக ஒன்றுதல் இல்லையாதலால்.

கருத்து:

பழம் பகைவரை நட்பாகக் கோடல் வேண்டா வென்றது இது.

பாடல் : 297
வெள்ளம் பகை யெனினும், வேறு இடத்தார் செய்வது என்?
கள்ளம் உடைத்தாகிச் சார்ந்த கழி நட்பு
புள் ஒலிப் பொய்கைப் புனல் ஊர! - அஃது அன்றோ,
அள் இல்லத்து உண்ட தனிசு. . . . .[297]

பொருளுரை:

பறவைகளின் ஒலி நிறைந்து பொய்கைகள் சூழ்ந்த புனல் நாடனே! வெள்ளம் போன்று அளவற்ற பகைவர்கள் உளரெனினும் இடையிட்ட நாட்டின்கண் உள்ள அவர்கள் நலிந்து செய்யும் துன்பம் யாது? கரவு உடைத்தாகித் தம்மைச் சார்ந்தொழுகுகின்ற மிகுந்த நட்பொன்றே சிறிய இல்லத்தில் தம்மோடு வாழ்வார்மாட்டுக் கொண்ட கடனை ஒன்குமன்றோ?

கருத்து:

அரசர் மனக்கரவுடையாரை அஞ்சித் தற்காக்க என்றது இது.

பாடல் : 298
இம்மைப் பழியும், மறுமைக்குப் பாவமும்,
தம்மைப் பிரியார் தமரா அடைந்தாரின்,
செம்மைப் பகை கொண்டு சேராதார் தீயரோ?
மைம்மைப்பின் நன்று, குருடு. . . . .[298]

பொருளுரை:

இம்மைக்கு வரும் பழியையும் மறுமைக்கு வரும் பாவத்தையும் தம்மினின்றும் நீக்காராய் மனக்கறுவு கொண்டு தம்மவராய் ஒட்டிவாழும் நட்பினரைவிட நேர்முகமாகப் பகைக் கொண்டு தன்னை ஒட்டி ஒழுகாதவர்கள் தீயவர்கள் ஆவரோ? பார்வையாகிய ஒளி மழுங்கிய கண்ணினும் பார்வையின்றி நிற்கும் கண்ணே நல்லது ஆகலான்.

கருத்து:

உட்பகையுடைய நட்பினரை விடப் புறப்பகையுடைய பகைவரே சிறந்தவர்களாவர்.

பாடல் : 299
பொருந்தா தவரைப் பொருது அட்டக் கண்ணும்,
இருந்து அமையார் ஆகி, இறப்ப வெகுடல்,
விரிந்து அருவி வீழ்தரும் வெற்ப! - அதுவே,
அரிந்து அரிகால் நீர்ப் படுக்குமாறு. . . . .[299]

பொருளுரை:

பரந்து பட்டு அருவிகள் இழிதரும் மலை நாடனே! தம்மொடு பொருந்தாதவர்களைப் போரிட்டு வென்றவிடத்தும் சோம்பி இருத்தலைச் செய்யாராகி அவர் உயிர் இழக்கும்படி வெகுண்டு நிற்றல் அச்செயல் தலையரிந்துவைத்த நெல்லரிதாளை உடனே உழுது அழுகுமாறு நீர் பாய்ச்சுதலோடு ஒக்கும்.

கருத்து:

அரசர் தம் பகைவரை வென்றதோடமையாது வேரறக் களைதல் நல்லது.

பாடல் : 300
வன் பாட்டவர் பகை கொள்ளினும், மேலாயார்,
புன் பாட்டவர் பகை கோடல் பயன் இன்றே;
கண் பாட்ட பூங் காவிக் கானல் அம் தண் சேர்ப்ப!
வெண் பாட்டம் வெள்ளம் தரும். . . . .[300]

பொருளுரை:

கண்களின் தகைமையாயுள்ள அழகிய நீலப்பூக்கள் நிறைந்த சோலைகளையுடைய அழகிய குளிர்ந்த கடல் நாடனே! பருவ மழையன்றி வேனிற்காலத்து வெண்மழையும் மிகுந்த நீரைத் தருமாதலால் மேலானவர்கள் வலிய தகைமை உடையாரோடு மாறுபாடு கொள்ளினும் எளிய தகைமை உடையாரோடு பகைகொள்ளுதலால் ஒருபயனும் இன்று.

கருத்து:

அரசன் வலியுடையாரோடு பகை கொள்வானாயினும் அஃதில்லாரோடு கொள்ளற்க என்றது இது.

பாடல் : 301
வாள் திறலானை வளைத்தார்கள், அஞ் ஞான்று,
வீட்டிய சென்றார், விளங்கு ஒளி காட்ட,
பொறுவரு தன்மை கண்டு, அஃது ஒழிந்தார்; - அஃதால்,
உருவு திரு ஊட்டுமாறு. . . . .[301]

பொருளுரை:

முன்னொரு காலத்தில் நாந்தகம் என்னும் வாளினை உடைய மிக்க திறல் பொருந்திய திருமாலை கொல்லும் பொருட்டுச் சென்ற மது கைடவர் என்போர் வளைந்து சூழ்ந்தார்களாகி நிலைபெற்று விளங்குகின்ற தனது திருமேனியின் ஒளியைக்காட்ட ஒப்பில்லாத வடிவின் தன்மையைக் கண்டு தாங்கொண்ட மாறுபாட்டினின்றும் நீங்கினார்கள்; உருவு திரு ஊட்டுமாறு - அழகிய வடிவே செல்வத்தை ஊட்டும் நெறி; அஃதால் - அதுவன்றோ?

கருத்து:

உருவப் பொலிவால் பகைவர் வயமாவர் என்றது இது.

பாடல் : 302
வலியாரைக் கண்டக்கால் வாய் வாளார் ஆகி,
மெலியாரை மீதூரும் மேன்மை உடைமை,
புலி கலாம் கொள் யானைப் பூங் குன்ற நாட!
வலி அலாம் தாக்கு வலிது. . . . .[302]

பொருளுரை:

புலியொடு மாறுபாடு கொள்ளும் யானையையுடைய அழகிய மலை நாடனே! தம்மின் வலியாரைக் கண்டவிடத்து வாயாலும் அடக்கமுடையராகி தம்மின் மெலியாரிடத்து அடர்ந்து மிக்கு ஒழுகும் மேம்பாடுடைமை வலியில்லாத காலத்து வலிமை உண்டாயினவாறு போலும்.

கருத்து:

அரசன் தனக்கு மிக்க வலியில்லாத காலத்து வலியார்க்கு அஞ்சி மெலியார்மேல் மீதூர்ந்தொழுகுக என்றது இது.

பாடல் : 303
ஒன்னார் அட நின்ற போழ்தின், ஒரு மகன்
தன்னை எனைத்தும் வியவற்க! துன்னினார்
நன்மை இலராய்விடினும், நனி பலர் ஆம்
பன்மையின் பாடு உடையது இல். . . . .[303]

பொருளுரை:

பொருந்தாதோர் போரிடத்தும் தம்மைக் கொல்லநின்றபொழுதில் வீரத்தின்கண் மிக்கானாயினும் தனித்துநின்ற ஒருமகன் தன்னை எத்துணையும் வியந்து கூறாதொழிக கொல்லும் பொருட்டுச் சூழ்ந்து நின்றார் வீரத்தால் நன்மையிலராய் நின்றாராயினும். மிகப்பலராயிருத்தலைவிட வலிமையுடைய தொன்றில்லையாதலின்.

கருத்து:

வீரமுடைமையினும் படைவலி வேண்டு மென்பது.

பாடல் : 304
தன் நலிகிற்பான் தலை வரின், தான் அவற்குப்
பின், நலிவானைப் பெறல் வேண்டும் - என்னதூஉம்
வாய் முன்னது ஆக வலிப்பினும் போகாதே,
நாய் பின்னதாகத் தகர். . . . .[304]

பொருளுரை:

எத்துணை வருந்தி வாய் முன்னதாகும்படி கட்டியிழுத்தாலும் ஆடு நாய் தன் பின்னே வர முன்னே போதல் இல்லை; (ஆதலால்) தன்னை நலியவல்லவன் மீதூர்ந்து மேல்வரின் அவருக்குத் துணையாய் அவன் பின்னின்று தன்னை வருத்தவருபவனைத் தான் துணையாகப் பெறுதல் வேண்டும்.

கருத்து:

பகையிரண்டனுள் ஒன்றனைத் துணையாக்கிக் கொள்க என்றது இது.

பாடல் : 305
யானும் மற்று இவ் இருந்த எம் முன்னும், ஆயக்கால்,
ஈனம் செயக் கிடந்தது இல் என்று, கூனல்
படை மாறு கொள்ளப் பகை தூண்டல் அஃதே
இடை நாய்க்கு எலும்பு இடுமாறு. . . . .[305]

பொருளுரை:

யானும் இவ்விடத்திலிருந்த என் தமையனும் ஒன்றுசேர்ந்து ஒரு செயல் செய்யப்புகுந்த இடத்து பகைவருடைய வீரம் செய்யத்தக்கது யாதொன்றுமில்லை யென்று கூறி அவரும் தம்மொடு சேர்ந்து தமக்குத் துணைப் படையாக நின்று மாறுகொள்ளுமாறு பகைவரிடமிருந்து பிரிய அவரைத் தூண்டுதலாகிய அதுவே ஆடு காத்து நிற்கும் இடையர் நாய்க்குத் திருடர் எலும்பினை யிடுதலோடொக்கும்.

கருத்து:

பகை யிரண்டாயவழி இன்சொற்கூறி அவற்றுள் ஒன்றனை வயப்படுத்துக என்றது இது.

பாடல் : 306
இயல் பகை வெல்குறுவான், ஏமாப்ப முன்னே
அயல் பகை தூண்டி விடுத்து, ஓர் நயத்தால்
கறு வழங்கி, கைக்கு எளிதாச் செய்க! அதுவே
சிறு குரங்கின் கையால் துழா. . . . .[306]

பொருளுரை:

இயல்பாக வுள்ள (தனது) பகையை வெல்ல நினைப்பவன் தனக்கு அரணாகுமாறு முன்னரே (தன் பகைக்கு) மற்றொருவனைப் பகைவனாகுமாறு தூண்டுதல் செய்து ஒரு நெறியால் கோபத்தின்கண் மிக்கொழுகித் தன் கைக்கு எளிதாமாறு பகையை நெருக்குக அச் செயல் பெரிய குரங்கு சிறிய குரங்கின் கையால் துழாவியசெயலை ஒக்கும்.

கருத்து:

பகைவரை அவர்க்கு மாறாக மற்றொருவரை உண்டாக்கி வெல்க என்றது இது.

பாடல் : 307
மாற்றத்தை மாற்றம் உடைத்தலால், மற்றவர்க்கு
ஆற்றும் பகையால் அவர்க் களைய வேண்டுமே,
வேற்றுமை யார்க்கும் உண்டுஆதலான்; - ஆற்றுவான்
நூற்றுவரைக் கொண்டுவிடும். . . . .[307]

பொருளுரை:

மனவேறுபாடு எத்திறத்தார்க்கும் உண்டு ஆகலானும் அவ் வேறுபாட்டால் ஒருவர் கூறியவற்றை அவர்க்குத் துணைபுரிவார் தஞ் சொற்களால் மாறு கொண்டு உடைக்கவல்ல ராதலானும் தம் பகைவர்க்கு தம்மோடு மாறுபாடு கொண்டொழுகும் துணையாய் வந்த பகைவராலேயே அவரைக் களைந் தெறிதல் வேண்டும்; ஆற்றுவான் நூற்றுவரை கொன்றுவிடும் - அங்ஙனம் கொல்லவல்லா னொருவனே நூறு பகைவர்களைக் கொல்லவல்லனாம்.

கருத்து:

தம் பகைவர்களுக்குள் மன வேறுபாடு உண்டாகுமாறு செய்து ஒருவரை ஒருவரால் களைக என்பது.

பாடல் : 308
தெள்ளி உணரும் திறன் உடையார் தம் பகைக்கு
உள் வாழ் பகையைப் பெறுதல் உறுதியே;
கள்ளினால் கள் அறுத்தல் காண்டும்; அது அன்றோ,
முள்ளினால் முள் களையும் ஆறு. . . . .[308]

பொருளுரை:

ஆராய்ந்து அறியும் ஆற்றலுடையார் தம் பகைவரிடத்து வாழும் உட்பகையாயினாரைத் துணையாகப் பெறுதல் வலிமையைப் பெறுதலேயாம்; கள்ளினால் கள் அறுத்தல் காண்டும் - மற்றொரு வேறுபட்ட கள்ளினால் முன் குடித்த கள்ளின் வெறியை நீக்குதலைக் கண்கூடாகக் காண்கின்றோம்; அது - உட்பகையாயினாரைத் துணையாகப் பெறுதல் முள்ளினால் முள்ளைக் களைதலை யொக்குமன்றோ?

கருத்து:

பகைவரிடத்து உட்பகையாய் வாழ்வாரைத் துணையாகப் பெறின் வெற்றி எளிதில் எய்தலா மென்றது இது.

பாடல் : 309
நலிந்து ஒருவர் நாளும் அடுபாக்குப் புக்கால்,
மெலிந்து ஒருவர் வீழாமை கண்டு, மலிந்து அடைதல்,
பூப் பிழைத்து வண்டு புடை ஆடும் கண்ணினாய்!
ஏப் பிழைத்துக் காக் கொள்ளுமாறு. . . . .[309]

பொருளுரை:

பூக்கள் என்று பிழையாகக் கருதி வண்டுகள் மருங்கு வந்து அணைந்து ஆடும் கண்களையுடையாய்! ஒருவர் நாள்தோறும் நலிதலைச் செய்து பகைவரை அடும்பொருட்டுப் புகுந்தால் மெலிந்து ஒருவர் வீழாமை கண்டு உயிர்மெலிந்து ஒருவரும் இறந்த வீழாமையைக் கண்டு அச்சம் மிகுந்து அவரை அடைக்கலமாக அடைதல் அம்பினின்றும் பிழைத்துப் புறமுதுகிட்டுத் தன்னைக் காத்துக்கொள்ளு மாற்றை ஒக்கும்.

கருத்து:

போரின்கண் புகுந்த பின்னர்ச் சரணாக அடைதல் இழிவைத் தருவதொன்றாகும்.

பாடல் : 310
மறையாது இனிது உரைத்தல், மாண் பொருள் ஈதல்,
அறையான் அகப்படுத்துக் கோடல், முறையால்
நடுவணாச் சென்று அவரை நன்கு எறிதல், அல்லால்,
ஒடி எறியத் தீரா, பகை. . . . .[310]

பொருளுரை:

கருதியதை மறைத்து வைக்காது இனிமையாக எடுத்துக்கூறுதல் மாட்சிமைமிக்க பொருளைக் கொடுத்தல் வஞ்சனை முதலியவற்றால் கீழறுத்து அவரைச் சார்ந்தாரைத் தம்மோடு சேர்த்துக் கொள்ளல் முறையாக நடுநிலைமையிற் சென்று அப்பகைவர்களை அறச்செய்தல் ஆகிய இவையல்லாமல் தண்டம் ஒன்று கொண்டே பகையை அறச்செய்ய அப்பகை தீர்தல் இல்லை.

கருத்து:

பகைவரை நான்கு நெறியான் வயப்படுத்துக என்றது இது.