நாலடியார்
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
நான்மணிக்கடிகை
நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும்
இனியவை நாற்பது
பூதஞ்சேந்தனார் இயற்றியது இனியவை நாற்பது. 40 வெண்பாக்களைக் கொண்டது. நான்கு பாடல்களில் இன்பம் தருவன
இன்னா நாற்பது
இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துக்களைக் கொண்டு
திரிகடுகம்
திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரிகடுகம் என்பது
ஆசாரக் கோவை
மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை. பண்டைக்காலத்
சிறுபஞ்சமூலம்
சிறுபஞ்சமூலம் என்பது ஐந்து சிறிய வேர்கள் என்று பொருள்படும். அவையாவன சிறுவழுதுணை வேர், நெருஞ்சி வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர்
முதுமொழிக்காஞ்சி
முதுமொழி என்பது பழமொழி என்னும் சொற்பொருளோடு தொடர்புடையது. காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும் ஒருவகை அணிகலக் கோவையையும்
பழமொழி நானூறு
பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள்
ஏலாதி
'ஏலாதி' என மருத்துவ நூல்களில் கூறப்படுவது ஏலம் ஆதியான ஆறு பொருள்கள் சேர்ந்த ஒரு வகைச் சூர்ணம். ஏலம் ஒரு பங்கு, இலவங்கப்பட்டை இரண்டு பங்கு,
திருக்குறள்
திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு விளங்குகின்றது. அறம், பொருள், இன்பம்
கார் நாற்பது
கார் நாற்பது அகப்பொருள் பற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது. கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையாலும்,
ஐந்திணை ஐம்பது
'ஐந்திணை ஐம்பது' முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்திணைக்கும் பத்துப் பாடல்களைப் பெற்றுள்ளமையால் 'ஐந்திணை ஐம்பது' எனப் பெயர் பெற்றது.
திணைமொழி ஐம்பது
திணைமொழி ஐம்பது குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்திணைகளுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் உள்ளன. அதனால் இந்நூல்
ஐந்திணை எழுபது
ஐந்திணை எழுபது ஐந்திணைகளில் ஒவ்வொன்றிற்கும் பதினான்கு பாடல்களைக் கொண்டு, எழுபது பாடல்களில் இந்நூல் அமைந்துள்ளது. இந் நூலின் முதலில் விநாயகரைக்
திணைமாலை நூற்றைம்பது
திணைமாலை நூற்றைம்பது பண்டைத் தமிழ் நூற் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கில் அடங்கியது. 153 பாடல்களைக் கொண்ட இது ஒரு அகப்பொருள் சார்ந்த நூல்.
கைந்நிலை
'கை' என்பது ஒழுக்கம் என்றும் பொருள்படும். ஐந்திணை ஒழுக்கம் பற்றியதே இந்நூலாகும். ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடலாக அறுபது பாடல்கள் இந் நூலில் உள்ளன.
களவழி நாற்பது
களவழி நாற்பது போர்க்களம் பற்றிய பாடல்களின் தொகுதியாகும். இந் நூலில் உள்ள பாடல்கள் எல்லாம் களத்து என்ற சொல்லை இறுதியில் கொண்டு முடிதல் கவனிக்கத் தக்கது.
பழமொழி நானூறு
பதினெண் கீழ்க்கணக்கு
பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்டது.
பழமொழி நானூறு
22. பொருளைப் பெறுதல்
முந்துற நாடிப் புறந்தரல் ஓம்புக!
அம் தண் அருவி மலை நாட! - சேண் நோக்கி,
நந்து, நீர் கொண்டதே போன்று!. . . . .[205]
முந்துற நாடிப் புறந்தரல் ஓம்புக
அந்தண் அருவி மலைநாட! சேணோக்கி
'நந்துநீர் கொண்டதே போன்று'. . . . .[205]
பொருளுரை:
அழகிய குளிர்ந்த அருவிகளை உடைய மலைநாடனே! கால நெடுமையை நோக்கி நத்தை நீரைத் தன்னிடத்தே பாதுகாத்துக் கொண்டதுபோல தத்தமது பொருளையும் தம் சுற்றத்தாரிடத்துள்ள செல்வத்தையும் முற்படவே ஆராய்ந்து பின்னாளில் உதவும் பொருட்டு பொருளினைச் சேமித்துக் காவல்செய்க.
கருத்து:
பின்னாளில் உதவும் பொருட்டுப் பொருளினைச் சேமித்துக் காவல் செய்க.
சிறந்தார் தமர் என்று, தேற்றார் கை வையார்;
கறங்கு நீர் கால் அலைக்கும் கானல் அம் சேர்ப்ப!
இறந்தது பேர்த்து அறிவார் இல். . . . .[206]
சிறந்தார் தமரென்று தேற்றார்கை வையார்
கறங்குநீர்க் காலலைக்கும் கானலஞ் சேர்ப்ப!
'இறந்தது பேர்தறிவார் இல்'. . . . .[206]
பொருளுரை:
ஒலிக்கின்ற நீரை உடைய உப்பங்கழிகள் அலைவீசுதற் கிடனாய கடற்கரைச் சோலையை உடைய அழகிய கடல் நாடனே! தமது கையினின்றும் போய பொருளை மீட்டுத்தர அறிவாரில்லையாதலால் தம்மிடத்துள்ள பொருளை தாம் காவல் செய்யின் அல்லது தமக்குச் சிறந்தார் எனவும் உறவினர் எனவும் கருதி நம்பலாகாதார் கையின்கண் ஒருகால் மறந்தும் வைத்தல் இலர் அறிவுடையார்.
கருத்து:
ஒவ்வொருவரும் தந்தம் பொருளைத் தாமே பாதுகாத்தல் வேண்டும்.
இமையாது காப்பினும் ஆகா; இமையோரும்
அக் காலத்து ஓம்பி, அமிழ்து கோட்பட்டமையால்,
நல் காப்பின் தீச் சிறையே நன்று. . . . .[207]
இமையாது காப்பினும் ஆகா - இமையோரும்
அக்காலத்(து) ஓம்பி அமிழ்துகோட் பட்டமையால்
'நற்காப்பின் தீச்சிறையே நன்று'. . . . .[207]
பொருளுரை:
தேவர்களும் முற்காலத்து பாதுகாத்தும் அமிர்தம் கருடனால் கொள்ளப்பட்டமையால் நன்றாகக் காவல் செய்தலினும் யாரும் நெருங்கமுடியாத தக்க இடத்தின்கண் வைத்துக் காவல் செய்தலே நல்லது. (ஆதலால்) பொருந்தாத விடத்து ஓர் அரிய பொருளை வைத்தால் கண்ணிமையாது காவல் செய்யினும் காவல் செய்ய முடியாதாம்.
கருத்து:
பொருளை, யாரும் நெருங்கமுடியாத தக்க இடத்தின்கண் வைத்துக் காவல் செய்தல் வேண்டும்.
'நோக்குமின்!' என்று, இகழ்ந்து, நொவ்வியார்கை விடுதல்,
போக்கு இல் நீர் தூஉம் பொரு கழித் தண் சேர்ப்ப!
காக்கையைக் காப்பு இட்ட சோறு. . . . .[208]
நோக்குமின் என்றிகழ்ந்து நொள்வியார் கைவிடுதல்
போக்கில்நீர் தூஉம் பொருகழித் தண்சேர்ப்ப!
'காக்கையைக் காப்பிட்ட சோறு'. . . . .[208]
பொருளுரை:
வடிவாய் இல்லாத கடல் நீர்த்துளிகளைத் தூவுகின்ற கரையினைப் பொருகின்ற உப்பங்கழிகளையுடைய குளிர்ந்த கடல் நாடனே! ஒருவர் முயன்று வருந்தித் தேடிய ஒள்ளிய பொருளை காவல் செய்தலை இகழ்ந்து கீழ்மக்களிடத்து ஒப்புவித்தல் காக்கையைக் காவலாக வைத்த சோற்றினை ஒக்கும்.
கருத்து:
காத்துத் தருமாறு கீழ்மக்களிடம் ஒப்புவித்த பொருளைப் பின்னர்ப் பெறுதல் அரிதாம்.
குடிமகன் அல்லான் கை வைத்தல், - கடி நெய்தல்
வேரி கமழும் விரி திரைத் தண் சேர்ப்ப!
மூரியைத் தீற்றிய புல். . . . .[209]
குடிமகன் அல்லான்கை வைத்தல் - கடிநெய்தல்
வேரி கமழும் விரிதிரைத் தண்சேர்ப்ப!
'மூரியைத் தீற்றிய புல்'. . . . .[209]
பொருளுரை:
வளையல் பொருந்திய முன் கையையுடைய நல்லாய்! புதிதாக அலர்ந்த நெய்தலது நறுநாற்றம் கமழுகின்ற விரிந்த அலைகளையுடைய குளிர்ந்த கடல்நாடனே! முயன்று வருந்திச் சேர்த்த அத்திரண்ட பொருளை நற்குடியிற் பிறந்த மகன் அல்லாதவனிடத்து வைத்தல் கிழவெருதை உண்பித்த புல்லோ டொக்கும்.
கருத்து:
நற்குடிப் பிறவாரிடத்து வைத்த பொருள் பயன்படுதலில்லை.
பின்னை அஃது ஆராய்ந்து கொள்குறுதல், - இன்னியல்
மைத்தடங்கண் மாதராய் அஃதாதல், வெண்ணெய்மேல்
வைத்து, மயில் கொள்ளுமாறு. . . . .[210]
பின்னையஃ தாராய்ந்து கொள்குறுதல் - இன்னியல்
மைத்தடங்கண் மாதராய்! அஃதாதல் 'வெண்ணெய்மேல்
வைத்து மயில்கொள்ளு மாறு'. . . . .[210]
பொருளுரை:
இனிய இயல்பையுடைய மையுண்ட அகன்ற கண்களையுடைய மாதே! தான் எளிதாகக் கொள்ளக்கூடிய முன்னால் உள்ள பொருளை பெற்றுக் காவல் செய்தலின்றி விரும்பாது வெறுத்திருந்து எளிதாகக் கொள்ள முடியாத காலத்து அப்பொருளை தேடிக்கொள்ளுதல் அங்ஙனந் தேடிக் கோடல் வெண்ணெயை மேலே வைத்து அஃது உருகிக் கண்களை மறைத்தபின் மயிலைப் பிடிப்பதோ டொக்கும்.
கருத்து:
எளிதாகக் கொள்ளக்கூடிய பொருளைக் கொள்ளாது அரிதாயவிடத்துப் பின்னர் அதனை வருந்திப் பெறுதல் மடமையாகும்.
மெய்ப்பட்ட ஆறே உணர்ந்தாரால், மெய்யா;
மடம் பட்ட மான் நோக்கின் மா மயில் அன்னாய்!
கடம் பெற்றான் பெற்றான் குடம். . . . .[211]
மெய்ப்பட்ட வாறே உணர்ந்தாரால் - மெய்யா
மடம்பட்ட மானோக்கின் மாமயில் அன்னாய்!
'கடம்பெற்றான் பெற்றான் குடம்'. . . . .[211]
பொருளுரை:
மடப்பம் பொருந்திய மான்போன்ற பார்வையையுடைய சிறந்த மயில் போல்வாய்! மெய்யான நெறியிலே நின்று உலக இயலை அறிந்தார் உண்மையாகவே கைவிட்ட ஒண் பொருள் யாதொரு கரியுமின்றிக் கடனாகத் தன் கையினின்றும் விட்ட ஒள்ளிய பொருள் மீட்டுத் தன் கையின்கண் வருதல் இல்லை என்று கூறுவார்கள் பிறர்க்குக் கடனாகக் கொடுத்த பொருளை மீட்டுப் பெற்றானெனப் படுவான் உறுதி கூறுதற்குப் பாம்புக் குடத்தைப் பெற்றவனேயாவா னாதலால்.
கருத்து:
யாதொரு சான்றுமின்றிக் கடன் கொடுத்தலாகாது.
இடம் கொண்டு, 'தம்மினே' என்றால், தொடங்கிப்
பகை மேற்கொண்டார் போல, கொண்டார் வெகுடல்,
நகை மேலும் கைப்பாய் விடும். . . . .[212]
இடங்கொண்டு தம்மினே - என்றால் தொடங்கிப்
பகைமேற்கொண் டார்போலக் 'கொண்டார் வெகுடல்
நகைமேலும் கைப்பாய் விடும்'. . . . .[212]
பொருளுரை:
தாம் கடனாகக் கொண்ட ஒள்ளிய பொருளை பிறரிடம் தம் கையினின்றும் விட்டிருப்பார் அவரிடத்திற் சென்று எம்மிடம் கொண்ட பொருளைத் தரவேண்டு மென்று கேட்டால் தம்மோடு பகையினை மேற்கொண்டவரைப்போலத் தொடங்கி கடன் வாங்கியவர் சினத்தல் விளையாட்டாகச் செய்தவிடத்தும் மனதிற்குக் கசப்பாய்விடும்.
கருத்து:
கொடுப்பதாகக் குறித்த காலத்தில் தாங்கொண்ட பொருளைக் கொடாராயின் கடன்கொண்ட ஒண்பொருளை உடையார்க்கு மனக்கசப்பை உண்டாக்கும்.