நாலடியார்
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
நான்மணிக்கடிகை
நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும்
இனியவை நாற்பது
பூதஞ்சேந்தனார் இயற்றியது இனியவை நாற்பது. 40 வெண்பாக்களைக் கொண்டது. நான்கு பாடல்களில் இன்பம் தருவன
இன்னா நாற்பது
இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துக்களைக் கொண்டு
திரிகடுகம்
திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரிகடுகம் என்பது
ஆசாரக் கோவை
மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை. பண்டைக்காலத்
சிறுபஞ்சமூலம்
சிறுபஞ்சமூலம் என்பது ஐந்து சிறிய வேர்கள் என்று பொருள்படும். அவையாவன சிறுவழுதுணை வேர், நெருஞ்சி வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர்
முதுமொழிக்காஞ்சி
முதுமொழி என்பது பழமொழி என்னும் சொற்பொருளோடு தொடர்புடையது. காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும் ஒருவகை அணிகலக் கோவையையும்
பழமொழி நானூறு
பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள்
ஏலாதி
'ஏலாதி' என மருத்துவ நூல்களில் கூறப்படுவது ஏலம் ஆதியான ஆறு பொருள்கள் சேர்ந்த ஒரு வகைச் சூர்ணம். ஏலம் ஒரு பங்கு, இலவங்கப்பட்டை இரண்டு பங்கு,
திருக்குறள்
திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு விளங்குகின்றது. அறம், பொருள், இன்பம்
கார் நாற்பது
கார் நாற்பது அகப்பொருள் பற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது. கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையாலும்,
ஐந்திணை ஐம்பது
'ஐந்திணை ஐம்பது' முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்திணைக்கும் பத்துப் பாடல்களைப் பெற்றுள்ளமையால் 'ஐந்திணை ஐம்பது' எனப் பெயர் பெற்றது.
திணைமொழி ஐம்பது
திணைமொழி ஐம்பது குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்திணைகளுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் உள்ளன. அதனால் இந்நூல்
ஐந்திணை எழுபது
ஐந்திணை எழுபது ஐந்திணைகளில் ஒவ்வொன்றிற்கும் பதினான்கு பாடல்களைக் கொண்டு, எழுபது பாடல்களில் இந்நூல் அமைந்துள்ளது. இந் நூலின் முதலில் விநாயகரைக்
திணைமாலை நூற்றைம்பது
திணைமாலை நூற்றைம்பது பண்டைத் தமிழ் நூற் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கில் அடங்கியது. 153 பாடல்களைக் கொண்ட இது ஒரு அகப்பொருள் சார்ந்த நூல்.
கைந்நிலை
'கை' என்பது ஒழுக்கம் என்றும் பொருள்படும். ஐந்திணை ஒழுக்கம் பற்றியதே இந்நூலாகும். ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடலாக அறுபது பாடல்கள் இந் நூலில் உள்ளன.
களவழி நாற்பது
களவழி நாற்பது போர்க்களம் பற்றிய பாடல்களின் தொகுதியாகும். இந் நூலில் உள்ள பாடல்கள் எல்லாம் களத்து என்ற சொல்லை இறுதியில் கொண்டு முடிதல் கவனிக்கத் தக்கது.
பழமொழி நானூறு
பதினெண் கீழ்க்கணக்கு
பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்டது.
பழமொழி நானூறு
21. பொருள்
பொருளால் அறுத்தல் பொருளே; பொருள் கொடுப்பின்,
பாணித்து நிற்கிற்பார் யாவர் உளர்? - வேல் குத்திற்கு
ஆணியின் குத்தே வலிது. . . . .[196]
பொருளால் அறுத்தல் பொருளே - பொருள்கொடுப்பின்
பாணித்து நிற்கிற்பார் யாருளரோ? 'வேற்குத்தின்
காணியின் குத்தே வலிது'. . . . .[196]
பொருளுரை:
தன்னைத் தெளியாது செருக்கோடு ஒழுகுகின்ற திறப்பாடில்லாத பகைவரை பொருள் கொண்டு கொல்லுதலே செய்யத்தக்க காரியம் (அப்பகைவரைக் கொல்லும் பொருட்டுச் சிலர்க்குப்) பொருளினைக் கொடுப்பின் அவரைக் கொல்லாது தாமதித்து நிற்பார் யாவர் உளர் வேலாற் குத்துதலைவிட காணிப்பொருளால் குத்துவதே வலிமை யுடையதாம்.
கருத்து:
பகைவரைப் பொருளாற் கோறலே சிறந்ததாதலின் பொருளினை மிகுதியுஞ் செய்க.
நல்லவாய் நாடி நடக்குமாம்; இல்லார்க்கு
இடரா இயலும்; - இலங்கு நீர்ச் சேர்ப்ப!
கடலுள்ளும் காண்பவே, நன்கு. . . . .[197]
நல்லவாய் நாடி நடக்குமாம் - இல்லார்க்கு
இடரா வியலும் இலங்குநீர்ச் சேர்ப்ப!
'கடலுள்ளும் காண்பவே நன்கு'. . . . .[197]
பொருளுரை:
விளங்குகின்ற கடல் நாடனே! பொருள் உடையார்செய்யத்தொடங்கிய செயல்கள் முடியாதன இல்லாமல் நன்மையாகவே ஆராயப்பட்டு முடியும் பொருள் இல்லாதவர்களுக்கு அவர் தொடங்கிய காரியங்கள் துன்பமாகவே முடியும் கடல்தாண்டிச் சென்ற இடத்தின்கண்ணும் செய்யத் தொடங்கிய செயலின்கண் வெற்றியையே காண்பார்கள்.
கருத்து:
பொருள் உடையார்க்கு முடியாத செயல்கள் யாண்டும் இலவாம்.
கருமம் உடையாரை நாடார்; - எருமைமேல்
நாரை துயில் வதியும் ஊர! - குளம் தொட்டு,
தேரை வழிச் சென்றார் இல். . . . .[198]
கருமம் உடையாரை நாடார் - எருமைமேல்
நாரை துயில்வதியும் ஊர! 'குளந்தொட்டுத்
தேரை வழிச்சென்றார் இல்'. . . . .[198]
பொருளுரை:
எருமையின்மீது நாரை தூங்குகின்ற மருதநிலத் தலைவனே குளத்தினைத் தோண்டி (அதனிடத்தில் உறைவதற்குத்) தேரை இருக்குமிடத்தைத் தேடிச் செல்வா ரிலர். (அதுபோல) பெறுதற் கருமையை உடைய பொருளினை உடையார். தங்கண் - தம்மிடம் காரியம் உடையவர்களை தேடுதலிலர்.
கருத்து:
பொருளுடையாரிடம் கருமம் உடையார் தாமே தேடி வருவர்.
பொருள் உடையாரைப் புகழாதார் இல்லை;
பொரு படைக் கண்ணாய்! - அதுவே, திரு உடையார்
பண்டம் இருவர் கொளல். . . . .[199]
பொருளுடை யாரைப் புகழாதார் இல்லை
பொருபடைக் கண்ணாய்! அதுவே 'திருவுடையார்
பண்டம் இருவர் கொளல்'. . . . .[199]
பொருளுரை:
போரிடுகின்ற வேல்போன்ற கண்ணை உடையாய்! அருளினை உடைய பெரியோர்களும் சிறியவர்களும் செல்வமுடையாரை புகழ்ந்து பேசாதார் இலர் (எல்லோரும் புகழ்வர்) அங்ஙனம் புகழ்தலே புண்ணிய முடையார் விற்கும் பொருளை இருவர் மாறுபட்டுக் கொள்ளுதலை ஒக்கும்.
கருத்து:
பொருள் உடையாரை எல்லோரும் புகழ்வர்.
உடையானைக் காப்பதூஉம் ஆகும்; - அடையின்,
புதற்குப் புலியும் வலியே; புலிக்குப்
புதலும் வலியாய்விடும். . . . .[200]
உடையானைக் காப்பதூஉம் ஆகும் - அடையின்
'புதற்குப் புலியும் வலியே புலிக்குப்
புதலும் வலியாய் விடும்'. . . . .[200]
பொருளுரை:
சென்றடையுமாகில் காட்டிற்கு புலியும் பாதுகாவலாம் புலிக்கு காடும் பாதுகாவலாய் நிற்கும் (அதுபோல) தன்னிடத்திலுள்ள பொருளை இடையூறுபடாது காப்பாற்றுகின்றவனே பொருள் உடையா னெனப்படுவான் அப்பொருள் தானே தன்னையுடையானை இடையூறுஉறாமற் காப்பாற்றுகின்றதாகும்.
கருத்து:
பொருளை ஒருவன் காப்பாற்றினால் அவனைப் பொருள் காப்பாற்றும்.
பெரு வாய்த்தாய் நிற்கும், பெரிதும்; - ஒருவாறு
ஒளி ஈண்டி நின்றால், உலகம் விளக்கும்;
துளி ஈண்டில், வெள்ளம் தரும். . . . .[201]
பெருவாய்த்தாய் நிற்கும் பெரிதும் - ஒருவாறு
ஒளியீண்டி நின்றால் உலகம் விளக்கும்
'துளியீண்டில் வெள்ளம் தரும்'. . . . .[201]
பொருளுரை:
விண்மீன்கள் ஒன்றுகூடி நின்றால் ஒருவகையாக இருள் நீங்க உலகத்தினை விளங்கச்செய்யும் மழைத்துளிகளும் இடைவிடாது ஒன்றுசேரில் கடலைப்போல் மிகுந்த நீரைத் தரும். (அவைபோல) (ஒருவனுக்கு) பொருள் வருவாய் சிறிதாயினும் நாடோறும் சோர்வின்றிச் சிறிதாயினும் சேர்த்து வைப்பின் மிகவும் பெரிய அளவினை உடையதாக ஆகும்.
கருத்து:
வருவாய் சுருங்கியதாயினும் நாடோறும் சிறிது சிறிதாகச் சேர்த்துவைத்தால் செல்வம் வளர்ந்து பெரிதாகும்.
எள்ளாமை வேண்டும்; - இலங்கிழாய்! - தள்ளாது
அழுங்கல் முது பதி அங்காடி மேயும்
பழங் கன்று ஏறு ஆதலும் உண்டு. . . . .[202]
எள்ளாமை வேண்டும் இலங்கிழாய்! - தள்ளாது
அழுங்கல் முதுபதி 'அங்காடி மேயும்
பழங்கன்று ஏறாதலும் உண்டு'. . . . .[202]
பொருளுரை:
விளங்குகின்ற இழையினை உடையாய்! ஒலியினையுடைய பழைய நகரில் கடைத்தெருவின்கண் நடக்கமுடியாது நடந்து மேய்கின்ற பழைய கன்று வலிய எருதாதலும் உண்டு. (ஆதலால்) ஒருவனுக்கு முதலாக இருக்கின்ற பொருளது சிறுமையை அவனது ஊரின் கண் வாழ்பவரால் ஐயமின்றி அறிந்தோமாயினும் அவனைப் பொருளிலான் என்று இகழா தொழிதல் வேண்டும்.
கருத்து:
பொருள் சிறிதுடையார் என்று யாரையும் இகழற்க.
வளம் மிக்கார் செல்வம் வருந்தா; - விளைநெல்
அரிநீர் அணை திறக்கும் ஊர்! - அறுமோ,
நரி நக்கிற்று என்று கடல்?. . . . .[203]
வளமிக்கார் செல்வம் வருந்தா - விளைநெல்
அரிநீர் அணைதிறக்கும் ஊர! 'அறுமோ
நரிநக்கிற்(று) என்று கடல்'. . . . .[203]
பொருளுரை:
விளைந்த நெல்லை அறுக்கும் பொருட்டு உழவர்கள் நீர் வடிய வடிகாலைத் திறக்கும் மருதநிலத் தலைவனே! நரி நக்கியது காரணமாகக் கடல்நீர் வற்றுதலுண்டோ (இல்லை). (அதுபோல) ஏவல்செய்வார் பலராலும் களவு செய்யப்படினும் பொருள் வருவாய் மிகுதியும் உடையாரது செல்வம் குறைந்து வருந்துதலில்லை.
கருத்து:
பொருள் வருவாய் மிக உடையார், களமர் களவு செய்ததால் செல்வம் குறைந்து வருந்தார்.
வாடிய காலத்தும், வட்குபவோ? - வாடி,
வலித்து, திரங்கி, கிடந்தேவிடினும்,
புலித் தலை நாய் மோத்தல் இல். . . . .[204]
வாடிய காலத்தும் வட்குபவோ! - வாடி
வலித்துத் திரங்கிக் கிடந்தே விடினும்
'புலித்தலையை நாய்மோத்தல் இல்'. . . . .[204]
பொருளுரை:
உணவு பெறாமையால் வாட்டமுற்று நரம்புகள்வலித்து உடல் சுருக்கத்தையடைந்து முதுமையால் படுத்தே கிடப்பினும் அங்ஙனம் கிடைக்கும் புலியது தலையை நாய் சென்று மோந்து பார்த்தல்கூட இல்லை (ஆகையால்) நாடு அறியப்பட்ட பெரும் செல்வர் உலகத்தாரால் அறியப்பட்ட மிகுந்த செல்வத்தினை யுடையார் வறுமை யுற்று தளர்ந்த இடத்தும் பிறருக்குத் தாழ்வாகத் தோன்றுவரோ? தோன்றார்.
கருத்து:
பெருஞ்செல்வ முடையார் தம் செல்வம் சுருங்கியவிடத்தும் பிறருக்குத் தாழ்வாகத் தோன்றார்.