நாலடியார்

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

நான்மணிக்கடிகை

நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும்

இனியவை நாற்பது

பூதஞ்சேந்தனார் இயற்றியது இனியவை நாற்பது. 40 வெண்பாக்களைக் கொண்டது. நான்கு பாடல்களில் இன்பம் தருவன

இன்னா நாற்பது

இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துக்களைக் கொண்டு

திரிகடுகம்

திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரிகடுகம் என்பது

ஆசாரக் கோவை

மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை. பண்டைக்காலத்

சிறுபஞ்சமூலம்

சிறுபஞ்சமூலம் என்பது ஐந்து சிறிய வேர்கள் என்று பொருள்படும். அவையாவன சிறுவழுதுணை வேர், நெருஞ்சி வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர்

முதுமொழிக்காஞ்சி

முதுமொழி என்பது பழமொழி என்னும் சொற்பொருளோடு தொடர்புடையது. காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும் ஒருவகை அணிகலக் கோவையையும்

பழமொழி நானூறு

பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள்

ஏலாதி

'ஏலாதி' என மருத்துவ நூல்களில் கூறப்படுவது ஏலம் ஆதியான ஆறு பொருள்கள் சேர்ந்த ஒரு வகைச் சூர்ணம். ஏலம் ஒரு பங்கு, இலவங்கப்பட்டை இரண்டு பங்கு,

திருக்குறள்

திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு விளங்குகின்றது. அறம், பொருள், இன்பம்

கார் நாற்பது

கார் நாற்பது அகப்பொருள் பற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது. கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையாலும்,

ஐந்திணை ஐம்பது

'ஐந்திணை ஐம்பது' முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்திணைக்கும் பத்துப் பாடல்களைப் பெற்றுள்ளமையால் 'ஐந்திணை ஐம்பது' எனப் பெயர் பெற்றது.

திணைமொழி ஐம்பது

திணைமொழி ஐம்பது குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்திணைகளுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் உள்ளன. அதனால் இந்நூல்

ஐந்திணை எழுபது

ஐந்திணை எழுபது ஐந்திணைகளில் ஒவ்வொன்றிற்கும் பதினான்கு பாடல்களைக் கொண்டு, எழுபது பாடல்களில் இந்நூல் அமைந்துள்ளது. இந் நூலின் முதலில் விநாயகரைக்

திணைமாலை நூற்றைம்பது

திணைமாலை நூற்றைம்பது பண்டைத் தமிழ் நூற் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கில் அடங்கியது. 153 பாடல்களைக் கொண்ட இது ஒரு அகப்பொருள் சார்ந்த நூல்.

கைந்நிலை

'கை' என்பது ஒழுக்கம் என்றும் பொருள்படும். ஐந்திணை ஒழுக்கம் பற்றியதே இந்நூலாகும். ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடலாக அறுபது பாடல்கள் இந் நூலில் உள்ளன.

களவழி நாற்பது

களவழி நாற்பது போர்க்களம் பற்றிய பாடல்களின் தொகுதியாகும். இந் நூலில் உள்ள பாடல்கள் எல்லாம் களத்து என்ற சொல்லை இறுதியில் கொண்டு முடிதல் கவனிக்கத் தக்கது.

பழமொழி நானூறு
பதினெண் கீழ்க்கணக்கு

பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்டது.

பழமொழி நானூறு


19. மறை பிறர் அறியாமை

பாடல் : 177
சுற்றத்தார், நட்டார், எனச் சென்று, ஒருவரை
அற்றத்தால் தேறார், அறிவுடையார்; - கொற்றப் புள்
ஊர்ந்து, உலகம் தாவிய அண்ணலேஆயினும்,
சீர்ந்தது செய்யாதார் இல். . . . .[177]

பொருளுரை:

வெற்றியையுடைய கருடன்மீது ஏறி வீற்றிருந்து உலகத்தைத் தாவியளந்த பெருமை பொருந்திய திருமாலே யாயினும் தனக்கு ஊதியந்தரும் சீரியதொன்றைச் செய்யாதொழிய விடுவார் இல்லை (ஆகையால்) அறிவிற் சிறந்தோர் உறவினர் மறைத்துச் செய்யும் காரியத்தின்கண் அவருள் ஒருவரையும் தெளிதல் இலர்.

கருத்து:

மறைத்துச் செய்யும் காரியத்தின்கண் யாவராயினும் நம்புதல் கூடாது.

பாடல் : 178
வெள்ள மாண்பு எல்லாம் உடைய தமர் இருப்ப,
உள்ள மாண்பு இல்லா ஒருவரைத் - தெள்ளி,
மறைக்கண் பிரித்து, அவரை மாற்றாது ஒழிதல்
பறைக்கண் கடிப்பு இடுமாறு. . . . .[178]

பொருளுரை:

வெள்ளத்தைப் போன்று அளத்தற்கரிய மாட்சிமைப்பட்ட குணங்களை உடைய உறவினர்களை இருப்பக்கொண்டு உள்ளத்தின்கண் மாட்சிமையில்லாத ஒருவரை ஆராய்ந்து சூழ்ச்சிக் கண்ணின்றும் நீக்கி அவரை விலக்காது விடுதல் பறையின்கண் குறுந்தடியையிட்டு அடித்ததோ டொக்கும்.

கருத்து:

சூழ்ச்சியின்கண் உள்ளம் மாட்சிமைப்பட்டாரைச் சேர்த்துக் கொள்க. அஃதிலாரை விலக்குக.

பாடல் : 179
அன்பு அறிந்தபின் அல்லால், யார் யார்க்கும், தம் மறையை
முன் பிறர்க்கு ஓடி மொழியற்க! - தின்குறுவான்
கொல்வாங்குக் கொன்றபின் அல்லது, உயக் கொண்டு,
புல்வாய் வழிப்படுவார் இல். . . . .[179]

பொருளுரை:

தின்னும்பொருட்டு கொல்லுகின்றபடியே கொன்ற பின்னர் அல்லது தப்பிப்போன பின்னர் மானினது தசையை அடுதற்குரிய நெறியின்கண் நிற்றல் இலர் (அதுபோல) தம்மாட்டு அவர் பூண்ட அன்பு அறிந்தபின்னரன்றி யாவரே யாயினும் தமது சூழ்ச்சியை பிறரிடம் முற்பட்டுஓடிச் சொல்லற்க.

கருத்து:

அன்புடையாரை அறிந்தே இரகசியத்தைக் கூறுக.

பாடல் : 180
நயவர நட்டு ஒழுகுவாரும் தாம், கேட்டது
உயவாது ஒழிவார் ஒருவரும் இல்லை;
புயல் அமை கூந்தல் பொலந்தொடீஇ! - சான்றோர்
கயவர்க்கு உரையார், மறை. . . . .[180]

பொருளுரை:

மேகம் போன்றமைந்த கூந்தலையும் பொன்னாலாகிய தொடியையும் உடையாய்!; அன்போடு பொருந்தத் தம்மோடு நட்புப் பூண்டவர்களும் தாம் கேட்டறிந்த மறையை பிறரிடம் கூறி ஆராயாது நீக்குவார் ஒருவரும் இல்லை (என்றாலும்) அறிஞர்கள் கீழ்மக்கட்கு இரகசியத்தை உரைத்தலிலர்.

கருத்து:

கீழ்மக்களிடம் இரகசியத்தை உரைத்தலாகாது.

பாடல் : 181
பெரு மலை நாட! - பிறர் அறியலாகா
அரு மறையை ஆன்றோரே காப்பர்; - அரு மறையை
நெஞ்சில் சிறியார்க்கு உரைத்தல், பனையின்மேல்
பஞ்சி வைத்து எஃகிவிட்டற்று. . . . .[181]

பொருளுரை:

பெரிய மலைநாட்டை உடையவனே! பிறர் அறியக்கூடாத அரிய இரகசியத்தை நிறைந்த அறிவுடையவர்களே வெளியிடாமல் காப்பார்கள் அரிய இரகசியத்தை நெஞ்சாற் சிறுமைப் பட்டார்க்குக் கூறுதல் பனையின் மீது பஞ்சினை வைத்து கொட்டினாற் போலாம்.

கருத்து:

அருமறையை அறிவுடையோரிடத்துக் கூறுக. அல்லாரிடத்துக் கூறற்க.

பாடல் : 182
விளிந்தாரே போலப் பிறர் ஆகி நிற்கும்
முறிந்தாரைத் தஞ்சம் மொழியலோ வேண்டா;
அளிந்தார்கண் ஆயினும், ஆராயான் ஆகித்
தெளிந்தான் விரைந்து கெடும். . . . .[182]

பொருளுரை:

தம்மாட்டு அன்புடையாரிடத்தாயினும் ஆராய்தல் இலனாகித் தெளிந்தவன் அழிந்து விடுவான் எப்பொழுதும் வெகுண்டாரே போல இருந்து அன்பின்மையின் வேறாகி நிற்கும் ஈரமற்றாரை (தேறவேண்டாம் என்று) உறுதியாகச் சொல்லவேண்டுவதில்லை.

கருத்து:

தம்மாட்டு அன்புடையாரிடத்தே ஆராயாது தம் மறையை வெளியிட்டார் கெடுவர் என்றால், பிறரை நம்பலாகாது என்பது சொல்ல வேண்டா.