நாலடியார்

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

நான்மணிக்கடிகை

நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும்

இனியவை நாற்பது

பூதஞ்சேந்தனார் இயற்றியது இனியவை நாற்பது. 40 வெண்பாக்களைக் கொண்டது. நான்கு பாடல்களில் இன்பம் தருவன

இன்னா நாற்பது

இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துக்களைக் கொண்டு

திரிகடுகம்

திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரிகடுகம் என்பது

ஆசாரக் கோவை

மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை. பண்டைக்காலத்

சிறுபஞ்சமூலம்

சிறுபஞ்சமூலம் என்பது ஐந்து சிறிய வேர்கள் என்று பொருள்படும். அவையாவன சிறுவழுதுணை வேர், நெருஞ்சி வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர்

முதுமொழிக்காஞ்சி

முதுமொழி என்பது பழமொழி என்னும் சொற்பொருளோடு தொடர்புடையது. காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும் ஒருவகை அணிகலக் கோவையையும்

பழமொழி நானூறு

பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள்

ஏலாதி

'ஏலாதி' என மருத்துவ நூல்களில் கூறப்படுவது ஏலம் ஆதியான ஆறு பொருள்கள் சேர்ந்த ஒரு வகைச் சூர்ணம். ஏலம் ஒரு பங்கு, இலவங்கப்பட்டை இரண்டு பங்கு,

திருக்குறள்

திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு விளங்குகின்றது. அறம், பொருள், இன்பம்

கார் நாற்பது

கார் நாற்பது அகப்பொருள் பற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது. கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையாலும்,

ஐந்திணை ஐம்பது

'ஐந்திணை ஐம்பது' முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்திணைக்கும் பத்துப் பாடல்களைப் பெற்றுள்ளமையால் 'ஐந்திணை ஐம்பது' எனப் பெயர் பெற்றது.

திணைமொழி ஐம்பது

திணைமொழி ஐம்பது குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்திணைகளுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் உள்ளன. அதனால் இந்நூல்

ஐந்திணை எழுபது

ஐந்திணை எழுபது ஐந்திணைகளில் ஒவ்வொன்றிற்கும் பதினான்கு பாடல்களைக் கொண்டு, எழுபது பாடல்களில் இந்நூல் அமைந்துள்ளது. இந் நூலின் முதலில் விநாயகரைக்

திணைமாலை நூற்றைம்பது

திணைமாலை நூற்றைம்பது பண்டைத் தமிழ் நூற் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கில் அடங்கியது. 153 பாடல்களைக் கொண்ட இது ஒரு அகப்பொருள் சார்ந்த நூல்.

கைந்நிலை

'கை' என்பது ஒழுக்கம் என்றும் பொருள்படும். ஐந்திணை ஒழுக்கம் பற்றியதே இந்நூலாகும். ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடலாக அறுபது பாடல்கள் இந் நூலில் உள்ளன.

களவழி நாற்பது

களவழி நாற்பது போர்க்களம் பற்றிய பாடல்களின் தொகுதியாகும். இந் நூலில் உள்ள பாடல்கள் எல்லாம் களத்து என்ற சொல்லை இறுதியில் கொண்டு முடிதல் கவனிக்கத் தக்கது.

பழமொழி நானூறு
பதினெண் கீழ்க்கணக்கு

பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்டது.

பழமொழி நானூறு


16. பிறர் இயல்பைக் குறிப்பால் உணர்தல்

பாடல் : 142
பேர் உலையுள் பெய்த அரிசியை வெந்தமை
ஓர் மூழையாலே உணர்ந்தாங்கு, யார்கண்ணும்
கண்டதனால் காண்டலே வேண்டுமாம்; யார்கண்ணும்
கண்டது காரணமாம் ஆறு. . . . .[142]

பொருளுரை:

யாவரிடத்தும் அறியப்பட்ட குணமே அறியப்படாத பிறவற்றையும் அறிதற்குரிய வழியாம் (ஆதலால்) கொதிக்கின்ற பெரிய உலையுள் இட்ட அரிசியை வெந்த விதத்தை ஓர் அகப்பைச் சோற்றாலே அறிந்ததைப்போல யாரிடத்தும் அறியப்பட்ட செயல் ஒன்று கொண்டே குணம்

கருத்து:

ஒருவருடைய செயல் கொண்டே அவரது குணம், ஒழுக்கம் முதலியவற்றை அறிய வேண்டும்.

பாடல் : 143
'யாம் தீய செய்த மலை மறைத்தது' என்று எண்ணி,
தாம் தீயார் தம் தீமை தேற்றாராய் ; - ஆம்பல்
மண இல் கமழும் மலி திரைச் சேர்ப்ப!
கணையிலும் கூரியவாம் கண். . . . .[143]

பொருளுரை:

ஆம்பல்பூக்கள் மணமனையைப்போல் நறுநாற்றம் கமழுகின்ற மிக்க அலைகளை உடைய கடல்நாடனே! நாம் செய்த தீயசெயல்களை மலையானது வெளிக்காட்டாது மறைத்தது என்று நினைத்து தீயசெயல்களையுடைய அவர்கள் தாம் செய்யும் தம் தீய செயல்களினின்றும் தெளிதல் இலர் மனத்து நிகழ்ச்சியை முகத்தின் வாயிலாக மிகவும் கூர்மையாகக் கண்கள் அறிந்து கொள்ளலின் அவை அம்பினும் கூர்மையுடையனவாம்.

கருத்து:

பிறரது உள்ள நிகழ்ச்சியை அறிவதற்குக் கண்களே சிறந்த கருவிகளாம்.

பாடல் : 144
வெள்ளம் வருங்காலை ஈரம்பட்டு; அஃதேபோல்,
கள்ளம் உடையாரைக் கண்டே அறியலாம்;
ஒள் அமர்க் கண்ணாய்! - ஒளிப்பினும், உள்ளம்
படர்ந்ததே கூறும், முகம். . . . .[144]

பொருளுரை:

ஒளிபொருந்திய கண்ணை உடையாய்! வெள்ளம் வருகின்ற காலத்தில் ஈரம் பொருந்திய மணலைப்போல வஞ்சனையான எண்ணம் உடையாரை மனத்தை முகங் காட்டுதலின் அதனைக் கொண்டே அறிந்து கொள்ளலாம் தங்கருத்தை வெளித்தோன்றாமல் ஒருவர் மறைப்பினும் முகமானது அவர் மனத்தில் உள்ளதையே வெளிப்படுக்குமாகலான்.

கருத்து:

மறைப்பினும் உள்ளத்தில் உள்ளவாறே முகம்காட்டு மென்பதாம்.

பாடல் : 145
நோக்கி அறிகல்லாத் தம் உறுப்பு, கண்ணாடி
நோக்கி, அறிய அதுவேபோல் - நோக்கி,
முகன் அறிவார் முன்னம் அறிய; அதுவே,
மகன் அறிவு தந்தை அறிவு. . . . .[145]

பொருளுரை:

தம் கண்ணால் நோக்கி அறியமுடியாத தமது உறுப்பாகிய முகத்தை கண்ணாடியில் பார்த்துத் தெரிந்துகொள்வர் அதேபோல் நோக்கி ஒருவன் முகத்தை அறிகின்றவர்கள் காணமுடியாத அவனது உட்கருத்தை அறிவார்கள் உள்ளத்தின் கருத்தை அவர் முகம் நோக்கி அறிதல் தந்தையினது அறிவை அவன் மகனது அறிவு நோக்கி அறிதல் போலும்.

கருத்து:

முகத்தால் உள்ளக் கருத்து அறியப்படும்.

பாடல் : 146
ஓரும் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத்
தேரும் திறம் அரிதால்; - தேமொழி - ஆரும்
குலக் குல வண்ணத்தர் ஆகுப; ஆங்கே,
புலப் புல வண்ணத்த, புள். . . . .[146]

பொருளுரை:

தேன் போன்ற சொற்களை உடையாய்! ஒருவரது உள்ளத்தின் தன்மை ஆராய விரும்பும் ஒருவரால் ஆராயும் திறம் இல்லை நிலந்தோறும் தாம் வாழும் நிலத்திற்குத் தக்க தன்மையாயிருக்கும் புட்கள் அதுபோல மக்கள் குலங்கள்தோறும் அவ்வக் குலத்திற்குரிய தன்மையை உடையவராயிருப்பார்கள்.

கருத்து:

ஒருவரது குலத்தால் அவரது குணம் அறியப்படும்.

பாடல் : 147
காப்பான் மட மகள், காப்பான் கைப்பட்டிருந்தும்,
'மேய்ப்பு ஆட்டது' என்று உண்ணாள் ஆயினாள் - தீப் புகைபோல்
மஞ்சு ஆடு வெற்ப! - மறைப்பினும், ஆகாதே,
தம் சாதி மிக்குவிடும். . . . .[147]

பொருளுரை:

தீயினது புகையைப்போல் மேகம் பரவி உலாவுகின்ற மலைநாடனே! மந்தையைக் காக்கும் இடையனின் மகள் உலகத்தினைக் காக்கும் அரசனுக்கு மனைவியாயிருந்தும் (ஒருநாள் பால் உண்ணும்போது) மேய்ச்சல் ஆட்டினது பால் இதுவாதலால் மதுரமாயிருந்ததில்லை யென்று அப்பாலை உண்ணாது நீக்கினாள் ஒருவர் தங்குலத்திற்குரிய ஒழுக்கத்தை மறைத்தாராயினும் மறைபடாது தம் சாதி மிக்குவிடும் - தமது குலத்திற் குரிய ஒழுக்கம் அவருக்கு முற்பட்டுத் தோன்றிக் குலத்தினைப் பிறரறியச் செய்யும்.

கருத்து:

குலத்திற்குரிய ஒழுக்கம் மறைப்பினும் மறைபடாது முற்பட்டுத் தோன்றும்.

பாடல் : 148
முயலவோ வேண்டா; முனிவரையானும்
இயல்பு இன்னர் என்பது இனத்தான் அறிக!
கயல் இகல் உண் கண்ணாய்! - கரியரோ வேண்டா;
அயல் அறியா அட்டூணோ இல். . . . .[148]

பொருளுரை:

சேலை ஒத்து விளங்கும் கண்ணை உடையாய்! அயல் மனையாரால் அறியப்படாது சமைக்கப்படும் உணவோ இல்லை ஒருவரது இயல்பை யறிய மற்றொன்றால் அறிய வேண்டுவதில்லை முனிவரேயாயினும் நல்ல இயல்பினை உடையார் தீய இயல்பினை உடையார் என்பதை அவரால் கூடப்பட்ட இனத்தாரால் அறிக. (ஆகையால்) சாட்சி சொல்வோர் வேண்டுவதில்லை.

கருத்து:

ஒருவருடைய இயல்பை அவரது இனத்தால் அறியலாம்.