நாலடியார்
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
நான்மணிக்கடிகை
நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும்
இனியவை நாற்பது
பூதஞ்சேந்தனார் இயற்றியது இனியவை நாற்பது. 40 வெண்பாக்களைக் கொண்டது. நான்கு பாடல்களில் இன்பம் தருவன
இன்னா நாற்பது
இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துக்களைக் கொண்டு
திரிகடுகம்
திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரிகடுகம் என்பது
ஆசாரக் கோவை
மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை. பண்டைக்காலத்
சிறுபஞ்சமூலம்
சிறுபஞ்சமூலம் என்பது ஐந்து சிறிய வேர்கள் என்று பொருள்படும். அவையாவன சிறுவழுதுணை வேர், நெருஞ்சி வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர்
முதுமொழிக்காஞ்சி
முதுமொழி என்பது பழமொழி என்னும் சொற்பொருளோடு தொடர்புடையது. காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும் ஒருவகை அணிகலக் கோவையையும்
பழமொழி நானூறு
பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள்
ஏலாதி
'ஏலாதி' என மருத்துவ நூல்களில் கூறப்படுவது ஏலம் ஆதியான ஆறு பொருள்கள் சேர்ந்த ஒரு வகைச் சூர்ணம். ஏலம் ஒரு பங்கு, இலவங்கப்பட்டை இரண்டு பங்கு,
திருக்குறள்
திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு விளங்குகின்றது. அறம், பொருள், இன்பம்
கார் நாற்பது
கார் நாற்பது அகப்பொருள் பற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது. கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையாலும்,
ஐந்திணை ஐம்பது
'ஐந்திணை ஐம்பது' முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்திணைக்கும் பத்துப் பாடல்களைப் பெற்றுள்ளமையால் 'ஐந்திணை ஐம்பது' எனப் பெயர் பெற்றது.
திணைமொழி ஐம்பது
திணைமொழி ஐம்பது குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்திணைகளுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் உள்ளன. அதனால் இந்நூல்
ஐந்திணை எழுபது
ஐந்திணை எழுபது ஐந்திணைகளில் ஒவ்வொன்றிற்கும் பதினான்கு பாடல்களைக் கொண்டு, எழுபது பாடல்களில் இந்நூல் அமைந்துள்ளது. இந் நூலின் முதலில் விநாயகரைக்
திணைமாலை நூற்றைம்பது
திணைமாலை நூற்றைம்பது பண்டைத் தமிழ் நூற் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கில் அடங்கியது. 153 பாடல்களைக் கொண்ட இது ஒரு அகப்பொருள் சார்ந்த நூல்.
கைந்நிலை
'கை' என்பது ஒழுக்கம் என்றும் பொருள்படும். ஐந்திணை ஒழுக்கம் பற்றியதே இந்நூலாகும். ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடலாக அறுபது பாடல்கள் இந் நூலில் உள்ளன.
களவழி நாற்பது
களவழி நாற்பது போர்க்களம் பற்றிய பாடல்களின் தொகுதியாகும். இந் நூலில் உள்ள பாடல்கள் எல்லாம் களத்து என்ற சொல்லை இறுதியில் கொண்டு முடிதல் கவனிக்கத் தக்கது.
பழமொழி நானூறு
பதினெண் கீழ்க்கணக்கு
பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்டது.
பழமொழி நானூறு
15. நட்பில் விலக்கு
எண்ணுந் துணையிற் பிறராகி நிற்பராய்
எண்ணி உயிர் கொள்வான் வேண்டித் திரியினும்,
உண்ணும் துணைக் காக்கும், கூற்று. . . . .[135]
எண்ணும் துணையில் பிறராகி நிற்பராய்
எண்ணிஉயிர் கொள்வான் வேண்டித் திரியினும்
'உண்ணும் துணைக்காக்கும் கூற்று'. . . . .[135]
பொருளுரை:
இயமன் ஆராய்ந்து உயிரை உண்ணும் பொருட்டு விரும்பித் திரிவானேயாயினும் தான் உண்ண வேண்டிய காலம் வருமளவும் உயிரைப் பாதுகாத்து நிற்பான். (அதுபோல) கண்ணினுள்ளேயிருக்கும் கருமணியைப்போல் தம் கருமத்தின்மேல் உள்ள ஆசையால் தம்மோடு நட்புச் செய்தவர்களும் தமக்கு ஆக வேண்டிய கருமம் முடிந்தது என்று நினைத்த அளவில் முன்னர் இருந்தவராக அன்றி வேறொருவராக நிற்பர்.
கருத்து:
கீழ்மக்கள் தாம் காரியம் முடியுமளவும் அதை முடிக்கவல்லாருடனிருந்து முடிந்தவுடன் விட்டு நீங்குவார்கள்.
உற்றுழி ஒன்றுக்கு உதவலர் - பைத்தொடீஇ!
அச்சு இடையிட்டுத் திரியின், அது அன்றோ,
மச்சு ஏற்றி, ஏணி களைவு. . . . .[136]
உற்றுழி ஒன்றுக்கு உதவலர் பைந்தொடீஇ!
அச்சிடை இட்டுத் திரியின் அதுவன்றோ
'மச்சேற்றி ஏணி களைவு'. . . . .[136]
பொருளுரை:
பசுமையான பொன் வளையலை உடையாய்! தளர்வு வந்த இடத்து வைத்த பெருநிதியை ஒப்ப உதவி செய்வர் எனக் கருதி நம்மால் விரும்பி நட்புக் கொள்ளப்பட்டவர் நமக்கு ஓர் இடையூறு வந்துற்ற விடத்து ஒரு சிறிதும் உதவிசெய்யாதவராகி அச்சம் காரணமாக மறுத்தொழுகின் அச் செய்கை ஒருவனை மச்சின்மீது ஏற்றி ஏணி நீக்குதலை யொக்கும் அல்லவா!
கருத்து:
தம்மையே அடைக்கலமாக நினைத்து அடைந்தவர் ஒரு தீதுற்றால் தமக்கு இறுதி பயப்பினும் அவர்க்கு முன்னின்று உதவுதல்வேண்டும்.
தாக்கி அமருள் தலைப்பெய்யார், போக்கி,
வழியராய் நட்டார்க்கு மா தவம் செய்வாரே
கழி விழாத் தோள் ஏற்றுவார். . . . .[137]
தாக்கி அமருள் தலைப் பெய்யார் - போக்கி
வழியராய் நட்டார்க்கு மாதவம் செய்வாரே
'கழிவிழாத் தோளேற்று வார்'. . . . .[137]
பொருளுரை:
பாம்புக் கொடியை உடைய துரியோதனனுக்கு போர் ஏற்பட்டவுடன் அதற்குதவாது சென்ற பால்போன்ற உடம்பினையுடைய பலராமனைப் போல வழி வழியாகத் தம்மோடு நட்பினைச் செய்தார் பொருட்டு மிகத் துன்புறுத்தும் போரின்கண் கலத்தலிலராய் அவர் உயிரைப் பகைவரால் போகச் செய்து இறந்தார் பொருட்டு நீத்தார் கடனைச் சிறப்பாகச் செய்பவர்கள் கழிந்த விழாவினை உடைய ஊரில் தம் புதல்வற்கு விழாக்காட்டும்பொருட்டு அவரைத் தோள்மீது சுமப்பாரோடொப்பர்.
கருத்து:
நட்டார் துன்புற்றபோது அவர்க்காவன செய்யாது அவர் இறந்தபின் சிறப்புச் செய்தல் கீழ்மக்களது செய்கையாகும்.
தலையாயார் ஆராய்ந்தும் காணார்; கடையாயர்
முன் நின்று கூறும் குறளை தெரிதலால்,
பின் இன்னா, பேதையார் நட்பு. . . . .[138]
தலையாயர் ஆராய்ந்தும் காணார் - கடையாயர்
முன்னின்று கூறும் குறளை தெரிதலால்
'பின்னின்னா பேதையார் நட்பு'. . . . .[138]
பொருளுரை:
மேம்பட்ட குணங்களை உடையவர்கள் கோள் கூறிய இவர்கள் நம் நட்டாரோடு மாறுபாடு உடையவர் என்று நினைத்து அவர் கூறியனவற்றை ஆராய்ச்சி செய்து குற்றம் காண்பதிலர் கடைப்பட்ட குணங்களை உடைய கீழோர் தம் நட்டார் மேல் பிறர் வந்து கூறும் கோள்களை ஆராய்ச்சி செய்து அவர் குற்றங்களைக் காண்டலின் அறிவிலாரோடு கொண்ட நட்பு பின்னர் இன்னாததாக முடியும்.
கருத்து:
அறிவுடையோர் நட்டார் குற்றத்தைக் காணமாட்டார்கள், அறிவிலார் அவர் குற்றத்தை ஆராய்ந்து காண்பார்கள்.
நாண் அகத்துத் தாம் இன்றி நன்கு ஒழுகார் ஆயினென்,
மான் மானும் கண்னால் மறந்தும் பரியலரா
கானகத்து உக்க நிலா. . . . .[139]
நாணகத்துத் தாமின்றி நன்றொழுகார் ஆயினென்
மான்மானும் கண்ணாய்! மறந்தும் பரியலரா
'கானகத்து உக்க நிலா'. . . . .[139]
பொருளுரை:
மான்போன்ற (மருண்ட) நோக்கினை உடையாய் தாம் மனத்தால் நட்புப்பூண்டு சுற்றத்தார் என்னும்படி ஒழுகியவிடத்தும் தம்மால் நட்பாகக் கொள்ளப்பட்டார் மனதின் கண் நாணம் இல்லாது அந்நட்பால் என்ன பயனுண்டாம்? மறந்தும் மனத்தால் நட்புச்செய்த அவர்கள் மறந்தும் இரங்குதல் இலர் அந்நட்பு (அனுபவித்தற்குரிய மக்களில்லாத) காட்டில் எறித்த நிலவினை ஒக்கும்.
கருத்து:
கீழ்மக்களோடு கொண்ட நட்புப் பயனற்று ஒழியும்.
பண்டு அறிவார் போலாது, தாமும் அவரேபோல்,
விண்டு ஒரீஇ, மாற்றிவிடுதல்! - அது அன்றோ,
விண்டற்கு விண்டல் மருந்து. . . . .[140]
பண்டறிவார் போலாது தாமும் அவரேபோல்
விண்டொரீஇ மாற்றி விடுதல் அதுவன்றோ
'விண்டற்கு விண்டல் மருந்து'. . . . .[140]
பொருளுரை:
(முன்னரே அறிந்து வைத்தும்) கண்டு அறிவார் போலாராகி நட்பு இன்மையை உண்டாக்குவாரை தாமும் முன்னரே அறிவார்போன்று இல்லாது அவர் நட்பின்மையை உண்டாக்கியது போல அவரின் பிரிந்துநீங்கி நட்பினை மாற்றிவிடுக அச்செய்கை தன்னிடத்துப் பூண்ட அன்பினை நீக்கியதனுக்குத் தானும் அதுநீக்குதல் மருந்தாமாறு போலாகுமல்லவா!
கருத்து:
தம்மை நன்றாக அறிந்திருந்தும் அறியாதார் போன்றுநடிப்பார் நட்பு விடுதற்குரியதாகும்.
திரிவு இன்றித் தீர்ந்தார்போல் சொல்லி, அவருள்
ஒருவரோடு ஒன்றி ஒருப்படா தாரே,
இரு தலைக் கொள்ளி என்பார். . . . .[141]
திரிவின்றித் தீர்ந்தார்போல் சொல்லி அவருள்
ஒருவரோ டொன்றி ஒருப்படா தாரே
'இருதலைக் கொள்ளியென் பார்'. . . . .[141]
பொருளுரை:
தம்மிடத்தில் மிகுதியாக நட்புப் பூண்டவர்க்கும் அவரது பகைவர்க்கும் அவரிடத்திற் சென்று மனவேறுபாடு இன்றி மிகவும் நட்டார்போன்று நின்று அவர்களது பகைமையை வளர்க்கும் சொற்களைச் சொல்லி அவர்களுள் ஒருவரோடு மனம் பொருந்த இருந்து உறுதியாயின செய்ய மனமியையாதார் இருகடையாலும் சுடுகின்ற கட்டை என்று சொல்லப்படுவார்.
கருத்து:
ஏற்பன கூறி இருவரது பகைமையை வளர்த்தல் அறிவிலாரது இயல்பு.