நாலடியார்

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

நான்மணிக்கடிகை

நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும்

இனியவை நாற்பது

பூதஞ்சேந்தனார் இயற்றியது இனியவை நாற்பது. 40 வெண்பாக்களைக் கொண்டது. நான்கு பாடல்களில் இன்பம் தருவன

இன்னா நாற்பது

இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துக்களைக் கொண்டு

திரிகடுகம்

திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரிகடுகம் என்பது

ஆசாரக் கோவை

மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை. பண்டைக்காலத்

சிறுபஞ்சமூலம்

சிறுபஞ்சமூலம் என்பது ஐந்து சிறிய வேர்கள் என்று பொருள்படும். அவையாவன சிறுவழுதுணை வேர், நெருஞ்சி வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர்

முதுமொழிக்காஞ்சி

முதுமொழி என்பது பழமொழி என்னும் சொற்பொருளோடு தொடர்புடையது. காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும் ஒருவகை அணிகலக் கோவையையும்

பழமொழி நானூறு

பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள்

ஏலாதி

'ஏலாதி' என மருத்துவ நூல்களில் கூறப்படுவது ஏலம் ஆதியான ஆறு பொருள்கள் சேர்ந்த ஒரு வகைச் சூர்ணம். ஏலம் ஒரு பங்கு, இலவங்கப்பட்டை இரண்டு பங்கு,

திருக்குறள்

திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு விளங்குகின்றது. அறம், பொருள், இன்பம்

கார் நாற்பது

கார் நாற்பது அகப்பொருள் பற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது. கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையாலும்,

ஐந்திணை ஐம்பது

'ஐந்திணை ஐம்பது' முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்திணைக்கும் பத்துப் பாடல்களைப் பெற்றுள்ளமையால் 'ஐந்திணை ஐம்பது' எனப் பெயர் பெற்றது.

திணைமொழி ஐம்பது

திணைமொழி ஐம்பது குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்திணைகளுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் உள்ளன. அதனால் இந்நூல்

ஐந்திணை எழுபது

ஐந்திணை எழுபது ஐந்திணைகளில் ஒவ்வொன்றிற்கும் பதினான்கு பாடல்களைக் கொண்டு, எழுபது பாடல்களில் இந்நூல் அமைந்துள்ளது. இந் நூலின் முதலில் விநாயகரைக்

திணைமாலை நூற்றைம்பது

திணைமாலை நூற்றைம்பது பண்டைத் தமிழ் நூற் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கில் அடங்கியது. 153 பாடல்களைக் கொண்ட இது ஒரு அகப்பொருள் சார்ந்த நூல்.

கைந்நிலை

'கை' என்பது ஒழுக்கம் என்றும் பொருள்படும். ஐந்திணை ஒழுக்கம் பற்றியதே இந்நூலாகும். ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடலாக அறுபது பாடல்கள் இந் நூலில் உள்ளன.

களவழி நாற்பது

களவழி நாற்பது போர்க்களம் பற்றிய பாடல்களின் தொகுதியாகும். இந் நூலில் உள்ள பாடல்கள் எல்லாம் களத்து என்ற சொல்லை இறுதியில் கொண்டு முடிதல் கவனிக்கத் தக்கது.

பழமொழி நானூறு
பதினெண் கீழ்க்கணக்கு

பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்டது.

பழமொழி நானூறு


13. கீழ்மக்கள் செய்கை

பாடல் : 107
நெறியால் உணராது நீர்மையும் இன்றி,
சிறியார், 'எளியரால்!' என்று, - பெரியாரைத்
தங்கள் நேர் வைத்து, தகவு அல்ல கூறுதல்
திங்களை நாய் குரைத்தற்று. . . . .[107]

பொருளுரை:

அறிவிலார் அறிவுடையோர்களை நெறியால் உணராது தகுதியும் இன்றி தாழ்மையானவர் என்று நினைத்து தங்களுக்கு முன்பு அவர்களை இருக்கச் செய்து தகுதியல்லாத வார்த்தைகளைச் சொல்லுதல் மதியை நாய் குரைத்தாற் போலும்.

கருத்து:

சிறியோர்கள் பெரியோர்களைப் பார்த்து அடாதன கூறுதல் சந்திரனை நாய் குரைத்தாற் போலும்.

பாடல் : 108
'மறுமை ஒன்று உண்டோ ? மனப்பட்ட எல்லாம்
பெறுமாறு செய்ம்மின்' என்பாரே - நறு நெய்யுள்
கட்டி அடையைக் களைவித்து, கண் சொரீஇ,
இட்டிகை தீற்று பவர். . . . .[108]

பொருளுரை:

மறுமை என்பது ஒன்று உளதோ? மனம் விரும்பியவற்றையெல்லாம் அடையும் தன்மையைச் செய்யுங்கள் என் றுபதேசிப்பவர் நல்ல நெய்யுள் தோய்க்கப் பெற்றுப் பாகு கலந்த அடையை உண்ணாமல் நீக்கி கண்களை மூடிச் நெங்கல்லை உண்ணச் செய்பவரோடு ஒப்பர்.

கருத்து:

அறிவில்லார் நன்னெறி யிருக்கவும் தீநெறியைப் போதிப்பார்கள்.

பாடல் : 109
கண் இல் கயவர் கருத்து உணர்ந்து, கைம்மிக
நண்ணி, அவர்க்கு நலனுடைய செய்பவேல்,
எண்ணி இடர் வரும் என்னார், புலி முகத்து
உண்ணி பறித்துவிடல். . . . .[109]

பொருளுரை:

கண்ணோட்டம் இல்லாத கீழ்மக்களது எண்ணத்தை அறிந்து செயல் மிக அவரையடைந்து அவர்க்கு வேண்டிய நன்மைகளைச் செய்வாராயின் துன்பம் வரும் என்பதை ஆராயாதவராகி இரக்கத்தால் புலியினது முகத்தின்கண் உள்ள உண்ணியை எடுத்து விடுதலோ டொக்கும்.

கருத்து:

தீயவர்களுக்கு நன்மை செய்தல் தனக்குக் கேடு தேடிக்கொள்ளுதலாக முடியும்.

பாடல் : 110
திருந்தாய் நீ, ஆர்வத்தை! தீமை உடையார்,
'வருந்தினார்' என்றே வயப்படுவது உண்டோ?
அரிந்து அரிகால் பெய்து அமையக் கூட்டியக் கண்ணும்,
பொருந்தா மண், ஆகா, சுவர். . . . .[110]

பொருளுரை:

அரிதாளை அரிந்து செப்பம் செய்து பொருந்துமாறு தலைக் கூட்டிய விடத்தும் அவர் எடுக்கும் பொழுதே பொருந்தாத மண் பின்னர்ப் பொருந்திச் சுவராக ஆதல் இல்லை (ஆதலால்) நம் பொருட்டு இவர் வருத்தமுற்றார் என்பதற்காக வசமாகப் பொருந்துதல் உண்டோ (இல்லை) நெஞ்சே அவர்மேல் பூண்ட அன்பினை விட்டுத் திருந்துவாயாக.

கருத்து:

கீழ்மக்களுக்கு நன்மை செய்யினும் அதைஉட்கொண்டு செய்தார் விருப்பம்போல் நடவார்.

பாடல் : 111
குலத்துச் சிறயார், கலாம் தணிப்பான் புக்கு
விலக்குவார் மேலும், எழுதல் - நிலத்து
நிலை அழுங்க வேண்டிப் புடைத்தக்கால், வெண் மாத்
தலை கீழாக் காதிவிடல். . . . .[111]

பொருளுரை:

குலத்தினால் சிறியவர்கள் (பிறரிடம் கொண்ட) பகைமையை நீக்கும்பொருட்டு இடைப்புகுந்து விலக்குவாரிடத்தும் சினந்து எழுதல் அவ்விடத்தில் நிற்கின்ற நிலை நீங்கும் பொருட்டு (சாட்டையால்) அடித்தவிடத்து வெள்ளிய குதிரையானது சவாரி செய்யத் தெரியாதவனைத் தலைகீழாகத் தள்ளித் துன்புறுத்துவதோ டொக்கும்.

கருத்து:

கீழ்மக்கள் தமக்கு நன்மை செய்வோரிடத்திலும் வெகுண்டு எழுவார்கள்.

பாடல் : 112
சொல் எதிர்ந்து, தம்மை வழிபட்டு ஒழுகலராய்,
கல் எறிந்தாற் போலக் கலாம் தலைக்கொள்வாரை
இல் இருந்து, ஆற்ற முனிவித்தல், - உள் இருந்து,
அச்சாணி தாம் கழிக்குமாறு. . . . .[112]

பொருளுரை:

தாங்கூறும் அறிவுரைகளை யேற்றுக்கொண்டு தம்மை வழிபாடு செய்து ஒழுகாதவராய் கற்களை வீசினாற்போன்ற தீய சொற்களைச் சொல்லிப் பகைமையை மேற்கொள்வாரை அவர் வீட்டினுள்ளேயிருந்து மிகவும் அவரை முனிவித்தல் தேரின் உள்ளே இருந்து அச்சின் கண்சொருகும் ஆணியைத் தாமே நீக்கிவிடுவது போலாம்.

கருத்து:

கீழ்மக்களது அருகில் இருந்து அவருக்குச் சின மூட்டுதல் தனக்குத் தீங்கினை விளைவித்துக் கொள்வதாக முடியும்.

பாடல் : 113
நாணார், பரியார், நயன் இல செய்து ஒழுகும்
பேணா அறிவு இலா மாக்களைப் பேணி,
ஒழுக்கி, அவரோடு உடனுறைசெய்தல்
புழுப் பெய்து புண் பொதியுமாறு. . . . .[113]

பொருளுரை:

நன்மையில்லாத செயல்களைச் செய்து ஒழுகுகின்ற யாவரானும் விரும்பப்படாத அறிவு இல்லாத விலங்கு ஒப்பாரை விரும்பிநடத்தி அவருடன் கூடி வாழ்தலைச் செய்தல் புழுவினை உள்ளே இட்டுப் புண்ணை மூடிவைத்ததோடு ஒக்கும்.

கருத்து:

தீயாரோடு உடனுறையின் தீமையே விளையும்.

பாடல் : 114
பொல்லாத சொல்லி, மறைந்து ஒழுகும் பேதைகள்
சொல்லாலே தன்னைத் துயர்ப்படுக்கும்; - நல்லாய்!
மணலுள் முழுகி மறைந்து கிடக்கும்
நுணலும் தன் வாயால் கெடும். . . . .[114]

பொருளுரை:

நற்குணமுடையாய்! மணலுள் பதிந்து மறைந்திருக்கும் தவளையும் தன்குரலைக் காட்டுதலால் தன் வாயாலேயே தன்னைத் தின்பார்க்கு அகப்பட்டு இறந்தொழியும் தீயனவற்றைக்கூறி ஒளித்து நிற்கும் அறிவிலான் தான்கூறும் சொற்களாலேயே தன்னைத் துன்பத்தின்கண் அகப்படுத்திக் கொள்வான்.

கருத்து:

அறிவிலான் தன் வாயாலேயே தனக்குத் தீங்கு தேடிக்கொள்வான்.

பாடல் : 115
தாக்குற்ற போழ்தில் தமரேபோல் நன்கு உரைத்து,
போக்குற்ற போழ்தில் புறன் அழீஇ, மேன்மைக்கண்
நோக்கு அற்றவரைப் பழித்தல் என்? என்னானும்,
மூக்கு அற்றதற்கு இல், பழி. . . . .[115]

பொருளுரை:

எப்படி ஆயினும் மூக்கு அறுபட்டதற்குப் பழிப்பு இல்லை (அதுபோல) ஒருவரைத் தலைப்பட்ட பொழுது தம் உறவினரைப்போல் அன்புடன் நன்றாகப் புகழ்ந்துரைத்து அவர் நீங்கிய இடத்து புறம் பேசுபவர்களைப் பற்றி அழித்துப் பேசுபவரால் மேன்மைக் குணத்தின்கண் கருத்து இல்லாதவர்களை இகழ்ந்துரைத்தல் ஏன்?

கருத்து:

புறங்கூறுவார் என்றும் திருந்தார்.

பாடல் : 116
கோவாத சொல்லும் குணன் இலா மாக்களை
நாவாய் அடக்கல் அரிது ஆகும்; - நாவாய்
களிக்கள்போல் தூங்கும் கடல் சேர்ப்ப! - வாங்கி
வளி தோட்கு இடுவாரோ இல். . . . .[116]

பொருளுரை:

மரக்கலங்கள் கள்ளுண்டு ஆடும் களியர்போல ஆடுகின்ற கடல் நாடனே! காற்றினை ஒரு கொள்கலத்துள் வாங்கி தோள்களுக்கு இடவல்லார் உளரோ? இல்லை. (அதுபோல) பொருத்தமில்லாதவைகளைக் கூறும் நற்குணங்கள் ஒரு சிறிதும் இல்லாத விலங்கொப்பாரை நாவினிடத்து அடக்குதல் இல்லையாம்.

கருத்து:

கீழ்மக்களின் நாவினை அடக்குதல் முடியாது.

பாடல் : 117
தெரியாதார் சொல்லும் திறன் இன்மை தீதாப்
பரியார், பயன் இன்மை செய்து, பெரியார் சொல்
கொள்ளாது, தாம் தம்மைக் காவாதவர், - பிறரைக்
கள்ளராச் செய்குறு வார். . . . .[117]

பொருளுரை:

(நன்மை தீமை) அறியாதார் கூறும் திறப்பாடில்லாச் செயல்களை தீதாக நினைத்து நீக்கார் அவர் கூறிய பயனற்ற செயல்களைச் செய்து அறிவிற் பெரியோர் கூறும் அறிவுரையை மனதுட்கொள்ளாது குற்றங்களினின்றும் தம்மைத்தாமே காத்துக்கொள்ள இயலாதவர்கள் தாம் செய்த குற்றத்தைக் கூறுகின்றவர்களை குற்றம் உடையவர்களாகச் செய்வார்கள்.

கருத்து:

கீழ்மக்கள் தமது குற்றத்தை எடுத்துக் காட்டுபவர்களைக் குற்றவாளியாகச் செய்வார்கள்.

பாடல் : 118
செய்த கொடுமை உடையான், அதன் பயம்
எய்த உரையான், இடரினால்; - எய்தி
மரிசாதியாய் இருந்த மன்று அஞ்சுவாற்குப்
பரிகாரம் யாதொன்றும் இல். . . . .[118]

பொருளுரை:

நீதிமான்கள் பலரும் திரண்டு இருந்த அவையினைக் கண்டு அஞ்சி உண்மையைக் கூறுகின்றவர்களுக்குச் செய்கின்றது யாதொன்றுமில்லை யாதலால் செய்த தீமையை உடையவன் பிறர் கேட்டவிடத்துக் கூறினால் வரும்அச்சம் தன்னை வந்தடைய அத்துன்பத்தால் கூறுவானல்லன்.

கருத்து:

கீழ்மக்கள் உண்டாகும் துன்பத்திற் கஞ்சி நியாயசபையிலன்றி உண்மையைக் கூறமாட்டார்கள்.

பாடல் : 119
முதுமக்கள் அன்றி, முனி தக்கார் ஆய
பொதுமக்கள் பொல்லா ஒழுக்கம் அது - மன்னும்
குன்றத்து வீழும் கொடி அருவி நல் நாட!
மன்றத்து மையல் சேர்ந்தற்று. . . . .[119]

பொருளுரை:

நிலைபெற்ற மலையினின்றும் இழியும் கொடிபோன்ற அருவியை உடைய நல்ல மலைநாடனே! அறிவால் நிரம்பிய மக்களாய் இல்லையாதலோடு வெறுக்கத்தக்கவர்களாகிய சிறப்பில்லாத மக்கள் தீய ஒழுக்கத்தைப் பூண்டிருத்தல் ஆகிய அது நான்கு வீதிகள் சேரும் சதுக்கத்திலே பித்து ஏறியவன் இருந்ததை ஒக்கும்.

கருத்து:

கீழ்மக்களது தீய ஒழுக்கம் மிகவும் அஞ்சத்தக்கது.

பாடல் : 120
தருக்கி ஒழுகித் தகவு அல்ல செய்தும்,
பெருக்க மதித்தபின் பேணாத செய்தும்,
கரப்புடை உள்ளம் கனற்று பவரே
செருப்பிடைப் பட்ட பரல். . . . .[120]

பொருளுரை:

(பிறர் தன்னை மதியாத இடத்து) தன்னைத்தானே மதித்து ஒழுகித் தகுதியல்லாத செயல்களைச் செய்தும் பிறர் தன்னை மிகுதியும் மதித்த இடத்து அவர் விரும்பத் தகாதனவற்றைச் செய்தும் மறைந்த எண்ணங் கொண்டு பிறரை வருத்துபவர் செருப்பின்கண் பொருந்தி இருக்கும் பருக்கைக் கல்லை ஒப்பர்.

கருத்து:

கரந்த உள்ளமுடைய கீழ்மக்கள் பெரியோர் செய்யும் செயல்களுக்கு இடையூறாக நிற்பர்.

பாடல் : 121
உறு மக்கள் ஆக ஒருவனை நாட்டி,
பெறு மாற்றம் இன்றி, பெயர்த்தே ஒழிதல்
சிறுமைக்கு அமைந்தது ஓர் செய்கை; - அதுவே,
குறுமக்கள் காவு நடல். . . . .[121]

பொருளுரை:

வேலைக்குத் தகுதியானவராக ஒருவரை வேலையில் இருக்கச்செய்து அவர் செய்த குற்றம் உண்டு என்னும் சொல் இன்றியே அவரை வேலையினின்றும் தவிர்த் தொழிதல் கீழ்மக்களுக்குப் பொருந்திய செயலாம். அச்செயல் பிள்ளைகள் சோலைவைத்து வளர்ப்பதை ஒக்கும்.

கருத்து:

கீழ்மக்கள் தொடங்கிய செயல் முடிவுபெறாது.

பாடல் : 122
உரை சான்ற சான்றோர் ஒடுங்கி உறைய,
நிரை உளர் அல்லார் நிமிர்ந்து பெருகல்,
வரை தாழ் இலங்கு அருவி வெற்ப! அதுவே,
சுரை ஆழ, அம்மி மிதப்பு. . . . .[122]

பொருளுரை:

மலையினின்றும் விழுகின்ற ஒளிவிளங்கும் அருவியை உடைய மலை நாடனே! புகழ் நிறைந்த குடியிற் பிறந்த அறிவு நிறைந்தவர்கள் வறுமையால் வருந்திநிற்க நல்ல குடிமரபின் வரிசையில் சேராதவரான கீழோர் செல்வத்தால் தலைநிமிர்ந்து பெருகுதல் ஆகிய அது நீரிலே சுரை ஆழ்வதையும் அம்மி மிதப்பதையும் ஒக்கும்.

கருத்து:

நற்குடிப் பிறவார் செல்வத்தால் தருக்கிநிற்பர்.

பாடல் : 123
தேர்ந்து, கண்ணோடது, தீவினையும் அஞ்சலராய்,
சேர்ந்தாரை எல்லாம் சிறிது உரைத்து, தீர்ந்த
விரகர்கட்கு எல்லாம் வெறுப்பனவே செய்யும்
நரகர்கட்கு இல்லையோ நஞ்சு. . . . .[123]

பொருளுரை:

ஆராய்ந்து கண்ணோட்டம் செலுத்தாது அஞ்சவேண்டிய தீய செயல்களுக்கும் அஞ்சாதவராய் தம்மைச் சேர்ந்தார் எல்லோரையும் சிறுமைப்படப்பேசி நெருங்கிய உறவினர்கட்கு எல்லாம் வெறுப்பானவைகளையே செய்யும் நரகம் புக இருக்கின்றவர்களுக்கு (அவர் உயிரை உண்ணும்)விடம் உலகில் இல்லையோ?

கருத்து:

இத்தகைய கீழ்மக்கள் இருப்பதைவிட இறப்பதே நன்று.