நாலடியார்
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
நான்மணிக்கடிகை
நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும்
இனியவை நாற்பது
பூதஞ்சேந்தனார் இயற்றியது இனியவை நாற்பது. 40 வெண்பாக்களைக் கொண்டது. நான்கு பாடல்களில் இன்பம் தருவன
இன்னா நாற்பது
இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துக்களைக் கொண்டு
திரிகடுகம்
திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரிகடுகம் என்பது
ஆசாரக் கோவை
மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை. பண்டைக்காலத்
சிறுபஞ்சமூலம்
சிறுபஞ்சமூலம் என்பது ஐந்து சிறிய வேர்கள் என்று பொருள்படும். அவையாவன சிறுவழுதுணை வேர், நெருஞ்சி வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர்
முதுமொழிக்காஞ்சி
முதுமொழி என்பது பழமொழி என்னும் சொற்பொருளோடு தொடர்புடையது. காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும் ஒருவகை அணிகலக் கோவையையும்
பழமொழி நானூறு
பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள்
ஏலாதி
'ஏலாதி' என மருத்துவ நூல்களில் கூறப்படுவது ஏலம் ஆதியான ஆறு பொருள்கள் சேர்ந்த ஒரு வகைச் சூர்ணம். ஏலம் ஒரு பங்கு, இலவங்கப்பட்டை இரண்டு பங்கு,
திருக்குறள்
திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு விளங்குகின்றது. அறம், பொருள், இன்பம்
கார் நாற்பது
கார் நாற்பது அகப்பொருள் பற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது. கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையாலும்,
ஐந்திணை ஐம்பது
'ஐந்திணை ஐம்பது' முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்திணைக்கும் பத்துப் பாடல்களைப் பெற்றுள்ளமையால் 'ஐந்திணை ஐம்பது' எனப் பெயர் பெற்றது.
திணைமொழி ஐம்பது
திணைமொழி ஐம்பது குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்திணைகளுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் உள்ளன. அதனால் இந்நூல்
ஐந்திணை எழுபது
ஐந்திணை எழுபது ஐந்திணைகளில் ஒவ்வொன்றிற்கும் பதினான்கு பாடல்களைக் கொண்டு, எழுபது பாடல்களில் இந்நூல் அமைந்துள்ளது. இந் நூலின் முதலில் விநாயகரைக்
திணைமாலை நூற்றைம்பது
திணைமாலை நூற்றைம்பது பண்டைத் தமிழ் நூற் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கில் அடங்கியது. 153 பாடல்களைக் கொண்ட இது ஒரு அகப்பொருள் சார்ந்த நூல்.
கைந்நிலை
'கை' என்பது ஒழுக்கம் என்றும் பொருள்படும். ஐந்திணை ஒழுக்கம் பற்றியதே இந்நூலாகும். ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடலாக அறுபது பாடல்கள் இந் நூலில் உள்ளன.
களவழி நாற்பது
களவழி நாற்பது போர்க்களம் பற்றிய பாடல்களின் தொகுதியாகும். இந் நூலில் உள்ள பாடல்கள் எல்லாம் களத்து என்ற சொல்லை இறுதியில் கொண்டு முடிதல் கவனிக்கத் தக்கது.
பழமொழி நானூறு
பதினெண் கீழ்க்கணக்கு
பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்டது.
பழமொழி நானூறு
11. சான்றோர் செய்கை
ஆற்றும், குடிப் பிறந்த சான்றவன்; - ஆற்றவும்
போற்றப் படாதாகி, புல் இன்றி மேயினும்,
ஏற்றுக் கன்று ஏறாய் விடும். . . . .[081]
ஆற்றும் மனைப்பிறந்த சான்றவன் - ஆற்றவும்
போற்றப் படாதாகிப் புல்லின்றி மேயினும்
'ஏற்றுக்கன்(று) ஏறாய் விடும்'. . . . .[081]
பொருளுரை:
நல்ல எருதிற்குப் பிறந்த ஆண் கன்று மிகவும் பாதுகாக்கப்படாததாய் பசும் புற்கள் இன்றி யாதானும் ஒன்றை மேய்ந்தாலும் பின்னர் எருதாக ஆகிவிடும்; (அதுபோல) மனை பிறந்த சான்றவன் - நல்ல குடியின்கட் பிறந்த அறிவுடையோன் தான் தேடிய மிக்க செல்வம் இல்லையாயினும் உலகநடையினை அறிந்து செய்யவல்லனாம்.
கருத்து:
நற்குடிப் பிறந்தார் செல்வம் சுருங்கியகாலத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்.
'இடம் கண்டு அறிவாம்' என்று எண்ணி இராஅர்;
மடம் கொண்ட சாயல் மயில் அன்னாய்! - சான்றோர்
கடம் கொண்டும் செய்வார் கடன். . . . .[082]
இடங்கண்(டு) அறிவாம்என்(று) எண்ணி இராஅர்
மடங்கொண்ட சாயல் மயிலன்னாய்! 'சான்றோர்
கடங்கொண்டும் செய்வார் கடன்'. . . . .[082]
பொருளுரை:
மடமாகிய குணத்தைக்கொண்ட சாயலில் மயில்போன்ற பெண்ணே! அறிவுசான்றவர்கள் வேறொருவரிடத்தில் கடன் பெற்றாயினும் செய்யவேண்டிய கடமைகளைச் செய்வார்கள்; (ஆகையால்) தொடர்ந்து வறுமையுடையராய் வருதலின் ஒப்புரவு செய்யமுடியாத இடத்தும் ஒப்புரவு செய்யும் காலம் வந்தால் அப்பொழுது செய்வோம் என்று நினையார்.
கருத்து:
சான்றோர்கடன் பெற்றாயினும் ஒப்புரவு செய்வார்கள்.
பொய் கொண்டு, அறைபோய்த் திரிபவர்க்கு என்கொலாம்?
மை உண்டு அமர்த்த கண் மாணிழாய்! - சான்றவர்,
கை உண்டும், கூறுவர் மெய். . . . .[083]
பொய்கொண் டறைபோய்த் திரிபவர்க்(கு) என்கொலோ?
மையுண்(டு) அமர்ந்தகண் மாணிழாய்! 'சான்றவர்
கையுண்டும் கூறுவர் மெய்'. . . . .[083]
பொருளுரை:
மை பூசப்பெற்றுப் பொருந்தி இருக்கின்ற கண்களையும் மாட்சிமைப்பட்ட கலன்களையும் உடையாய் (தம்முட் பகைகொண்டு போர் செய்யும் பொருட்டுச் சேனைகள்) வீரத்தோடு நிற்கின்ற போரிடத்தில் பகைவர் கூறும் பொய்யான உரைகளைக் கேட்டு கீழறுக்கப்பட்டுத் திரிபவர்களுக்கு மெய்யுரையால் என்ன பயனுண்டு? ஒரு பயனும் இல்லை (ஆகையால்) அறிவு நிறைந்தோர் பிறர்கைப்பொருளை உண்டாராயினும் உண்மையே கூறுவார்கள்.
கருத்து:
பெரியோர்கள் பிறர்கைப் பொருளை உண்டாராயினும் உண்மையையே கூறுவார்கள்.
மாண்டிலார் என்றே மறுப்பக் கிடந்ததோ?
பூண் தாங்கு இள முலைப் பொற்றொடீஇ! - பூண்ட
பறை அறையாப் போயினார் இல். . . . .[084]
மாண்டிலா ரென்றே மறைப்பக் கிடந்ததோ?
பூண்தாங்கு இளமுலை பொற்றொடி! 'பூண்ட
பறையறையார் போயினார் இல்'. . . . .[084]
பொருளுரை:
ஆபரணத்தைத் தாங்குகின்ற இளமையான தனங்களையும் பொன்னாலாகிய தொடியையும் உடையாய்! தம்மிடத்துள்ள பறையை அடிக்காது சென்றார் ஒருவரும் இலர்; (ஆகையால்) அங்கே குற்றம் செய்தார்; இங்கே குற்றம் செய்தார் எனக் கூறுதல் ஒரு காரணமாகுமோ? தம்மிடத்து நட்பாக அடைந்தவர்களை அங்ஙனங் கூறுதல் வேண்டா மாட்சிமை உடையாரல்லர் என்று நட்பை விடுத்தற்குக் கிடந்ததொரு நீதி உண்டோ? (பொறுத்து நட்பாகவே கொண்டு வேண்டுவன செய்க.)
கருத்து:
நட்டார் செய்த குற்றங் கருதி அவரைநீக்குதல் கூடாது.
திரியப் பெறுபவோ சான்றோர்? - விரி திரைப்
பார் எறியும் முந்நீர்த் துறைவ! - கடன் அன்றோ,
ஊர் அறிய நட்டார்க்கு உணா?. . . . .[085]
திரியப் பெறுபவோ சான்றோர் - விரிதிரைப்
பாரெறியும் முந்நீர்த் துறைவ ! 'கடனன்றோ
ஊரறிய நட்டார்க்கு உணா'. . . . .[085]
பொருளுரை:
அகன்ற அலைகள் பாரில்வீசும் கடற்றுறைவனே! தம்மால் அன்பு செய்யப்படுபவர்கள் சிறந்த குணங்கள் உடையரல்லரேனும் அறிவுடையோர் நன்மை செய்தலினின்றும் திரிவார்களோ (இல்லை) (ஆதலால்) ஊரிலுள்ளோர் அறியத் தம்மோடு நட்புப் பூண்டவர்களுக்கு உணவுகொடுத்தல் கடமையல்லவா?
கருத்து:
நட்டார் குணமிலாராயினும் சான்றோர் அவர்க்கு நன்மையே செய்வர்.
மற்றும் கண்ணோடுவர், மேன்மக்கள்; - தெற்ற
நவைக்கப்படும் தன்மைத்துஆயினும், சான்றோர்
அவைப்படின், சாவாது பாம்பு. . . . .[086]
மற்றுங்கண் ஓடுவர் மேன்மக்கள் - தெற்ற
நவைக்கப் படுந்தன்மைத் தாயினும் 'சான்றோர்
அவைப்படின் சாவாது பாம்பு'. . . . .[086]
பொருளுரை:
பாம்பானது தெளிவாகத் துயர்செய்யப்படும் தன்மையது ஆயினும் அறிவுடையோர் கூட்டத்திற் சென்றால் இறவாது; (அதுபோல) உயர்குடிப் பிறந்தோர் தெளிவாக அறியப்பட்ட பகைவர்கள் அடையும் துன்பத்தினைக் கண்டால் தமக்குப் பல பிழைகளைச் செய்தவராயிருப்பினும் மீண்டும் அவரிடத்தில் கண்ணோட்டம் செலுத்துவர்.
கருத்து:
சான்றோர் துன்பப்படுபவர் தம் பகைவராயினும் அத்துன்பத்தை நீக்க முயலுவர்.
பிறப்பின் சிறியாரைச் சென்று, பிறப்பினால்
சாலவும் மிக்கவர் சார்ந்து அடைந்து வாழ்பவே
தால அடைக்கலமே போன்று. . . . .[087]
பிறப்பிற் சிறியாரைச் சென்று - பிறப்பினால்
சாலவும் மிக்கவர் சார்ந்தடைந்து வாழ்பவே
'தால அடைக்கலமே போன்று'. . . . .[087]
பொருளுரை:
குடிப்பிறப்பினால் மிகவும் உயர்ந்தவர்கள் போய் குடிப்பிறப்பினால் இழிந்தவர்களைச் சார்பாகப் பெற்று எமக்கு இங்ஙனம் வாழ்தல் மிகவும் இழிவைத்தரும் என்று நினையாராய் ஒருவரிடம் வைக்கப்பெற்ற நிலமாகிய அடைக்கலப் பொருளைப்போல் பெருமையின்றி வாழ்வார்கள்.
கருத்து:
உயர்குடிப் பிறந்தோர் சில காரணங்களை முன்னிட்டு : இழிந்த குடியில் பிறந்தாரது சார்பு பெற்று ஒளியின்றி வாழ்வார்கள்.
சிறியார் இனமாய் ஒழுகுதல் - எறி இலை
வேலொடு நேர் ஒக்கும் கண்ணாய்! - அஃது அன்றோ,
பூவொடு நார் இயைக்குமாறு. . . . .[088]
சிறியார் இனமாய் ஒழுகுதல் - எறியிலை
வேலொடு நேரொக்கும் கண்ணாய்! அஃதன்றோ
'பூவோடு நாரியைக்கு மாறு'. . . . .[088]
பொருளுரை:
ஒளி வீசுகின்ற இலைவடிவாகச் செய்யப்பட்ட வேலொடு நேராக ஒத்த கண்ணையுடையாய்! உயர்ந்த குடியிற் பிறந்தவர்களும் கீழ்மக்களைத் தமக்கு இனமாகக் கொண்டொழுகுதல் அச்செய்கை பூவோடு நாரைச் சேர்க்கும் நெறியல்லவா?
கருத்து:
பெரியார் சிறியாரோடு ஒழுகுதல் பூமாலையைப் போல் அழகினைத் தருவதாம்.
பெரியவர் நல்குரவு நன்றே, தெரியின்;
மது மயங்கு பூங் கோதை மாணிழாய்! - மோரின்
முது நெய் தீது ஆகலோ இல். . . . .[089]
பெரியவர் நல்குரவு நன்றே - தெரியின்
மதுமயங்கு பூங்கோதை மாணிழாய்! 'மோரின்
முதுநெய் தீதாகலோ இல்'. . . . .[089]
பொருளுரை:
தேன் மிகுந்த அழகிய மாலையையும் மாட்சிமைப்பட்ட கலன்களையுமுடையாய்! ஆராய்ந்தால் புதிய மோரினைவிடப் பழைய நெய் தீது ஆவதில்லை. (நன்மையே பயக்கும்) அறிவிற் சிறியார் பெற்ற செல்வத்தைவிட அறிவுடையோர் எய்திய வறுமை மாட்சிமைப்பட நல்லதே யாகும்.
கருத்து:
அறிவிலார் பெற்ற செல்வத்தைவிட அறிவுடையோர் பெற்ற வறுமையேமிகச் சிறந்தது.