நாலடியார்
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
நான்மணிக்கடிகை
நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும்
இனியவை நாற்பது
பூதஞ்சேந்தனார் இயற்றியது இனியவை நாற்பது. 40 வெண்பாக்களைக் கொண்டது. நான்கு பாடல்களில் இன்பம் தருவன
இன்னா நாற்பது
இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துக்களைக் கொண்டு
திரிகடுகம்
திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரிகடுகம் என்பது
ஆசாரக் கோவை
மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை. பண்டைக்காலத்
சிறுபஞ்சமூலம்
சிறுபஞ்சமூலம் என்பது ஐந்து சிறிய வேர்கள் என்று பொருள்படும். அவையாவன சிறுவழுதுணை வேர், நெருஞ்சி வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர்
முதுமொழிக்காஞ்சி
முதுமொழி என்பது பழமொழி என்னும் சொற்பொருளோடு தொடர்புடையது. காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும் ஒருவகை அணிகலக் கோவையையும்
பழமொழி நானூறு
பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள்
ஏலாதி
'ஏலாதி' என மருத்துவ நூல்களில் கூறப்படுவது ஏலம் ஆதியான ஆறு பொருள்கள் சேர்ந்த ஒரு வகைச் சூர்ணம். ஏலம் ஒரு பங்கு, இலவங்கப்பட்டை இரண்டு பங்கு,
திருக்குறள்
திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு விளங்குகின்றது. அறம், பொருள், இன்பம்
கார் நாற்பது
கார் நாற்பது அகப்பொருள் பற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது. கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையாலும்,
ஐந்திணை ஐம்பது
'ஐந்திணை ஐம்பது' முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்திணைக்கும் பத்துப் பாடல்களைப் பெற்றுள்ளமையால் 'ஐந்திணை ஐம்பது' எனப் பெயர் பெற்றது.
திணைமொழி ஐம்பது
திணைமொழி ஐம்பது குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்திணைகளுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் உள்ளன. அதனால் இந்நூல்
ஐந்திணை எழுபது
ஐந்திணை எழுபது ஐந்திணைகளில் ஒவ்வொன்றிற்கும் பதினான்கு பாடல்களைக் கொண்டு, எழுபது பாடல்களில் இந்நூல் அமைந்துள்ளது. இந் நூலின் முதலில் விநாயகரைக்
திணைமாலை நூற்றைம்பது
திணைமாலை நூற்றைம்பது பண்டைத் தமிழ் நூற் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கில் அடங்கியது. 153 பாடல்களைக் கொண்ட இது ஒரு அகப்பொருள் சார்ந்த நூல்.
கைந்நிலை
'கை' என்பது ஒழுக்கம் என்றும் பொருள்படும். ஐந்திணை ஒழுக்கம் பற்றியதே இந்நூலாகும். ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடலாக அறுபது பாடல்கள் இந் நூலில் உள்ளன.
களவழி நாற்பது
களவழி நாற்பது போர்க்களம் பற்றிய பாடல்களின் தொகுதியாகும். இந் நூலில் உள்ள பாடல்கள் எல்லாம் களத்து என்ற சொல்லை இறுதியில் கொண்டு முடிதல் கவனிக்கத் தக்கது.
பழமொழி நானூறு
பதினெண் கீழ்க்கணக்கு
பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்டது.
பழமொழி நானூறு
09. புகழ்தலின் கூறுபாடு
மெய்யா உணரவும் தாம் படார்; எய்த
நலத் தகத் தம்மைப் புகழ்தல் - 'புலத்தகத்துப்
புள் அரைக்கால் விற்பேம்' எனல். . . . .[065]
மெய்யா உணரவும் தாம்படார் - எய்த
நலத்தகத் தம்மைப் புகழ்தல் 'புலத்தகத்துப்
புள்ளரைக் கால் விற்பேம் எனல்'. . . . .[065]
பொருளுரை:
செய்த செயலின் பயன் சிறிதளவும் கைவருதல் இல்லை செயலின் பயனை உறுதியாகப் பெறுவார் என்று பிறரால் எண்ணவும் படாதவர்கள் நிரம்ப நன்மையிலே பொருந்தத் தம்மைத் தாமே புகழ்தல் வயலின்கண் இருக்கும் புள்ளினை அரைக்கால் பொன்னுக்கு விற்பேம் என்று கூறுதலோ டொக்கும்.
கருத்து:
முடிக்கமுடியாத செயலை முடிப்பதாகக் கூறிப் புகழ்தல்கூடாது.
அமராததனை அகற்றலே வேண்டும்;
அமை ஆரும் வெற்ப! - அணியாரே தம்மை,
தமவேனும், கொள்ளாக் கலம். . . . .[066]
அமரா(து) அதனை அகற்றலே வேண்டும்
அமையாகும் வெற்ப! 'அணியாரே தம்மைத்
தமவேனும் கொள்ளாக் கலம்'. . . . .[066]
பொருளுரை:
மூங்கில்கள் நிறைந்த மலை நாடனே! தமக்குத் தகாத பொற்கலன்கள் தம்முடையதாயினும் அவற்றைக் கொண்டு தம்மை அணிபெறச் செய்யார் மக்கள் தம்மைப் புகழ்ந்து கூறுமிடத்து சுற்றத்தாரேயானாலும் தமக்குப் பொருந்தாதனவற்றைக் கூறுவரேல் அவற்றை அவர் சொல்லாதவாறு நீக்குதலையே ஒருவன் விரும்புதல் வேண்டும்.
கருத்து:
தமக்குப் பொருந்தாத புகழ்ச்சி உரையை ஏற்றல் கூடாது.
வாயின் மீக்கூறுமவர்களை ஏத்துதல்
நோய் இன்று எனினும், அடுப்பின் கடை முடங்கும்
நாயைப் புலியாம் எனல். . . . .[067]
வாயின்மீக் கூறும் அவர்களை ஏத்துதல்
நோயின்(று) எனினும் 'அடுப்பின் கடைமுடங்கும்
நாயைப் புலியாம் எனல்'. . . . .[067]
பொருளுரை:
பெற்ற தாயாலேயாயினும் (அன்றித்) தந்தையாலேயாயினும் மிகுத்துக் கூறப்படுதல் இல்லாது தாமே தம் வாயால் உயர்த்திக் கூறிக்கொள்பவர்களை பிறர் புகழ்ந்து கூறுதல் துன்பம் இல்லையாயினும் அடுப்பின் பக்கலில் முடங்கியிருக்கும் நாயைப் புலி யென்று கூறுதலோ டொக்கும்.
கருத்து:
தற்புகழ்ச்சி உடையாரைப் புகழ்தல் கூடாது.
நல்குரவால், வேறாக நன்கு உணரான் சொல்லின்,
உரையுள் வளவிய சொல் சொல்லாததுபோல்,
நிரையுள்ளே இன்னா, வரைவு. . . . .[068]
நல்குரவால் வேறாக நன்குணரான் - சொல்லின்
உரையுள் வளவியசொல் சொல்லா ததுபோல்
'நிரையுள்ளே இன்னா வரைவு'. . . . .[068]
பொருளுரை:
நெருங்கிய பல சுற்றத்தார் நடுவே ஆராய்ந்தறிதல் இல்லாதவனாகி தமது கிளையுள் ஒருவனை அவனது வறுமை காரணமாக வேறுபட நினைந்து நன்றாக ஆராய்தலில்லாதவனாக ஒன்றைக் கூறின் சொற்களுள் நல்ல சொற்களைச் சொல்லாதவனாக ஆதல்போல பத்தியாய்க் குழுமியிருந்த கூட்டத்தில் ஒருவனை வரைந்து சிறப்புச் செய்தலும் இன்னாது.
கருத்து:
கூட்டத்தில் ஒருவனை இழித்துப் பேசுதலும் ஒருவனை உயர்த்திப் பேசுதலும்தீதாம்.