நாலடியார்

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

நான்மணிக்கடிகை

நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும்

இனியவை நாற்பது

பூதஞ்சேந்தனார் இயற்றியது இனியவை நாற்பது. 40 வெண்பாக்களைக் கொண்டது. நான்கு பாடல்களில் இன்பம் தருவன

இன்னா நாற்பது

இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துக்களைக் கொண்டு

திரிகடுகம்

திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரிகடுகம் என்பது

ஆசாரக் கோவை

மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை. பண்டைக்காலத்

சிறுபஞ்சமூலம்

சிறுபஞ்சமூலம் என்பது ஐந்து சிறிய வேர்கள் என்று பொருள்படும். அவையாவன சிறுவழுதுணை வேர், நெருஞ்சி வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர்

முதுமொழிக்காஞ்சி

முதுமொழி என்பது பழமொழி என்னும் சொற்பொருளோடு தொடர்புடையது. காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும் ஒருவகை அணிகலக் கோவையையும்

பழமொழி நானூறு

பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள்

ஏலாதி

'ஏலாதி' என மருத்துவ நூல்களில் கூறப்படுவது ஏலம் ஆதியான ஆறு பொருள்கள் சேர்ந்த ஒரு வகைச் சூர்ணம். ஏலம் ஒரு பங்கு, இலவங்கப்பட்டை இரண்டு பங்கு,

திருக்குறள்

திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு விளங்குகின்றது. அறம், பொருள், இன்பம்

கார் நாற்பது

கார் நாற்பது அகப்பொருள் பற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது. கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையாலும்,

ஐந்திணை ஐம்பது

'ஐந்திணை ஐம்பது' முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்திணைக்கும் பத்துப் பாடல்களைப் பெற்றுள்ளமையால் 'ஐந்திணை ஐம்பது' எனப் பெயர் பெற்றது.

திணைமொழி ஐம்பது

திணைமொழி ஐம்பது குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்திணைகளுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் உள்ளன. அதனால் இந்நூல்

ஐந்திணை எழுபது

ஐந்திணை எழுபது ஐந்திணைகளில் ஒவ்வொன்றிற்கும் பதினான்கு பாடல்களைக் கொண்டு, எழுபது பாடல்களில் இந்நூல் அமைந்துள்ளது. இந் நூலின் முதலில் விநாயகரைக்

திணைமாலை நூற்றைம்பது

திணைமாலை நூற்றைம்பது பண்டைத் தமிழ் நூற் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கில் அடங்கியது. 153 பாடல்களைக் கொண்ட இது ஒரு அகப்பொருள் சார்ந்த நூல்.

கைந்நிலை

'கை' என்பது ஒழுக்கம் என்றும் பொருள்படும். ஐந்திணை ஒழுக்கம் பற்றியதே இந்நூலாகும். ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடலாக அறுபது பாடல்கள் இந் நூலில் உள்ளன.

களவழி நாற்பது

களவழி நாற்பது போர்க்களம் பற்றிய பாடல்களின் தொகுதியாகும். இந் நூலில் உள்ள பாடல்கள் எல்லாம் களத்து என்ற சொல்லை இறுதியில் கொண்டு முடிதல் கவனிக்கத் தக்கது.

பழமொழி நானூறு
பதினெண் கீழ்க்கணக்கு

பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்டது.

பழமொழி நானூறு


06. இன்னா செய்யாமை

பாடல் : 043
பூ உட்கும் கண்ணாய்! - 'பொறுப்பர்' எனக் கருதி,
யாவர்க்கே ஆயினும் இன்னா செயல் வேண்டா
தேவர்க்கும் கைகூடாத் திண் அன்பினார்க்கேயும்,
நோவச் செயின், நோயின்மை இல். . . . .[043]

பொருளுரை:

தாமரையும் (ஒப்பாதற்கில்லையே யென்று) வருந்தும் கண்ணை உடையாய்! தேவர்களுக்கும் இயலாதகாழ்த்த அன்புடையார்க்காயினும் துன்புறுத்தினால் துன்புறாதிருப்பது இல்லை (பொறுமையிலராவார்.) (ஆகையால்) பொறுப்பார் எனக்கருதி - எத்துணைத் தீங்கு செயினும் பொறுமையுடன் இருப்பார்கள் என்று தாமே நினைத்து எத்துணை எளியராயினும் தீங்கினைச் செய்தல் வேண்டாவாம்.

கருத்து:

எவர்க்குந் தீங்கியற்றல் வேண்டா.

பாடல் : 044
வினைப் பயம் ஒன்று இன்றி, வேற்றுமை கொண்டு,
நினைத்துப் பிறர் பனிப்ப செய்யாமை வேண்டும்
புனப் பொன் அவிர் சுணங்கின் பூங் கொம்பர் அன்னாய்!
தனக்கு இன்னா, இன்னா பிறர்க்கு. . . . .[044]

பொருளுரை:

புனத்திற்படும் பொன்போல விளங்கும் தேமலையுடைய பூங் கொம்பை யொப்பாய்! தனக்குத் துன்பந்தருவன பிறருக்குந் துன்பந் தருவனவாம் (ஆதலால்) செய்கின்ற செயலிற் பயனொரு சிறிதுமில்லாமல் பகைமை ஒன்றே கொண்டு ஆராய்ந்து பிறர்வருந்தத் தக்கனவற்றைச் செய்தலை ஒழிதல் வேண்டும்.

கருத்து:

பிறரையும் தம்மைப்போல நினைத்துத் தீங்கு செய்யாதிருத்தல் வேண்டும்.

பாடல் : 045
'ஆற்றார் இவர்' என்று, அடைந்த தமரையும்,
தோற்ற, தாம் எள்ளி நலியற்க! - போற்றான்,
கடை அடைத்து வைத்து, புடைத்தக்கால், நாயும்
உடையானைக் கவ்வி விடும். . . . .[045]

பொருளுரை:

காப்பாற்றாதவனாகி வாயிலை அடைத்து வைத்து அடித்தவிடத்து நாயும் தன்னை உடையானைக் கவ்வித் துன்புறுத்தும். (ஆகையால்) தம்மையடைந்த சுற்றத்தார்களையும் நம்மை எதிர்க்க வலியிலர் என்று நினைத்து பிறருக்கு வெளிப்படுமாறு தாம் ஒருவரையும் இகழ்ந்து துன்புறுத்தா தொழிக.

கருத்து:

நம்மையடைந்த சுற்றத்தார்களை இகழ்ந்து நலியாதிருத்தல் வேண்டும்.

பாடல் : 046
நெடியது காண்கலாய்; நீ ஒளியை நெஞ்சே!
கொடியது கூறினாய் மன்ற; - அடியுளே,
முற்பகல் கண்டான் பிறன் கேடு, தன் கேடு
பிற்பகல் கண்டுவிடும். . . . .[046]

பொருளுரை:

நெஞ்சே! தீய செயல்களைப் பிறர்க்குச் செய்யுமாறு கூறினாய். (ஆதலால்)நீ யெளியை - நீ அறிவு இல்லாதாய் (பிறர்க்குத் தீங்கு செய்தலால் வரும் பயனை) நெடுங்காலத்திற்குப் பின் அறியாய் அந்த நிலையிலே பிறன் ஒருவனுக்குத் தீங்கினைப் பகலின் முதற்பகுதிக்கண் செய்தான் தனக்கு வரும்தீங்கினைப் பகலின் பிற்பகுதிக்கண் தப்பாமல்அடைவான்.

கருத்து:

முற்பகல் செய்யிற் பிற்பகல் விளையும்.

பாடல் : 047
'தோற்றத்தால் பொல்லார்; துணை இலார்; நல்கூர்ந்தார்;
மாற்றத்தால் செற்றார்' என, வலியார் ஆட்டியக்கால்,
ஆற்றாது அவர் அழத கண்ணீர் அவை அவர்க்குக்
கூற்றமாய் வீழ்ந்து விடும். . . . .[047]

பொருளுரை:

குடிப்பிறப்பால் தீய செயல்களை யுடையவர் ஒரு துணையும் இல்லாதவர் வறுமையுடையார் சொற்களால் பகைவரை ஒத்தார் என்றிங்ஙனம் நினைத்து குடிப் பிறப்பு, துணை, செல்வம் முதலிய வலிமை உடையார் அவையிலாரை நலிந்த இடத்து தாங்க இயலாது அவர்கள் தங்கண்களினின்றும் பரப்பிய கண்ணீராகிய அவையே தம்மை நலிந்த அவர்க்குக் கூற்றாய் விழாநிற்கும்.

கருத்து:

எளியார் அழுத கண்ணீர் அவர்தம்மை நலிந்தார்க்குக் கூற்றாய் முடியும்.

பாடல் : 048
'மிக்கு உடையர் ஆகி, மிக மதிக்கப் பட்டாரை
ஒற்கப்பட முயறும்' என்றல் இழுக்கு ஆகும்;
நற்கு எளிது ஆகிவிடினும், நளிர் வரைமேல்
கல் கிள்ளி, கை உயர்ந்தார் இல். . . . .[048]

பொருளுரை:

விளங்குகின்ற மலைமேல் உள்ள கல்லைக் கிள்ளுதலைச் செய்து கை வருந்துதலைத் தப்பினார் இல்லை செல்வம் மிக உடையவர்களாகி அறிவுடைமையால் மிகவும் மதிக்கப்பட்டாரை அவர்கள் வருந்துமாறு தீய செயல்களைச் செய்வோம் என்று நினைத்தல் மிகவும் எளிமையானாலும். இழுக்கு ஆகும் - செயலிற் செய்தால் மிக்கதுன்பமே உண்டாகும்.

கருத்து:

அறிவுசெல்வம் என்றிவை உடையாரைத் துன்புறுத்தலாகாது.

பாடல் : 049
நீர்த் தகவு இல்லார் நிரம்பாமைத் தம் நலியின்,
கூர்ந்து அவரைத் தாம் நலிதல் கோள் அன்றால், சான்றவர்க்கு;
பார்த்து ஓடிச் சென்று, கதம் பட்டு நாய் கவ்வின்,
பேர்த்து நாய் கவ்வினார் இல். . . . .[049]

பொருளுரை:

நாய் சினந்து கவ்விய இடத்து ஆராய்ந்து ஓடிப் பின்சென்று மீண்டும் நாயினைக் கவ்வித் துன்புறுத்தினவர்கள் ஒருவரும் இலர் நல்ல நேர்மையான குணங்களில்லாதவர்கள் அறிவு நிரம்பாமையால் தம்மைத் துன்புறுத்துவராயின் மன ஊக்கங்கொண்டு அவர்களைத் தாம்துன்புறுத்துதல் அறிவு சான்றவர்க்குக் கொள்கையன்று.

கருத்து:

அறிவிலார் தீங்கு செய்தாராயின் அதைப் பொருட்படுத்திப் பெரியோர்தீங்கு செய்யமாட்டார்கள்.

பாடல் : 050
காழ் ஆர மார்ப! கசடு அறக் கை காவாக்
கீழாயோர் செய்த பிழைப்பினை, மேலாயோர்
உள்ளத்துக் கொண்டு நேர்ந்து ஊக்கல், குறு நரிக்கு
நல்ல நாராயம் கொளல். . . . .[050]

பொருளுரை:

உரம்பெற்ற முத்துமாலையையணிந்த மார்பை உடையவனே! குற்றமற ஒழுக்கத்தைக் காவாத தாழ்ந்த குடியிற் பிறந்தவர்கள் இயல்பாகச் செய்த தீங்கினை உயர்ந்த குடியிற் பிறந்தவர்கள் மனத்துட்கொண்டு எதிர்த்துத் தீங்கு செய்ய முயலுதல் சிறிய நரியைக் கொல்லும் பொருட்டுக்கூரிய நாராயணம் என்னும் அம்பினை யெய்யக் கொள்வதோடொக்கும்.

கருத்து:

கீழோர் தவறுசெய்தால் மேலோர் அதற்கு எதிராகத் தீங்கு செய்யமுயலார்.