நாலடியார்
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
நான்மணிக்கடிகை
நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும்
இனியவை நாற்பது
பூதஞ்சேந்தனார் இயற்றியது இனியவை நாற்பது. 40 வெண்பாக்களைக் கொண்டது. நான்கு பாடல்களில் இன்பம் தருவன
இன்னா நாற்பது
இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துக்களைக் கொண்டு
திரிகடுகம்
திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரிகடுகம் என்பது
ஆசாரக் கோவை
மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை. பண்டைக்காலத்
சிறுபஞ்சமூலம்
சிறுபஞ்சமூலம் என்பது ஐந்து சிறிய வேர்கள் என்று பொருள்படும். அவையாவன சிறுவழுதுணை வேர், நெருஞ்சி வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர்
முதுமொழிக்காஞ்சி
முதுமொழி என்பது பழமொழி என்னும் சொற்பொருளோடு தொடர்புடையது. காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும் ஒருவகை அணிகலக் கோவையையும்
பழமொழி நானூறு
பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள்
ஏலாதி
'ஏலாதி' என மருத்துவ நூல்களில் கூறப்படுவது ஏலம் ஆதியான ஆறு பொருள்கள் சேர்ந்த ஒரு வகைச் சூர்ணம். ஏலம் ஒரு பங்கு, இலவங்கப்பட்டை இரண்டு பங்கு,
திருக்குறள்
திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு விளங்குகின்றது. அறம், பொருள், இன்பம்
கார் நாற்பது
கார் நாற்பது அகப்பொருள் பற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது. கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையாலும்,
ஐந்திணை ஐம்பது
'ஐந்திணை ஐம்பது' முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்திணைக்கும் பத்துப் பாடல்களைப் பெற்றுள்ளமையால் 'ஐந்திணை ஐம்பது' எனப் பெயர் பெற்றது.
திணைமொழி ஐம்பது
திணைமொழி ஐம்பது குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்திணைகளுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் உள்ளன. அதனால் இந்நூல்
ஐந்திணை எழுபது
ஐந்திணை எழுபது ஐந்திணைகளில் ஒவ்வொன்றிற்கும் பதினான்கு பாடல்களைக் கொண்டு, எழுபது பாடல்களில் இந்நூல் அமைந்துள்ளது. இந் நூலின் முதலில் விநாயகரைக்
திணைமாலை நூற்றைம்பது
திணைமாலை நூற்றைம்பது பண்டைத் தமிழ் நூற் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கில் அடங்கியது. 153 பாடல்களைக் கொண்ட இது ஒரு அகப்பொருள் சார்ந்த நூல்.
கைந்நிலை
'கை' என்பது ஒழுக்கம் என்றும் பொருள்படும். ஐந்திணை ஒழுக்கம் பற்றியதே இந்நூலாகும். ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடலாக அறுபது பாடல்கள் இந் நூலில் உள்ளன.
களவழி நாற்பது
களவழி நாற்பது போர்க்களம் பற்றிய பாடல்களின் தொகுதியாகும். இந் நூலில் உள்ள பாடல்கள் எல்லாம் களத்து என்ற சொல்லை இறுதியில் கொண்டு முடிதல் கவனிக்கத் தக்கது.
பழமொழி நானூறு
பதினெண் கீழ்க்கணக்கு
பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்டது.
பழமொழி நானூறு
04. அறிவுடைமை
பிறிதினால் மாண்டது எவனாம் - பொறியின்
மணி பொன்னும், சாந்தமும், மாலையும், மற்று இன்ன
அணி எல்லாம், ஆடையின் பின். . . . .[026]
பிறிதினால் மாண்டது எவனாம் - பொறியின்
மணிபொன்னும் சாந்தமும் மாலையும் இன்ன
'அணியெல்லாம் ஆடையின் பின்'. . . . .[026]
பொருளுரை:
சாணையாற் கழுவுதலையுடைய இரத்தினாபரணமும் பொன்னாபரணமும் கலவையும் பூமாலையும் இவைபோன்ற பிற அணிகள் யாவும் அழகுறச் செய்வதில் உடையின் பின்னேவைத்து எண்ணத்தக்கனவாம். ஆதலால் அறிவினாலாகிய பெருமை ஒருசிறிதும் பெறாத ஒருவன் செல்வத்தைப் பெற்றதனால் மாட்சிமையுடையதனால் அவனுக்கு என்ன பெருமையைக் கொடுக்கும்?
கருத்து:
செல்வம் உடையோரினும் அறிவுடையாரே சிறந்தோர் ஆவர்.
மா இரு ஞாலத்து மாண்பு ஒருவன் போல்கலார்
பாய் இருள் நீக்கும் மதியம்போல், பல் மீனும்,
காய்கலா ஆகும் நிலா. . . . .[027]
மாயிரு ஞாலத்து மாண்பொருவன் போல்கலார்
பாயிருள் நீக்கும் 'மதியம்போல் பன்மீனும்
காய்கலா வாகும் நிலா'. . . . .[027]
பொருளுரை:
பரவிய இருளைப் போக்கும் சந்திரனைப்போல பல விண்மீன்கள் ஒன்றுகூடினும் நிலவை எறிக்கமாட்டா. (அதுபோல) அறிவு இல்லாதவர்கள் ஆயிரம்பேர் திரண்டனராயினும் பெருமையை உடைய பெரிய இவ்வுலகின் கண அறிவினால் மாட்சிமைப்பட்ட ஒருவனைப்போல் விளங்கார்.
கருத்து:
அறிவிலார் பலர் திரண்டாலும் அறிவுடையான் ஒருவனை ஒவ்வார்.
சொல் குறிகொண்டு துடி பண்ணுறுத்ததுபோல்
வெற்பு அறைமேல் தாழும் விலங்கு அருவி நல் நாட!
கற்றறிவு போகா கடை. . . . .[028]
சொற்குறி கொண்டு துடிபண் உறுத்துவபோல்
வெற்பறைமேல் தாழும் இலங்கருவி நன்னாட!
'கற்றறிவு போகா கடை'. . . . .[028]
பொருளுரை:
மலையினின்றும் பாறையின்மேல் விழும் விளங்குகின்ற அருவி பாயும் நல்ல நாட்டை உடையவனே! சொல்லால் குறிக்கப்படும் பொருளை உடுக்கையைக் கொண்டு (அதன் கண்) பண் உண்டாக்குவதைப்போல மிகவும் இயற்கையறிவு இல்லாரை கல்வி யறிவைப் போதித்ததனால் சிறந்தவனாக நிலைநாட்ட முடியாது. (ஆகையால்) நூல்களைக் கற்றலால் ஆகிய அறிவு முற்றிலுஞ்செல்லாது.
கருத்து:
கல்வியறிவோடு இயற்கை யறிவும் உடையான் சிறந்து விளங்குவான்.
மானும் அறிவினவரைத் தலைப்படுத்தல்,
மான் அமர்க் கண்ணாய்! - மறம் கெழு மா மன்னர்,
யானையால் யானை யாத்தற்று. . . . .[029]
மானும் அறிவி னவரைத் தலைப்படுத்தல்
மானமர் கண்ணாய்! மறங்கெழு மாமன்னர்
'யானையால் யானையாத் தற்று'. . . . .[029]
பொருளுரை:
மான் விரும்பும் கண்ணை உடையாய் மனத்திட்பம் உடைய அறிஞர்கள் தம்மைக் கல்வி யறிவால்ஒத்த அறிஞர்களைத் தம்முடன் சேர்த்துக்கொள்ளுதல் வீரம் பொருந்திய பேரரசர்கள் யானையைக் கொண்டு யானைகளைப் பிடித்ததனோ டொக்கும்.
கருத்து:
அறிவுடையார் அறிவுடையாரையே சேர்த்துக் கொள்வர்.
பரியாரிடைப் புகார், பண்பு அறிவார், மன்ற
விரியா இமிழ் திரை வீங்கு நீர்ச் சேர்ப்ப
அரிவாரைக் காட்டார் நரி. . . . .[030]
பரியார் இடைப்புகார் பண்பறிவார் மன்ற
விரியா இமிழ்திரை வீங்குநீர்ச் சேர்ப்ப!
'அரிவாரைக் காட்டார் நரி'. . . . .[030]
பொருளுரை:
பரவி ஒலிக்கின்ற அலைகள் மிகுதியும் உடைய கடற்கரையை உடையவனே! நெல்லரிவோர்களுக்கு (அவ்வேலை கெடும்படி) நரியைக் காண்பியார் (அதுபோல) ஆராய்ச்சி உடையாருடன் ஆராய்ந்து உண்மை கண்டுணர்ந்தார் நுண்ணறிவு இல்லாரிடம் செல்லார் அவர் குணங்களை ஒருதன்மையாக அறிவார் ஆதலான்.
கருத்து:
அறிவுடையார் தம் போன்றாரை அறிவிலாரிடம் அழைத்துச் செல்லார்.
சொல் பெய்து உணர்த்துதல் வேண்டுமோ? - விற் கீழ்
அரி தாய்ப் பரந்து அகன்ற கண்ணாய்! - அறியும்,
பெரிது ஆள்பவனே பெரிது. . . . .[031]
சொற்பெய்து உணர்த்துதல் வேண்டுமோ? - விற்கீழ்
அரிபாய் பரந்தகன்ற கண்ணாய்! - 'அறியும்
பெரிதாள் பவனே பெரிது'. . . . .[031]
பொருளுரை:
வில்லைப்போன்ற புருவத்தின்கீழ்ச் செவ்வரி படர்ந்திருக்கின்ற மிகவும் அகன்ற கண்ணை உடையாய்! நன்மையையும் தீமையையும் நிரல்படப் புனைந்து மருங்கு இருந்தார் சொற்களால் கூறவும் வேண்டுமோ? எல்லாவற்றையும் தன்வயமாக நடத்தும் அவனே நன்மை தீமைகளை மிகவும் அறிவான்.
கருத்து:
கற்றறிந்தவன் எல்லாவற்றையும் தானே பகுத்தறிந்து நடப்பான்.
கரந்து மறைக்கலும் ஆமோ? - நிரந்து எழுந்து
வேயின் திரண்ட தோள், வேற்கண்ணாய்! விண் இயங்கும்
ஞாயிற்றைக் கைம் மறைப்பார் இல். . . . .[032]
கரந்து மறைக்கலும் ஆமோ? - நிரந்தெழுந்து
வேயின் திரண்டதோள் வேற்கண்ணாய் 'விண்ணியங்கும்
ஞாயிற்றைக் கைம்மறைப்பார் இல்'. . . . .[032]
பொருளுரை:
நிரல்பட உயர்ந்து மூங்கில் போன்ற திரண்ட தோள்களையும் வேல்போன்ற கண்களையும் உடைய பெண்ணே! வானிற் செல்லும் சூரியனைக் கையால் மறைப்பவர்கள் இல்லை (மறைக்க முடியாது.) (அதுபோல) மிகுந்த அறிவு ஆற்றல் உடையவர்களை பாசியைப்போன்ற அடாத சில சொற்களையும் செயல்களையும் அவர் மேலிட்டு அவர் புகழை மறைத்து ஒளிக்கவும் முடியுமோ? (மறைக்க முடியாது.)
கருத்து:
அறிவுடையார் புகழைமறைப்பின் மறைபடாது என்பதாம்.
திரு உடையராயின், திரிந்தும் - வருமால்
பெரு வரை நாட! பிரிவு இன்று, அதனால்
திருவினும் திட்பம் பெறும். . . . .[033]
திருவுடைய ராயின் திரிந்தும் - வருமால்
பெருவரை நாட! பிரிவின் றதனால்
'திருவினும் திட்பம் பெறும்'. . . . .[033]
பொருளுரை:
பெரிய மலைநாட்டை உடையவனே! செல்வம் உடையவர்களுக்கு ஆயின் (அவர்தம்) அரிய விலையுடைய மாட்சிமைப்பட்ட பூண்களும் நிறைந்த செல்வமும் நிலைபெறாது மாறி வரும் இயல்பை உடையன (அறிவுச் செல்வம் உடையோர்க்கு ஆயின் அவர் தம் செல்வம்) பிரிதலில்லை அத்தன்மையால் செல்வத்தினும் அறிவே உயர்வைப் பெறும்.
கருத்து:
அறிவுச் செல்வம் பொருட் செல்வம்போல் பிரிதலில்லாமையால் அதனையேதேடுதல் வேண்டும்.