மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

மதுரைக்காஞ்சி


மூன்றாம் சாம நிகழ்ச்சிகள்

பாடல் வரிகள்:- 629 - 653

பாடான் றவிந்த பனிக்கடல் புரையப்
பாயல் வளர்வோர் கண்ணினிது மடுப்பப் . . . .[630]

பானாட் கொண்ட கங்கு லிடையது
பேயும் அணங்கும் உருவுகொண் டாய்கோற்
கூற்றக் கொஃறேர் கழுதொடு கொட்ப

பொருளுரை:

கடலில் அலை ஓயாது. பனியால் மூடப்பட்டிருக்கும் கடலில் அலை இருக்குமா? பனிக்கடல் போல மக்கள் படுத்து இனிமையாக உறங்கினர். கங்குல் 6 யாமங்கள் கொண்டது. அதில் 3 கழிந்து விட்ட படியாலே இரவுக்காலத்தில் அது பாதிநாள் [பானாள்] ஆயிற்று. இந்த நேரத்தில் பேய், அணங்கு, கூற்றம், கழுது ஆகியவை சுழன்று கொண்டிருந்தன.

இரும்பிடி மேஎந்தோ லன்ன இருள்சேர்பு
கல்லு மரனுந் துணிக்குங் கூர்மைத் . . . .[635]

தொடலை வாளர் தொடுதோ லடியர்
குறங்கிடைப் பதித்த கூர்நுனைக் குறும்பிடிச்
சிறந்த கருமை நுண்வினை நுணங்கறல்
நிறங்கவர்பு புனைந்த நீலக் கச்சினர்
மென்னூல் ஏணிப் பன்மாண் சுற்றினர் . . . .[640]

நிலனகழ் உளியர் கலனசைஇக் கொட்கும்
கண்மா றாடவர் ஒடுக்க மொற்றி
வயக்களிறு பார்க்கும் வயப்புலி போலத்
துஞ்சாக் கண்ணர் அஞ்சாக் கொள்கையர்
அறிந்தோர் புகழ்ந்த ஆண்மையர் செறிந்த . . . .[645]

நூல்வழிப் பிழையா நுணங்குநுண் டேர்ச்சி
ஊர்காப் பாளர் ஊக்கருங் கணையினர்
தேர்வழங்கு தெருவி னீர்திரண் டொழுக
மழையமைந் துற்ற அரைநா ளமயமும்
அசைவிலர் எழுந்து நயம்வந்து வழங்கலிற் . . . .[650]

கடவுள் வழங்குங் கையாறு கங்குலும்
அச்ச மறியா தேம மாகிய
மற்றை யாமம் பகலுறக் கழிப்பிப் . . . .[629 - 653]

பொருளுரை:

வைகறை - பேய் வழங்கும் 4ஆம் யாமம் போனபின் கடவுள் வழங்கும் 5ஆம் யாமம் வந்தது. காப்பாற்றுபவரைக் கடவுள் என்கிறோம். மக்கள் உறங்கும்போது அவர்களது உடைமைகளைக் காப்பாற்றுபவரைக் கடவுள் எனல் தகும் என்று காட்டுவதாக இப் பாடற்பகுதி அமைந்துள்ளது. ஊர் காப்பாளரும் கடவுளரும் வழங்கிக் கொண்டிருப்பதால் மக்கள் அச்சம் என்பதையே அறியாமல் பாதுகாப்பாக உறங்கினர். பகலில் அச்சமின்றிப் பணியாற்றுவது போல் இரவில் அச்சமின்றி உறங்கினர். ஊர் காப்பாளரின் தோற்றமும், காவற்பணியும் எவ்வாறு இருந்தன என்று விரிவாகச் சொல்லப்படுகிறது. முக்காடு - யானையின் மேல்தோல் நிறத்தில் முக்காடு (‘இருள்’) போட்டுக் கொண்டிருந்தனர். வாள் - கையிலே வாள் இருந்தது. அது கல்லையும் மரத்தையும் வெட்டிச் சாய்க்கும் கூர்மை உடையதாக இருந்தது. வாளை உறையில் (‘தொடலை’) போட்டுக்கொண்டு திரிந்தனர். தொடுதோல் - காலிலே செருப்பு அணிந்திருந்தனர். கச்சு - இடையின் குறங்குப் பகுதியில் (தொடைக்கு மேலுள்ள இடுப்புப் பகுதியில்) கச்சு அணிந்திருந்தனர். கூர்நுனைக் குறும்பிடி என்பது கைவிரல்கள் போன்ற நுனியில் மாட்டிப் பிடித்துக்கொள்ளும் பெல்ட் பக்கில் belt buckle அந்தக் கச்சின் நிறம் நீலம். அதில் கருமணல் போன்ற புள்ளிகள் இருந்தன. கண் பார்வை - அவர்களுடைய கண்கள் திருடர்களை ஒற்றுப் பார்த்துக் கொண்டிருந்தன. திருடர் - திருடர் நிலத்தைப் பறிக்கும் கன்னுளி (கன்னக்கோல்) வைத்திருப்பர். அணிகலன்கள் பாதுகாக்கப்படும் இடத்தை ஆசையோடு ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருப்பர். புலி யானையை வீழ்த்தக் காலம் பார்த்துக் கொண்டிருப்பது போல் உடைமையாளர் எப்போது கண் சோர்வர் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பர். ஊர்காப்பாளர் - இவர்களைப் பிடிக்க ஊர்காப்பாளர் கண் சோராமல் தேடுவர். ஊர்காப்பாளர் திருடர்களுக்கு அஞ்சாதவர். அதாவது அஞ்சாமையே அவர்களது கோட்பாடு. அவர்களது ஆண்மையானது persionality அறிந்தவர்கள் அனைவராலும் புகழப்படும். தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாத செறிவு உடையவர்கள். ஊர்காப்பாளருக்கு உதவும் இலக்கண நூல் - ஊர்காப்பாளர் இலக்கணம் சொல்லும் நூல் அக்காலத்தில் இருந்தது. குற்றவாளிகளை நூல்போல் தொடரும் பாங்கு கூறப்பட்டிருந்தது. அதன்படி மிக நுட்பமாகக் குற்றவாளிகளைப் பின்தொடர்வதில் அவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். எய்தால் வெல்ல முடியாத ‘ஊக்கருங் கணை’ அவர்களிடம் இருந்தது. அச்சமில்லா உறக்கம் - வழங்கல் = புழக்கத்தில் இருத்தல். ஊர்காப்பாளர் தெருவில் புழங்கிக் கொண்டிருந்ததால் மக்கள் பாதுகாப்பாக உறங்கினர்.